Tuesday 18 November 2014

முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:

நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:

பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு :— 93833 37639

பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு:- Toll Free No :- 180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828

thks Sulthan 

12 ஆண்டுகளுக்குப் பின்னர் குஜராத் கலவர இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது நானாவதி கமிஷன்!!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அகமதாபாத்: 2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரங்கள் தொடர்பான இறுதி விசாரணை அறிக்கையை மாநில முதல்வர் ஆனந்திபென் படேலிடம் நீதிபதி நானாவதி கமிஷன் இன்று சமர்பித்தது.
2008-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதி நானாவதி தலைமையிலான விசாரணைக் கமிஷன், கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் தொடர்பான தங்களது விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்தது. அதில் அந்த எரிப்புச் சம்பவம் திட்டமிடப்பட்ட சதி என்று கூறியிருந்தது.
இந்த விசாரணைக்கு 24 முறை காலநீட்டிப்பு அளிக்கப்பட்டது. அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி, அவரது அமைச்சரவை சகாக்கள், மூத்த அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள், மற்றும் சில இந்து இயக்கங்களின் பங்கு என்னவென்பது பற்றி இந்த கமிஷன் விசாரணை மேற்கொண்டது.
இறுதி அறிக்கை தயாராகி விட்டதால் விசாரணைக்கு காலநீட்டிப்பு தேவையில்லை என்று நீதிபதி நானாவதி கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நீதிபதி நானாவதி, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அக்‌ஷய் மேத்தா ஆகியோர் குஜராத் முதல்வர் வீட்டிற்கு இன்று சென்று அறிக்ககையை அளித்தனர்.
"2000 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை சமர்ப்பித்துள்ளோம்." என்று நீதிபதி நானாவதி தெரிவித்தார். ஆனால் அதன் உள்ளடக்கங்கள் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.
Thanks tamiloneindia 

மனிதர்களை நேசியுங்கள்... யாசிக்கும் குஜராத் கலவரத்தின் முகங்கள்...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மனிதர்களை நேசியுங்கள்... யாசிக்கும் குஜராத் கலவரத்தின் முகங்கள்...

