Tuesday, 21 July 2015

9 வருட பயணத்திற்குப் பின்னர் புளூட்டோவை நெருங்கும் நியூ ஹாரிஸான்ஸ்


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

வாஷிங்டன்: மனித குல வரலாற்றில் முதல் முறையாக, மனிதனால் நமது கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு விண்பகுதிக்கு அனுப்பப்பட்டு, நீண்ட காலமாக தொடர்பில் இருந்து வரும் பெருமை படைத்த அமெரிக்காவின் நியூ ஹாரிஸான்ஸ் விண்கலமானது, நாளை புளூட்டோ கிரகத்தைக் கடந்து செல்லவுள்ளது. கிட்டத்தட்ட 9 ஆண்டு காலமாக புளூட்டோவை நோக்கி பயணித்து வந்தது நியூ ஹாரிஸான்ஸ். சமீபத்தில் அது கிரகத்தை நெருங்கியது. இதன் மூலம் பல வியத்தகு புகைப்படங்கள் நமக்குக் கிடைத்தன. இந்த நிலையில் தனது ஆய்வின் முக்கியக் கட்டத்தை எட்டியுள்ள நியூ ஹாரிஸான்ஸ் விண்கலமானது நாளை புளூட்டோ கிரகத்தை 10,000 கி.மீ அளவுக்கு நெருங்கிச் செல்ல உள்ளது. இது மனித இனத்தின் மாபெரும் சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

No comments:

Post a Comment