Wednesday 26 October 2022

🐅 ஒரு புலியை நேருக்கு நேராய் சந்திக்கும்பொழுது தப்பிப்பது என்று ஒரு கல்வியும் நமக்குக் கற்றுக் கொடுக்கவில்லையே..

🐅 ஒரு புலியை நேருக்கு நேராய் சந்திக்கும்பொழுது தப்பிப்பது என்று ஒரு கல்வியும் நமக்குக் கற்றுக் கொடுக்கவில்லையே..


🐅26.09.2014 இல் டெல்லி உயிரியல் பூங்காவில் ஒரு வெண்மை நிற புலி இளைஞனை கொன்றது.


🐅கற்றலினால் ஆன பயன் என்ன?


🐅ஒரு உயிர் ஒரு புலியிடம் மாட்டிக் கொண்டு 10 நிமிடங்களாக கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டேயிருக்கும் பொழுது அந்த உயிரை எப்படிக் காப்பாற்றுவது என்பதை பார்வயாளர்கள் யாருக்கும் நம் கல்வி முறை நமக்கு கற்றுக்கொடுக்கவேயில்லையே..


🐅ஆனால் பார்வையாளர்கள் மேலிருந்து கல்லெறிந்த உடன்..அது சினம் கொள்கிறது. மேலே பார்த்து உறுமுகிறது.


🐅பார்வையாளர்கள் விடவில்லை. தொடர்ந்து கல்லெறிகிறார்கள்..

கூச்சலிடுகிறார்கள்...


🐅அதன்பிறகுதான் அந்தப் புலி, அந்த வாலிபனைத் தாக்க முயற்சிக்கிறது. அதுவும் இறையைத் தூக்கிக் கொண்டு தன்னிடத்திற்கு தூக்கிக் கொண்டு சென்று விட வேண்டும் என முடிவு செய்து அவனுடைய கழுத்தைக் கவ்விப் பிடிக்கிறது.


🐅இவையெல்லாமே தவிர்க்கப்பட்டிருக்கலாம்.


🐅காரணம்..அறிவின்மை..


🐅என்ன செய்வது என்கிற அறிவின்மை.


🐅மிருகங்கள் சப்தத்திற்கு மிரளும். ஆனால் நெருப்பிற்கு பயப்படும்.


🐅கூடியிருந்த அத்தனை பார்வையாளர்களில் யாராவது ஒருவர், தன் சட்டையைக் கழற்றி, அதில் நெருப்பு வைத்து, அதை அந்த வாலிபனிடத்தில் எறிந்திருந்தால் புலி மிரண்டு ஓடியிருந்திருக்கும்.


🐅இந்த அறிவைக் கூட கற்றுக் கொடுக்காமல்..


🐅(a+b)2 =a2 + 2ab + b2


என்று கற்றுக் கொண்ட வெற்றுத் தேற்றத்தினால் எனக்கு என்ன பயன்?


🐅ஒரு விலங்கு தன்னைத் தாக்க வரும் பொழுது, வேறு எந்த உதவியுமே தனக்கு அந்த இடத்தில் கிடைக்கவில்லை.. தப்பித்து ஓடவும் முடியவில்லை..மிருகமோ தன்னிலும் பலத்த உருவம்..


🐅அது முதலையாக இருக்கலாம்..சிங்கமாக இருக்கலாம்.. அல்லது.. யானையாக இருக்கலாம். அதை எப்படி எதிர்கொள்வது என்ற அறிவைக் கற்றுக் கொடுக்காத கல்வியினால் எனக்கென்ன பயன் ????


🐅அந்த விலங்குகளின் கண்களை நம் கை முஷ்டியினால் பலங்கொண்ட மட்டும் ஓங்கித் தாக்கினால் அவை நிலை குலைந்து ஓடி விடும். நாமும் தப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்.


🐅அல்லது சிறு மண் துகள்களை அள்ளி அதன் கண்களில் தூவினால் போதும் அவை அந்த இடத்திலிருந்து தப்பித்துச் செல்லத்தான் முயற்சிக்கும்.


