Wednesday 13 March 2024

சவாலாக அமைந்த மக்கள் பணி சாதுர்யமாக செயல்பட்ட IWF குவைத் மண்டல நிர்வாகிகள்;

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

சவாலாக அமைந்த மக்கள் பணி சாதுர்யமாக செயல்பட்ட IWF குவைத் மண்டல நிர்வாகிகள்;

திருவண்ணாமலை சமுத்திரம் காலணியை சேர்ந்த சங்கர் என்பவரின் மனைவி #சோலை அவர்கள்,  கடந்த 8 மாதத்திற்கு முன்பு குவைத் வீட்டில் வேலைக்கு வந்துள்ளார். பணிச்சுமை காரணமாகவும், வயது மூப்பின் காரணமாக உடல் நலமும் பாதிக்கப்பட்டது.  தன் நிலையை கணவருக்கு தெரியப்படுத்தினார். கணவர் சங்கர் அவர்கள் வெளிநாடுவாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் #செஞ்சி_மஸ்தான் அவர்களுக்கு மணு எழுதி தன் மனைவியை மீட்டு தருமாறு கேட்டுக்கொண்டார். வெளிநாடுவாழ் தமிழர் நலவாரியத்திடம் தகவலை தெரிவித்தார் அமைச்சர். வாரியத்திலிருந்து இந்திய தூதரகத்தை அனுகி அப்பெண்மணியை மீட்டுதருமாறு கேட்டுக்கொண்டனர். தூதரகம் சரியாக ஒத்துழைப்பு தராததால், வாரியம், இந்தியர் நல்வாழ்வு பேரவை குவைத் மண்டல நிர்வாகிகளை அனுகி அப்பெண்மணியை மீட்டு தாயகம் அனுப்பி வைக்குமாறு  கேட்டுக்கொண்டனர்.

 மண்டல தலைவர் #லால்குடி_ஜபருல்லாக்கான் அவர்களின் ஆலோசணையின்படி மண்டல செயலாளர் #கொடிக்கால்பாளையம்_கஜ்ஜாலி அவர்கள் துரிதமாக செயல்பட்டு ஒரு மாதகாலம் கடுமையான முயற்சிக்கு பிறகு, இந்திய தூதரகத்தின் வாயிலாக அப்பெண்ணை மீட்டு 11/03/2024 அன்று இரவு தாயகம் அனுப்பி வைக்கப்பட்டார். குடும்பத்தார்கள் IWF குவைத் மண்டல நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்தார்கள். அப்பெண்மணிக்கு பயணச்சீட்டு எடுக்க உதவிய மண்டல நிர்வாகிகளுக்கு மண்டல தலைவர் அவர்கள் நன்றி தெரிவித்தார்.





எல்லாப் புகழும் இறைவனுக்கே...

என்றென்றும் மக்கள் பணியில்;

சமுதாய ஊழியர்கள்,
இந்தியர் நல்வாழ்வு பேவை,
குவைத் மண்டலம்.

தொடர்புக்கு,
55078876, 55139660, 69333276, 69696778

No comments:

Post a Comment