19.03.2024
2,299 கிராம உதவியாளர் நியமனம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தமிழகம் முழுவதும், 3 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள 2,299கிராம உதவியாளர் இடங்கள் காலியாக இருப்பதாகவும், உடனடியாக இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தமிழ்நாடு அரசு அறிவுறித்தியுள்ளது.
கிராம உதவியாளர் பணி என்றால் என்ன?
தமிழ்நாட்டின் வருவாய்க் கிராமங்களின் அதிகாரியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கீழாக கிராம உதவியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
வரி வசூலித்தல், கிராம கணக்குகளை நிர்வகித்தல், நில வருவாய் ஆவணங்களைத் தயாரித்தல், கணக்குகளை முறையாக சரியாக வைத்து கொள்ளுதல், பிறப்பு, இறப்பு போன்ற பல்வேறு பதிவேடுகளை தயாரித்தல் மற்றும் புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
கிராம உதவியாளர் பதவிக்கான அடிப்படைத் தகுதிகள்
குறைந்தபட்சம் 5ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
அறிவிக்கப்பட்ட பதவிக்கான வட்ட எல்லைக்குள் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்
வண்டி ஓட்டும் திறன் இருக்க வேண்டும்
இருதாரமணம் இருக்கக் கூடாது
கிராம உதவியாளர் பதவிக்கு வயது வரம்பு
ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியினர் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், அதிகபட்சமாக 37 வயது வரையும் இருத்தல் வேண்டும். பொதுப்பிரிவினர் அதிகபட்சமாக 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
குறைந்தபட்ச வயது அனைத்து பிரிவினருக்கு 21க்கு மேல் இருக்க வேண்டும்.
காலியிடங்கள் விவரங்கள்:
அரியலூர் - 21, சென்னை 20, செங்கல்பட்டு-41, கோயம்புத்தூர்-61, கடலூர் - 66, திண்டுக்கல் - 29, தருமபுரி - 39, ஈரோடு - 141, காஞ்சிபுரம் - 109, கரூர் - 27, கிருஷ்ணகிரி -33, மதுரை - 155, மயிலாடுதுறை - 13, நாகப்பட்டினம் - 68, நாமக்கல் - 68,பெரம்பலூர் - 21, புதுக்கோட்டை - 27, ராமநாதபுரம் - 29, ராணிபேட்டை 43, சேலம் - 105,சிவகங்கை - 46, தஞ்சாவூர் - 305, தேனி-25, திருவண்ணாமலை - 103, திருநெல்வேலி - 45, திருப்பூர் - 102, திருவாரூர் - 139, திருவள்ளூர் - 151, திருச்சி - 104. தூத்துக்குடி - 77, தென்காசி - 18, திருப்பத்தூர் -32, விருதுநகர் - 38, வேலூர் - 30, விழுப்புரம் - 31 ஆகும்.
சம்பளம்: Special Time Scales of pay Matrix Level 6 (குறைந்தபட்சம் ரூ.11;100- அதிகபட்சம் Rs.35,100)
எதனடிப்படையில் தேர்வு முறை இருக்கும்?
திறனறிதல் தேர்வு, நேர்முகத் தேர்வு, சாண்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.
திறனறிதல் தேர்வுவாசித்தல், எழுதுதல் என இரண்டு நிலையில் இருக்கும். எந்த ஒரு புத்தகத்திலும் இருந்து ஏதாவது ஒரு பக்கத்தில் உள்ள வாசகங்களை விண்ணப்பதாரரை வாசிக்கச் சொல்லலாம். இதற்கு 10 மதிப்பெண் வழங்கப்படும். ஏதேனும் தலைப்பு பற்றி 100 வார்த்தைக்கு மிகாமல் கட்டுரை எழுத செய்யலாம். இதற்கு 30 மதிப்பெண் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், விவரங்களுக்கு தமிழக அரசின் https://www.tn.gov.in , வருவாய் நிருவாகத் துறையின் இணையதளம் (https://cra.tn.gov.in) மற்றும் அந்தந்த மாவட்ட அதிகாரப்பூர்வமான இணையதளத்தை அவ்வப்போது பார்வையிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
No comments:
Post a Comment