🐅இந்த அறிவைக்கூடக் கற்றுக்கொடுக்காமல்.. பட்டங்கள் என்ன.. சட்டங்கள் என்ன.. பல்கலைக் கழகங்கள் என்ன ???


🐅தென்னாப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் என்ன தோண்டியெடுக்கிறார்கள் என்பதை கற்றுக்கொடுப்பதை விட.. வாழ்க்கைக் கல்வியை முதலில் கற்றுக் கொடுங்கள்.


🐅மற்றவர்களை மதிப்பது எப்படி..?


🐅மற்றவா்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது எப்படி?


🐅சாலை விதிகள் என்ன?


🐅ஏன் சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும்?


🐅அடிப்படைச் சட்டங்கள் என்ன?


🐅நமக்கான உரிமைகள் என்ன?


🐅காவல் நிலையங்களை எப்படி அணுகுவது?


🐅விபத்து ஏற்பட்டால் அதை எப்படி எதிர் கொள்வது?


🐅விஷக்கடிகளில் எப்படித் தப்பிப்பது?


🐅மாரடைப்பு வந்தால் என்ன செய்வது?


🐅நோய்களை எவ்வாறு கண்டறிவது?


🐅எந்த மருந்துக்கள் எல்லாம் தடை செய்யப்பட்டவை..பின் விளைவுகள் உள்ளவை?


🐅மனைவியிடம் எப்படி நடந்து கொள்வது?


🐅கணவனிடம் எப்படி நடந்து கொள்வது?


🐅மற்றவர்களை நேசிப்பது எப்படி?


🐅நேர்மையாய் இருப்பது எப்படி?


🐅இவை எதையுமே கற்றுக் கொடுக்காத கல்வியினால் ஆன பயன் தான் என்ன?


🐅இது எதையுமே தெரிந்து கொள்ளாமல்..


🐅இனித் தெரிந்து கொள்வதற்கும் வாய்ப்பில்லாமல் துடி துடித்து மரித்துப் போன இந்திய இளைஞனே..


🐅ஒரு வெண் புலி, உன் வாழ்க்கையை இருளாக்கிவிட்டது


இந்த பதிவு ரொம்ப பிடித்தது பதிவு செய்து இருக்கேன்.



Tuesday 4 October 2022

பெற்றோர்களை நேசியுங்கள்,

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ


பெற்றோர்களை நேசியுங்கள்,

அவர்களை கடைசி காலத்தில்

தனியே விட்டு விடாதீர்கள்.

ஏனெனில்,


''தாயின் காலடியில் #சொர்க்கம் இருக்கிறது.


தந்தையின் பொருத்தத்தில் இறைவனின் பொருத்தம் இருக்கிறது.'' (நபிமொழி)


ஒரு தாய்/தந்தை தன்னுடைய மகன்/மகளுக்கு எழுதும் மிகவும் உருக்கமான கடிதம்...


என் அன்பான மகனே/மகளே...


நான் முதுமை ஆன பின், நீ என்னை புரிந்து கொண்டும் கனிவாக இருப்பாய் என்று நம்புகிறேன்.


நான் தெரியாமல் கண்ணாடியை போட்டு உடைத்து விட்டாலோ, அல்லது எதையேனும் கீழேபோட்டு விட்டாலோ,

நான் பார்வை குறைவதால் தான் செய்கிறேன். நீ என்னை புரிந்து கொண்டு திட்ட மாட்டாய் என்று நினைகிறேன்.


முதியவர்கள் மிகவும் இளகிய மனம் படைத்தவர்கள் அதனால் திட்டும்போதும் கொஞ்சம் கனிவோடு திட்டு.


என்னுடைய கேட்கும் திறன் குறைத்து விட்டால் என்னால் நீ கூறுவதை கேட்க முடியாது, அப்பொழுது நீ என்னை செவிடன் என்று சொல்ல மாட்டாய் என்று நம்புகிறேன். நீ என்ன சொல் வந்தாயோ அதை திரும்ப சொல்! இல்லை என்றால் எழுதி தெரியபடுத்து.


