Wednesday 29 July 2015

கூகுளையும் கரைய வைத்த மாமனிதர்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

கூகுளையும் கரைய வைத்த மாமனிதர்- முகப்புப் பக்கத்தில் கருப்பு ரிப்பன் கட்டி அஞ்சலி! Posted by: Vijayalakshmi Published: Wednesday, July 29, 2015, 17:24 
Google pays tribute to Kalam
சென்னை: மறைந்தும் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து வாழும் முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாமிற்கு உலகின் தலைசிறந்த தேடல் பொறியான கூகுளும் அஞ்சலி செலுத்தி வருகின்றது. மேதகு மக்களின் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள், நேற்று முன் தினம் தனக்கு மிகவும் பிடித்த மாணவர்களுடன், ஐஐஎம் கல்வி நிறுவனம் மேகாலயாவில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து மாரடைப்பால் காலமானார். உலகம் முழுவதும் அனைவரது உள்ளங்களிலும் நீங்காமல் நிறைந்து வியாபித்தவராய் திகழும் அப்துல் கலாமிற்கு உலகத் தலைவர்களும், இந்தியத் தலைவர்களும், உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள மாணவர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்ற நிலையில், அவரது மாண்பு எத்தகையது என்பதற்கு சான்றாக உலகில் அனைவராலும் உபயோகிக்கப்படும் முதன்மையான சர்ச் எஞ்சினான கூகுளும் "கருப்பு ரிப்பன்" மூலமாக தன்னுடைய அஞ்சலியை செலுத்தி வருகின்றது. கூகுளின் முதன்மை பக்கத்தின் கீழாக அமைந்துள்ள அந்த கருப்பு ரிப்பன் "டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் நினைவாக" என்ற வாக்கியத்தை ஆங்கிலத்தில் சுட்டிக் காட்டுகின்றது. மக்கள் மனதிலும், உலகின் ஒவ்வொரு மூலையிலும் நீங்க இடம் பிடித்துள்ள அம்மாமனிதர் கலாம் மகாத்மாவிற்கு அடுத்தபடியான இடத்தை வரலாற்றின் பக்கங்களில் பெற்றுள்ளார் என்றால் மிகையில்லை. அதற்கு இந்த கூகுள் பக்கமே சாட்சி!

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/google-pays-tribute-kalam-232166.html

No comments:

Post a Comment