Thursday, 14 March 2024

என் ரப்பே ! நான் உன்னிடம் கேட்கிறேன்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்ஹம்துலில்லாஹ் ! வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ் !

அல்லாஹ்வே ! 
என் ரப்பே ! நிச்சயமாக நீ என்பேச்சைக் கேட்கிறாய். நான் இருக்கும் இடத்தையும் நீ பார்க்கிறாய். என் அகத்தில் உள்ளதையும், புறத்திலுள்ளதையும் அனைத்தையும் நீ அறிந்தவன்.
 
எனது விசயங்கள் எதுவும் உன்னை விட்டு் மறைந்ததல்ல. 
நான் வறியவன் தேவையுடையவன், உன்னிடம் முறையிடுபவன்,
உனது பாதுகாப்பைத் தேடுபவன். அஞ்சுபவன், நடுங்குபவன்.

தன் பாவங்களை உன் முன் சமர்பித்து ஒப்புக் கொள்பவன் நான். 
ஒன்றுமில்லாத மிஸ்கீன் கேட்பதைப் போல் நான் உன்னிடம் கேட்கிறேன்.

கேவலமடைந்த பாவி நடுங்குவது போல் உன் முன் நான் நடுங்குகிறேன்.
ஆபத்துகள் சூழ அச்சம் கொண்டவன் அழைப்பதைப் போல் உன்னை அழைக்கிறேன்.

உனக்கு தலைவணங்கியோர், உன் முன் அழுது புலம்பியோர், உனக்காக தங்கள் உடலை அற்பணித்தோர், உனக்காக தனது சிரஸை பணித்து தன் மூக்கை இம்மண்ணில் பட்டு கேட்டுக் கொண்டோர் ஆகியோரது வேண்டுதலைப் போன்று  உன்னிடம் வேண்டுகிறேன்.

உன்னிடம் வேண்டுவதை நல்வாய்ப்பை இழந்ததாக ஆக்கிவிடாதே!
என் மீது கருணையும், இரக்கமும் கொண்டவனாக ஆகிவிடு.
கேட்கப்படுபவரில் சிறந்தவனே !
கொடுப்பவர்களில் சிறந்தவனே !
யா அல்லாஹ் ! எங்களின் பாவங்களை மன்னிப்பாயாக ! எங்களுக்கு விமோச்சனம் நல்கிடுவாயாக ! எங்கள் வேண்டுதலை நிறைவேற்றி வைப்பாயாக ! அகிலமும் ஆளும் ரட்சகனே ! அல்லாஹ்வே ! ஆமீன் ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன் !

No comments:

Post a Comment