Tuesday 24 January 2023

பிரதமர் மோடி மற்றும் குஜராத் கலவரம் குறித்த பிபிசி ஆவணப்படத்தை குடியரசு தினத்தன்று கேரளாவில் வெளியிடு

பிரதமர் மோடி மற்றும் குஜராத் கலவரம் குறித்த பிபிசி ஆவணப்படத்தை குடியரசு தினத்தன்று கேரளாவில் வெளியிட பல்வேறு அரசியல் கட்சிகள் முடிவுபாஜக கடும் எதிர்ப்பு

0

பிபிசி தயாரி்த்துள்ள பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை திரையிட கேரளாவில் பல்வேறு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்த விவகாரத்தில் உடனடியாக முதலமைச்சர் பினராயி விஜயன் தலையிட்டு நிறுத்தவேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமும், அதைத் தொடர்ந்து பெரிய அளவிலான கலவரமும் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டது குறித்து பிபிசி சேனல், "India:The Modi Question" என்ற ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிட ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் என எந்த சமூக வலைத்தளத்திலும் இந்த ஆவணப்படத்துக்கான இணைப்புகளைப் பதிவிடக்கூடாது என்று ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது.

 

ஆனால், ஒன்றிய அரசின் எதிர்ப்பை மீறி தெலங்கானாவில் உள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள் இந்த ஆவணப்படத்தை பார்த்துவிட்டனர். அடுத்ததாக கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் பிபிசி ஆவணப்படத்தை திரையிடத் தயாராகி வருகிறது. இது தொடர்பான அறிவிப்பையும் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இதேபோல எஸ்எப்ஐ அமைப்பும், காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அமைப்பும், மோடியின் ஆவணப்படத்தை கேரளாவில் திரையிடுவோம் என்று அறிவித்து களமிறங்கியுள்ளன. கேரள காங்கிரஸ் கட்சி கூறுகையில் வரும் குடியரசு தினத்தன்று மாவட்டத்தின் தலைநகரில் பிபிசி எடுத்த பிரதமர் மோடி குறித்த ஆவணப்படம் திரையிடப்படும் என்று அறிவித்துள்ளது.

கேரளாவில் அரசியல் கட்சிகளின் இந்த செயல்பாட்டுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜக மாநிலத் தலைவர் கே. சுரேந்திரன் கூறுகையில் "பிபிசி ஆவணப்படத்தை கேரளாவில் திரையிடும் விவகாரத்தில் உடனடியாக முதலமைச்சர் பினராயி விஜயன் தலையிட்டு நிறுத்த வேண்டும்.

இதுபோன்ற செயல்கள் தேசத்துரோகமானது. நாட்டின் ஒற்றுமை மற்றும் இறையாண்மையைக் குலைக்க அந்நிய சக்திகளுக்கு நாம் அனுமதி கொடுப்பது போன்றாகும். 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளை மீண்டும் நினைவுபடுத்துவது மதரிதீயான பதற்றத்தை தூண்டிவிடும்" எனத் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசின் அமைச்சர் வி. முரளிதரனும், முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் "பிபிசி தயாரித்த பிரதமர் மோடியின் ஆவணப்படத்தைத் திரையிட அனுமதி வழங்கக் கூடாது, உடனடியாக இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Nanri aeansai

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: மாநிலங்களவை நியமன உறுப்பினரான இளையராஜா ஒருநாள் கூட பங்கேற்கவில்லை

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: மாநிலங்களவை நியமன உறுப்பினரான இளையராஜா ஒருநாள் கூட பங்கேற்கவில்லை

0

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இளையராஜா ஒருநாள் கூட மாநிலங்களவைக்கு செல்ல வில்லை என வருகைப் பதிவு தொடர்பான தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, வீரேந்திர ஹெக்டே, பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. 13 நாட்கள் வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் மாநிலங்களவை உறுப்பினர்களின் வருகைப் பதிவு தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, நியமன மாநிலங்களவை உறுப்பினர்களில் தடகள வீராங்கனை பி.டி.உஷா 13 நாட்கள் குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளார். ஒரு விவாதத்தில் கலந்துகொண்டார். வீரேந்திர ஹெக்டே 5 நாட்களும், விஜயேந்திர பிரசாத் 2 நாட்களும் கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளனர்.

தமிழ்நாட்டிலிருந்து நியமிக்கப்பட்ட இசையமைப்பாளர் இளையராஜா கூட்டத்தொடரின் ஒருநாள் கூட பங்கேற்கவில்லை. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூட்டப்பட்ட போது முதல் நாளான மாநிலங்களவையில் புதியதாக தேர்வு செய்யப்பட்ட நியமன மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவியேற்பு விழா நடைபெற்றது. அந்த பதவியேற்பு விழாவில் கூட இளையராஜா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Nanri aransai

 

Wednesday 18 January 2023

How Many Groups in TNPSC? குரூப் 1- 7, 8 பற்றி தெரியுமா?

