Tuesday 19 March 2024

20.03.2024 பாஜகவும் பாமகவும் சேர்ந்ததில் வியப்பொன்றுமில்லை..

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

20.03.2024 பாஜகவும் பாமகவும் சேர்ந்ததில் வியப்பொன்றுமில்லை.. வியாபாரி நல்ல விலைக்கு விற்பதை தான் விரும்புவான் .. வெற்றி பெற முடியாது என தெளிவாகத் தெரிந்தும் மகனுக்கு குறைந்தபட்சம் மாநிலங்களவை உறுப்பினராக ஏற்பாடு செய்து விட்டு நல்லாட்சி என உளறுவதும் எப்போதும் போல் திராவிடக் கட்சிகளை குறைகூற வாய்ப்பு கிடைத்திருக்கிறது.. 
..
ராமதாஸ் எப்போதும் தன் நலம் மட்டுமே பேசும் அரசியல்வாதி.. தன் சாதியினரை தவறான பாதையில் வழிநடத்தும் பேராசைக்காரர்.. ஒவ்வொருமுறையும் சத்தியம் செய்வதும் அதை மீறுவதும் வாடிக்கையானதுதான் .. ஆரம்பகாலக் கட்டத்தில் சமூகநீதி பேசி தன் இருப்பை நிலை நிறுத்தியவர்.. உள்ளில் இருந்த சாதிய நிலைபாடு அவரையும் பாமகவையும் கரைக்க வைத்தது.. 
..
கடைசியில் மகனுக்கு மகுடம் சூட்ட முடியாமல் போனாலும் தலைப்பாகையாவது கிடைக்காதா என பிற  கட்சிகளிடத்தில் ஏறி இறங்கி நாடகம் நடத்த வேண்டிய சூழல் .. 
வட மாவட்டங்களில் பெரிதாய் வரவேண்டிய கட்சியை சுய நலத்திற்காக விலை பேசும் வியாபாரியாகிப்போனார்..  பாமக இருக்குமிடம் தான் வெல்லும் என்ற மமதையை வீழ்த்தி காட்டுகிறேன் என சொல்லியடித்து வீழ்ச்சிக்கு வித்திட்டவர் தளபதியார் ..அன்று தொடங்கி இன்றுவரை விரக்தியில் தங்களை காத்துக் கொள்ள நல்ல வியாபாரியாய் அரசியல் செய்கிறார்.. பாஐக மூன்றாமிடத்திற்கு வர உதவலாமே தவிர அதனால் பாமகவிற்கோ வன்னிய சமூகத்திற்கோ பலனில்லை/பயனில்லை..
..
வரும் காலங்களில் பாமக லெட்டர்பேட் கட்சியாக மாறும்.. 
விதைத்தது தானே கிடைக்கும்..
..
-ஆலஞ்சியார் 
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்

No comments:

Post a Comment