Sunday, 28 September 2014

பகுத்தறிவுவாதிகளே...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


மனிதனுக்கும், இன்னபிற படைப்புகளுக்கும் இடையே எத்தனையோ விஷயங்கள் வேறுபட்டிருந்தாலும் இறைவன் பகுத்தறிவு என்னும் ஒரு அறிவை மட்டும் மேம்படுத்தி இந்த மனிதனை மேன்மையாக படைத்திருப்பதாக இறைவன் கூறுகிறானே,
அந்த அறிவை நாம் முறையாக பயன் படுத்துகிறோமா???
என்று ஒரு நிமிடம் ஆராய்ந்து பார்ப்போம்....

ஒரு நாய் மனிதனை போன்று பேசுகிறது என்று கூறினால்...

ஒரு மலை இடம் பெயர்ந்து விட்டது என்று கூறினால்...

மரம் இந்த பாதை வழியாக நடந்து போனது என்று கூறினால்...

இப்படி கூறினால் கூறுபவன் முட்டாள். இதை நம்புபவன் அடிமுட்டாள்...

அனைத்து மக்களும் இன்று படித்து நாகரீகத்தின் உச்சிக்கே சென்று கொண்டு இருக்ககூடிய இந்த காலகட்டத்தில் படைப்பினங்களால் நமக்கு நன்மை, தீமையை செய்ய முடியும் என்று நம்புவது எத்தனை பெரிய முட்டாள்தனம்...

ஒரு மரம் இன்னொரு மரத்தை வணங்குவதில்லை.
ஒரு விலங்கினம் இன்னொரு விலங்கை வணங்குவதில்லை.
ஒரு கல் இன்னொரு கல்லை வணங்குவதில்லை.

ஆனால் இந்த மனிதனோ மரத்தையும், விலங்கையும், கல்லையும் ஏன், இன்னொரு மனிதனையே வணங்கக்கூடிய ஒரு செயலை இந்த பகுத்தறிவுள்ள மனிதன்தான் செய்கிறான்.

இப்படி செய்யக்கூடிய மனிதன் நாகரீகமான பகுத்தறிவு உள்ளவனா???
இல்லை முட்டாள்களிலும் அடிமுட்டாளா???

அல்லாஹ் கூறுகிறான்...
மனிதர்களே! ஓர் உவமை கூறப்படுகின்றது; அதனை நீங்கள் மிகக் கவனத்துடன் கேளுங்கள்: அல்லாஹ்வை விடுத்து நீங்கள் எந்தக் கடவுள்களை அழைக்கின்றீர்களோ, அக்கடவுள்கள் அனைவரும் சேர்ந்து ஓர் ஈயைப் படைக்க விரும்பினாலும் படைக்க முடியாது! ஏன் ஈ, அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டு போனாலும் கூட அதனிடமிருந்து அதனை விடுவிக்கவும் அவர்களால் முடியாது. உதவி தேடுகின்றவர்களும் பலவீனர்களே! உதவி தேடப்படுபவர்களும் பலவீனர்களே!
(குர்ஆன்-22:73)

No comments:

Post a Comment