Friday 28 May 2021

பரமக்குடி அன்னை ஆயிசா அறக்கட்டளை

அலஹம்துலில்லாஹ் 

நமது பரமக்குடி அன்னை ஆயிசா அறக்கட்டளை ஏற்கனவே தமிழ்நாடு அரசு பதிவு என் 18/2016 இயங்கிவருகிறது் 
இப்போது தமிழகஅரசின் NGO விலும் பதிவும் செய்துள்ளோம் பதிவு என் NAI-05020 

நமது அன்னை ஆயிசா அறக்கட்டளை இறைவன் அருளால்  சீரிய சிந்தனையுடனும் திறம்பட செயல்பட உங்களுடைய ஆதரவும் பிராத்தனையும் தரவேண்டும்.

S.அப்துல் கபூர் 
நிறுவனர் 
அன்னை ஆயிசா அறக்கட்டளை 
பரமக்குடி
--
Thanks & Regards

Saturday 22 May 2021

பார்ப்பனீயம்

#பிணங்கள் குவிந்து கொண்டிருக்கும் கொடுங்காலத்திலும் யாரேனும் எரிக்க  இடமில்லாமல் வேறு சாதி தகனமேடைக்கு வந்துவிட்டால்..?

என்கிற எச்சரிக்கை உணர்வோடு புதிதாக பெயின்ட் வாங்கி எழுதியுள்ள அந்த மனசு இருக்கே சார் அது தான் #பார்ப்பனீயம்

செங்கம் வே.சஞ்சய் விசிக

Wednesday 19 May 2021

இந்த விதிகள் அரசுப் பணியில் இருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் கட்டுப்படுத்தும்.

இந்த விதிகள் அரசுப் பணியில் இருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் கட்டுப்படுத்தும்.

தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதி 2(5) & (6) ன்படி கீழ்க்கண்ட உறுப்பினர்கள், அரசு ஊழியர் ஒருவரின் குடும்ப உறுப்பினர்களாக கருதப்படுவர்.

தந்தை / வளர்ப்புத் தந்தை
தாய் / வளர்ப்புத் தாய்
கணவன்
மனைவி
மகன் / வளர்ப்பு மகன்
மகள் / வளர்ப்பு மகள்
சகோதரன்
சகோதரி
மனைவியின் தாய், தந்தை
கணவரின் தாய், தந்தை
சகோதரியின் கணவர்
சகோதரரின் மனைவி
மகளின் கணவர்
மகனின் மனைவி

தொலைதூர கல்வி, மாலைநேரக் கல்லூரி மற்றும் தனியாக படிக்க அரசு அலுவலர், தன் துறை தலைவரிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி விண்ணப்பம் கிடைத்த 15 நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும். மேலும் விவரங்கள் தேவைப்படின் அந்த விவரங்கள் கிடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும். 15 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படவில்லை என்றால் கல்வி பயில்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக அரசு ஊழியர் கருதிக் கொள்ளலாம். அரசாணை எண். M. s. No 200, P & A. R., DT - 19.04.1996. அரசுப் பணியை தவிர வேறு எந்தப் பணியையும் அரசு ஊழியர் ஏற்கக்கூடாது.

அரசு ஊழியர் எவரும் பகுதி நேர வேலை எதையும் செய்யக்கூடாது. G. O. Ms. No. 893, P & A. R. DT - 23.09.1983 Rule 8(1)(aa). ஆனால் provision 6 under Rule 8(1)(a) ல் கண்டுள்ள விலக்களிப்பின்படி அரசு ஊழியர் ஒருவர் கல்வி நிலையங்களில் விரிவுரையாற்றி அதற்கென மதிப்பூதியம் பெறலாம்.

எந்த ஆசிரியரும் தனியாக (Tuition) வகுப்பு நடத்தக்கூடாது. டியூஷன் நடத்தும் எண்ணத்துடன் மாணவரிடமோ, அவருடைய பெற்றோரிடமோ அல்லது பாதுகாவலரிடமோ எந்த உறவையும் ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது. இருப்பினும் பணம் ஏதும் பெறாமல் மாணவர்களுக்கு தனியாக கல்வி புகட்ட தடை ஏதுமில்லை. Rule 6(17)

அலுவலக வேலைக்கு பாதிப்பு ஏற்படாமல் ஒருவர் விஞ்ஞானம், அறிவியல், இலக்கியம், கலை போன்ற பணிகளில் பங்கேற்கலாம். ஆனால் அதுபோன்ற பணிகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அலுவலக துறைத் தலைவர் அறிவுறுத்தினால் அதுபோன்ற வேலைகளில் ஈடுபடக்கூடாது. Provision 1 rule 8(1)(a)

அரசு ஊழியரின் குடும்ப உறுப்பினர்கள் அவர்களின் சொந்த வருமானத்திலிருந்து ஒரு சொத்தை கையகப்படுத்துவதற்கோ அல்லது விற்பனை செய்வதற்கோ எவருடைய அனுமதியும் பெறத் தேவையில்லை. ஆனால் அரசு ஊழியரே குடும்ப உறுப்பினர்களின் பெயரில் ஒரு சொத்தை கிரையமாக பெற்றால் அதற்கு துறைத்தலைவரின் அனுமதி தேவை. G. O. Ms. No. 3158, Public (service - A) Dept, DT - 27.09.1974

அரசு பணிபுரிகின்ற கணவன், மனைவி இருவரும் சேர்ந்து ஒரு சொத்தை கிரையம் வாங்கினால் அதன் விவரத்தை துறைத்தலைவருக்கு இருவரும் தனித்தனியாக தெரிவிக்க வேண்டும். Govt. Letter. No. 29546/80 - 4, P & A. R. DT - 22.10.1980

மூதாதையர் சொத்து ஒன்று வாரிசுரிமையின்படி இறங்குரிமையின் மூலம் கிடைக்கும் தருவாயில் அதை துறைத்தலைவருக்கு தெரிவிக்க வேண்டாம். ஆனால் சொத்து அறிக்கையில் காட்ட வேண்டும். Rule 7(3)

அரசு ஊழியர் பணிபுரியும் மாவட்டத்தில் எந்தச் சொத்தையும் கையகப்படுத்தக்கூடாது. முன்னமே பணிபுரிந்த மாவட்டமாக இருப்பின், இடமாறுதல் பெற்று 2 ஆண்டுகள் கடந்த பின்னர்தான் சொத்து ஒன்றை கையகப்படுத்த வேண்டும். Rule 7(14)

இருப்பினும் வீடு அல்லது வீட்டுமனை ஒன்றினை பணிபுரியும் அல்லது பணிபுரிந்த மாவட்டத்தில் வாங்கவோ, விற்கவோ தடை ஏதுமில்லை. Rule 7(14)(a)

வருவாய்த்துறை அல்லது நிதித்துறையில் பணிபுரிபவர்கள் அத்துறையில் நடத்தப்படும் அசையும் அல்லது அசையா சொத்துக்களை பொது ஏலத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கையகப்படுத்தக்கூடாது. Rule 7(16)

Record sheet அல்லது personal file - ஐ பராமரித்து வரும் அதிகாரி, ஊழியர்களின் சொத்து விவரங்களை ஒரு பதிவேட்டில் பதிவு செய்து பராமரிக்க வேண்டும். Rule 7(9)

கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொகைக்கும் அதிகமாக சொத்து வாங்கினாலோ அல்லது விற்பனை செய்தாலோ துறைத்தலைவருக்கு தெரிவிக்க வேண்டும். இந்த Rule 7 (2) amended in G. O. Ms. No. 39, P & A. R. Dt - 9.03.2010

A Group Employees may Purchase upto Rs. 80000/-

B Group Employees may Purchase upto Rs. 60000/-

C Group Employees may Purchase upto Rs. 40000/-

D Group Employees may upto Rs. 20000/-

அரசு ஊழியர்கள் ஒவ்வொரு 5 ஆண்டிற்கு ஒருமுறை, 5 ஆம் ஆண்டு முடிவில் சொத்து அறிக்கை ஒன்றினை துறைத்தலைவருக்கு தாக்கல் செய்ய வேண்டும். Rule 7(3)

அரசு ஊழியர்கள் பொதுவாக அரசியல் செல்வாக்கு கொண்டு வருவதை அல்லது அமைச்சர்களிடம் முறையிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அரசு ஊழியர் எவரேனும் அரசியல் செல்வாக்கு கொண்டு வந்தால் அவரை துறைத்தலைவர் கண்டிக்க வேண்டும். அதனையும் பொருட்படுத்தாமல் இரண்டாவது முறையாக அரசியல் செல்வாக்கு கொண்டு வந்தால் எச்சரிக்கை செய்ய வேண்டும். அதன்பிறகும் தொடர்ந்து அரசியல் செல்வாக்கு கொண்டு வந்தால் அந்த ஊழியர் மீது துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். Govt. Letter. No. 9637/A/95 - 1, P & A. R (A) Dept, dt - 24.04.1995

அலுவலக பிரச்சினை தொடர்பாக அரசு ஊழியர் ஒருவர் அமைச்சரை நேரில் சந்தித்து முறையீடு செய்யலாம். பின்னர் அந்த முறையீடு விவரத்தை அலுவலகத் தலைவர் வழியாக துறைத்தலைவருக்கு தெரிவிக்க வேண்டும். G. O. Ms. No. 9, P & A. R. (A) Dept, dt - 2.10.1985

Monday 10 May 2021

10.05.2021 பரமக்குடி அன்னை ஆயிஷா அறக்கட்டளை - பித்ரா 2021

10.05.2021 பரமக்குடி அன்னை ஆயிஷா அறக்கட்டளை - பித்ரா 2021

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


அன்னை ஆயிஷா டிரஸ்ட் - பரமக்குடி. அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நற்பணிகள் பல செய்துகொண்டு இருக்கிறது.


மேலும் பரமக்குடி நகரில் அன்னை ஆயிஷா அறக்கட்டளை மூலமாக முஸ்லிம்களுக்கு பித்ரா கடந்த 17 வருடங்களாக விநியோகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. அதேபோல் இந்த வருடமும் ரமலான் 27 அன்று 10.05.2021 பித்ரா 200 க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு தமிழக அரசு விதித்த கெரானா சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு விநியோகிக்கபட்டது.


அல்லாஹ் எங்கள் பனிகளை ஏற்று கொன்டு இதற்க்காக உதவி செய்த மற்றும் உழைத்த சகோதர சகோதிரிகளுக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் வெற்றியை தருவானாக ! ஆமீன்


S.Abdul Gafoor

President

Annai ayeisha trust paramakudi

Ramnad district

Tamil Nadu India 🇮🇳



Tuesday 4 May 2021

ஸதக்கத்துல் ஃபித்ர் அறிவிப்பு: 2021

ஸதக்கத்துல் ஃபித்ர் அறிவிப்பு:  2021
××××××××××××××××××××××××××

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அன்னை ஆயிசா அறக்கட்டளை வழக்கம்போல் ஸதக்கத்துல் ஃபித்ர் விநியோகத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
 
200 குடும்பங்கள் பயன்பெற திட்டமிட்டுள்ளோம், இன்ஷா அல்லாஹ். 10.05.2021 காலை

எனவே, எங்களின் சேவையை அல்லாஹ் ஏற்று கொண்டு மென்மேலும் தொடர  இறைவனிடம் பிராத்தனை செய்யவும்.

நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன்பாளியை தூய்மைப் படுத்துவும், ஏழைகளுக்கு உணவாகவும் நபி  (ஸல்) அவர்கள் ஃபித்ராவை கடமையாக்கினார்கள்.
அறிவிப்பு: இப்னு அப்பாஸ்  (ரலி)
நூல்:அபூதாவுது

செய்தி/ தகவல்
அன்னை ஆயிசா அறக்கட்டளை
பரமக்குடி
இராமநாதபுரம் ஜில்லா

நிய்யத் எப்படி வைப்பது ? AAT

https://youtube.com/watch?v=JABlT-y1xF4&feature=share

நிய்யத் எப்படி வைப்பது ?
A.s.ibrahim

: தொழுகை எவ்வாறு இருக்க வேண்டும் ?

 தொழுகை எவ்வாறு இருக்க வேண்டும் 
--
Thanks & Regards