காரைக்கால் மாவட்ட காவல்துறை புதுவை மாநில மக்களுக்கு அறிவிப்பு!
முத்தவல்லிகள், பஞ்சாயத்தார்கள், மற்றும் ஜமாத்தார்களுக்கு...
தெரிவிப்பது யாதெனில் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருந்தும், இறைவழிபடுவது யாவரும் அறிந்ததே! அதேபோல இந்த வருடமும் ரமலான் மாதம் தாங்கள் நோன்பு இருந்து இறைவழிபாடு செய்வதற்கு ஆவலாக உள்ளீர்கள். அதே நேரத்தில் இரவில் கண் விழித்து இறை வழிபாடு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இளைஞர்கள் இரவில் சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் சாலையில் வாலிபால் விளையாடுவதும், பேட்மிட்டன் விளையாடுவதும், ஃபுட்பால்
விளையாடுவதும் வாடிக்கையாக செய்து வருகிறார்கள். இது போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறாக உள்ளது.
மேலும் வாகனங்களில் அதிவேகமாக ஆபத்தை விளைவிக்கக் கூடிய வகையில் செல்கிறார்கள். சாலைகளிலும் தெருக்களிலும் அதிக சத்தம் போட்டுக் கொண்டும் செல்கின்றார்கள். இது வயது முதிர்ந்தவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றது.
மேலும் காலாவதியான பதிவு எண் கொண்ட வாகனங்களில் அதிக ஒலி எழுப்பிக் கொண்டும் சத்தம் போட்டுக் கொண்டும் செல்கின்றார்கள். இது போன்று 18.3.2024 அன்று இரவு T.R. பட்டினம் மாப்பிள்ளை தெருவில் சில இளைஞர்கள் PRANK என்ற பெயரால் உயிருடன் உள்ளவரை, இறந்தது போல் பைக்கில் வைத்து விளையாடி தெரு முழுவதும் சுற்றி வந்தது காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல் துறையினர் விரட்டிச் சென்று தகுந்த அறிவுரை கூறியது. இதுபோன்ற அறிவீனர்களை காரை மாவட்ட காவல் துறை கடுமையாக எச்சரித்துள்ளது. மீறும் பட்சத்தில் அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு பஞ்சாயத்தார்கள் மற்றும் ஜமாத்தார்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவன் காரைக்கால் மாவட்டம் காவல் துறை
ந. ஜெகபர் ஷரிப்,
7810084829
மனசொலி ரிப்போர்ட்டர்
No comments:
Post a Comment