Monday 20 April 2015

துபை வாழ் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி பொதுமக்களுடன் பேராசிரியரின் கலந்துரையாடல்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

துபை வாழ் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி பொதுமக்களுடன் பேராசிரியரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி 20-04-2015 திங்களன்று துபை  அல்முத்தினாவில் உள்ள அஸ்கான் D பிளாக்கில் இரவு 9:00 மணியளவில்  நடைபெற்றது

பேராசிரியர்  ஜவாஹிருல்லாஹ் M L A

மதுக்கூர் ஹாஜா  /  ஜாகிர் ஹுசைன் பவர் குரூப் 

மஹ்ரூப் காக்கா  / சகோதரர் தௌபீக் 


சமீம்  /  லெப்பை குடிகாடு சபியுல்லாஹ் 



. சகோதரர் ஹமீது ஹான்  அவர்கள் திருமறை வசனங்கள் ஓதி ஆரம்பம் செய்யபட்டது , அதில் துபாய் மன்டல தலைவர் பரமக்குடி எ.ச.இபுராஹிம் அவர்கள் சமுதாயதிற்கு நமது பங்களிப்பு அவசியம் பற்றி அல்குரான் மற்றும் முகம்மது நபி ஸல் வழிமுறை பிரகாரம் இருக்க வேண்டும் என் அறிவுரை நிகழ்த்தினார்கள் , மேலும் யு ஏ  இ தமுமுக தலைவர் சகோ அப்துல் ஹாதி அவர்கள் பேராசிரியர்  ஜவாஹிருல்லாஹ் M L A  அறிமுகம் செய்து வைத்தார்கள் , பிறகு அமீரகம் வருகைத் தந்துள்ள சமுதாயத்தின் மூத்த தலைவர் முனைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் M L A அவர்கள் தனது தொகுதிற்கு உற்பட்ட சகோதரர்களை சந்தித்து கலந்துரையாடினார்,கடந்த நான்கு ஆண்டுகளாக இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் தான் செய்த பணிகளை தொகுதியின் பொதுமக்களிடத்தில் விளக்கினார், நெடுஞ்சாலைகள், பள்ளிக்கூடங்கள், மீனவர்கள் நலம், அநீதிக்கு எதிரான போராட்டங்கள் என பற்பல பணிகளை சொல்லிக் காட்டினார்.


சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்கும் விளக்கமளித்தார்,எல்லாப் புகழும் இறைவனுக்கே!

நிகழ்ச்சியை  தனது தொகுதிற்கு உற்பட்ட சகோதரர்களை சந்தித்து கலந்துரையாடினார்,

மேலும் 
பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் எழுதிய நான்கு  புத்தகங்கள் வெளியிடபட்டது 

தித்திக்கும் திருப்பு முனைகள் என்ற புத்தகம் சகோதரர் மதுக்கூர் ஹாஜா வெளியிட சகோதரர் ஜாகிர் ஹுசைன் பவர் குரூப் - Managing Director பெற்று கொண்டார்கள் 

பலஸ்தீன வரலாறு புத்தகம் சகோதரர் ஹமீது ஹான் வெளியிட சகோதரர் பைசுர் ரஹ்மான் பெற்று கொண்டார்கள் 

40 ஹதிஸ் குதிஸ் புத்தகம் சகோதரர் மஹ்ரூப் காக்கா வெளியிட சகோதரர் தௌபீக் பெற்று  கொண்டார்கள்.

அழகிய அருட்கொடை அண்ணல் நபி ஸல்  புத்தகம் சகோதரர் சமீம் வெளியிட சகோதரர் லெப்பை குடிகாடு சபியுல்லாஹ் பெற்று கொண்டார்கள்.

நன்றியுரையுடனும் துவாவுடனும் நிகழ்ச்சி நடந்து முடிந்தது . அல்ஹம்துலில்லாஹ்