Friday 3 August 2012

பெங்களூர் & ஒலிம்பிக்ஸ் 2012 - இஸ்லாமை நோக்கி மக்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

 



நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்...

பெங்களூர் மாநகரம். 

1. தன் கார் பழுதடைந்ததால் ஆட்டோவுக்காக காத்திருக்கின்றார் அந்த ஹிந்து சந்நியாசி. ஆட்டோ வருகின்றது. உட்காரும்போதே அவரை ஆச்சர்யம் தொற்றிக்கொள்கின்றது. தன் கண்ணெதிரே இருந்த இஸ்லாம் குறித்த துண்டுப்பிரசுரங்களை ஆர்வமாக எடுத்து படிக்க ஆரம்பிக்கின்றார். வியப்புடன் அந்த வார்த்தைகள் அவரிடம் இருந்து வெளிப்படுகின்றன "நீங்கள் எப்படியெல்லாம் இஸ்லாமை பரப்புகின்றீர்கள் என்பதை ஆச்சர்யத்துடன் பார்க்கின்றேன்". 

இஸ்லாம் குறித்து மேலும் அறிந்துக்கொள்ளும் ஆர்வம் அவருக்கு மிகுந்துவிட, அந்த ஆட்டோ ஓட்டுனரான  ஹபிஸ் முஹம்மத் சாதிக்கிடம் "குர்ஆன் அர்த்தங்களின் கன்னட மொழிப்பெயர்ப்பை" அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றார். 

2. இதே போன்றே மற்றொரு நிகழ்வை விவரிக்கின்றார் மற்றொரு ஆட்டோ ஓட்டுனரான பாஷா. அன்று ஹெப்பலில் (Hebbal) இருந்து ஒரு வாடிக்கையாளரை ஏற்றிக்கொண்டு ஒரு தொலைத்தூர பயணத்திற்கு ஆயத்தமாகின்றார் பாஷா. பயணத்தின் போது அந்த ஆட்டோவில் இருந்த இஸ்லாம் குறித்த அனைத்து பிரசுரங்களையும் படித்த அந்த கஸ்டமர், தன் வீட்டு முகவரியை கொடுத்து குர்ஆன் அனுப்ப முடியுமா என்று கேட்டுக்கொள்ள பாஷாவிற்கு மகிழ்ச்சி தாளவில்லை.

அடுத்த நாளே குர்ஆன் அடங்கிய பரிசுப்பெட்டகத்தை அந்த கஸ்டமரின் வீட்டிற்கு சென்று கொடுக்கின்றார் பாஷா. புத்தகங்களுக்கு விலையாக ஆயிரம் ருபாய் நோட்டை எடுத்து அந்த வாடிக்கையாளர் நீட்ட நெகிழ்ச்சியுடன் கூறினார் பாஷா, "இல்லை சார். எனக்கு வேண்டாம். மறுமை நாளில் இதற்குரிய வெகுமதி எனக்கு கிடைத்தால் போதும்". 

பாஷாவின் பதில் ஒரு கணம் அந்த வாடிக்கையாளரை திகைக்க வைக்க தன் ஆசையை வெளிப்படுத்தினார் பாஷா, "என்னுடைய ஒரே ஒரு வேண்டுகோள், குர்ஆனை நீங்கள் படித்து புரிந்துக்கொண்டு உங்கள் குடும்பத்தினருக்கும் இந்த செய்தியை ஏற்றிவைக்க வேண்டும் என்பதுதான். உங்கள் நண்பர்களுக்கும் குர்ஆனை அறிமுகப்படுத்தி அவர்களுக்கும் நான் இத்தகைய பரிசுப்பெட்டகத்தை கொடுக்கும் நிலை ஏற்பட்டால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்".

3. வெள்ளரா சந்திப்பில் நிசார் அஹமது அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் சற்றே கிலியூட்டக்கூடியது. அவருடைய ஆட்டோவை பின்தொடர்ந்து வந்த போலிஸ் ரோந்து வாகனம் அவரை மடக்கியது அந்த சந்திப்பில் தான். 

