அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்,
ஆர்ட் ஆஃப் பீஸ் பவுன்டேஷன் சாா்பாக சென்னை மயிலாப்பூாில் உள்ள கவிக்கோ மன்றத்தில் சமாதானக் கலைவிழா -2015 என்ற நிகழ்ச்சி 26.07.2015 அன்று நடந்தது. இதில் கடல் கடந்த பறவைகள் ஆவணப்படம், உணா்வாய் உன்னை புத்தக வெளியீடு, அவள் குறும்படம் வெளியீடு, இஸ்லாமிய ஆளுமை விருது வழங்கல் மற்றும் புதிய மூன்று குறும்படங்கள் தொடக்கவிழா நடந்நது. இந்த விழாவிற்கு முனைவா் பேரா. ஹாஜா கனி அவா்கள் தலைமை வகிக்க, ஆர்ட் ஆஃப் பீஸ் ஃபவுன்டேஷன் அமைப்பின் நிறுவனர் வழக்கறிஞர் ஹூஸைன் பாஷா விழாவைத் துவக்கிவைத்து அறிமுகவுரையாற்றினார். அனைவரையும் ஷாமிலா பாத்திமா வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளர்களாக இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ், பரமக்குடி அன்னை ஆயிசா அறக்கட்டளை நிறுவனர் ஜனாப் அப்துல் கபூர் , தினமணி பத்திரிரையின் ஆசிரியர் கே.வைத்தியநாதன், தமுமுக-வின் தலைவர் மௌலவி ஜெ.எஸ்.ரிபாயி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி, வெல்பேர் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் மாநில தலைவர் சிக்கந்தர், செய்தியாளர் மனோபாரதி, கல்கி பிரியன், இமயம் டிவியின் சுஃப்யான் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
விழாவிற்கான ஒருங்கிணைப்பை குறும்பட இயக்குனர் காஜாமைதீன் அஹ்சனி தலைமையிலான குழுவினருடன், மீடியா 7, ஆர்.எஸ்.டி வீடியோஸ், ஷா ஸ்டுடியாஸ், யுனிவர்சல் சிண்டிகேட்ஸ், கே.கே.வி. குரூப்ஸ் நிறுவனத்தினர்கள் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
இறுதியில் பொறியாளர் முஹம்மது ஹனிபா நன்றியுரையாற்றினார்.
No comments:
Post a Comment