Saturday 15 August 2015

பாலியல் குற்றவாளிகளின் தகவல்களுடன் புதிய வலைதளம்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களின் முழு விவரங்களையும் இணையதளத்தில் வெளியிடும் வகையில், புதிய வலைதளம் ஒன்றை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
நாட்டின் 69வது சுதந்திர தினத்தை முன்னிட்டு `தேசப் பாது காப்புக்கு மேற்கொள்ளப்பட்டி ருக்கும் நடவடிக்கைகள்' என்ற தலைப்பில், அவர் வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:
பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களின் முழு விவரங்களை யும் இணையத்தில் பதிவேற்ற உள்ளோம். அதற்காக `க்ரைம்ஸ் அண்ட் கிரிமினல்ஸ் டிராக்கிங் நெட் வொர்க் சிஸ்டம்ஸ் (சிசிடிஎன்எஸ்) பிராஜெக்ட்' திட்டத்தின் கீழ் புதிய வலைதளம் ஒன்றை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.
இதில் நாடு முழுவதும் உள்ள பாலியல் குற்றவாளிகளின் விவரங் கள் வெளியிடப்படும். அதனை வைத்து பெண்களின் பெற்றோர், வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் போன்றவர்கள், ஒரு நபரின் நடத்தையைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும்.
தவிர, இந்த வலைதளத்தில் தீவிரமாகத் தேடப்படும் குற்ற வாளிகள், காணாமல் போனவர் கள், ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்கள் ஆகியோர் பற்றியும் தகவல்கள் பதிவு செய்யப்படும்.
மேலும், உள்துறை அமைச்சகத் தின் `சென்ட்ரல் சிட்டிசன் போர்ட்டல்' வலைதளத்தின் மூல மாக புகார் அளித்தல், பாஸ்போர்ட் சரிபார்த்தல் மற்றும் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண நிதி பெறுதல் போன்ற சேவைகளும் வழங்கப்பட உள்ளன.
பெண்களின் பாதுகாப்புதான் எனது முன்னுரிமை. இந்த ஆண்டு ஜனவரி மாதம் டெல்லி போலீஸ் `ஹிம்மத்' என்ற செயலியை (ஆப்) அறிமுகப்படுத்தியது. அதனை தன் கைப்பேசியில் தரவிறக்கம் செய்துகொண்டு ஒரு பெண், ஆபத்தான சூழ்நிலையில் இருக் கும்போது அதனைப் பயன்படுத் தினால் உடனே அந்த இடத்துக்கு 5 அல்லது 7 நிமிடங்களுக்குள் போலீ ஸார் உதவிக்கு வருவர்.இதே போல தேசிய அளவிலான ஒரு திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட் டுள்ளன. இதற்காக தொலைத் தொடர்பு துறை ஏற்கெனவே `112' என்ற எண்ணை வழங்கியுள்ளது.
இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தவுடன் இந்த எண்ணுக்கு லேண்ட்லைன், கைப்பேசி, குறுஞ் செய்தி, மின்னஞ்சல், வாட்ஸ் ஆப் எனப் பல வழிகளிலும் தொடர்பு கொள்ள முடியும். உடனே பாதுகாப் புக்கு போலீஸார் வருவர்.
ஒரு நாளில் சுமார் 10 லட்சம் அழைப்புகளை ஏற்றுக்கொள்ளும் அளவில் இந்தத் திட்டம் வடி வமைக்கப்பட்டுள்ளது. அவற்றை நிர்வகிக்க 3,500 ஊழியர்கள் நிய மிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

download

இஸ்ரோ திட்ட இயக்குநருக்கு அப்துல்கலாம் விருது!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) திட்ட இயக்குநர் என்.வளர்மதிக்கு இவ்வாண்டு புதிதாக அறிவிக்கப்பட்ட டாக்டர் அப்துல்கலாம் விருதினை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
நாட்டின் 69-வது சுதந்திர தின விழாவை ஒட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் திட்ட இயக்குநர் என்.வளர்மதிக்கு இவ்வாண்டு புதிதாக அறிவிக்கப்பட்ட டாக்டர் அப்துல்கலாம் விருதுக்கான தங்கப் பதக்கம், 5 லட்சம் ரூபாய் காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணாக்கர் நலன் ஆகியவற்றிற்கு பாடுபட்டு வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தினத்தன்று அப்துல் கலாம் பெயரில் விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி அப்துல்கலாம் பெயரில் அறிவிக்கப்பட்ட இந்த விருது முதன்முதலாக (இஸ்ரோ) திட்ட இயக்குநர் என்.வளர்மதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதிமணிக்கு துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கான தங்கப் பதக்கம், 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

apj1_2511445g

முஸ்லிம்களுக்கு 20% இட ஒதுக்கீடு : உ.பி. அரசு திட்டம்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