முகத்தில் கலவரத்துடன் என்னவோ ஏதோ என்று பயந்து விசாரிக்க சென்ற அஹமதுவிடம் அந்த ரோந்து வாகனத்தில் இருந்த போலீஸ்காரர், "எனக்கு 'இஸ்லாம் குறித்த தவறான புரிதல்கள்' என்ற புத்தகத்தை கொடுக்க முடியுமா? பாதுகாப்பு பணியில் ஒருமுறை ஈடுபட்டிருந்த போது அதனை பார்த்திருக்கின்றேன். அன்றிலிருந்து அந்த புத்தகத்தை தேடிக்கொண்டிருக்கின்றேன். இன்று உங்கள் ஆட்டோவில் அந்த புத்தகத்தை கண்டவுடன் உங்களை பின்தொடர ஆரம்பித்துவிட்டேன்" என்று காரணத்தை கூறினார். 

மகிழ்ச்சியுடன் அந்த புத்தகத்தை அதிகாரிக்கு பரிசளித்துவிட்டு நடையை கட்டினார் நிசார் அஹமது. 

இந்த நிகழ்வுகள் உங்களில் பலருக்கு வியப்பையும், இவையெல்லாம் என்ன என்று அறியும் ஆர்வத்தையும் கொடுத்திருக்கலாம். நமக்கே இப்படியென்றால், இந்த பணியை செய்யும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு  எப்படியிருக்கும்

சென்ற மாதத்தின் பிற்பகுதியில் பெங்களூர் நகரின் முஸ்லிம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஒரு இனம் புரியாத பரபரப்பும், மகிழ்ச்சியும் தொற்றிக்கொண்டிருந்தது. சும்மாவா என்ன? இதுநாள் வரை வாடிக்கையாளர்களை ஏற்றி சென்றுக்கொண்டிருந்த அவர்களது வாகனம், இனி இறைச்செய்திகளையும் தாங்கி செல்லப்போகின்றது. 

இந்த செயல்திட்டத்திற்கு பின்னால் இருப்பது "சலாம் சென்டர்" என்ற அமைப்பு. இவர்களுடைய அணுகுமுறை நிச்சயம் புதுமையானது, புரட்சிகரமானது. இஸ்லாம் குறித்த தவறான புரிதலை களையவும், இஸ்லாமை எடுத்துக் கூறவும் ஆட்டோக்களில் சிறிய அளவிலான இஸ்லாமிய நூலகத்தை அமைத்து அழைப்பு பணியை மேற்கொண்டுள்ளது இந்த அமைப்பு. 

ஓட்டுனருக்கு பின்புறம், அழகாக வடிவமைக்கப்பட்ட ஸ்டாண்டில், இஸ்லாம் குறித்து பல்வேறு தலைப்புகளில் துண்டுப்பிரசுரங்கள் வைக்கப்படுகின்றன. பயணம் செய்பவர்கள் அந்த பிரசுரங்களை எடுத்து படிக்குமாறு ஊக்கப்படுத்தப்படுகின்றார்கள். இஸ்லாம் குறித்து மேலும் அறிந்துக்கொள்ள விரும்புபவர்கள் தங்கள் முகவரியை கொடுப்பதின் மூலம் குர்ஆன், நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு, இஸ்லாம் குறித்த தவறான புரிதல்களை விளக்கும் ஒரு புத்தகம் ஆகியவை அடங்கிய பரிசுப்பெட்டகத்தை பெற்றுக்கொள்ளலாம். 


ஒவ்வொரு மாதமும் ஆட்டோக்களில் வைக்கப்படும் துண்டுப்பிரசுரங்களின் தலைப்புகள் மாற்றப்படுகின்றன. 
  
சலாம் சென்டரின் "எல்லோருக்கும் குர்ஆன்" என்ற செயல்திட்டத்தின் ஒரு பகுதியான இந்த அணுகுமுறை பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டம் முதல்முறையாக அறிவிக்கப்பட்ட போது, இதனை செயல்படுத்த முன்வந்தவர் நாம் மேலே பார்த்த நிசார் அஹமத் என்ற சகோதரர் தான். 

