அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்,
அகமதாபாத்: 2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரங்கள் தொடர்பான இறுதி விசாரணை அறிக்கையை மாநில முதல்வர் ஆனந்திபென் படேலிடம் நீதிபதி நானாவதி கமிஷன் இன்று சமர்பித்தது.
அகமதாபாத்: 2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரங்கள் தொடர்பான இறுதி விசாரணை அறிக்கையை மாநில முதல்வர் ஆனந்திபென் படேலிடம் நீதிபதி நானாவதி கமிஷன் இன்று சமர்பித்தது.
2008-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதி நானாவதி தலைமையிலான விசாரணைக் கமிஷன், கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் தொடர்பான தங்களது விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்தது. அதில் அந்த எரிப்புச் சம்பவம் திட்டமிடப்பட்ட சதி என்று கூறியிருந்தது.
இந்த விசாரணைக்கு 24 முறை காலநீட்டிப்பு அளிக்கப்பட்டது. அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி, அவரது அமைச்சரவை சகாக்கள், மூத்த அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள், மற்றும் சில இந்து இயக்கங்களின் பங்கு என்னவென்பது பற்றி இந்த கமிஷன் விசாரணை மேற்கொண்டது.
இறுதி அறிக்கை தயாராகி விட்டதால் விசாரணைக்கு காலநீட்டிப்பு தேவையில்லை என்று நீதிபதி நானாவதி கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நீதிபதி நானாவதி, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அக்ஷய் மேத்தா ஆகியோர் குஜராத் முதல்வர் வீட்டிற்கு இன்று சென்று அறிக்ககையை அளித்தனர்.
"2000 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை சமர்ப்பித்துள்ளோம்." என்று நீதிபதி நானாவதி தெரிவித்தார். ஆனால் அதன் உள்ளடக்கங்கள் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.
Thanks tamiloneindia
No comments:
Post a Comment