Wednesday, 22 July 2015

திருமண பதிவு கட்டாயமல்ல; உயர்நீதிமன்ற தீர்ப்பு - தமுமுக வரவேற்பு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

22/07/15 8:04:57 pm: 

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மவ்லவி ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் அறிக்கை

 திருமணத்தை பதிவு செய்வது கட்டாயமில்லை என்றும் திருமணத்தை  பதிவு செய்யவில்லை என்பதை காரணம் காட்டி ஒருவருடைய  உரிமையை  பறிக்க முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை  நீதிபதி எஸ். வைத்திய நாதன் வழங்கியுள்ள தீர்ப்பை தமுமுக வரவேற்கின்றது. இந்த தீர்ப்பு ஆறுதலையும் தெளிவையும் தமிழக மக்கள் அனைவருக்கும் வழங்கியுள்ளது.
  
 முஸ்லிம் திருமணங்கள் ஜமாத்துக்களில் பதிவு செய்யப்பட்டு  வருவது  நூற்றாண்டுகளாமாக நடைபெற்றுவரும் நிகழ்வாகும். இந்த  யதார்த்த  நிலைக்கு  மாறாக கடந்த சில ஆண்டுகளாக திருமணபதிவு செய்யவேண்டும்  என கட்டாயப்படுத்தலால் மக்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டுவந்தது இந்த  சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் முதல் தமுமுக சார்பாகவும் திருமண பதிவுச் சட்டத்தில் முஸ்லிம்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் நீதிபதி வைத்திய  நாதனின் இந்த தீர்ப்பு குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாக கருதுகிறோம். திருமணப் பதிவு கட்டாயம் இல்லை என்ற தீர்ப்பால் கையூட்டு, கால தாமதம், தேவையற்ற அலைச்சல் போன்றவற்றால் ஏற்படும் மனஉளைச்சல் உள்ளிட்ட அவலம் அகன்றிட வழி பிறந்துள்ளது. அந்த வகையில் இந்த தீர்ப்பை தமுமுக வரவேற்கின்றது.

 அன்புடன்


(ஜே.எஸ்.ரிபாயீ)
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் 


No comments:

Post a Comment