நிசார் அஹமது ஒரு அற்புதமான பட்டத்திற்கு சொந்தகாரரும் கூட. பெங்களூர் நகரின் "மிக நேர்மையான ஆட்டோ ஓட்டுனர்" என்ற விருதை மாநகர போலிஸ் கமிஷனரிடம் பெற்றவர் இவர். தன் நேர்மையான வாழ்விற்கு காரணமான இஸ்லாமை அடுத்தவருக்கும் எடுத்து சொல்லவேண்டும் என்ற ஆழ்ந்த ஈடுபாடு நிசார் அஹமதுவிடம் இருந்து தீவிரமாகவே வெளிப்பட்டது. விளைவோ, அவர் தன் நண்பர்களுக்கு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த, இன்று சுமார் 50 ஆட்டோக்கள் இறைச்செய்தியை அடுத்தவருக்கு எடுத்துக் கூறிக்கொண்டிருக்கின்றன.


ஆனால் விஷயம் இத்தோடு முடியவில்லை. வேறு பல நெகிழ்ச்சியான நிகழ்வுகளும் நடந்தேறியிருக்கின்றன. தன் மார்க்கத்தை அடுத்தவருக்கு எடுத்துக்கூற வேண்டிய நிலை வந்தபோது தான், இந்த ஆட்டோ ஒட்டுனர்களில் சிலர் தங்கள் மார்க்கத்தையே படிக்க ஆரம்பித்து இருக்கின்றனர். அந்த வகையில், தங்கள் வாடிக்கையாளர்களை விட தங்களுக்கே இந்த செயல்திட்டம் அதிகளவில் பயனளிப்பதாக கூறுகின்றனர் அவர்கள். 

"என் வாழ்க்கையை நேர்மையான முறையில் அமைத்துக்கொள்ள இந்த செயல்திட்டம் உதவுகின்றது. முன்பு என் வாடிக்கையாளர்களிடம் தவறான முறையில் நடந்துக்கொண்டதற்காக இன்று அதிகமதிகமாக வெட்கப்படுகின்றேன்" - உணர்ச்சிப்பெருக்கில் கூறுகின்றார் காதர் பாஷா என்ற ஓட்டுனர். 

இஸ்லாமை சரியாக விளங்கி இந்த ஆட்டோ ஓட்டுனர்கள் தங்கள் வாழ்வை அமைத்திடவும், இவர்கள் மேற்கொண்டுள்ள இந்த அற்புதமான முயற்சி மேலும் வெற்றியடையவும் பிரார்த்தியுங்கள்.  

ஒலிம்பிக்ஸ் 2012:

ஆஹா..வந்துவிட்டார்கள் IERA (இஸ்லாமிய கல்வி மற்றும் ஆய்வு மையம்).

பிரிட்டனை சேர்ந்த இந்த அமைப்பின் செயல்திட்டங்கள் என்றுமே ஆச்சர்யத்தையும், புதுமையையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கக்கூடியவை (அல்ஹம்துலில்லாஹ்). உலக நாத்திக மாநாட்டில் கலந்துக்கொண்டு அவர்களை அசரடித்தாகட்டும், பிரபல நாத்திகர்கள் என்ற அறியப்படுபவர்களுடன் விவாதங்களில் கலந்துக்கொண்டு அவர்களை திணறடித்தாகட்டும், இவர்கள் என்றுமே ஆச்சர்யத்தை கொடுக்க தவறியதில்லை. 

இப்போது மற்றுமொரு செயல்திட்டத்துடன் அதிரடியாக இறங்கிவிட்டது இஸ்லாத்தை தழுவியவர்களால் துவக்கப்பட்ட இந்த அமைப்பு. 

மேட்டர் இதுதான். வரும் ஆகஸ்ட் நான்காம் தேதி, இதுவரை  பிரிட்டனில் இல்லாத அளவு, நூற்றுக்கணக்கான முஸ்லிம்களுடன் "வாழ்க்கை விளையாட்டு மட்டுமா? (Is life just a game?)" என்ற வாசகத்துடன்  ஒலிம்பிக் கிராமத்தில் அழைப்பு பணியை மேற்கொள்ளப்போகின்றது இந்த அமைப்பு. நீங்கள் இங்கிலாந்தில் வசிப்பவரா? ஒலிம்பிக் கிராமத்திற்கு வரும் ஆயிரக்கணக்கான மக்களில் சிலருக்காவது இஸ்லாமை எடுத்துக்கூற விரும்புகின்றீர்களா? நீங்களும் இந்த அழைப்பு பணியில் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு இங்கே பார்க்கவும். 

