தமிழகத்தில் ஏறத்தாழ 2 கோடி ரேஷன் அட்டைகள் உள்ளன. இவற்றில் அரிசி, சர்க்கரை பெறும் அட்டைகள் அதிகம். அரிசி தேவையில்லை என்ற அட்டைகள், எந்த பொருளும் வேண்டாம் என்ற கவுரவ அட்டைகள் மற்றும் காவலர்களுக்கான குடும்ப அட்டைகளும் உள்ளன.
தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிதாக ரேஷன் அட் டைகள் அச்சிடப்பட்டு பொதுமக்க ளுக்கு வழங்கும் நடைமுறை பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்தது. கடைசியாக 2005-ம் ஆண்டில் புதிய ரேஷன் அட்டைகள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டன. இவை 2009-ம் ஆண்டோடு காலாவதியாகிவிட்டன. இதைத் தொடர்ந்து ஆண்டுதோறும் ஒவ் வொரு ஆண்டுக்கும் உள்தாள் இணைக்கப்பட்டு பழைய கார்டே தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ரேஷன் கடைகள் வாயி லாக இலவசமாக அரிசி, மானிய விலையில் சர்க்கரை, மண்ணெண் ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் ரேஷன் அட்டை களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. போலியான ரேஷன் அட்டைகள் அதிக அளவில் புழக்கத்தில் இருப் பதால் அத்தியாவசியப் பொருட் கள் முறைகேடாக பயன்படுத்தப் படுவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின் றன.
போலியான ரேஷன் அட்டை களை ஒழிக்கும் வகையிலும், தகுதியானவர்களுக்கு அத்தியா வசியப் பொருட்கள் சென்று சேரும் வகையிலும் பழைய ரேஷன் அட்டைகளுக்கு மாற்றாக ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு பழைய ரேஷன் அட்டை களுக்கு பதிலாக பயோ மெட்ரிக் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என சட்டப்பேரவையிலேயே தெரிவிக் கப்பட்டது. ஆனால், இத்திட்டம் அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகளாகி விட்டன.
தமிழகத்தில் தேர்ந்தெடுக் கப்பட்ட சில மாவட்டங்களில் ஒருசில வட்டங்களில் சோதனை அடிப்படையில் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி தொடங்கப்பட்டும், அவை இதுவரையில் இறுதிக் கட்டத்தை எட்டி பயன்பாட்டுக்கு வரவில்லை.
ரேஷன் அட்டை என்பது அத்தி யாவசிப் பொருட்களை வாங்கு வதற்கு மட்டுமே பயன்படவில்லை. அரசுத்துறைகளில் வழங்கப்படும் பல்வேறு சான்றிதழ்களுக்கும் ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப் படுகிறது. ஆனால், 10 ஆண்டுகளாக ஒரே அட்டை பயன்படுத்தப்பட்டு வருவதால், அவை மிகவும் சேத மடைந்து, அதிலுள்ள விவரங்களை அறியகூட முடியாத நிலையில் உள்ளன.
இதுகுறித்து உணவுத் துறை வட்டாரங்களில் கேட்டபோது, 2016-ம் ஆண்டுக்கு பழைய அட்டைகளை மாற்றி புதிதாக ரேஷன் அட்டைகளோ அல்லது ஸ்மார்ட் கார்டுகள் வழங்கவோ தற்போது இயலாது. மேலும், தமிழகத்தில் சென்னை, காஞ்சி புரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழையால் பலத்த சேதங்கள் ஏற்பட்ட நிலையில், அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் மீட்பு மற்றும் நிவாரணப் பணி மற்றும் சேத கணக்கெடுப்பு பணிகளில் முழு அளவில் ஈடுபட்டுள்ளதால், இதில் தற்போது கவனம் செலுத்த இயலாத நிலை உள்ளது.
மேலும், வெள்ளத்தால் ரேஷன் கார்டுகளை இழந்தவர்களுக்கு புதிதாக கார்டுகள் வழங்க வேண்டிய பணியும் தற்போது கூடுதலாக சேர்ந்துள்ளது.
எனவே, 2016-ம் ஆண்டுக்கும் ரேஷன் அட்டைகளில் உள் தாள் இணைக்கப்படுவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம். இதற் கான அறிவிப்பு ஓரிருநாளில் வெளியிடப்படும் என்றனர்