Tuesday, 19 March 2024

ஏப்ரல் 19 வெள்ளிக்கிழமை / இமாம்களும், இஸ்லாமிய வாக்காள பெருமக்களும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டிய நேரமிது.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இமாம்களும், இஸ்லாமிய வாக்காள பெருமக்களும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டிய நேரமிது. 

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ


பாராளுமன்ற தேர்தல் தேதி இன் ஷா அல்லாஹ் தமிழகத்தில் 
ஏப்ரல் 19 வெள்ளிக்கிழமை எனவும், கேரளத்தில் ஏப்ரல் 26 மறு வெள்ளிக்கிழமை
எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்கள் வாக்களிப்பதை தடுக்கும் வகையில் இதுபோல வெள்ளிக்கிழமைநாட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதையே நாம் நேர்மறையாக எடுத்து கொள்ள வேண்டும்.
 நமக்கு சாதகமான சூழ்நிலையாக மாற்றி விட வேண்டும். மறவாதீர்.

ஜும்மா தொழுகைக்கு முன்னதாகவே காலையில் இருந்து மதியம் 12 மணிக்குள் நமது வாக்குகளை பதிவு செய்வோம்.

மதியம் ஜும்மா தொழுகையை  வாக்களிப்பவர்கள் வசதிக்காக பயான் இல்லாமல் அரை மணி நேரத்தில் முடித்து கொள்ளலாம்.

கொரோனா காலத்தில் கூட இது போல் சுருக்கமாக நாம் தொழுது இருக்கின்றோம்.

இந்திய தேசத்தை விஷமிகளிடமிருந்து பாதுகாக்க இஸ்லாமியர்களாகிய நம்முடைய வாக்கு மிகவும் முக்கியம் என்பதனை அனைவரும் உணர வேண்டும். எனவே நாம் 
100 சதவீதம் கண்டிப்பாக வாக்களிப்போம்.

அதே போல நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்சியை சார்ந்தவர்களாக இருப்போம்.
அதுபற்றி எல்லாம் கவலைப்பட இது சரியான நேரம் அல்ல.

நாம் எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் மதவாத கட்சிக்கு எதிராக உங்கள் வாக்குகளை மொத்தமாக பதிவு செய்யவும்.

வெள்ளி கிழமை தேர்தல் வைத்து விட்டார்கள் என புலம்புவதை விட்டு விட்டு அதையே நமக்கு சாதகமாக துஆக்கள் ஏற்றுக்கொள்ளும் நாளாக சிறப்பான துஆவோடு  நாம் சென்று வாக்களித்தால் மதவாத சக்தியை வீட்டிற்கு அனுப்பி விட்டு நல்லவர்களை ஆட்சியில் அமர்த்தலாம்.

வல்ல இறைவன் அல்லாஹ் படித்ததன் பிரகாரம் அமல் செய்யக்கூடிய பாக்கியத்தை உங்களுக்கும் எனக்கும் தந்து அருள் புரிவானாக! ஆமீன், ஆமீன், யாரப்பல் ஆலமீன்.


இந்திய மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து உலக அரங்கில் இந்தியா பன்முகத் தன்மை கொண்ட ஜனநாயக நாடு என்பதை பறைசாற்றுவோம்..

விழிப்புடன் வாக்களிப்பீர். நன்றி.

No comments:

Post a Comment