என்னை மன்னித்து விடு, எனக்கு வயது ஆகிக்கொன்டே இருகின்றது.


என்னுடைய முழங்கால்கள் பலவீனமாகி கொண்டே இருகின்றது.

நான் எழுந்து நிற்பதற்கு நீ பொறுமையாக எனக்கு உதவி செய்வாய் என்று நம்புகிறேன். எப்படி நீ குழந்தையாக இருக்கும் பொழுது நான் உனக்கு உதவி செய்தேனோ அப்படி நீயும் செய்வாய் என்று நம்புகிறேன்.


நான் ஏதேனும் சொன்னதையே திரும்ப திரும்ப பழைய ரெகார்ட் போல் பேசி வந்தாலும்; நீ! நான் சொல்லுவதை கேட்பாய் என்றும் என்னை கேலி செய்ய மாட்டாய் என்றும் அல்லது சலிப்படைய மாட்டாய் என்றும் நம்புகிறேன்.


உனக்கு ஞாபகம் இருகின்றதா,

குழந்தையாக இருக்கும் பொழுது பலூன் வாங்கி தரும்வரை நீ அடம் பிடித்து பலூன் வாங்கியது...


என் மேல் இருந்து வரும் ஒரு விதமான நாற்றதிற்கும் என்னை மன்னிக்க வேண்டும். என்னை தினமும் குளிக்க சொல்லி வற்புறுத்தாதே ஏனென்றால் என்னுடைய உடம்பு மிகவும் பலவீனமாக இருகின்றது.


நான் ஏதேனும் புலம்பிக் கொண்டு இருந்தால் நீ பொறுமையாக இருப்பாய் என்று நம்புகிறேன். இது வயதானவர்கள் செய்யும் செயல். நீயும் வயதானவுடன் அதை தெரிந்து கொள்வாய்.


உன்னால் எனக்காக ஒரு ஐந்து நிமிடம் நேரம் ஒதுக்கி என்னுடன் நட்புடன் பேசுவாயா? உனக்கு வேலை அதிகம் என்று தெரியும் இருத்தாலும் நான் சொல்லும் கதைகளை உன்னை கேட்குமாறு கேட்டு கொள்கிறேன் அதற்காக எனக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்கு.


எப்பொழுது என்னுடைய நேரம் நெருங்குகிறதோ அப்பொழுது நான் படுத்த படுகையாக இருப்பேன்,

அப்பொழுது நீ என்னை கனிவோடு கவனிப்பாய் என்று நம்புகிறேன். தெரியாமல் நான் படுக்கையை நனைத்து விட்டால் என்னை மன்னித்துவிடு.


என்னுடைய கடைசி காலத்தில் நீ என்னை மிகவும் கவனமாகவும்,

அக்கறையோடும் பார்த்து கொள்வாய் என்று எனக்கு தெரியும், என்னுடைய நேரம் நெருங்கும் பொழுது நான் நீண்ட நாட்கள் உனக்கு தொல்லை தர மாட்டேன். நீ எனக்காக என்னுடன் கை கோர்த்து சாவை எதிர் கொள்ளும் மன தைரியத்தை தருவாய் என்று நம்புகிறேன்.


கவலைப் படாதே, இறைவனை நான் பார்க்கும் பொழுது அவனிடம் உன் மீது அருள் மழைப் பொழியச்சொல்கிறேன், ஏனென்றால் நீ உனது தாய் தந்தையை மிகவும் நேசித்தாய் என்று. நீ எங்களை மிகவும் கனிவோடு கவனித்ததற்கு மிக்க நன்றி..


என்றும் அன்புடன்,


அப்பா/அம்மா


நினைவு படுத்துகிறோம் .


பெற்றோர்களை நேசியுங்கள், அவர்களை கடைசி காலத்தில் தனியே விட்டு விடாதீர்கள்.


ஏனெனில்,


தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது.....