ஒலிம்பிக் கிராமத்திற்கு வெளியே அழைப்பு  பணியில் ஈடுபட்டுள்ள IERA குழுவினர் (மஞ்சள் டீ-ஷர்ட் அணிந்திருப்பவர்கள்)


நான்காம் தேதி நடப்பது நடக்கட்டும். அதுவரை ஏன் வெயிட் செய்யவேண்டுமென்ற நோக்கில் IERA-வின் சிலர் ஒலிம்பிக் போட்டிகள் துவங்கிய அன்றே களமிறங்கிவிட்டனர். மிக அருமையான இவர்களுடைய அழைப்பு பணி பொதுமக்கள், மீடியாக்கள் என்று சமூகத்தின் அனைத்து பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. 

இலண்டன் மேயர் போரிஸ் ஜான்சனுக்கு அழைப்பு பிரசுரம் அளிக்கப்பட்ட போது... 

IERA-வை பொருத்தவரை இந்த செயல்திட்டத்தில் பெண்களை அனுமதிக்கவில்லை. இது நிச்சயமாக ஆச்சர்யமான ஒன்று. மிக வீரியமான பெண்கள் அழைப்பு குழுவை கொண்டது இந்த அமைப்பு. கேம்பிரிஜ் பல்கலைகழக வளாகத்தில் செயல்படும் இவர்களின் பெண்கள் பிரிவை இதற்கு உதாரணம் கூறலாம். ஆயிரகணக்கானோர் கூடும் இடத்தில், பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த அச்சம் காரணமாக பெண்கள் பிரிவை இந்த குறிப்பிட்ட செயல்திட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கவில்லை என்று விளக்கம் கூறியிருக்கின்றது IERA. 

எது எப்படியோ, இவர்கள் அழைப்பு பணியை தொடங்கிய சில நாட்களிலேயே இறைவன் மகத்தான வெற்றியை கொடுத்துள்ளான். இதுவரை சுமார் 10-15 சகோதர சகோதரிகள் ஒலிம்பிக் கிராமத்தில் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ளனர். 

பாதுகாப்பு வீரர்களுக்கு இஸ்லாமை எடுத்து கூறுதல் 

"நான் முஸ்லிமாக முடியுமா?" என்று தாமாக முன்வந்து கேட்ட சகோதரியாகட்டும், கிருத்துவத்தை எடுத்து கூற வந்து முஸ்லிமான அந்த கிருத்துவ மிஷனரியாட்டும், விவாதத்திற்கு பின்னால் இஸ்லாமை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட அந்த நாத்திகர்களாகட்டும் - என பல சுவாரசியமான நிகழ்வுகளுடன் அசத்தலாக சென்றுக்கொண்டிருக்கின்றது இந்த ஒலிம்பிக் அழைப்பு பணி. 

IERA குழுவினர் 

உலகளவில் இஸ்லாமை எடுத்துக்கூறும் பணிகள் சமீப காலங்களாக அதிகரித்து இருக்கின்றன. அதிக அளவிலான புதிய முஸ்லிம்களையும் இப்போதெல்லாம் நட்பு வட்டாரத்தில் பார்க்க முடிகின்றது. இந்த சூழ்நிலையில் IERA எடுத்துள்ள இந்த மகத்தான பணி வெற்றி பெற இறைவனை பிரார்த்திப்போம். 

நீங்கள் முஸ்லிமல்லாதவரா? இஸ்லாம் குறித்து அறிந்துக்கொள்ள விருப்பமா? நீங்கள் இஸ்லாமை அறிந்துக்கொள்ள விரும்பும் இந்த முடிவு உங்கள் வாழ்வில் மாற்றத்தை, புத்துணர்ச்சியை கொண்டுவரலாம். aashiq.ahamed.14@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். இஸ்லாமின் மூலமான குர்ஆன் தமிழ்மொழிபெயர்ப்பு மற்றும் இறுதித்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை மின்னூல் வடிவமைப்பில் பெற்றுக்கொள்ளுங்கள். 

இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.

இறைவேனே எல்லாம் அறிந்தவன்... 

References:
1. Auto Drivers Now Turn ‘Divine Couriers’ - karnataka muslims. link
2. Is life just a game - IERA. link
--
Alaudeen
ஒரு முஃமின் திட்டுபவனாகவோ: சபிப்பவனாகவோ:
கெட்ட செயல் புரிபவனாகவோ, கெட்ட வார்த்தை பேசுபவனாகவோ இருக்க மாட்டான்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) திர்மிதீ
Daawah is one of the important duty of Muslim


"Please don't print this e-mail unless you really need to"

Wednesday 1 August 2012

PDF & Online: Holy Qur'an & Sahih ul Sitha Hadeedh E-Books

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,
Assalamu Alaikum all…

Holy Quran (6 Translations + Transliteration)


Holy Quran

Easy Tips to access a Surah




Sahih Bhukari(Online & PDF)



Sahih Muslim(Online & PDF)



Sunan Nasai (PDF)





Sunan Abu Dawood(Online & PDF)


Tirmidhi (2 Books)
Jamia Sunan Tirmidi(PDF)

Shama-il Tirmidhi(Online)


Sunan Ibn Majah


Musnad Ahmad Arabic Full (Vol 1-14)

Musnad Ahmad English(Costly)


Imam Malik Muwatta(PDF)



Thanks & Regards,
     _____     Honeywell
Abdul Hakkem

விளையாட்டு அரங்கமா ? (காம) விளையாட்டுக் கூடமா ?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

ஏகஇறைவனின் திருப்பெயரால்...



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

உலக (காம)விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெற்று வருகின்றது. இதனை உலக விளையாட்டு திருவிழாவாக ஆக்கி ஒவ்வொரு நாட்டையும், தான் இந்த போட்டியை நடத்துவது தன் நாட்டிற்க்கு கௌரவம் என்றும் அதில் பங்கேற்பது ஒவ்வொரு தனிநபருக்கும் மிகப்பெரிய லட்சியமாகவும் விளம்பரம் மூலம் அந்த விளையாட்டை நடத்தும் நிறுவனங்கள் ஏற்படுத்தி உள்ளது. மேற்கத்திய ()நாகரீக மோகத்தால் பாரம்பரியமிக்க சில நாடுகள் கூட இந்த போட்டியை நடத்த கோடிகளில் செலவு செய்து பகீரத பிரயத்தனம் செய்து வருகின்றது என்றுதான் நாம் நினைக்கின்றோம். ஆனால் இதனை நடத்துவதில் பெருமையவிட காமகளியாட்டங்களாலும், போதை பொருட்களில் விற்பனைமுலம் வரும் வருமானக்களிலும்தான் அந்த விளையாட்டு நிறுவனங்களும், நடத்த துடிக்கும் நாடுகளும் துடியாய் துடிக்கிறது என்று சமீபத்தின் வெளியாகி இருக்கும் இரு புத்தங்கள் மூலம் நமக்கு தெரியவருகின்றது. முன்னாள் இங்கிலாந்து ஒலிம்பிக் வீரர் தன் பெயரில் அல்லாமல் புனை பெயரில் எழுதி உள்ள தி சீக்ரெட் ஒலிம்பிக்  என்ற புத்தகத்திலும், அமெரிக்க பெண் உடற்பயிற்ச்சியாளர் எழுதி வெளியிட்டுள்ள பட் ஆஃப்என்ற புத்தகத்திலும் அங்கு நடக்கும் காமகூத்துக்கள் பற்றி புட்டுபுட்டு வைத்துள்ளது. அதனை உறுதி செய்யும் வகையில் ஒலிம்பிக் நடத்தும் லண்டன் கலந்து கொள்ளும் ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் தலா 15 ஆணுறை(காண்டம்) என 150000 காண்டங்கள் விநியோகிக்க இருப்பதாகவும், மேலும் தேவைப்பட்டால் ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள மருந்து கடைகளில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இது இந்த முறைதான் புதிது என்று நினைக்கவேண்டாம், அனுமதிக்கப்பட்ட இன்னும் சொல்லப்போனால் வலியுறுத்தப்பட்ட விபச்சாரம் 1988 சியோல் ஒலிம்பிக் போட்டியின் போதே தொடங்கிவிட்டதாம். அப்பொழுது 8500 காண்டமும், 1992 பார்சிலோனோ ஒலிம்பிக்கின் போது 50000 காண்டமும், 2000 சிட்னி ஒலிம்பிக்கின்போது 70000மும், கடந்த 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கின் போது 1 லட்சம் காண்டம் விநியோகித்து அது ஒரே வாரத்தில் தீர்ந்துவிட்டது என்று பெருமையோடு சொல்லிக்கொண்டு இப்பொழுது 150000 காண்டம் விநியோகித்துள்ளோம் தேவைப்பட்டால் மேலும் இலவசமாக தர தயாராக உள்ளோம் என்று பெருமையோடு கூறி ஆர்வப்படுத்தி உள்ளனர். (என்ன ஒரு அதீத நாகரீக மற்றும் ஆக்கப்பூர்வமான வளர்ச்சி).  இதில் பன்னாட்டு விபச்சாரிகளின் படையெடுப்பு லண்டனை நோக்கி என்று துணை செய்தி வேறு. இத்தனை பெரிய நோய், மற்றும் சாபம் தங்களை தாக்க வருவதை பெருமையாக கூறும் இவர்கள் தீவிரவாத இயக்க தாக்குதலை பற்றி தினம் தினம் செய்திகளை பரப்பி தங்களை இன்னும் விளம்பரபடுத்தி கொண்டுள்ளனர். வருடத்திற்க்கொருமுறை மக்காவில் உலக மக்களை அழைத்து சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் வலியுறுத்துகிறது இஸ்லாம், ஆனால் இவர்கள் சமூக, கலாச்சார சீரழிவுகளையும், ஒழுக்க சீர்கேடுகளையும் அதன்மூலம் நோய்களையும் பரப்பி மருத்துவ கம்பெனிகளின் மாஃபியாக்களுக்கு உதவுபவர்களாகவும் இருக்கின்றார்கள். என்ன செய்வார்கள் பாவம் அவர்களின் வேதமே அதனைத்தானே கற்றுத்தருகின்றது.

சரி ஒலிம்பிக்கில் கலந்து கொண்டவர்களின் இதுபோன்ற அனுபவங்களை பார்ப்போம். அமெரிக்க பெண்கள் கால்பந்து அணியின் கோல் கீப்பர் ஹோப் சோலோ கூறுகையில், ஒலிம்பிக் போட்டிகளுக்கு இடையே அதிகளவில் செக்ஸ் உறவு கொள்ளும் சம்பவங்கள் நடைபெறுகிறது என்றார். மேலும் இது குறித்து இங்கிலாந்து சைக்கிள் வீராங்கனை விக்டோரியா பென்டில்டன் கூறியதாவது, ஒலிம்பிக் போட்டியின் போது, அங்குள்ள மக்கள் பொது இடத்திலேயே செக்ஸ் உறவு வைத்து கொண்ட சம்பவங்கள் நான் நேரில் பார்த்துள்ளேன். கட்டிடங்களுக்கு இடையே உள்ள புல் பகுதிகளில், அசுத்தமான இடங்களில் கூட செக்ஸ் உறவு கொள்கின்றனர். பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியின் போது எனது அறைக்கு செல்லும் போது, யாராவது உள்ளே இருக்கின்றனரா என்பதை அறிய ரகசியமாக உள்ளே நுழைந்தேன். ஆனால் அறையின் உள்ளே யாராவது இருந்தார்களா என்றால், அது ஒலிம்பிக் ரகசியம்  என்று கூறி இப்பொழுது புதிதாக கலந்து கொள்பவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டுகிறார்.

சரி பட் ஆஃப் புத்தகத்தில் என்ன உள்ளது என்று கொஞ்சம் பார்ப்போம்,. ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் பல போட்டியாளர்களும் ஒழக்கமற்ற முறையில் ஜோடி சேருகின்றனர். மதுபானங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளில் போதைப் பொருள் மற்றும் மதுபானங்கள் தாராளமாக விநியோகிக்கப்படுகிறது. ஒலிம்பிக் கிராமத்திற்குள் நடைபெறும் சம்பவங்களை பார்த்தால் எதை குறிப்பிடுவது என்ற குழப்பம் கூட ஏற்படும். விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட பிறகு, போட்டியாளர்களுக்கு தங்களின் ஆசையை தீர்த்து கொள்ள வேறு வழியில்லால் தவிக்கின்றனர். இதனால் செக்ஸ் உறவு கொள்ள கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்கின்றனர். வெளி உலகத்தின் கண்களுக்கு மறைவாக கடும் பாதுகாப்பு வளையத்திற்குள் போட்டியாளர்கள் இருப்பதாக நம்பப்படுவதால்(காட்டப்படுவதால்) ஒலிம்பிக் கிராமத்தினுள் நடைபெறும் அனைத்து சம்பவங்களும் அப்படியே புதைக்கப்படுகிறது. இதனால் ஒலிம்பிக் போட்டியாளர்கள் செய்யும் பல மோசமான நடவடிக்கைகள் வெளியே தெரிவதில்லை.