 

Dear Parents  & Dear friends &

இளைஞர்களே இதனை தெரிந்துகொண்டு இனியாவது கல்வியில் முன்னுக்குவாருங்கள்.

 

TNPSC-இல் எத்தனை குரூப் உள்ளது? உங்களுக்கு தெரியுமா?

குரூப் 7, 8 பற்றி தெரியுமா?

 

TNPSC-தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப் சேவைத் தேர்வுகள்/பதவிகள் அது என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா? தெரியவில்லை என்றால் அதன் முழுவிவரங்கள் பின்வருமாறு?

 

How Many Groups in TNPSC?

 

குரூப் – 1,

குரூப் – 2,

குரூப் – 3,

குரூப் – 4,

குரூப் – 5,

குரூப் – 6,

குரூப் – 7,

குரூப் – 8

 

குரூப் – 1 சேவைகள்

(Group-I)

 

1)துணை கலெக்டர்

(Deputy Collector)

2)துணை போலீஸ் சூப்பிரண்டு (வகை – I) (Deputy Superintendent of Police)

3)மாவட்ட பதிவாளர், பதிவுத் துறை

(District Registrar, Registration Department)

ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் (பஞ்சாயத்து)

4)கலெக்டருக்கு தனிப்பட்ட உதவியாளர் (மேம்பாடு) (Assistant Director of RD Dept (Panchayat) /Personal Assistant (Development) to Collector)

5)மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (District Employment Officer)

6)தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகளில் பிரதேச அலுவலர்

(Div. Officer in Fire and Rescue Services)

7)உதவி ஆணையர் (சி.டி.) (Asst Commissioner)

8)கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் (Deputy Registrar of Co-operative Societies)

 

குரூப் – 1A சேவைகள்

(Group-I A)

 

1)உதவி காடுகளின் பாதுகாவலர் (Assistant Conservator of Forests)

 

குரூப் – 1B சேவைகள்

(Group-I B)

1)உதவி ஆணையர் H.R & C.E (Assistant Commissioner, H.R. & C.E)

 

குரூப் – 1C சேவைகள்

(Group-I C)

 

1)மாவட்ட கல்வி அலுவலர் DEO

(District Educational Officer)

2)ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு -2

 

குரூப் – 2 சேவைகள்

(நேர்முகத்தேர்வு பதவிகள்)

(Group-II)

1)துணை வணிக வரி அதிகாரி

2)நகராட்சி ஆணையர், தரம் -2

3)இளைய வேலைவாய்ப்பு அதிகாரி (வித்தியாசமாக இல்லாதவர்)

4)இளைய வேலைவாய்ப்பு அதிகாரி (வித்தியாசமாக திறமையானவர்)

5)துணை பதிவாளர்,

தரம் -2

6)தொழிலாளர் உதவி ஆய்வாளர்

7)உதவி பிரிவு அதிகாரி (சட்டம் மற்றும் நிதி தவிர துறை)

8)உதவி பிரிவு அதிகாரி (சட்டத்துறை)

9)உதவி பிரிவு அதிகாரி (நிதித்துறை)

10)தமிழ்நாடு பொது சேவையில் உதவி பிரிவு அதிகாரி ஆணைக்குழு

உதவி பிரிவு அதிகாரி-கம்-புரோகிராமர்

11)உதவி பிரிவு அதிகாரி, தமிழ்நாடு சட்டமன்றம் செயலக சேவை

12)நன்னடத்தை அலுவலர், சமூக பாதுகாப்பு

நன்னடத்தை அலுவலர், 13)சிறைத் துறை

தொழில்துறை கூட்டுறவு அதிகாரி, கைத்தொழில் ஆணையர் மற்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தக இயக்குநர்

14)பெண்கள் நல அலுவலர், சமூக பாதுகாப்பு

15)சர்வே இயக்குநர் மற்றும் தீர்வுகளுக்கான Reg.Co-op Society இல் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மூத்த ஆய்வாளர்

16)வரவேற்பாளர், தமிழகம் விருந்தினர் மாளிகை,

17)உதகமண்டலம் தொழில்துறை கூட்டுறவு தொழில்துறை மேற்பார்வையாளர் 18)கமிஷனர் மற்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தக இயக்குநர் துறை

19)திட்ட உதவியாளர் ஆதி-திராவிடர் மற்றும் ....

பழங்குடியினர் நலத்துறை தணிக்கை பிரிவில் உள்ள தணிக்கை ஆய்வாளர்

இந்து மத மற்றும் அறக்கட்டளை நிர்வாகத் துறை

உள்ளூர் நிதி தணிக்கைத் துறையின் உதவி ஆய்வாளர் மற்றும் உள் தணிக்கைத் துறை

மேற்பார்வையாளர் / மூத்த எழுத்தர் / தலைமை கணக்காளர் / ஜூனியர்தமிழ்நாடு வேளாண் சந்தைப்படுத்தல் கண்காணிப்பாளர் துணை சேவை

உதவி ஜெயிலர், சிறைத்துறை.

