Sunday 17 March 2024

டாக்டர் மன்மோகன்சிங் காலத்து தேர்தல் நிதி சட்டத்துக்கும்... மோடி காலத்து தேர்தல் நிதிப்பத்திர சட்டத்துக்கும் உள்ள வேறுபாடுகள் :

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

டாக்டர் மன்மோகன்சிங் காலத்து தேர்தல் நிதி சட்டத்துக்கும்...
மோடி காலத்து தேர்தல் நிதிப்பத்திர சட்டத்துக்கும் உள்ள வேறுபாடுகள் :

#மன்மோகன்சிங்கின்_கம்பெனிச்சட்டம்
■ஒரு நிறுவனம் முந்தைய 3 நிதியாண்டுகளில் சம்பாதித்த நிகர லாபத்தில், அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கும் நன்கொடை 7●5%க்கும் அதிகமாக இருக்கக்கூடாது.

■புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்கள்...தங்களின் முதல் 3 நிதியாண்டுகளுக்குள் அரசியல் பங்களிப்பையோ தேர்தல் நன்கொடை அளிப்பதையோ அச்சட்டம் தடைசெய்தது.

■அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்க நினைக்கும் நிறுவனங்கள், முதலில் அதன் இயக்குநர் குழு கூட்டத்தில், நிதி வழங்குவது குறித்து அங்கீகரிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி இருக்க வேண்டும்.

■நிறுவனங்கள் ஆண்டுதோறும், தாங்கள் அளித்துள்ள நிதி, எந்த கட்சிக்கு எவ்வளவு வழங்கப்பட்டது என்ற தகவல்களையும் வெளியிட வேண்டும்.


#மோடியின்_தேர்தல்நிதிப்பத்திரச்சட்டம்:
■தேர்தல் நிதிப்பத்திரச்சட்டம் 2018 மூலம், Companies Act 2013ன் 7.5% சதவீத வரம்புடன் நிதி வழங்கும் முறை முற்றாக நீக்கப்பட்டது. ஆகவே... 215 கோடி இலாபம் காட்டிய கம்பெனி 1368 கோடி நிதி கொடுக்கிறது.

■ நிறுவனம் லாபகரமானதா... இல்லையா என்பதெல்லாம் தேர்தல் நிதிப்பத்திரம் வாங்கும்போது வங்கியில் சொல்லத் தேவையில்லை. ஆகவே... நஷ்டம் அடைந்த கம்பெனிகளும் தேர்தல் நிதி அள்ளி அள்ளி அளிக்கின்றன.

■ நிறுவனம் துவங்கி 3 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும் என்கிற விதியும் தேர்தல் பத்திரம் வாங்க அவசியமில்லை. ஆகவே... புதிது புதிதாக துவங்கிய போலி (ஷெல்) நிறுவனங்கள் எல்லாம் தேர்தல் நிதி அளிக்கின்றன.

■தாங்கள் மூலம் நிதி வழங்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பெயர்களையும் நிறுவனங்கள் வெளியிட வேண்டியதில்லை. ஏனென்றால்... வெளியிடும் நபர் மூலமாக ஷெல் கம்பெனிகள் யாருடையது... என மக்களுக்கு தெரிந்துவிடும்.

■ தேர்தல் நிதிப்பத்திரம் மூலமாக நன்கொடை அளிப்பவர்களது பெயர் வங்கிக்கு மட்டுமே தெரியும். இதை அந்த நிறுவனம் தன் இயக்குனர் குழு கூட்டத்தில்... நிதி நிலை அறிக்கையில் தெரிவிப்பதோ... நிறுவன மேலாண்மை உறுப்பினர்கள் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றுவதோ... தேவை இல்லை. எனவே, நிறுவனத்துக்கு வெளியே இருந்து...கட்சியின் கருப்புப்பணம் அந்த நிறுவனப்பெயரால் கட்சிக்கு வெள்ளையக்கப்பட்டு செல்லும் வாய்ப்புள்ளது.

■சும்மா ஒப்புக்கு இதன் பெயர் "தேர்தல் நிதிப்பத்திரம்" என்றாலும்... தேர்தல் காலத்தில் மட்டுமின்றி.... தேர்தல் எதுவுமே நடக்காத காலத்திலும் SBI வங்கிகளில் விற்கப்படும். ஆகவே... கட்சி வசூல் பாதிக்க கூடாது.

■ வருமான வரிச் சட்டம் 1961 - ன் படி, 
அரசியல் கட்சிகளுக்கு வரும் நன்கொடைகள் குறித்து வருமானவரித்துறையினரிடமும், 
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951- ன் படி, 
ரூ.20 ஆயிரத்திற்கும் மேல் அரசியல் கட்சிகள் பெறும் நிதி குறித்த தரவுகளை தேர்தல் ஆணையத்திடமும், அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டும் என்ற... முந்தைய கால இந்திய  சட்ட விதிமுறை மோடியால்  திருத்தப்பட்டது. இதனால்... யாருக்கும் எந்த அச்சமும் இல்லாமல் கணம் கைமாற்றி விடப்பட்டுள்ளது.

எலெக்டோரல் பாண்டு சட்டத்திற்கு முன்னதாக..
பழைய சட்டத்தில்...  ரூ.20 ஆயிரத்திற்கும் அதிகமாக பெறும் அனைத்து நன்கொடைகளையும் பொதுவில் வெளியிடவேண்டும் என்ற நடைமுறை இருந்தது. தற்போது... சுப்ரீம் கோர்ட்டு... மோடியின் தேர்தல் நிதிப்பத்திர சட்டத் திருத்தத்தை... அரசியல் சாசன சட்டத்துக்கு விரோதமானது என தீர்ப்பு கூறி... அச்சட்டத்திற்கு தடை போட்டுவிட்டதால்... கட்சிகள் பெற்ற நிதியை தேர்தல் ஆணையத்திடம் SBI கொடுத்து, அது பொதுவில் வெளியிடப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு இட்டுள்ளது.

முன்னதாக 2017 ஆம் ஆண்டு தேர்தல் நிதிப்பத்திரம் தொடர்பாக சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தில் தாக்கல் ஆகும்போது... தேர்தல் ஆணையம் சட்ட அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி இருந்தது. அதில், “தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்படும் நன்கொடைகள் குறித்து அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டியதில்லை என மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 29 Cல் திருத்தம் கொண்டுவரப்பட்டது பிற்போக்கு நடவடிக்கை” என மோடி அரசை சாடி யிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment