Thursday, 14 March 2024

குழந்தைத் திருமணதடைச்சட்டம்,2006

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

குழந்தைத் திருமணதடைச்சட்டம்,2006

இந்த சட்டம் தொடங்குவதற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ நடத்தப்பட்ட ஒவ்வொரு குழந்தைத் திருமணமும், திருமண சமயத்தில் குழந்தையாக இருந்து, ஒப்பந்தத்தில் ஈடுபடுகின்ற தரப்பின் விருப்பத்தின் பேரில் ரத்து செய்யக்கூடியதாக இருக்கும். 

முந்தைய சட்டங்களில் இருந்த குறைபாடுகளை சரி செய்வதற்காக, 2006 ஆம் ஆண்டு குழந்தைத் திருமண தடைச் சட்டத்தின் விதிகள் அறிமுகம் செய்யப்பட்டன. அது, 1929 ஆம் ஆண்டு குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்துக்கு மாற்றாக, நவம்பர் 1, 2007 இல் நடைமுறைக்கு வந்தது. 1978 ஆம் ஆண்டு இந்த சட்டத்தில் பெண்களின் சட்டப்பூர்வ திருமண வயதை 15 இல் இருந்து 18 வயதாகவும், ஆண்களுக்கு 18 இல் இருந்து 21 வயதாகவும் உயர்த்துகின்ற திருத்தம் செய்யப்பட்டது. 

பெண் அல்லது பையனுக்கு சட்டப்பூர்வ வயதை விடக் குறைவாக, அதாவது பெண்ணுக்கு 18 வயதுக்கு கீழ் அல்லது பையனுக்கு 21 வயதுக்குக் கீழ் உள்ள திருமணத்தை, குழந்தைத் திருமணம் என குழந்தைத் திருமண தடைச் சட்டம் வரையறுக்கிறது. 

இந்த சட்டத்தின் விதிகள் குழந்தைத் திருமணத்தைத் தடை செய்கின்றன, பாதிக்கப்பட்டவருக்கு பாதுகாப்பையும், நிவாரணத்தையும் வழங்குகின்றன, மேலும் அத்தகைய திருமணத்துக்கு உடந்தையாக இருக்கின்ற, ஊக்குவிக்கின்ற அல்லது நடத்தி வைப்பவர்களுக்கான தண்டனையை அதிகரிக்கின்றன. 

மேலும் இந்த சட்டமானது, நடவடிக்கை எடுப்பது மூலம் குழந்தைத் திருமணத்தைத் தடுத்து, திறமையாக வழக்குத் தொடுப்பதற்காக ஆதாரங்களை சேகரிக்கவும், குழந்தைத் திருமணத்தை ஊக்குவிக்கவோ அல்லது உதவி செய்யவோ அல்லது திருமண சடங்கு நடத்த அனுமதிக்கவோ வேண்டாம் என்று உள்ளூர்வாசிகளுக்கு ஆலோசனை கூறுவதற்கும், 
குழந்தைத் திருமணத் தடுப்பு அதிகாரிகளை நியமிக்குமாறும் அறிவுறுத்துகிறது. 

அவர்களின் கடமைகளில், இத்தகைய குழந்தைத் திருமணத்தின் தீமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவது, இந்தப் பிரச்சினையை சமூகத்துக்கு உணர்த்துவது, அரசு வழி காட்டக் கூடிய நேரத்தில், குறிப்பிட்ட கால இடைவெளியில் பலன்கள் மற்றும் புள்ளி விவரங்களை அளித்தல் ஆகியவை அடங்குகின்றன.

* திருமணம் நடைபெறும் சமயத்தில் குழந்தையாக இருந்த திருமணத்தின் ஒரு ஒப்பந்த தரப்பு மட்டுமே, ரத்து செய்கின்ற உத்தரவு மூலம் அந்த குழந்தைத் திருமணத்தை ரத்து செய்வதற்கான மனுவை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம்.

* மனு தாக்கல் செய்யும் நேரத்தில், அந்த மனுதாரர் ஒரு மைனராக இருந்தால், குழந்தைத் திருமணத் தடுப்பு அதிகாரியிடம் அவருடைய பாதுகாவலர் அல்லது அவருடைய பிரதிநிதியால் மனு தாக்கல் செய்யப்படலாம்.

* இந்தப் பிரிவின் கீழ் வழங்கப்படும் மனுவை எந்த நேரத்திலும், ஆனால் மனுவைத் தாக்கல் செய்கின்ற குழந்தை மேஜர் ஆகி இரண்டு வருடங்கள் பூர்த்தியடைவற்கு முன்பாகத் தாக்கல் செய்யலாம்.

* இந்தப் பிரிவின் கீழ் ஒரு ரத்து செய்யும் உத்தரவை வழங்கும் வேளையில், மாவட்ட நீதிமன்றம் மற்றொரு தரப்புக்கு, அவருடைய பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு, ஒருவேளை இருக்கும் பட்சத்தில், அடுத்த தரப்பிடம் இருந்து திருமணம் நடைபெறும் சமயத்தில் அவர்கள் பெற்றுக் கொண்ட பணம், விலையுர்ந்த பொருட்கள், ஆபரணங்கள் மற்றும் பிற பரிசுப் பொருட்களை அல்லது அந்த விலையுயர்ந்த பொருட்கள், ஆபரணங்கள், பிற பரிசுப்பொருட்கள் மற்றும் பணத்துக்கு இணையான தொகையைத் திருப்பிக் கொடுக்குமாறு, அந்த திருமணத்தின் இரண்டு தரப்பு அல்லது அவர்களின் பெற்றோர் அல்லது அவர்களுடைய பாதுகாவலர்களுக்கு அறிவுறுத்துகின்ற ஆணையைப் பிறப்பிக்கும்.

* குழந்தைத் திருமண ஒப்பந்தத்தில் ஈடுபடுகின்ற 18 வயதுக்கு மேற்பட்ட ஆணாக உள்ள ஒருவருக்கு இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கக் கூடிய சிறைத்தண்டனையுடன் கடுங்காவல், அல்லது ஒரு இலட்ச ருபாய் வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

* எந்த ஒரு குழந்தைத் திருமணத்தை செய்து கொள்கின்ற, நடத்துகின்ற, வழிநடத்துகின்ற அல்லது உடந்தையாக இருக்கும் நபருக்கு, அந்தத் திருமணம் ஒரு குழந்தைத் திருமணம் அல்ல என அவர் நினைத்தார் என்பதற்கான காரணங்களை அவர் நிரூபிக்கத் தவறும் பட்சத்தில், இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கக் கூடிய கடுங்காவல் தண்டனை மற்றும் ஒரு இலட்ச ருபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

* குழந்தைத் திருமணத்தில் ஒரு குழந்தை ஈடுபடும் போது, அந்தத் திருமணத்தை ஊக்குவிக்கின்ற அல்லது அந்தச் சடங்கு நடைபெற அனுமதிக்கின்ற, அல்லது குழந்தைத் திருமணத்தில் கலந்து கொள்ளுதல் அல்லது பங்கெடுத்தல் உள்ளிட்ட வேண்டுமென்றே

அதைத் தடுக்கத் தவறுகின்ற, பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர் அல்லது வேறு ஏதேனும் நபர் அல்லது வேறு ஏதேனும் நிலை, சட்டரீதியாக அல்லது சட்டத்துக்கு முரணாக, ஒரு நிறுவனத்தின் உறுப்பினர் எவரேனும் அல்லது நபர்களின் சங்கம் உள்ளிட்ட குழந்தை மீது அதிகாரம் கொண்ட எந்த ஒரு நபருக்கும், இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கக் கூடிய கடுங்காவல் தண்டனையும், மேலும் ஒரு இலட்ச ரூபாய் வரை அதிகரிக்கக் கூடிய அபராதமும் விதிக்கப்படும்.

No comments:

Post a Comment