Saturday 4 July 2015

இஸ்ரேலுக்கு எதிராக வாக்களிக்க மறுத்த இந்தியா !

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே கடந்த  2014 ஆம் ஆண்டு நடைபெற்ற போரின் போது மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.   இதையடுத்து  இஸ்ரேலுக்கு எதிராக  .நா. மனித உரிமை அமைப்பின் .நா. விசாரணை கமிஷன் அமைக்க கோரும் தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடந்தது.
இதில் பிரான்சு, இங்கிலாந்து போர்ச்சுகல், அயர்லாந்து, லத்திவா, எஸ்டோனியா ஆகிய ஐரோப்பிய நாடுகள் உட்பட  41 நாடுகள் மனித உரிமை விசாரணையின் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தது. அமெரிக்கா இந்த தீர்மானத்துக்கு எதிராக  வாக்களித்து இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தது. இந்த ஓட்டெடுப்பில் இந்தியா, கென்யா, எத்தியோப்பியா பராகுவே, மாஸிடோனியா உள்ளிட்ட ஐந்து நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன. இந்தியா,  இஸ்ரேலின் நட்பு நாடு என்பதால் இஸ்ரேலுக்கு எதிராக ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த விசாரணை நடைபெறும் என்று தீர்மானம் கூறுவதால் வாக்கெடுப்பை புறக்கணித்தாகவும் கடந்த காலங்களில் வடகொரியா, சிரியா போன்ற நாடுகளுக்கு எதிராக இந்த நடைமுறை பின்பற்றப்படும் போது இந்தியா புறக்கணித்ததாகவும் அதே வழக்கமான நடைமுறை இம்முறையும் பின்பற்றப்பட்டது என்று இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாதது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


download

No comments:

Post a Comment