உத்தரப்
பிரதேத்தில் முஸ்லிம்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்க ஆளும் சமாஜ்வாதி கட்சி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக சட்டப்பேரவை யின் நடப்பு கூட்டத்தொடரில் தீர் மானம் கொண்டுவந்து நிறைவேற்ற முதல்வர் அகிலேஷ் சிங் யாதவ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
நாட்டில் சிறுபான்மை முஸ்லிம் களின் நிலை அறிய முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ராஜேந்தர் சச்சார் தலைமையில் ஒரு குழு அமைக்கப் பட்டது. இக்குழு, “பல்வேறு நிலைகளில் பின்தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு 20 சதவீதம் வரை இட ஒதுக்கீடு அளிக்கலாம்என பரிந்துரை செய்திருந்தது.
இந்நிலையில் .பி.யில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில், இந்தப் பரிந்துரையை நிறைவேற்றுவோம் என முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சி வாக்குறுதி அளித்தது. எனினும் தேர்தலுக்குப் பின் முதல்வரான, முலாயமின் மகன் அகிலேஷ் சிங் இந்த வாக்குறுதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் சச்சார் குழுவின் பரிந்துரையை காட்டி முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க அகிலேஷ் முடிவு செய்துள்ளார். .பி. சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியுள்ள நிலையில், இதில் இடஒதுக்கீட்டு தீர்மானத்தை மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஆசம்கான் கொண்டுவர இருப்பதாகக் கூறப்படுகிறது.
இது குறித்துதி இந்துவிடம் சமாஜ்வாதி கட்சியின் தேசிய நிர்வாகிகள் கூறும்போது, “.பி.யில் அரசு வேலைவாய்ப்புகள், கல்வி நிறுவனங்கள் உட்பட அனைத்து துறைகளிலும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும். வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அரசு விடும் டெண்டர்கள் மற்றும் மாநில அரசின் திட்டங்களிலும் இடஒதுக்கீடு அளிக்கப்பட உள்ளதுஎன்றனர்.
சச்சார் குழுவின் பரிந்துரை களை அமல்படுத்தும் முயற்சியில் மாநில சிறுபான்மையினர் நலத்துறை இறங்கியுள்ளது. இதன்படி முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள பள்ளிகள் மேம்படுத்தப்பட உள்ளன. இத்துடன் முஸ்லிம் மாணவிகளுக்கு தனியான 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மேல்நிலைப் பள்ளிகளும் தொடங்கப்பட உள்ளன. இதில் ஆசிரியர்களாக பெண்கள் மட்டும் நியமிக்கப்பட உள்ளனர்.
.பி.யில் முலாயம் சிங், முஸ்லிம்களின் ஆதரவு பெற்றவர் என்பதை குறிப்பிடும் வகையில்முல்லா முலாயம்என அழைக்கப்படுகிறார். இடையில் கடந்த 2009-ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன் பாஜக முன்னாள் தலைவர் கல்யாண்சிங்கை தமது கட்சியில் சேர்த்ததால் முஸ்லிம் வாக்குகளை இழந்தார். அடுத்து 2011-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது கல்யாண்சிங்கை கட்சியில் இருந்து நீக்கியதுடன், அவரை கட்சியில் சேர்த்ததற்காக முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்டார். மேலும் சச்சார் குழுவின் பரிந்துரைகளை .பி.யில் அமல்படுத்துவதாக உறுதி அளித்தார்.
தற்போது .பி.யில் சமாஜ்வாதி கட்சியின் ஆட்சி அடுத்த ஆண்டு முடிவுக்கு வருகிறது. எனவே வரும் சட்டப்பேரவை தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளை பெறுவதற்காக முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க சமாஜ்வாதி அரசு முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது.

images