Sunday 28 September 2014

குஜராத் கலவரம் நடந்தபோது

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

குஜராத் கலவரம் நடந்தபோது மூன்று நாட்கள் மாநிலம் முழுக்க சுடுகாடாகிப்போச்சு.
முஸ்லீம்களை தேடித்தேடி கொன்னானுக. பெண்களை வயசு வித்தியாசம் பார்க்காம கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொன்னானுக. ஒரு பெண்ணோட கர்பத்தில் இருந்த சிசுவை வெளிய இழுத்து தீ வச்சி கொளுத்தினானுக.
மோடியின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த அமித்ஷா உட்பட இருண்டு அமைச்சர்கள் நேரடியாகவே இந்த கலவரத்தில் ஈடுபட்டானுக.
முன்னாள் காங்கிரஸ் எம்.பியின் வீட்டில் தஞ்சம் புகுந்த 34 பெண்கள்,குழந்தைகளோடு சேர்த்து அந்த முன்னாள் எம்.பியையும் வன்முறை கும்பல் கொன்று குவித்தது.
இத்தனை கலவரம் நடக்கும்போதும் முதல்வராக இருந்த நரேந்திர மோடி 'மாநிலத்தில் மூன்று நாட்களாக நடந்த எதுவுமே எனக்கு தெரியாது' என சொல்லிக்கொண்டிருந்தாரு.
காங்கிரஸ் கொடுத்த அழுத்தத்தால் கலவரம் நடக்கும் மூன்றாம் நாள் துணை ராணுவத்தை அனுப்பினார் பிரதமர் வாஜ்பாய்.
அப்போது குஜராத்தில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்ததுன்னு கேட்காத சுப்பிரமணிய சாமி இப்போ தமிழ்நாட்டுல ஆளுநர் ஆட்சியை அமல்படுத்தனும்னு கேட்குறான்.
எப்படியாவது தமிழ்நாட்டிலேயும் மத கலவரம் பண்ணி ஆட்சியை பிடிக்கனும்கறதுல சுனா சாமி கோஷ்டி தெளிவா இருக்கு.
நம்பிக்கை ராஜ் 

பகுத்தறிவுவாதிகளே...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


மனிதனுக்கும், இன்னபிற படைப்புகளுக்கும் இடையே எத்தனையோ விஷயங்கள் வேறுபட்டிருந்தாலும் இறைவன் பகுத்தறிவு என்னும் ஒரு அறிவை மட்டும் மேம்படுத்தி இந்த மனிதனை மேன்மையாக படைத்திருப்பதாக இறைவன் கூறுகிறானே,
அந்த அறிவை நாம் முறையாக பயன் படுத்துகிறோமா???
என்று ஒரு நிமிடம் ஆராய்ந்து பார்ப்போம்....

ஒரு நாய் மனிதனை போன்று பேசுகிறது என்று கூறினால்...

ஒரு மலை இடம் பெயர்ந்து விட்டது என்று கூறினால்...

மரம் இந்த பாதை வழியாக நடந்து போனது என்று கூறினால்...

இப்படி கூறினால் கூறுபவன் முட்டாள். இதை நம்புபவன் அடிமுட்டாள்...

அனைத்து மக்களும் இன்று படித்து நாகரீகத்தின் உச்சிக்கே சென்று கொண்டு இருக்ககூடிய இந்த காலகட்டத்தில் படைப்பினங்களால் நமக்கு நன்மை, தீமையை செய்ய முடியும் என்று நம்புவது எத்தனை பெரிய முட்டாள்தனம்...

ஒரு மரம் இன்னொரு மரத்தை வணங்குவதில்லை.
ஒரு விலங்கினம் இன்னொரு விலங்கை வணங்குவதில்லை.
ஒரு கல் இன்னொரு கல்லை வணங்குவதில்லை.

ஆனால் இந்த மனிதனோ மரத்தையும், விலங்கையும், கல்லையும் ஏன், இன்னொரு மனிதனையே வணங்கக்கூடிய ஒரு செயலை இந்த பகுத்தறிவுள்ள மனிதன்தான் செய்கிறான்.

இப்படி செய்யக்கூடிய மனிதன் நாகரீகமான பகுத்தறிவு உள்ளவனா???
இல்லை முட்டாள்களிலும் அடிமுட்டாளா???