வருவாய் துறையில் உதவியாளர் டவுன் பஞ்சாயத்துத் துறையில்

நிர்வாக அதிகாரி,

தரம் -2 டி.வி..சியில்

சிறப்பு உதவியாளர்

கைத்தறி ஆய்வாளர் பொலிஸ் திணைக்களத்தின் புலனாய்வு பிரிவில்

சிறப்பு கிளை உதவியாளர்.

பால் உற்பத்தியில் கூட்டுறவு சங்கங்களின் மூத்த ஆய்வாளர் மற்றும் பால் மேம்பாடு

தொழிலாளர் உதவி ஆய்வாளர்

தணிக்கை உதவியாளர் நெடுஞ்சாலைத் துறையில் கணக்கு கிளையில்.

 

குரூப் – 2A சேவைகள் (நேர்முகத்தேர்வு இல்லாத பதவிகள்) (Group-II A)

 

கருவூல மற்றும் கணக்குத் துறையில் கணக்காளர்

ஜூனியர் கூட்டுறவு கணக்காய்வாளர் செயலகத்தில்

உதவியாளர் (சட்டம் மற்றும் நிதி தவிர)

இளைய தொழில்நுட்ப உதவியாளர், சிவில் சப்ளைஸ் துறை

தனிப்பட்ட எழுத்தர் (சட்டம் மற்றும் நிதித் துறை தவிர)

தனிப்பட்ட எழுத்தர் (சட்டத்துறை)

தனிப்பட்ட எழுத்தர் (நிதித்துறை)

தமிழ்நாடு பொது சேவையில் தனிப்பட்ட எழுத்தர் ஆணைக்குழு

தனிப்பட்ட எழுத்தர், தமிழ்நாடு மாநில திட்டமிடல் ஆணையம்

தமிழக சட்டசபையில் ஸ்டெனோ-டைப்பிஸ்ட் செயலக சேவை

உதவியாளர் பல்வேறு துறைகள்

செயலகத் துறையில் உதவி (நிதித்துறை)

தமிழ்நாடு பொது சேவை ஆணையத்தில் உதவியாளர்

தமிழக சட்டசபையில் கீழ் பிரிவு எழுத்தர், செயலகம்

திட்டமிடல் இளைய உதவியாளர்

வரவேற்பாளர் (சிறு சேமிப்புத் துறை)

சட்டத்துறையில் உதவியாளர்

தமிழ்நாடு சட்டமன்ற சட்டசபை சேவையில் உதவியாளர்

ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு – 3

 

குரூப் – 3 சேவைகள்

(Group-III)

தீயணைப்பு நிலைய அதிகாரி

 

குரூப் – 3A சேவைகள்

(Group-III A)

கூட்டுறவு சங்கங்களின் ஜூனியர் இன்ஸ்பெக்டர்

தொழில்துறை கூட்டுறவு சங்கங்களின் உதவி மேற்பார்வையாளர்

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி (பயிற்சி பிரிவு) துறையில் கடை வைத்திருப்பவர் கைத்தொழில் மற்றும் வணிகத் துறையில் ஸ்டோர்-கீப்பர், கிரேடு -2

 

குரூப் – 4 சேவைகள்

(Group-IV)

ஜூனியர் உதவியாளர் (பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அல்லாத)

பில் கலெக்டர்

தட்டச்சு செய்பவர்

ஸ்டெனோ-டைப்பிஸ்ட், கிரேடு -3

கள ஆய்வாளர் 6. வரைவாளர்

 

குரூப் – 5A சேவைகள்

(Group-V A)

 

செயலகத்தில் உதவியாளர் (இடமாற்றம் மூலம் ஆட்சேர்ப்பு) (சட்டம் மற்றும் நிதித் துறை தவிர)

 

குரூப் – 6 சேவைகள்

(Group-VI)

வன பயிற்சியாளர்

 

குரூப் – 7A சேவைகள்

(Group-VII A)

நிர்வாக அதிகாரி,

தரம் -1

 

குரூப் – 7B சேவைகள்

(Group-VII B)

நிர்வாக அதிகாரி,

தரம் – 3

 

குரூப் – 8 சேவைகள்

(Group-VIII)

நிர்வாக அதிகாரி,

தரம் – 4

 

இத்தனை தேர்வுகள் பற்றிய நம்மில் பலருக்கு முறையான வழிகாட்டல் இல்லாததால் நம்மில் பலர் TNPSC தேர்வுகளைப் பற்றிய தவறான கருத்துக்களை ஒரு சில விஷமிகள் பரப்பி வருகின்றனர்.

 

*இது போட்டித் தேர்வுகளில் போட்டியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க செய்து வருகின்றனர். ஆகையால் போட்டித்தேர்வர்கள் தவறான தகவல்களை நம்பாமல் அனைவரும் பயின்று விரைவில் அரசு பணியில் அமர வாழ்த்துக்கள்.👍