Monday 13 July 2015

ஈத் பெருநாள் சந்திப்பு மற்றும் கல்வி விழிப்புணர்வு கூட்டம்.


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,



நாள் : Nov 8 2011 8:14PM

பிஸ்மில்லாஹ் ஈத் பெருநாள் சந்திப்பு மற்றும் கல்வி விழிப்புணர்வு கூட்டம்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

துபை நவம்பர் - 06 - 2011 மாலை 7.00 மணி அளவிள்

ஸ்டார் இன்டெர் நேஷனல் ஸ்கூல் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தாலுகா நடுக்கடை, முகம்மது பந்தர், கண்டியூர், திருப்பந்துருத்தி ஜமாத்தார்கள் ஒருங்கினைந்து நடத்தினார்கள். முஸ்லிம் ஜமாத்தார்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த E.T.A. MELCO நிறுவனத்தில் பணிபுரியும் A.S. இப்ராகிம் அவர்கள் தலைமை தாங்கினார்கள். ஷார்ஜா பிளாக் துளிப் கம்பெனி உரிமையாளர் யஹ்யா அவர்கள் முன்னிலை வகித்தார்கள். மேலத்திருப்பந்துருத்தி துக்காச்சி காஜாமைதீன் அவர்கள் துவக்கி வைத்து பேசினார்கள்.

முகம்மது பந்தர் ஹாபிஸ் முகம்மது முஸ்தபா அவர்கள் கிராத் ஓதினார்கள்.

மேலத்திருப்பந்துருத்தி P. லியாகத் அலி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். அதை தொடர்ந்து கண்ணியமிக்க சி.த. அப்துல் காதர் காக்கா அவர்களும் சென்னை தானிஷ் அகமது கல்லூரியின் பேராசிரியர் காதர்ஷா அவர்களும் மற்றும் முதுவை ஹிதாயத் , திருப்பனந்தால் தாஹா

அவர்களும் கல்வியின் விழிப்புணர்வை பற்றி விரிவாக பெசினார்கள். தாஹா அவர்கள் பேசும் போது

அமீரகத்தில் யாருக்கும் எந்த உதவிகள் அவசியப்பட்டாலும் எங்களை நாடுங்கள் நாங்கள் உதவி செய்கிறோம் என கூட்டத்தில் வாக்களித்தார்கள். அதை தொடர்ந்து நடுக்கடை A.P. முகம்மது (தம்பி ராஜா) அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். அதில் நடுக்கடை ஜனாப் சாதிக் பாய் அவர்கள் ஒரு ஏக்கர் நிலம் பள்ளிக்காக நிதியாக வழங்குவதாக அறிவித்தார்கள்.

மேலத்திருப்பந்துருத்தி அகமது அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள்.

அதில் இந்த முயற்ச்சிக்கு உறுதுனையாக இருந்த அனைவருக்கும் நன்றியினையும் தெரிவித்து மேலும் பள்ளி வசதிவாய்ப்பு குறைவாக உள்ள மாணவர்களுக்கு முழுவதும் ஷாரிட்டி மூலம் நடைபெரும் என்ற விளக்கத்தையும் தந்தார்கள். முஹம்மது பந்தர் ஆரிப் பாய் அவர்கள் போர்முதல் மற்றம் வாட்டர்கணக்ஷன் அனைத்தையும் செய்து தருவாதாக அறிவித்தார்கள்.

துக்காச்சா ஹாஜா அவர்கள் ஒரு லட்சம் ரூபாய் நாண்கு தவனைமுறையாக தருவாக வாக்களித்துள்ளார்கள். மற்றும் கூட்டத்திற்க்கு திரளாக வந்திருந்த அனைத்து பகுதி ஜமாத்தார்களுக்கும் மற்றும் இக்கூட்டம் நடைபெருவதற்க்கு உறுதுனாயக இருந்த அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக்கொண்டார்கள்.

அதன் பிறகு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய A.S. இப்ராகிம் அவர்கள் துவா ஓதினார்கள்.

நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைவருடைய மனதிலும் பெரும் ஆறுதலாக இருந்த விசயம் என்ன வெனில்

மார்க்க கல்வியுடன் கூடிய ஒரு பொது கல்வி நிறுவனம் நம்முடைய பகுதிக்கு அதி விரைவில் அமைய உள்ள செய்தி அறிந்து அனைவரும் சந்தோசமாக விடை பெற்று சென்றனர்.

அல்லாஹு அக்பர் .

செய்தித்தொகுப்பு

ஹாஜா மைதீன்

No comments:

Post a Comment