அல்லாஹ் கூறுகிறான்...
மனிதர்களே! ஓர் உவமை கூறப்படுகின்றது; அதனை நீங்கள் மிகக் கவனத்துடன் கேளுங்கள்: அல்லாஹ்வை விடுத்து நீங்கள் எந்தக் கடவுள்களை அழைக்கின்றீர்களோ, அக்கடவுள்கள் அனைவரும் சேர்ந்து ஓர் ஈயைப் படைக்க விரும்பினாலும் படைக்க முடியாது! ஏன் ஈ, அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டு போனாலும் கூட அதனிடமிருந்து அதனை விடுவிக்கவும் அவர்களால் முடியாது. உதவி தேடுகின்றவர்களும் பலவீனர்களே! உதவி தேடப்படுபவர்களும் பலவீனர்களே!
(குர்ஆன்-22:73)

ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் ஒரு பாடம்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

ஜெயலலிதா மற்றும் 3 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு:

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் அறிக்கை:

1991-1996ஆம் ஆண்டுகளில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1996ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு கடந்த 18 ஆண்டு காலமாக நீடித்து வந்தது. இந்த வழக்கைப் பொறுத்தமட்டில் நீண்ட காலம் நடந்த வழக்கு என்ற சாதனையைப் பெற்றுள்ளது.

சமீபகாலமாக பல்வேறு பதவி ஆசை வார்த்தைகளுக்கு நீதிபதிகளும் பலி ஆகிறார்களோ என்ற சந்தேகம் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டில் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் உச்சக்கட்ட அதிகாரம் நீதிமன்றத்திற்கு இருக்கிறது; நீதிமன்றம் தன்னுடைய அதிகாரத்தை வெளிப்படுத்தும் என்ற நம்பிக்கையை இந்த தீர்ப்பு ஏற்படுத்தியிருக்கிறது.

இது அதிகாரத்தில் இருக்கக்கூடியவர்களுக்கும்; அதிகாரத்தில் இருந்தால் எதையும் செய்யலாம் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கும் இந்தத் தீர்ப்பு நிச்சயம் ஒரு பாடமாக அமையும்.

இந்த தீர்ப்பினால் நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம் என்று ஒரு தரப்பும், தோற்று விட்டோம் என்று இன்னொரு தரப்பும் எண்ணிக் கொண்டிருக்கலாம். ஆனால் இதற்கு அடுத்தடுத்த நீதிமன்றங்களும் இந்தத் தீர்ப்பை அலசக்கூடிய வாய்ப்புள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அந்தவகையில் ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பாடமாக அமைந்துவிட்ட தீர்ப்பு என்று மனிதநேய மக்கள் கட்சி இந்தத் தீர்ப்பைப் பார்க்கிறது.

இவண்
ஜே.எஸ்.ரிபாயீ
தலைவர்

துபை சோனாப்பூரில் நடைபெற்ற இஜ்திமா நிகழ்ச்சி. தியாகம் செய்வோம் வாருங்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்லாஹ்வின் கிருபையால்,சோனாப்பூர் தமுமுக கிளையின் சார்பாக 26:9:2014 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணியளவில் தியாகம் செய்வோம் வாருங்கள் என்ற தலைப்பில் இஜ்திமா நிகழ்ச்சி நடைபெற்றது,மண்டல செயலாளர் சகோதரர் அதிரை அப்துல் ஹமீத் அவர்கள் தலைமை தாங்கினார்,நிகழ்ச்சியின் ஆரம்பமாக சோனாப்பூர் கிளையின் தாவா பொறுப்பாளர் சகோதரர் கடையநல்லூர் அப்துல் ஹமீத் அவர்கள்
திருக் குர்ஆன் ஓதி நிகழ்ச்சியை துவக்கிவைத்தார்,





முதல் அமர்வில் சகோதரர் செய்யத் அலி அவர்கள் உரிமைகளும் கடமைகளும் என்ற தலைப்பிலும் ,

மண்டல தலைவர் சகோதரர் A.S.இப்ராஹீம் அவர்கள் குர்பானி ஏன்?எதற்கு? என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள், அதற்க்கு பின் நடைபெற்ற  கேள்வி பதில் நிகழ்ச்சிக்கு சகோதரர் 
A.S.இப்ராஹீம் அவர்கள் பதில் அளிததார்கள். சிறந்த கேள்வி கேட்ட சகோதரர்களுக்கு பரமக்குடி அன்னை ஆயிசா டிரஸ்ட் மூலமாக மார்க்க புத்தகம்  வழங்கபட்டது.



மக்ரிப் தொழுகைக்கு இடைவெளி விடப்பட்டு ஆரம்பமான இரண்டாம் அமர்வில் சோனாப்பூரில் அழைப்பு பணியையும் சமுக பணிகளையும் செய்துவரும் சகோதரர்களுக்கு இஸ்லாமிய புத்தகங்களை மண்டல நிர்வாகிகள் பரிசாக வழங்கினர்,அதை தொடர்ந்து சகோதரர் நாசர் அலிகான் அவர்கள் இஸ்லாம் வளர்ந்த வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றினார்,சோனாப்பூர் தமுமுக சகோதரர்களால் ஏற்பாடு செய்யப்பட இந்நிகழ்ச்சி கலந்துக் கொண்ட சகோதரர்களுக்கு பயனுள்ள நிகழ்ச்சியாக அமைந்தது,




எல்லாப் புகழும் இறைவனுக்கே!
 (8 photos)