Posted by: 
Updated: Thursday, March 6, 2014, 11:06 [IST]
கண்ணணூர்: குஜராத்தில் 2002ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின் போது உயிர்பிச்சைக் கேட்டு கூப்பிய கைகளுக்கும், மிரட்சி மிகுந்த கண்களுக்கும் சொந்தக்காரரான குத்புதீன் அன்ஸாரியும், தலையில் காவி ரிப்பனும், இடதுகையில் வாளும் ஏந்தி ஆக்ரோஷமாக வெறிக் கூச்சலிடும் கலவரக்காரரும் நேரடி காட்சியாக ஊடகங்களில் நிறைந்து காணப்பட்ட அசோக் மோச்சியும் கேரளாவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் ஒரே மேடையில் பங்கேற்றனர்.
பல்வேறு இடதுசாரி அமைப்புகளின் கூட்டமைப்பு கேரள மாநிலம் தளிப்பரம்பில் உள்ள சிரவக்கில் என்ற இடத்தில் 'இனப்படுகொலையின் 12 ஆண்டுகள்' என்ற பெயரில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது.
இந்த கருத்தரங்கில் குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தின் நேரடி காட்சியாக மக்கள் மனங்களில் நிறைந்த இரண்டு பேர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே மேடையில் தோன்றினார்கள்.
மனிதர்களை நேசியுங்கள்... யாசிக்கும் குஜராத் கலவரத்தின் முகங்கள்...
அந்த பிப்ரவரி 28
2002ம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று மாலை நெருங்கிய போது காலனியில் ஒரே பரபரப்பு. கோத்ராவில் ஒரு ரயில் பெட்டி எரிந்து அயோத்தியிலிருந்து வந்த நிறையப் பேர் இறந்துவிட்டார்கள் என்று யாரோ சொன்னார்கள். பல இடங்களிலும் ஒலிபெருக்கிகள் அலறுகின்றன. இந்த மாதிரி நேரங்களில் ஆட்கள் குடும்பத்தை இழுத்துக்கொண்டு எங்கெல்லாமோ ஓடுவார்கள் என்று அவர் கேள்விப்பட்டிருக்கிறார். விஷமிகள் வாசலை அடைவது வரை காத்துக்கொண்டிருப்பது முட்டாள்தனம். பலரும் அங்குமிங்கும் ஓடுவதைப் பார்த்தார் அன்சாரி.
விடிய விடிய கூக்குரல்
வீட்டை அடைந்தபோது அம்மா மற்றும் மனைவியின் முகங்கள் பயத்தால் இருளடைந்திருப்பதைப் பார்த்தார். நேரம் மூன்று மணியாகியிருக்கும் யாரும் உறங்கவில்லை. அலறல்களும் ஆவேசக் கூக்குரல்களும் அழுகைச் சத்தங்களும் கேட்கத் துவங்கின. வேண்டாதது எதுவோ நடக்கப்போகிறது என்று எதிர்பார்த்துத்தான் அன்சாரி வீட்டின் மேல் மாடியில் போய் நின்று காப்பாற்ற யாராவது வருவார்களா என்று தேடினார்.
கைகூப்பிய அன்சாரி
அப்போது அன்சாரி வீடுகளுடன் பற்றி எரிகிற மனிதர்களையும் பார்த்தார். ‘வெறியர்களுடன் கூடவே அவர்களைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் போலீசையும் கண்ட அன்சாரி உயிரைக் காப்பாற்றுங்கள் என்று கூவியபடி அன்சாரி அவர்களை நோக்கிக் கைகூப்பினார். அப்போது அதிரடிப் படையின் கூடவேயிருந்த ராய்ட்டர்ஸின் அர்கோ தத்தா என்னும் புகைப்படக்காரரின் கேமரா பலமுறை மின்னியதை அன்சாரி பார்க்கவில்லை. அதிரடிப் படை வெறியர்களை விரட்டியடிப்பதைப் பார்த்தார்.
மனிதர்களை நேசியுங்கள்... யாசிக்கும் குஜராத் கலவரத்தின் முகங்கள்...
கலவரத்தின் முகமான அன்சாரி
சொந்தமாக இருந்த ஒற்றையறை வீடு, டிவி, தையல் இயந்திரம் எல்லாம் இழந்தாகிவிட்டது. உயிரை மட்டும் கையில் பிடித்துக் கொண்டு ஷாஹெயாத் அகதிகள் முகாமுக்குச் சென்றார் அன்சாரி.
அகதிகள் முகாமில் பனிரெண்டு நாட்கள் கழிந்தபோதுதான் தன் படம் பத்திரிகையில் பிரசுரமான தகவலை யாரோ சொன்னார்கள். எவ்வளவோ பேரின் படம் பத்திரிகையில் வருவதுதானே என்றுதான் அன்சாரி அப்போது நினைத்தார். ஆனால் அதுதான் குஜராத் கலவரத்தின் முகமாகிப் போனது.
விவாதப் பொருளான அன்சாரி
இந்தியாவிலுள்ள பத்திரிகை நிறுவனங்கள் அனைத்துமே குஜராத் கலவரத்தைப் பற்றிக் குறிப்பிட வேண்டுமென்றால் முதலில் வைக்க வேண்டிய படமாக அந்தப் புகைப்படத்தை தனியே எடுத்து வைத்திருந்தன. அது அன்சாரிக்குத் தெரிந்திருக்கவில்லை. அப்படியே தெரிந்திருந்தாலும் அவரால் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. ஊடகங்கள் மூலமாகவும் இணையம் மூலமாகவும் அவருடைய படம் எல்லா இடங்களையும் சென்று அடைந்துவிட்டிருந்தது. அந்தப் படத்தைப் பற்றிய விரிவான விவாதங்கள் பல இடங்களிலும் நடந்தன.
வாளேந்திய கலவரக்கார்
குஜராத் கலவரத்தை துல்லியமாக அடையாளப்படுத்துவதில் இரண்டு புகைப்படங்கள் முக்கிய பங்கு வகித்தன. ஒன்று அன்சாரியின் புகைப்படம். இன்னொன்று, தலையில் இறுக்கிக் கட்டிய துணியுடன் வாளை உயர்த்தி வீரமுழக்கம் இடுகின்ற ஒருரின் புகைப்படம். இந்த இருவரும் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே மேடையில் சந்தித்து கலந்துரையாடினர்.
ரோஜாவை வழங்கி மோச்சி
கலவரத்தின் போது கைகளில் வாளை ஏந்திய அசோக் மோச்சி, அன்ஸாரிக்கு, சுகந்தம் மிகுந்த ரோஜாப்பூவை வழங்கினார். அன்றும், இன்றும் செருப்பு தைக்கும் தொழிலாளியாக வாழ்ந்து வரும் மோச்சி, செலவுகள் தாங்க முடியாததால் திருமணம் கூட செய்யாமல் இருக்கிறார்.
மறைந்து போன கொடூரம்
அவருடைய முகத்தில் பழைய கொடூரம் இன்று இல்லை. புன்சிரிப்புடன் காணப்பட்டார். மோச்சியின் வார்த்தைகளில் அன்பு கலந்திருந்தது. மனிதநேயத்தை விளக்க எந்த மொழியும் தடையில்லை என்று கூறி அன்ஸாரியை கட்டி அணைத்து மோச்சி கூறினார்.
வெறுப்பின் அரசியல்
குஜராத் கலவரத்தில் வேட்டைக்காரனுடைய முகமாக உயர்த்திக் காட்டப்பட்ட தலித் இளைஞனான அசோக் மோச்சி முதல்முறையாக மேடையில் தோன்றி பேசினார். அப்போது அவர், 'இனி மேலாவது நாம் வெறுப்பின் அரசியலை நிறுத்தியே தீரவேண்டும் என்றார்.
யாருக்கும் வாக்களிக்கவில்லை
இனப்படுகொலை ஏற்படுத்திய வேதனையால் விழிப்புணர்வு பெற்ற நான் அதன் பிறகு யாருக்கும் வாக்கு அளிக்கவில்லை. எனது மனதில் உள்ள எதிர்ப்பைநான் தெரிவித்தேன். இனியாவது எனக்கு அதில் இருந்து விடுதலை வேண்டும் என்றார் ' மோச்சி உணர்ச்சி மேலிட.
மாற்றத்தின் அடையாளம்
இது ஒரு மாற்றத்தின் துவக்கமாக அமையட்டும் என்றார் குத்புதீன் அன்ஸாரி. கேரளாவின் அன்பு தாங்க முடியாமல் தவிக்கிறேன் என்றார்.
அன்சாரியின் சுயசரிதை
இந்நிகழ்ச்சியில் ஸஈத் ரூமி எழுதிய 'நான் குத்புதீன் அன்ஸாரி' என்ற சுயசரிதை நூல் வெளியிடப்பட்டது. பல்வேறு இடதுசாரி ஆர்வலர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வெறுப்பு அரசியலை வளர்த்தும் சங்க்பரிவாரத்தின் தந்திரங்களை குறித்து இருவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்கும் அபூர்வமான காட்சியை காண ஏராளமானோர் நிகழ்ச்சியில் திரண்டிருந்தனர்.
thanks Tamiloneindia