Tuesday, 24 January 2023

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: மாநிலங்களவை நியமன உறுப்பினரான இளையராஜா ஒருநாள் கூட பங்கேற்கவில்லை

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: மாநிலங்களவை நியமன உறுப்பினரான இளையராஜா ஒருநாள் கூட பங்கேற்கவில்லை

0

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இளையராஜா ஒருநாள் கூட மாநிலங்களவைக்கு செல்ல வில்லை என வருகைப் பதிவு தொடர்பான தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, வீரேந்திர ஹெக்டே, பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. 13 நாட்கள் வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் மாநிலங்களவை உறுப்பினர்களின் வருகைப் பதிவு தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, நியமன மாநிலங்களவை உறுப்பினர்களில் தடகள வீராங்கனை பி.டி.உஷா 13 நாட்கள் குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளார். ஒரு விவாதத்தில் கலந்துகொண்டார். வீரேந்திர ஹெக்டே 5 நாட்களும், விஜயேந்திர பிரசாத் 2 நாட்களும் கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளனர்.

தமிழ்நாட்டிலிருந்து நியமிக்கப்பட்ட இசையமைப்பாளர் இளையராஜா கூட்டத்தொடரின் ஒருநாள் கூட பங்கேற்கவில்லை. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூட்டப்பட்ட போது முதல் நாளான மாநிலங்களவையில் புதியதாக தேர்வு செய்யப்பட்ட நியமன மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவியேற்பு விழா நடைபெற்றது. அந்த பதவியேற்பு விழாவில் கூட இளையராஜா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Nanri aransai

 

No comments:

Post a Comment