தி சீக்ரெட் ஒலிம்பிக் புத்தகத்தில் உள்ளவற்றை கூறாவிட்டால் அவர்கள் கோபித்து கொள்ள போகிறார்கள் எனவே அதனையும் கொஞ்சம் பார்ப்போம். ஒலிம்பிக் கேம்ஸ் வில்லேஜ்களில் மதுவுக்கு தடை இருப்பது வழக்கம். அதேபோல போதை மாத்திரைகளுக்கும் அனுமதி கிடையாது. இருந்தாலும் வீரர்கள் விடுவார்களா என்ன... வாட்டர் பாட்டில்களில் நைசாக மதுவை நிரப்பிக் கொண்டு உற்சாகமாக இருப்பார்களாம். அதேபோல போதை மாத்திரைகளும் கூட ரகசியமாக புழங்குவது சகஜமாம். இதுபோன்ற நடவடிக்கைகளை அதிகாரிகள் பெரும்பாலும் கண்டு கொள்வதில்லையாம். அதேபோல கண்டிப்பதும் இல்லையாம். கேம்ஸ் வில்லேஜ்களில் நடக்கும் அத்தனை விஷயங்களும் அங்கேயே கமுக்கமாக மறைந்து போய் விடுமாம். அங்கு நடந்தது குறித்து யாரும் வெளியில் சொல்லிக் கொள்வதில்லையாம் என்று போகிறது அந்த நூல்.

இந்த நிலையை பார்த்தால் பல நாடுகளில் இருந்தும் விளையாட்டு? போட்டிகளில் பங்கேற்க்கவும், பார்க்கவும் பலரும் செல்கிறார்கள். வெறும் கையோடு வந்தால் கூட பரவாயில்லை, மாறாக...............   விளையாட்டு வினையாகும் என்பார்கள் அது இதுதானோ?. இந்த கூத்தில் இஸ்லாமிய நாடான கத்தார் 2022ம் வருட உலக கால்பந்து போட்டியை நடத்த உள்ளது. எனோ 2000ம் வருடம் ப்ரேசில் நடத்திய கால்பந்து விளையாட்டை விளம்பர படுத்த விபச்சாரிகளை இறக்குமதி செய்ததும், பெண்களுக்கு உடை அணியாமல் மார்பு, இடுப்பின் முன், பின் பகுதிகளிள் கால்பந்து படத்தை வரைந்து கடற்கரையில் நிர்வாணமாக கால்பந்து போட்டி நடத்தியதும் இந்த நேரத்தில் நினைவிற்க்கு வந்து தொலைக்கின்றது.

எனக்கு பின்னர் வேறு எவரும் உங்களுக்கு அறிவிக்க முடியாத நபிமொழி ஒன்றை (இப்போது) நான் உங்களுக்கு அறிவிக்கப் போகிறேன். “கல்வி குறைந்து போய் விடுவது, அறியாமை வெளிப்படுவதும், வெளிப்படையாய் விபச்சாரம் நடப்பதும், ஐம்பது பெண்களுக்கு அவர்களை நிர்வமிக்கும் ஒரே ஆண் என்ற நிலைமை வரும் அளவுக்குப் பெண்கள் மிகுதியாவது ஆண்கள் குறைந்துவிடுவதும் மறுமை நாளின் சில அடையாளங்களாகும்என்று இறைத்தூதர்(ஸல்) கூற கேட்டிருக்கிறேன் என அனஸ்(ரலி) அறிவித்தார்கள். (நூல் புகாரி- அத்தியாயம்-1- ஹதீஸ்-81)

-நௌஷாத் அலி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம்