Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Wednesday, 8 January 2025

M. H. ஜவஹிருல்லா: அரசியல்வாதி.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

M. H. ஜவஹிருல்லா: அரசியல்வாதி.

M. H. ஜவஹிருல்லா (1959-ம் ஆண்டு பிறந்தவர்) இந்தியாவின் முக்கியமான அரசியல்வாதியாவர், சமூக செயற்பாட்டாளர் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள மனிதநேய மக்கள் கட்சியின் (MMK) நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார். 1959-ம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் இளங்குடியில் பிறந்த ஜவஹிருல்லா, தன்னுடைய வாழ்க்கையை புறக்கணிக்கப்பட்ட சமுதாயங்களின், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்களின் மறுக்கப்பட்ட உரிமைகளையும், நலன்களையும் ஊக்குவிப்பதில் அர்ப்பணித்துள்ளார்.

ஜவஹிருல்லாவின் ஆரம்பக் கல்வி பாரம்பரிய இஸ்லாமிய படிப்புகளிலும், நவீன கல்வியிலும் அடிப்படை பெற்றுள்ளதுடன், அவர் பொருளாதாரம் பட்டப் படிப்பையும் முடித்துள்ளார், அதே துறையில் முதுகலைப்படிப்பை முடித்து, பின்னர் இஸ்லாமிய படிப்புகளில் பிஏச்.டி. பெற்றார். இந்த கல்விப் பின்னணி சமூக செயற்பாட்டிலும், அரசியலிலும் அவரது சமூக சமுதாயப் பணிகளுக்கு உறுதியான அடித்தளத்தை வழங்கியது.

2009-ஆம் ஆண்டு, ஜவஹிருல்லா மனிதநேய மக்கள் கட்சியை நிறுவினார், இது சமூக மற்றும் பொருளாதார ரீதியாக புறக்கணிக்கப்பட்ட மற்றும் குறைவான பிரதிநிதித்துவம் பெற்ற சமூகங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கட்சி. அவரது தலைமையில், MMK தமிழ்நாட்டில் முக்கியமான அரசியல் பங்காற்றும் கட்சியாக உயர்ந்துள்ளது, முக்கிய அரசியல் கூட்டணிகளுடன் இணைந்து முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் உரிமைகள் பேணவும், அதற்காக வாதிடவும் பல முறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஜவஹிருல்லாவின் அரசியல் வாழ்க்கை, 2011 முதல் 2016 வரை ராமநாதபுரம் தொகுதியில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் உறுப்பினராக இருந்த காலத்தை மையமாக கொண்டது. அவற்றில், சமூகநீதி, சமய ஒற்றுமை, சிறுபான்மையினரின் உரிமைகள் போன்ற பிரச்சினைகளுக்கு அவர் திறம்பட தமது கருத்துக்களை வெளிப்படுத்தினார். சட்டப்பேரவையில் அவர் எடுத்த முயற்சிகள் பெரும்பாலும் கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படை வாழ்க்கைத்துணைகளுக்கான வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டன.

அரசியலுக்கு அப்பால், ஜவஹிருல்லா பல சமூக நலத்திட்டங்களில் சோம்பலின்றி ஈடுபட்டு வருகின்றார். அவர் சமய ஒற்றுமைக்கு வலியுறுத்தி, தமிழ்நாட்டில் பல்வேறு சமய மற்றும் சமூகக் குழுக்களுக்கிடையே இடைவெளியை குறைக்கும் பணியில் கஷ்டப்பட்டு வருகின்றார்.

M. H. ஜவஹிருல்லா இன்று தமிழ்நாட்டின் அரசியல் பரப்பில் முக்கியமான தலைவராகத் தொடர்ந்தும் செயல்படுகின்றார், அனைத்து மக்களுக்கும் நீதி, சமத்துவம் மற்றும் அதிகாரம் என்பவற்றுக்காகப் போராடி வருகின்றார்.

சீமான் பேச்சு கண்டிக்கதக்கது / மமக தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

09.01.2024 Chennai 

https://youtu.be/56qaH3wk7e0?si=TELGpAb-rY28ggO_&sfnsn=wiwspwa

சீமான் பேச்சு கண்டிக்கதக்கது, தமிழ்நாட்டின் வரலாற்றை புரியாமல் யாரையோ திருப்தி படுத்துவதற்கு ஆற்றிய உரை - 

மமக தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி

திருமணத்திற்கு இனி பத்திரப்பதிவு அலுவலகம் வர தேவையே இல்லை.! ஈசியா ஆன்லைனில் பண்ணலாம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

திருமணத்திற்கு இனி பத்திரப்பதிவு அலுவலகம் வர தேவையே இல்லை.! ஈசியா ஆன்லைனில் பண்ணலாம்

திருமண பதிவுகளை எளிதாக்க, தமிழக அரசு புதிய ஆன்லைன் முறையை அறிமுகப்படுத்த உள்ளது. 

இதன் மூலம் வீட்டிலிருந்தே திருமணத்தை பதிவு செய்து கட்டணத்தை செலுத்த முடியும். 

பத்திரிக்கை அடித்து, உறவினர்களை கூப்பிட்டு  விருந்து வைத்து திருமணமானது விஷேசமாக நடந்தாலும் அந்த திருமணத்தை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிந்தால் மட்டுமே செல்லுபடியாகும். 

எனவே பத்திர பதிவு அலுவலகத்தில் மணமகன், மனமகள் போட்டா, ஆதார் ஆவணங்கள், வயது சான்றிதழ் உள்ளிட்ட பல சான்றிதழ்கள் கொடுத்து பதிவு செய்யப்படுகிறது. 




தற்போது உள்ள சூழலில் பாஃபோர்ட் போன்ற காரணங்களுக்கு திருமண பதிவு சான்றிதழ் அவசியமாக உள்ளது. 

எனவே இதற்காக மீண்டும் பத்திர பதிவு அலுவலகத்தில் பதிவாளர் முன்பாக கையெழுத்திட்டு முறைப்படி திருமணங்கள் நடைபெறும்.

திருமண பதிவு - பத்திரபதிவு அலுவலகம்

தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டம் 2009-ம் ஆண்டு சட்டத்தின் படி திருமணம் நடைபெறும் பகுதியில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமே திருமணத்தைபதிவு செய்ய முடியும். 

இது சட்டம் மாற்றப்பட்டு 2020-ம் ஆண்டு இந்த சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் ஒன்று கொண்டுவந்தது. 

அதன்படி மணமகன் அல்லது மணமகள் வசிக்கும் பகுதியில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் கூட திருமணத்தை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. 

ஆனால் பெரும்பாலானவர்கள் பத்திர பதிவு அலுவலகத்திற்கு சென்று அலைய விரும்பாத நிலையே உள்ளது. 

இதனால் பாஸ்போர்ட் பெறும் தம்பதிகள் மற்றும் காதல் திருமணங்கள் செய்பவர்கள் மட்டுமே பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்து வருகின்றனர்

லஞ்சமாக கைமாறும் பணம்

மேலும் பத்திர பதிவு அலுவலங்களில் திருமணத்தை பதிவு செய்வதில் பல்வேறு சிக்கல்கள்களோடு லஞ்சமாக பல ஆயிரத்தில் பணமும் கைமாறுவது தெரியவந்தது. 

இதனையடுத்து திருமணத்தை பத்திர பதிவு அலுவலகத்தில் சென்று பதிவு செய்யும் முறையில் மாற்றம் செய்யப்படவுள்ளது. 

அதன் படி  பொதுமக்களே நேரடியாக ஆன்லைனில் கட்டணத்தை செலுத்தி திருமண பதிவுகளை பதிவு செய்யும் நடைமுறையை கொண்டுவர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதன் மூலம் வீட்டில் இருந்தே திருமணத்தை பதிவு செய்து அதற்கான கட்டணத்தையும் செலுத்த முடியும். 

திருமணம் செய்துகொள்ளப்பட்டதற்கான ஆவணங்கள் உரிய முறையில் இருந்தால் உடனடியாக திருமண சான்றிதழ்களும் வழங்கப்படவாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆன்லைனில் திருமண பதிவு

தமிழக பத்திர பதிவுத்துறையில் பல்வேறு பணிகள் ஆன்லைனில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ஸ்டார்-2 மென் பொருள் மூலமாக எளிமையாக சான்றிதழ்களை வழங்கப்பட்டு வருகிறது. 

இதன் அடுத்தக்கட்டமாக ஸ்டார்-3 மென் பொருள் அப்டேட் செய்யப்பட உள்ளது. இந்த சாப்ட்வேர் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. 

எனவே திருமண பதிவுகள் பொதுமக்களே வீட்டில் இருந்து மேற்கொள்ளும் வகையில் புதிய திட்டம் விரைவில் அறிமுகமாக இருப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

முதற்கட்டமாக தமிழ்நாடு திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்பவர்களுக்கு பொருந்தும் எனவும், பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் சிறப்பு திருமணங்கள் போன்றவற்றில் ஏற்கனவே உள்ள நடைமுறைகள் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Tuesday, 7 January 2025

புகார் பதிவேடு” முறை பின்பற்றிட கிராம ஊராட்சிகளுக்கான சிறப்பு அதிகாரிக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கோரிக்கை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் தேர்தல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்பு பிரநிதிகளுக்கான பதவி காலம், 2025 ஜனவரி 5ந்தேதியோடு நிறைவடைந்த நிலையில் 28 மாவட்டங்களுக்கான ஊராட்சிகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள எங்கள் கிராம ஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் “பொதுமக்கள் புகார் பதிவேடு” முறை பின்பற்றிட கிராம ஊராட்சிகளுக்கான சிறப்பு அதிகாரிக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

நமது கோரிக்கையின் அடிப்படையில் எங்கள் ஊரில் பொதுமக்கள் புகார் பதிவேடு பராமரிக்கப்பட்டுள்ளது. 

நமது நிர்வாகிகளும் அந்தந்தப் பகுதிகளில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கான சிறப்பு அதிகாரியை சந்தித்து தங்களது கிராமத்திற்குத் தேவையான அத்தியாவசிய பணிகள் குறித்து எழுத்துப் பூர்வமாகமனுக் கொடுத்து பொதுமக்களின்  தேவைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

மு. உசைன் கனி
மக்கள் உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அணி
மாநில பொறுப்பாளர்.

Monday, 6 January 2025

மதுரை சிக்கந்தர் தர்ஹா பிரச்சினையில் தமுமுக மேற்கொண்ட நடவடிக்கைகள்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மதுரை சிக்கந்தர் தர்ஹா பிரச்சினையில் தமுமுக மேற்கொண்ட நடவடிக்கைகள்.

மதுரை திருப்பரங்குன்றம் சிக்கந்தர் அவுலியா பாதுஷா தர்காவில் ராஜபாளையத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் ஒரு ஆட்டுக்கடாவுடன் கந்தூரி ஆக்குவதற்காக 
25/12/2024 அன்று காலை 6 மணிக்கு மலையில் மேல் உள்ள தர்காவிற்கு செல்ல வந்துள்ளனர். வந்த மக்களையும் ஆட்டுக்குட்டியையும் அந்த குடும்பத்தினரையும்
மதுரை திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் மதுரை வீரன் அவர்கள் தடுத்து நிறுத்தி மேலே பலி கொடுக்கக் கூடாது மேலும் அசைவம் சமைக்க கூடாது என்று தடை உத்தரவு போட்டு பிரச்சனை செய்துள்ளார்.  (எந்த விதமான அரசு ஆணையோ நீதிமன்ற உத்தரவு இல்லாமல் ) அவர் தன்னிச்சையாக அறிவித்து பிரச்சினை செய்திருக்கிறார்
அதற்கு பின்பு பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் தகவல் தெரிவித்து  உள்ளூர் மக்களும், இடதுசாரி தோழர்கள் சில நபர்கள் சேர்ந்து ஒரு சிறு குழுவாக போராட்டம் செய்துள்ளார்கள் அவர்களை கைது செய்து மாலை விடுவித்து விட்டார்கள். 

காலங்காலமாக நடைப்பெறும் இந்த சடங்கை காவல்துறை திடீரென தடுத்து நிறுத்தியுள்ளது. இந்த பிரச்சினை குறித்து தர்ஹா நிர்வாகம் தமுமுக மாவட்ட நிர்வாகிகளை தொடர்புக்கொண்டு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து களத்திற்கு சென்று பார்வையிட்ட நிர்வாகிகள் தமுமுக மாநில நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்துவிட்டு வந்தனர். 

தர்ஹா பிரச்சினை குறித்து விவாதிக்க பள்ளிவாசல் நிர்வாகம் அனைத்து கட்சி கூட்டத்தை 26/12/2024 அன்று மாலை 7 மணிக்கு கூட்டினர். அந்த கூட்டத்தில் மமக மாநில அமைப்புச்செயலாளர் காதர்மெய்தீன் தலைமையில் தமுமுக மாவட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டு தர்ஹா பிரச்சினை குறித்து தமுமுக மாநிலத் தலைமையின் கவனத்திற்கு எடுத்து சென்றருப்பதாகவும், வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் தனி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படும் என்றும் உறுதியளித்தனர். மேலும் பள்ளிவாசல் நிர்வாகம் எடுக்கும் முயற்சிகளில் உறுதுணையாக இருப்போம் என்றும் பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் தெரிவித்தனர். 

அதைத்தொடர்ந்து 31/12/2024 அன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுக்கும் நிகழ்விலும் தமுமுகவின் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். 

மதுரை திருப்பரங்குன்றம் சிக்கந்தர் மலை தர்கா பள்ளிவாசல் மலைக்குச் செல்லவும் நேர்த்திக்கடன் நிறைவேற்றவும் தடை விதிக்கும் காவல்துறை மற்றும் வருவாய் கோட்டாட்சியர் கண்டித்து 05/01/2025 அன்று நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் காதர் மைதீன் மதுரை தெற்கு மாவட்ட தலைவர் ஷேக் இப்ராகிம் மதுரை வடக்கு மாவட்ட தலைவர் சீனி அகமது மற்றும் தெற்கு வடக்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் கைதாயினர். காவல்துறைக்கும் போராடிய மக்களுக்கும் இடையே நடைப்பெற்ற தள்ளுமுள்ளுவில் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

கைது செய்து மண்டபத்தில் அடைக்கப்பட்ட மக்கள் அனைவரும் எங்கள் உரிமையை காக்க போராடிய எங்களை காவல்துறை தாக்கியது கடும் கண்டனத்திற்குரியது என்றும் தாக்கிய காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்வரை விடுதலையாவதில்லையென தெரிவித்தனர். காவல்துறை வேறு வழியின்றி விடுதலை செய்துவிட்டதாக அறிவித்துவிட்டு மண்டபத்தைவிட்டு வெளியேறிவிட்டனர். 

06/01/2025 இன்று மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது அவர்கள் மதுரை சிக்கந்தர் தர்ஹா  பிரச்சினை குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்க தனி கவன ஈர்ப்புத் தீர்மானத்தை சபாநாயகரிடம் முன்மொழிந்துள்ளார். 

06/05/2025 இன்று தமுமுகவின் மதுரை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது. மதுரை சிக்கந்தர் மலை தர்ஹா மற்றும் பள்ளிவாசல் வழிபாட்டு உரிமைக்காக போராட்டம் செய்த ஜமாத்தார்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், இஸ்லாமிய பெண்கள், குழந்தைகள் மீது கடும் தாக்குதல் நடத்தி அத்துமீறிய காவல்துறையை கண்டித்து மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தை 10/01/2025 அன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதுபோன்ற சமுதாய கொந்தளிப்பு பிரச்சினைகளை அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து போராடுவதே உரிமையை மீட்டு தரும் என்பதை நம் சமுதாயத்தை சேர்ந்த சிலர் புரிந்துக்கொள்வது அவசியம்.

“அடமானமாய் என்ன தருவீங்க"

வங்கி மேலாளரிம் ஒரு பெண் லோன் கேட்டு வந்தார். மேலாளர் லோன் அப்ளிகேஷனை எடுத்து கையில் வைத்துக் கொண்டு கேட்டார்.
“எதுக்காகப் பணம் வேணும்…?”
அந்த பெண் பதில் சொன்னார். “கொஞ்சம் மாடு வாங்கி பால் வியாபாரம் பண்ணலாம்னு இருக்கேன்…”
“அடமானமாய் என்ன தருவீங்க…?”
லேசாய் குழப்பத்துடன் கேட்டார். “அடமானம்னா என்ன..?”.
“நீங்க கேக்கற பணத்தோட மதிப்புக்கு சமமா ஏதாவது சொத்து கொடுத்தா தான் பேங்க் பணம் கொடுக்கும்.
அதைத்தான் அடமானம்னு சொல்லுவோம்…”
அந்த பெண் சொன்னார்.
“கொஞ்சம் நிலம் இருக்கு…
ரெண்டு குதிரை இருக்கு.. எது வேணுமோ அதை நீங்க எடுத்துக்கலாம்…”.
மேலாளர் இன்னும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு, நிலத்தை அடமானமாக வைத்துக் கொண்டு அவருக்குப் பணத்தை லோனாகத் தர ஏற்பாடு செய்தார். சில மாதங்கள் கழிந்தது. அந்த பெண் மீண்டும் பேங்கிற்கு வந்தார். தன்னுடைய கணக்குப் புத்தகங்களை எடுக்கச் சொன்னார். பைசா பாக்கியில்லாமல் கடன், வட்டி எல்லாவற்றையும் கணக்குப் போட்டு செட்டில் செய்தார். மேலாளர் ஆச்சர்யத்துடன் கேட்டார்.
“கடன் எல்லாவற்றையும் கட்டியாகிவிட்டது. லாபம் எதுவும் இல்லையா…?”
அந்த பெண் உற்சாகமாய்ப் பதில் சொன்னார். “லாபம் இல்லாமலா…? அது கிடைச்சது நிறைய…”.
மேலாளர் ஆர்வத்துடன் கேட்டார். “அதை எல்லாம் என்ன செய்தீர்கள்..?”.
“என்ன செய்யறது…
பொட்டில போட்டு வச்சிருக்கேன்…”.
மேலாளர் யோசித்தார். இந்த மாச டார்கெட்க்கு சரியான ஆளாக இந்த பெண் கிடைச்சுட்டாள் …’ என்று நினைத்தபடியே,
”ஏன் நீங்க பணத்தை எங்க பேங்க்ல டெபாசிட் பண்ணலாமே…?” என்றார்.
அந்த பெண் கேட்டார். “டெபாசிட்னா என்ன…?”.
மேலாளர் விளக்கமாய்ப் பதில் சொன்னார். “நீங்க உங்க பேர்ல ஒரு கணக்கை ஆரம்பிச்சு… அதில உங்க பணத்தை போட்டு வச்சா… உங்க சார்பா பேங்க் உங்க பணத்தப் பார்த்துக்கும். உங்களுக்கு எப்ப எப்ப பணம் தேவையோ அப்ப அப்ப நீங்க பணத்தை எடுத்துக்கலாம்….”.
கேட்டுக் கொண்டிருந்த அந்த பெண் சற்றே சேரில் சாய்ந்து உட்கார்ந்தபடி கேட்டார். “அடமானமாய் என்ன தருவீங்க"

32 ஆயிரம் பணியிடங்களுடன்... நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய வேலைவாய்ப்பு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

32 ஆயிரம் பணியிடங்களுடன்... நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்திய ரயில்வே...!*



 வயது வரம்பு: 18-36 வயதுக்குள் (01-07-2025 தேதியின்படி 36 வயதுக்கு மிகாமல் இருப்பவர்களுக்கு)

 விண்ணப்பம் தொடங்கும் தேதி: 23-01-2025

 விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22-02-2025.

 அடிப்படை ஊதியம் + DA + TA சுமார் 40000 ஆக இருக்கலாம்.

 பத்தாம் வகுப்பு தேர்ச்சி என்பது குறைந்தபட்ச தகுதி.

Sunday, 5 January 2025

19 லட்சம் உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு:

19 லட்சம் உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு:

 சிறப்பு அலுவலர்கள் நியமிக்க திட்டம். 06.01.2025

 'தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கப்படும் என, அறிவிக்கப்பட்ட கிராம ஊராட்சிகளுக்கும், சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்படுவர்' என, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அ.தி.மு.க., ஆட்சியில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து, 27 மாவட்டங்களில் உள்ள 1.19 லட்சம் கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு, 2019ல் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.

ஆட்சி மாற்றத்திற்குப் பின், மற்ற மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு, 2021ல் தேர்தல் நடத்தப்பட்டது.

இந்நிலையில், 2019ல் நடத்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.

 மேலும், 2021ல் நடத்தப்பட்ட மாவட்டங்களுக்கு, 2026 செப்., மாதம் முடிவடைகிறது.

இந்நிலையில், நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள வளர்ச்சியடைந்த கிராம ஊராட்சிகளை, நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

அதனால், மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்த ஊரக உள்ளாட்சிகளுக்கு, சிறப்பு அலுவலர்கள் நியமிப்பதற்கான தீர்மானம், சட்டசபை கூட்டத்தொடரில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.

அதில், நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட கிராம ஊராட்சிகளுக்கும் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இதுகுறித்து, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மக்கள் பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிவடைய உள்ள, கிராம ஊராட்சிகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்படுவதற்கான தீர்மானம் சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது.

அப்போது, 16 மாநகராட்சிகளுடன் இணைக்கப்பட உள்ள 149 ஊராட்சிகளுக்கும், 41 நகராட்சிகளுடன் இணைக்கப்பட உள்ள 147 ஊராட்சிகளுக்கும் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்படுவர்.

அதேபோல, மற்ற நகராட்சிகள், பேரூராட்சிகளில் இணைக்கப்பட உள்ள கிராம ஊராட்சிகளுக்கும் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்படுவர்.

 இவர்கள், அந்த கிராமப் பகுதிகள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படும் வரை, சிறப்பு அலுவலர்களாக பணியாற்றுவர்.

Monday, 23 December 2024

தேசிய மனித உரிமை ஆணையத்திற்குத் தலைவராக சந்திரசூட்?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

தேசிய மனித உரிமை ஆணையத்திற்குத் தலைவராக சந்திரசூட்? 

ஆளும் பாஜக கூட்டணியில் எந்த ஒரு நபரும் ஊழல் வழக்குகளில் சிக்குண்டு எதிர்க்கட்சியினரை போல பழிவாங்கப்படாமல் இருந்ததைக் கண்டுகொள்ளாமல் இருந்தது உச்ச நீதிமன்றத்தின் சாபக்கேடான செயல்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிகழ்ந்த போது, அந்த அமர்வில் இடம் பெற்றிருந்தவர் தான் சாட்…சாத்… ‘நம்ம’ உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சந்திர சூட்! அந்த அமர்வில் பல நீதிபதிகள் இடம் பெற்றிருந்தாலும் தீர்ப்புரை எழுதியவர் சந்திர சூட் தான்

என்பதனை பின்னர் அவரது வாக்குமூலம் வழியாகக் கூட
அறிய நேர்ந்தது.

பாபர் மசூதியை இடித்த சங்பரிவார இந்துத்துவ மதவெறி கூட்டம், பாபர்மசூதி இருந்த இடத்தில்தான் ராமன் பிறந்தான் என்பதற்கோ, அதை உரிமை கொண்டாடுவதற்கோ ஒரு துரும்பு அளவு கூட ஆதாரத்தை எடுத்துப் போட முடியவில்லை.

இதன் காரணமாக கீழமை நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை பாபர் மசூதி இடிக்கப்பட்டது தவறு என ஏற்கப் பட்டுவிட்டது. அதற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பாபர் மசூதியில் கள்ளத்தனமாக குழந்தை ராமன்
சிலை நிறுவப்பட்டதும் அம்பலமாகிப் போனது.

‘காவி’-க் கூட்டத்தில் கரைந்த சந்திர சூட்!
இப்படிப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பில் இருந்து ‘திருவாளர்’ சந்திர சூட் அக்டோபர் மாதத்தில் ஓய்வு பெறுவதற்கு சில காலத்திற்கு முன்பு இப்படி ஒரு கருத்தினை வெளியிட்டு இருந்தார்:

“பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு எழுதுகின்ற பொழுது கடவுள் (ராமன்) முன் அமர்ந்து பிரார்த்தனை மேற்கொண்டேன்; பாபர் மசூதி – ராமர் கோவில் வழக்கில் எப்படிப்பட்டத்
தீர்ப்பினை வழங்குவது என்பதற்கு வழிகாட்டுதல் கோரினேன்; கடவுளுடைய வழிகாட்டுதலின் அடிப்படையில் தான் (சங்கி கூட்டத்தால் இடித்துத் தரைமட்ட மாக்கப்பட்ட 500 ஆண்டுகால வரலாற்றுக்குச் சொந்தமான) பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு தீர்ப்புரை வழங்குவதற்கான அருளைப் பெற்றேன்; அதன் அடிப்படையிலேயே ராமர் கோவில் கட்டுவதற்கான அனுமதியை வழங்கி தீர்ப்புரை எழுதினேன்…’
என்ற பாணியில் எள்ளின் முனையளவேனும் வெட்கமின்றி சமூகத்திலே தன்னுடைய கருத்தினை அப்பட்டமாக வெளிப்படுத்தி, தான் ஒரு சங்கிதான் என்பதை நிர்வாணமாகக் காண்பித்துக் கொண்டார் இந்த சந்திர சூட்!

எந்த ஒரு வழக்கிலும் அதனை விசாரணை மேற்கொள்ளும் தனி நீதிபதியோ, அல்லது இருவர், மூவர் அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான நீதிபதிகளடங்கிய அமர்வோ இந்திய அரசியல் சட்டம், தண்டனைச் சட்டம், சிவில், கிரிமினல் உள்ளிட்ட ஏனைய வழக்குகள் தொடர்பான சட்ட பிரிவுகள் இன்ன பிற அனைத்தின் அடிப்படையிலும் இருதரப்பு வழக்கறிஞர்களின் விவாதங்கள், எண்ணற்ற சாட்சியங்கள், கைப்பற்றப்பட்ட பல்வேறு விதமான ஆதாரங்கள், பொருட்கள், ஆவணங்கள்… இதுபோன்ற பல்வேறு அம்சங்களை உட்கிரகித்து, சரி தவறுகளை துலாக் கோல் போட்டு தீர விசாரித்தே தீர்ப்புரை வழங்க வேண்டும் என்பது உலகம் அறிந்த ஒரு நீதி பரிபாலன முறை என்பது அனைவரும் அறிந்த உண்மை! ஆனால் அதற்கு மாறாக ஒரு தலைமை நீதிபதி, இந்த மரபுகளை எல்லாம் கடாசி எறிந்து விட்டு ‘கடவுளிடம் வேண்டினேன் கடவுள் இட்ட உத்தரவின் படி தீர்ப்புரை வழங்கினேன்’ என்று பிதற்றுவாரேயானால்
இவர் ஒரு வழக்கறிஞர் பதவிக்கு கூட தகுதி பெற்றவர் தானா? என்ற கேள்வி அனைவருக்குள்ளும் எழும்புகிறது!

கிராமப் பஞ்சாயத்தை விட மோசமான தீர்ப்புகள்!
சிற்சில ஆதிக்கத் தன்மைகள் இருந்திட்டாலும் கூட, கிராமப் புறங்களில் நடைபெறும் பல்வேறு தகராறுகளில் பஞ்சாயத்துக்கள் நடைபெறும் நடைமுறைகளை இன்றும் கூட கண்டு வருகிறோம். இப்படிப்பட்டக் கிராமப் பஞ்சாயத்து விசாரணைகளில் படிப்பறிவு மிகக் குறைந்த பாமர மக்களின் பிரதிநிதிகள் கூட இருதரப்பு பிரச்சனைகளையும் தீர்க்கமாக விசாரித்தறிந்து,
எந்தப் பக்கம் நியாயம் இருக்கிறது? எந்த பக்கம் தவறு இருக்கிறது? என்பதை உணர்ந்து தீர்ப்பு வழங்கக்கூடிய அநேக உதாரணங்கள் நம் கண் முன் நிரம்பி நிற்கின்றன. ஆனால் சந்திர சூட்டோ இவ்வளவு ‘பெரிய பட்டம் பதவிகளை’ மேலே போர்த்திக் கொண்டு, கிராமப்புறத்து தீர்ப்புகளை விட இழிவான தீர்ப்பை அயோத்தி பாபர் மசூதி-ராமர் கோவில் வழக்கில் வழங்குவதற்கு அவர் எடுத்துக்
கொண்ட வழிமுறை, நீதித்துறைக்கு
இருக்கக்கூடிய குறைந்தபட்ச தகுதிக்கும்கூட மாபெரும் களங்கத்தை ஏற்படுத்தி விட்டுச் சென்று விட்டார்! “வாழ்க வளமுடன்” சந்திர சூட்!

விநாயகர் சதுர்த்தியில்
மோடியும் – சந்திர சூட்டும்!
கடந்த விநாயகர் சதுர்த்தி நாளன்று சந்திர சூட் இல்லத்தில் நடைபெற்ற ‘பூஜை புனஸ்கார’ நிகழ்வில் மோடி கலந்து கொண்டார். அதுமட்டுமின்றி ‘நான் இறை நம்பிக்கை உடையவன்; மத நம்பிக்கை உடையவன்; அந்த அடிப்படையில் எனது இல்லத்தில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி நிகழ்வில் பிரதமர் பங்கேற்றது ஒன்றும் தவறில்லை…’ –
என்பதாக துளியும் வெட்கமின்றி கருத்துத் தெரிவிக்கிறார்.

இப்படி ஒரு மதச் சார்பு, ஒரு கடவுள் சார்பு உள்ள ஒரு மனிதர் பல்வேறு மதங்கள், பல்வேறு கடவுள்கள் ‘உலா வரும்’ இந்நாட்டில், அவை தொடர்பான வழக்குகள் வருகின்ற பொழுது இவரால் எப்படி நடுநிலை நாயகராக இருந்து செயல்பட்டிருக்க முடியும்? எப்படிப்பட்ட தீர்ப்பினை வழங்கி இருக்க முடியும்? என்பதனை நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியும்!

இது தொடர்பாக வடநாட்டில் இருந்து வெளி வரக்கூடிய கேரவன் (THE CARAVAN) பத்திரிகை கூட இவருடைய நீதித்துறை சார்ந்த ஒட்டுமொத்த பணிக்காலத்தில் இவரது நடவடிக்கைகள், தீர்ப்புகள் உள்ளடக்கிய அனைத்து வண்டவாளங்களையும் பிய்த்தெறிந்துப்
பட்டியலிட்டு அவரது மானத்தை கப்பல் ஏற்றி இருந்தது!

ED, IT, CBI, ECI வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாடு!
பாசிச பாஜகவின் மோடி அரசு எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் ஒரே நோக்கத்தோடு எண்ணற்றோர் மீது – தனது கைத்தடிகளாக உருவாக்கிக் கொண்ட ED, IT, CBI -இவற்றை ஏவி விட்டு – ஊழல் குற்றம்
சுமத்தி பலர் கைது செய்யப்பட்டதும், வருடக்கணக்கில் பிணை மறுத்து சிறைகளில் பூட்டி வதைத்ததும், அதில் மாநில முதல்வர்களாக இருந்த அரவிந்த் கேஜ்ரிவால், ஹேமந்த் சோரன் மட்டுமின்றி செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் அண்ணாமலை போன்றோரின் தூண்டுதலால் அடைபட்டுக் கிடந்ததும் எண்ணற்ற வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படாமல் இருந்ததை உச்ச நீதிமன்றம் கண்டுகொள்ளாமல் இருந்தது நீதி பரிபாலன முறைக்கு மிகுந்த இழிவான செயலை உருவாக்கிக் கொடுத்தது. அதிலும் சந்திர சூட் காவி பாசிசக் கூட்டத்திற்கு இயைந்து செயலாற்றிய
பங்கு மிகுதியானது.

அதே நேரத்தில் ஆளும் பாஜக கூட்டணியில் எந்த ஒரு நபரும் ஊழல் வழக்குகளில் சிக்குண்டு எதிர்க்கட்சியினரை போல பழிவாங்கப்படாமல் இருந்ததைக் கண்டுகொள்ளாமல் இருந்தது உச்ச நீதிமன்றத்தின் சாபக்கேடான செயல். அது மட்டுமல்ல; எதிர்க்கட்சிகளில் பலர் அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறையினரால் மாட்டிக் கொண்ட பொழுது, அவர்கள் பாஜகவில் தஞ்சம் புகுந்து தங்களை காப்பாற்றிக் கொண்ட பொழுது அந்த வழக்குகள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டதை உச்ச நீதிமன்றம் கண்டு கொள்ளவே இல்லை.

அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் அண்மையில் மகராஷ்டிராவில் தேர்வு செய்யப்பட்டு இருக்கக்கூடிய பாஜக கூட்டணி அரசின் துணை முதல்வர். இவர் முடக்கப்பட்ட தனது வங்கிக் கணக்குகள் அனைத்தையும் விடுவித்து ஆணை பெற்றுக் கொண்டார். ஆக ஊழல்வாதிகள், கொலையாளிகள், பயங்கரவாதிகள், கலவர வாதிகள் யாராக இருந்தாலும் பாஜகவில் தஞ்சம் புகுந்து விட்டால் அவர்களது வாஷிங் மெஷின் குற்றவாளிகளை தூய்மைப்படுத்தி விடுகின்றது.
அதற்கு உச்ச நீதிமன்றமும் இன்ன பிற அரசுத் துறை நிறுவனங்களும் முழுமையாக ஒத்துழைத்தன; ஒத்துழைத்து வருகின்றன!

சமூக செயற்பாட்டாளர்கள் – முற்போக்காளர்களுக்கு சிறை!
சமூகக் கொடுமைகளின்பாற் சீற்றம் கொண்ட சமூக செயற்பாட்டாளர்கள், முற்போக்காளர்கள், பகுத்தறிவாளர்கள், இடதுசாரிகள், புரட்சியாளர்கள் அனைவருக்கும் ‘அர்பன் நக்சல்ஸ்’ என்ற முத்திரை குத்தி பிணையே வழங்காமல் வருடக்கணக்கில் சிறையில் பூட்டி சித்திரைவதை செய்வதற்கு மூல காரணமாக இருந்தது இந்த இந்துத்துவ பாசிச பார்ப்பன ஆர் எஸ் எஸ் சங்கி கூட்டம்! நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல் புர்க்கி, கௌரி லங்கேஷ் முதலானோரை
சுட்டுப் பொசுக்கியது
இந்தக் காவி(லி)க் கூட்டம்! இறுதியில் முற்போக்குவாதியும் மாற்றுத்திறனாளியுமான பேராசிரியர் சாய்பாபாவை, அவர் கடுமையான அளவிற்கு நோய்வாய்ப் பட்டிருப்பதை சுட்டிக் காண்பித்து பலமுறை பிணை கேட்டும்
பிணை தர மறுத்து காவிக் கூட்டத்திடம் ‘நற்பெயரை’ ஈட்டிக் கொண்டது நீதித்துறை. இறுதியில் உச்ச நீதிமன்றம் ‘ஏதோ இரக்கப்பட்டு’ சாகும் தருவாயில் அவருக்குப் பிணை கொடுத்தது.

பிணையில் வந்த அவருக்கு
சிறந்த மருத்துவம் அளித்தும் பலனின்றி குறுகிய காலத்திலேயே மரணத்தை அவர் தழுவி கொள்ள வேண்டிய கொடுஞ்செயல் அண்மையில் நடந்தேறியது.
ஆக, நீதிபரிபாலனம் செய்யும் முறையானது, முன் எப்போதையும் விட, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சந்திர சூட் பதவி வகித்த காலத்தில் அப்பட்டமான மனித விரோத தீர்ப்புகளும், சங்கிகளுக்கு மட்டுமே விசுவாசமான நடவடிக்கைகளையும் உருவாக்கிக் கொண்டிருந்தது. இதுதான் சந்திர சூட்டின் நீதித்துறை லட்சணம்!

சந்திர சூட் தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவரா?
சந்திர சூட்டின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து நாம் ஏற்கனவே அம்பலப்படுத்திய பொழுது, இவர் ஓய்வு பெற்ற பின் பாசிச மோடி அரசு உறுதியாக சிறப்பான ‘அன்பளிப்பு பரிசு’ வழங்கும் என்று ஆணித்தரமாக
கருத்துரைத்திருந்தோம்.

அதன்படி கடந்த 2024 டிசம்பர் 18-ஆம் நாள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவரை நியமிப்பது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட கமிட்டி கூட்டம் நடந்திருக்கிறது. இதில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர் இந்த நிலையில் தேசிய மனித உரிமைகள் ஆணைய (NHRC)
தலைவர் பதவிக்கு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் பெயர் பரிசீலனை செய்யப்பட மோடி முன்மொழிவு செய்துள்ளார்.

இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. ஆனால் சந்திர சூட்டோ “இந்தத் தகவல் உண்மை அல்ல. நான் தற்போது ஓய்வு வாழ்க்கையை சிறப்பாக அனுபவித்து வருகிறேன்” என்று மடைமாற்றம் செய்து கருத்து வெளியிட்டிருந்தாலும், நடைபெறப் போகும் ஆபத்தினை இந்திய நாட்டு மக்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

நீதித்துறையில் அவரது பல்வேறு நடவடிக்கைகள் இந்துத்துவ மதவெறி சார்பு நிலையில் இருந்தது என்பது மட்டுமன்றி பல்வேறு வழக்குகளில் அவர் நேர்மையான தீர்ப்பு வழங்குவதற்கு முன் வரவில்லை.

உதாரணமாக நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்களில் நடந்த மோசடிகள், தில்லுமுல்லுகள் இவற்றைப் பற்றி எல்லாம் நீதித்துறையே தாமாக முன்வந்து வழக்கு எடுத்து நடத்த வேண்டிய சூழலில் பிறரால் வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், எதிராகவே தீர்ப்பு வழங்கியுள்ளார்; அல்லது கிடப்பில் போட்டு உள்ளார். மொத்தத்தில் பாசிச மோடி அரசுக்கு அனைத்து வகைகளிலும் உதவிகரமாக இருந்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் அண்ணல் அம்பேத்கரை இழிவு படுத்திப் பேசிய அமித்ஷா அன்று குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த பொழுது மேற்கொண்ட பல்வேறு என்கவுண்டர்களுக்கும், கொலைகளுக்கும் மூலகாரணமாக இருந்ததோடு, பல்வேறு மதக்கலவரங்களுக்கும் காரணமாக இருந்த அவர் மீது எண்ணற்ற எஃப் ஐ ஆர் பதியப்பட்டிருந்தும் கூட அனைத்திலிருந்தும் விடுபட்டு, இன்றைக்கு ஒன்றிய உள்துறை அமைச்சராக அமர்வதற்கு உதவிகரமாக இருந்தவர்களில் சந்திர சூட்டும் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்.

அப்படிப்பட்டவரை “தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக” நியமனம் செய்தால் இந்திய நாட்டு மக்களின் மனித உரிமைகள் அனைத்தும் காலில் போட்டு நசுக்கி எறியப்படும் என்பது மட்டும் திண்ணம்.

எனவே, மதவெறி கொண்ட – சங்கியாகிப்போன முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட்டை தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட விடாமல் தடுத்து நிறுத்திட இந்திய நாட்டு மக்கள் களம் இறங்கி சமர் புரிய வேண்டும்!

–எழில்மாறன்.

Friday, 20 December 2024

20 Key Contributions of Dr. B.R. Ambedkar to Indian Governance and Administration l இந்திய ஆட்சி மற்றும் நிர்வாகத்திற்கு டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 20 முக்கிய பங்களிப்புகள்:

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

20 Key Contributions of Dr. B.R. Ambedkar to Indian Governance and Administration:

  1. Architect of the Indian Constitution:

    • As the Chairman of the Drafting Committee, Dr. Ambedkar played a pivotal role in framing the Indian Constitution, ensuring justice, equality, and liberty for all citizens.
  2. Abolition of Untouchability:

    • He worked extensively to eradicate untouchability and introduced legal safeguards against caste discrimination in the Constitution (Article 17).
  3. Right to Equality:

    • Advocated for Article 14, guaranteeing equality before the law and equal protection of the law for every citizen.
  4. Reservations for SC/ST Communities:

    • Introduced reservations in education, employment, and legislature to uplift marginalized communities.
  5. Labor Rights and Welfare:

    • As the Labour Minister in the Viceroy's Executive Council (1942–46), he introduced reforms such as paid maternity leave, minimum wage laws, and protection against workplace exploitation.
  6. Formation of the Reserve Bank of India (RBI):

    • His doctoral thesis on "The Problem of the Rupee" influenced the establishment of the RBI in 1935.
  7. Advocate for Social Justice:

    • Championed the cause of social justice and fought against caste-based discrimination throughout his life.
  8. Water Resources Management:

    • Played a key role in planning water resource policies, including the Damodar Valley Project, Hirakud Dam Project, and Sone River Project.
  9. Hindu Code Bill:

    • Worked to reform Hindu personal laws to ensure gender equality in matters of inheritance, marriage, and adoption.
  10. Emphasis on Education:

  • Advocated for education as the foundation for social and economic empowerment, encouraging marginalized communities to prioritize learning.
  1. National Employment Policy:
  • Advocated for fair employment opportunities and prevention of labor exploitation.
  1. Central Waterways and Irrigation Commission:
  • Helped establish guidelines for the Central Waterways and Irrigation Commission to regulate river management.
  1. Five-Year Plans Inspiration:
  • Provided insights that influenced India’s economic planning and policies, especially regarding equitable distribution of resources.
  1. Focus on Industrialization:
  • Advocated industrialization to eliminate caste-based occupations and reduce economic inequality.
  1. Legal Framework for Civil Rights:
  • Drafted laws to ensure civil liberties and protection from exploitation.
  1. Promotion of Democratic Values:
  • Ensured the incorporation of democratic principles, emphasizing parliamentary democracy and governance accountability.
  1. Women’s Rights Advocacy:
  • Stressed gender equality and women's empowerment in governance and society.
  1. Formation of Finance Commission:
  • Laid the groundwork for financial governance and resource allocation between the center and states.
  1. Opposition to Article 370:
  • Voiced concerns about special provisions that could create division and inequality among Indian states.
  1. Vision for Social and Economic Equality:
  • Dr. Ambedkar emphasized eliminating caste-based and socio-economic inequalities through policies and social reforms.

Dr. B.R. Ambedkar's contributions remain a cornerstone of India’s social, economic, and political framework, creating an inclusive and just society.


இந்திய ஆட்சி மற்றும் நிர்வாகத்திற்கு டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 20 முக்கிய பங்களிப்புகள்:


இந்திய அரசியலமைப்பின் சிற்பி:


வரைவுக் குழுவின் தலைவராக, அனைத்து குடிமக்களுக்கும் நீதி, சமத்துவம் மற்றும் சுதந்திரத்தை உறுதி செய்யும் இந்திய அரசியலமைப்பை உருவாக்குவதில் டாக்டர் அம்பேத்கர் முக்கிய பங்கு வகித்தார்.


தீண்டாமையை ஒழித்தல்:


தீண்டாமையை ஒழிக்க அவர் விரிவாகப் பணியாற்றினார் மற்றும் அரசியலமைப்பில் சாதி பாகுபாட்டிற்கு எதிரான சட்டப் பாதுகாப்புகளை அறிமுகப்படுத்தினார் (பிரிவு 17).


சமத்துவ உரிமை:


சட்டத்தின் முன் சமத்துவத்தையும் ஒவ்வொரு குடிமகனுக்கும் சட்டத்தின் சமமான பாதுகாப்பையும் உறுதி செய்யும் பிரிவு 14 க்கு ஆதரவாக வாதிட்டார்.


எஸ்சி/எஸ்டி சமூகங்களுக்கான இடஒதுக்கீடு:


ஒதுக்கப்பட்ட சமூகங்களை மேம்படுத்துவதற்காக கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சட்டமன்றத்தில் இடஒதுக்கீடுகளை அறிமுகப்படுத்தினார்.


தொழிலாளர் உரிமைகள் மற்றும் நலன்:


வைஸ்ராயின் நிர்வாகக் குழுவில் (1942–46) தொழிலாளர் அமைச்சராக இருந்தபோது, ​​ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, குறைந்தபட்ச ஊதியச் சட்டங்கள் மற்றும் பணியிட சுரண்டலுக்கு எதிரான பாதுகாப்பு போன்ற சீர்திருத்தங்களை அவர் அறிமுகப்படுத்தினார்.

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) உருவாக்கம்:


"ரூபாயின் பிரச்சனை" என்ற தலைப்பில் அவர் எழுதிய முனைவர் பட்ட ஆய்வறிக்கை 1935 இல் ரிசர்வ் வங்கியின் ஸ்தாபனத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது.


சமூக நீதிக்கான வழக்கறிஞர்:


சமூக நீதிக்கான காரணத்தை ஆதரித்தவர் மற்றும் தனது வாழ்நாள் முழுவதும் சாதி அடிப்படையிலான பாகுபாட்டிற்கு எதிராகப் போராடினார்.


நீர்வள மேலாண்மை:


தாமோதர் பள்ளத்தாக்கு திட்டம், ஹிராகுட் அணை திட்டம் மற்றும் சோன் நதி திட்டம் உள்ளிட்ட நீர்வளக் கொள்கைகளைத் திட்டமிடுவதில் முக்கிய பங்கு வகித்தார்.


இந்து சட்ட மசோதா:


பரம்பரை, திருமணம் மற்றும் தத்தெடுப்பு விஷயங்களில் பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்காக இந்து தனிநபர் சட்டங்களை சீர்திருத்த பணியாற்றினார்.


கல்விக்கு முக்கியத்துவம்:


சமூக மற்றும் பொருளாதார அதிகாரமளிப்புக்கான அடித்தளமாக கல்வியை ஆதரித்தார், ஓரங்கட்டப்பட்ட சமூகங்கள் கற்றலுக்கு முன்னுரிமை அளிக்க ஊக்குவித்தார்.


தேசிய வேலைவாய்ப்புக் கொள்கை:


நியாயமான வேலைவாய்ப்பு வாய்ப்புகள் மற்றும் தொழிலாளர் சுரண்டலைத் தடுப்பதற்காக வாதிட்டார்.


மத்திய நீர்வழிகள் மற்றும் நீர்ப்பாசன ஆணையம்:

நதி மேலாண்மையை ஒழுங்குபடுத்துவதற்கான மத்திய நீர்வழிகள் மற்றும் நீர்ப்பாசன ஆணையத்திற்கான வழிகாட்டுதல்களை நிறுவ உதவியது.

ஐந்தாண்டுத் திட்டங்கள் உத்வேகம்:

இந்தியாவின் பொருளாதார திட்டமிடல் மற்றும் கொள்கைகளில், குறிப்பாக வளங்களின் சமமான விநியோகம் தொடர்பாக, தாக்கத்தை ஏற்படுத்திய நுண்ணறிவுகளை வழங்கியது.

தொழில்மயமாக்கலில் கவனம் செலுத்துதல்:

சாதி அடிப்படையிலான தொழில்களை அகற்றவும் பொருளாதார சமத்துவமின்மையைக் குறைக்கவும் தொழில்மயமாக்கலை ஆதரித்தது.

சிவில் உரிமைகளுக்கான சட்ட கட்டமைப்பு:

சிவில் சுதந்திரங்கள் மற்றும் சுரண்டலில் இருந்து பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வரைவு சட்டங்கள்.

ஜனநாயக மதிப்புகளை ஊக்குவித்தல்:

பாராளுமன்ற ஜனநாயகம் மற்றும் நிர்வாக பொறுப்புணர்வை வலியுறுத்தும் ஜனநாயகக் கொள்கைகளை இணைப்பதை உறுதி செய்தது.

பெண்கள் உரிமைகள் ஆதரவு:

ஆட்சி மற்றும் சமூகத்தில் பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் அதிகாரமளித்தலை வலியுறுத்தியது.

நிதி ஆணையத்தை உருவாக்குதல்:

மத்தியத்திற்கும் மாநிலங்களுக்கும் இடையில் நிதி நிர்வாகம் மற்றும் வள ஒதுக்கீட்டிற்கான அடித்தளத்தை அமைத்தது.

பிரிவு 370 க்கு எதிர்ப்பு:

இந்திய மாநிலங்களுக்கிடையில் பிரிவினை மற்றும் சமத்துவமின்மையை உருவாக்கக்கூடிய சிறப்பு விதிகள் குறித்த கவலைகளை வெளிப்படுத்தினார்.

சமூக மற்றும் பொருளாதார சமத்துவத்திற்கான தொலைநோக்கு:

டாக்டர் அம்பேத்கரின் பங்களிப்புகள் இந்தியாவின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் கட்டமைப்பின் ஒரு மூலக்கல்லாக உள்ளன, இது ஒரு உள்ளடக்கிய மற்றும் நீதியான சமூகத்தை உருவாக்குகிறது

A.S.IBRAHIM.

Wednesday, 23 October 2024

இந்தியாவில் இணைய சேவை நிறுவனங்களின் அலுவலகமும் பணிகளும் குறித்து விரிவான ஆய்வு:

முதல்பாகம்: இந்தியாவில் இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள்

1. இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் - ஒரு அறிமுகம்

இந்தியாவில் இணைய சேவைகள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன, 1990களின் பிற்பகுதியில் தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் இணைய சேவையை வழங்க தொடங்கின. இப்போது ஜியோ, ஏர்டெல், வோடாஃபோன்-ஐடியா போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்த சேவையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

2. நிறுவன அலுவலகங்களில் செய்யப்படும் பணிகள்

இந்தியாவில் இணைய சேவை நிறுவனங்களின் அலுவலகங்களில் பொதுவாக நான்கு முக்கிய பிரிவுகள் செயல்படுகின்றன:

வழங்கல் (Provisioning): புதிதாக இணைய சேவையை வழங்குதல் மற்றும் அமைப்புகளை செய்வது.

சேவை பராமரிப்பு (Maintenance): வாடிக்கையாளர் சேவையை தொடர் பராமரிப்பு செய்து, சேவையில் உள்ள பிரச்சினைகளை தீர்க்கும் குழு.

தொழில்நுட்ப ஆதரவு (Technical Support): தொழில்நுட்ப சிக்கல்களை தீர்க்கும் குழு.

பதிவுகள் மற்றும் நிர்வாகம் (Records & Administration): வாடிக்கையாளர் பதிவுகளை பராமரித்தல் மற்றும் நிறுவனத்தின் நிர்வாகச் செயல்பாடுகளை மேற்கொள்வது.


3. பொறுப்புகள் மற்றும் தகுதிகள்

அலுவலகப் பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட பதவிகள் உள்ளன:

வழங்கல் பொறியாளர்கள் (Provisioning Engineers): தொழில்நுட்பக் கொள்கைகள் மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு சேவையை வழங்குதல்.

தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள்: அனைத்து தொழில்நுட்ப அணிகள் மற்றும் பிரிவுகளின் செயல்பாடுகளை மேற்பார்வை செய்யும் பொறுப்புடன் இருப்பவர்கள்.

வாடிக்கையாளர் சேவை முகவர்கள்: வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து, தொழில்நுட்ப உதவிகளை வழங்குவார்கள்.


4. நிர்வாகத் திறன்கள்

நிறுவன அலுவலகங்களின் முக்கியப் பணிகள் இணைய சேவை பற்றிய அறிக்கைகளை சமர்ப்பித்தல், வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து சேவைகளை மேம்படுத்துதல் மற்றும் வாடிக்கையாளர் சந்திப்புகளைச் சரியாக கையாள்வது.

இரண்டாம் பகுதி: இந்தியாவில் ஒளிபரப்பு சேவை நிறுவனங்களின் அலுவலக அமைப்பும் பணிகளும்

1. ஒளிபரப்புக் கட்டமைப்பு - ஒரு விளக்கம

இந்தியாவில் ஒளிபரப்பு சேவைகள் முதன்மை ஊடகத் துறையாக மாறியிருக்கின்றன. பிரசார் பாரதி (தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோ) போன்ற நிறுவனங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.

2. ஒளிபரப்பு நிறுவன அலுவலக அமைப்பு

ஒளிபரப்பு சேவை நிறுவனங்களில் வேலை பங்கீடு மற்றும் அலுவலக அமைப்புகள் குறைந்தபட்சம் மூன்று பிரிவுகளாகவே பிரிக்கப்படுகின்றன:

ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு (Research & Production): புதிய நிகழ்ச்சிகளை வடிவமைத்தல் மற்றும் தயாரித்தல்.

ஒளிபரப்பு துறை (Broadcasting Department): நிகழ்ச்சிகளை நேரடி மற்றும் பதிவு செய்யப்பட்ட ஒளிபரப்புகளைச் செய்கின்றது.

தொழில்நுட்ப பராமரிப்பு (Technical Maintenance): தொழில்நுட்ப உதவிகள், உபகரணங்கள் பராமரிப்பு.


3. ஒளிபரப்பு நிறுவனங்களில் முக்கியப் பணியிடங்கள்

நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள்: ஒவ்வொரு நிகழ்ச்சியையும் தயாரித்து, ஒளிபரப்புக்கான நிபந்தனைகளை கையாளும் பொறுப்பில் இருப்பவர்கள்.

பிரச்சார பொறியாளர்கள்: ஒளிபரப்புத் தொழில்நுட்பத்தை நிர்வகிக்கிறார்கள். இவர்களுக்கு தொடர்புடைய பொறியியல் துறையில் தகுதிகள் இருக்க வேண்டும்.

தொழில்நுட்ப உதவியாளர்கள்: ஒளிபரப்புக்கான அனைத்து உபகரணங்களையும் பராமரிக்கின்றனர்.


4. வேலைக் குறைபாடுகள் மற்றும் பதவிகள்

ஒளிபரப்புத் துறையில் பணியிடங்களுக்கு கேமரா ஆபரேட்டர்கள், ஒளிபரப்பு பொறியாளர்கள், ஒலி மற்றும் ஒளி நிபுணர்கள் போன்ற பல்வேறு பணியாளர்கள் இணைக்கப்படுகிறார்கள்.

மூன்றாம் பகுதி: இணைய மற்றும் ஒளிபரப்பு நிறுவன அலுவலகங்களில் பணி நிர்வாகம்

1. இணைய சேவை நிறுவனங்கள்

நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை முன்னிறுத்தி, வணிக அளவீடுகளையும், சேவை தரத்தை முன்னிலைப்படுத்தி, விற்பனை, சந்தை ஆராய்ச்சி ஆகியவற்றை முன்னெடுக்கின்றன.

2. ஒளிபரப்பு சேவை நிறுவனங்கள்

ஒளிபரப்புத் துறையின்போது, துல்லியமான நேரம், தரமான ஒலி மற்றும் படத் தொகுப்பு ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.

###结论: இந்த கட்டுரையில், இந்தியாவில் இணைய மற்றும் ஒளிபரப்புத் துறையில் பணிபுரியும் நிறுவன அலுவலகங்களில் செய்யப்படும் செயல்பாடுகளையும், அதில் உள்ள பணியிடங்களையும், அவர்களின் பொறுப்புகளையும், வேலைகளின் முக்கியத்துவத்தையும் தெளிவாக விளக்கி இருக்கிறோம்.

Thursday, 17 October 2024

உலக பசி குறியீட்டில் தொடர்ந்து இந்தியா

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

உலக பசி குறியீட்டில் தொடர்ந்து இந்தியா பின்தங்கி இருப்பதற்கு ஒன்றிய அரசே பொறுப்பேற்க வேண்டும்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

2024 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பசி குறியீட்டில் இந்தியா மிகவும் பின்தங்கி இருப்பது வேதனை அளிக்கிறது. 

அயர்லாந்தின் கன்சர்ன் வேர்ல்டுவைட் மற்றும் ஜெர்மனியின் வெல்த் ஹங்கர் லைஃப் ஆகியவை இணைந்து, உலகம் முழுவதும் 127 நாடுகளில் ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் உலகளாவிய பசி குறியிடு (Global Hunger Index) அறிக்கையை வெளியிட்டுள்ளது.

127 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவிற்கு 105 ஆவது இடம் பிடித்துள்ளது.      

பசியின்மை குறியீடு, ஊட்டச்சத்துக் குறைபாடு, குழந்தைகளை வீணாக்குதல், குழந்தை வளர்ச்சி குன்றிய நிலை மற்றும் குழந்தை இறப்பு ஆகிய நான்கு கூறுகளின் அடிப்படையில் நாடுகளின் செயல்திறனை அளவிடுகிறது. இந்தக் குறியீட்டில் இந்தியா 27.3 மதிப்பெண்களுடன் 'தீவிரமான' பசி பிரச்சினைகள் கொண்ட 42 நாடுகளுள் ஒன்றாக ‘கவலைக்குரிய’ பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. 

உலக அளவில் 36 நாடுகள் மட்டுமே ‘கவலை’ பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அதில் இந்தியாவும் ஒன்றாக இருப்பதை ஓர் இந்தியனாக நமக்கு பெரும் வேதனை அளிக்கின்றது.

இந்த ஆண்டு உலகளாவிய அளவில் ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள மக்கள் அதிகம் வாழும் தரவரிசையில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளதும் கவலை அளிக்கின்றது.

இந்தக் குறியீட்டில், இந்தியா தனது அண்டை நாடுகளான மியான்மர், இலங்கை, நேபாளம், மற்றும் வங்கதேசத்தை விட பின்தங்கி உள்ளது நமக்கு மேலும் வேதனை அளிக்கின்றது.

இந்தியாவில் குழந்தைகளிடையே ஊட்டச்சத்துக் குறைபாடு கடுமையாக இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் குழந்தை வளர்ச்சி குன்றிய விகிதம் 35.5 சதவீதமாக உள்ளது. அதே சமயம் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம்2.9 சதவீதமாக உள்ளது. நாட்டில் ஊட்டச்சத்துக் குறைபாடு 13.7 சதவீதமாக உள்ளது. 

ஒன்றிய பாஜக அரசு வளர்ச்சி என்கிற பெயரில் விளிம்பு நிலை மக்களைக் கவனத்தில் கொள்ளவில்லை என்பதை இந்த ஆய்வறிக்கை மிகத் துல்லியமாகச் சுட்டிக் காட்டுகிறது. இந்த அவல நிலைக்கு ஒன்றிய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். 

மேல் தட்டு வர்க்கத்தை சேர்ந்த ஒரு சிலரை மட்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று நடுத்தட்டு மக்கள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் நலனை ஒன்றிய அரசு பாதுகாக்க மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தவறியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது .

இப்படிக்கு. 
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Tuesday, 24 September 2024

நபிகளின் நாள்: ஓா் அயலானின் பாா்வை! - பழ. கருப்பையா

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

தினமணி முகப்பு கட்டுரை

நபிகளின் நாள்: ஓா் அயலானின் பாா்வை!
வக்பு என்பது அற நிறுவனம் என்றும், முசுலீம்களின் தருமங்களை நிருவகிக்கும் நிறுவனம் என்றும் பொத்தாம் பொதுவாக நாம் நினைப்போம்!
 

Updated on: 
16 - 09-2024
பழ. கருப்பையா

வக்பு என்பது அற நிறுவனம் என்றும், முசுலீம்களின் தருமங்களை நிருவகிக்கும் நிறுவனம் என்றும் பொத்தாம் பொதுவாக நாம் நினைப்போம்!
அந்த அரபுச் சொல்லின் பொருள் ‘நிறுத்துவது; தடைசெய்வது; ஒரு நிலைக்குக் கொண்டுவருவது’ என்பதாகும்!
வசதியானவா்களுக்கிடையே இடைவிடாமல் கைக்குக் கை மாறும் தன்மையுடையது சொத்து! அஃது ஓரிடத்திலேயே நிலையாக நிற்கும் தன்மை உடையதன்று!
ஆனால் ஏழாம் நூற்றாண்டில் நபிகள் நாயகத்தின் காலத்திலேயே சொத்தின் ஒரு பகுதியையாவது கைக்குக் கை மாறுவதை நிறுத்தி, அதை ‘நிலைப்படுத்துவது’ குறித்த எண்ணம் இசுலாத்தில் ஏற்பட்டிருக்கிறது!
ஆகவே குா்ஆன் அந்தச் சொத்தை வக்பு செய்யுமாறு சொல்கிறது.
வக்பு செய்வதென்பது, இந்தப் பூமியைப் படைத்த அதன் உடைமையாளனான அல்லாவிடமே, அதன் சிறுபகுதியை ஒப்படைத்துவிடுவது!
அல்லாவிடம் கொடுத்துவிட்டால், அதைத் திரும்பப் பெற முடியாது! ஆகவே அந்தச் சொத்து கை மாறுவது தடுக்கப்பட்டு, நிலைப்படுத்தப்பட்டுவிடுகிறது. அதுவே வக்பு!
சொத்து கைமாறல் இன்றி ‘நிலைப்படுத்தப்படுவது’ என்பது யாருக்காக? பூமியையே படைத்தவனுக்கு, வெறும் ஒன்றே முக்காலே அரைக்கால் ஏக்கரை வக்பு செய்துவிடுவதால், அல்லாவுக்கு ஆகப் போவதென்ன?
அல்லா அதைத் தன் பரிவுக்குரிய மக்களுக்காகப் பெறுகிறான்! வாய் உலா்ந்து, வயிறு ஒட்டி, அடுத்த வேளை உணவைத் தவிர வேறு சிந்தனையே இல்லாத ஒரு கூட்டம் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதி இருக்கிறதே!
கணவனால் கைவிடப்பட்டு, வயதாகி மறு வாழ்க்கைக்கும் வழியற்றுத் திருப்பத்தூா் பேருந்து நிலைய வாசலில், முக்காட்டை இழுத்து விட்டுக் கொண்டு, அகத்திக் கீரை விற்றுக் கொண்டு, அரை வயிற்றுக் கஞ்சியோடு, தன் ஒரு மகளை எப்படிக் கரையேற்றப் போகிறோம் என்று கதி கலங்கி நிற்கிறாளே பாத்திமா, அவளுக்காக! அவளைப் போன்ற மூன்றில் ஒரு பகுதி மக்களுக்காக அல்லா தோற்றுவித்துக் கொண்டதுதான் இந்த வக்பு!
நாம் பொதுவாக அறிந்திருக்கிற ‘அறக்கட்டளை’ போன்ன்று வக்பு! பொதுவாக அறக்கட்டளைகளோடு, சில கடமைகள் இணைக்கப்பட்டிருக்கும்! அந்தக் கடமைகளோடு சோ்த்து, அந்தச் சொத்தின் உரிமையைக் கை மாற்றலாம். அவன் உயிரோடிருக்கும் வரை எந்தக் கட்டளையையும், உயிலையும் மாற்றிக் கொண்டே இருக்கலாம். வக்புவில் அதெல்லாம் நடக்காது! கொடுத்தால் கொடுத்ததுதான்!
மூன்றில் ஒரு பங்கை மட்டுமே அவன் யாருக்கும் கைமாற்ற முடியும். மீதியுள்ள இரண்டு பங்கு சொத்து, அவன் கால்வழியினா்க்குப் பங்கிடப்பட வேண்டும்.
ஈட்டுவது மட்டுமே இவன் பொறுப்பு! அதில் மூன்றில் இரண்டு மடங்கு இவன் கட்டுப்பாட்டுக்குள் இல்லை!
அவனுடைய உடைமையில் மூன்றில் இரண்டு மடங்கு அவன் கால்வழியினா்க்கிடையே இப்படித்தான் பங்கிடப்படும் என்பதையும் இசுலாம் விதிகள் தீா்மானிக்கின்றன.
பெருந்தன்மையான பெருஞ்செல்வன் ஒருவன் நபிகள் நாயகத்திடம் உரையாடுகிறான்!
அப்போது தனது முழுச் சொத்தையும் வக்பு செய்வது பற்றி அவரிடம் சொல்கிறான்!
அது நல்லதுதானே என்று நாம் நினைப்போம்! ஆனால் நபிகள் நாயகம் அதற்கு உடன்படவில்லை. ‘உன் கால்வழியினா் நீ வாழ்ந்த அதே பெருமையோடு, மேட்டிமையோடு வாழ வேண்டாமா? அவா்கள் உன் சந்ததியினா் அல்லரோ?’ என்று கேட்கிறாா்!
பிறகு அந்தச் செல்வந்தன் ‘சொத்தில் மூன்றில் இரண்டு பங்கை வக்பு செய்யவா?’ என்று கேட்கிறான்! நபிகள் நாயகம் அமைதி காக்கிறாா்!
‘ஒரு பங்கை?’ என்று அந்தச் செல்வந்தன் கேட்க, நபிகள் நாயகம் தலையசைக்க, அதிலிருந்து மூன்றில் ஒரு பங்கை வக்பு செய்யும் நிலை ஏற்படுகிறது!
ஒருவன் தானாக முயன்று ஈட்டிய பொருளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று இந்துச் சட்டம் சொல்கிறது! ஒரு நாய்க்குட்டிக்குக் கூட எழுதி வைக்கலாம்! அஃது அவன் முயன்று ஈட்டியது! ஆகவே அவனுடைய விருப்பமே முக்கியம்! இதை நபிகள் நாயகம் ஏற்கவில்லை! அது போல் இசுலாத்தில் செய்ய முடியாது.
தானே ஈட்டியிருந்தாலும் குடும்பத்தை நடுத்தெருவில் விட்டு விட்டு இவன் தருமம் செய்வதை நபிகள் நாயகம் உடன்படவில்லை. இரண்டு பங்கு கால்வழியினா்க்கு! ஒரு பங்கை மட்டுமே இவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்!
அதை வக்பு செய்வது மேலானது!
வக்பு செய்யப்பட்டுவிட்டால் அந்தச் சொத்து அல்லாவுக்குரியது! இனிமேல் அவனுக்காக அந்த வக்பை நிருவகிக்கப் போகும் முத்தவல்லிக்கும் அதை விற்க உரிமை இல்லை. எவனுக்கும் ‘பவா் ஆப் அட்டா்னியை’ அல்லா கொடுப்பதில்லை!
அல்லாவின் பேரிலேயே வைத்துக் கொண்டு, அல்லா பரிவு கொண்ட ஏழைகளுக்காக அதைப் பயன்படும்படிச் செய்வதே முத்தவல்லியின் வேலை!
தனி மனிதனுக்கு இறையச்சத்தை ஊட்டி, அவனை ஒழுங்குபடுத்த வந்ததே இசுலாம்! தீா்ப்பு நாளை அவன் அச்சமின்றி எதிா்கொள்வதற்கான வாழ்க்கை முறையைக் கற்பிக்கவே அல்லாவால் நபிகளின் வாயிலாக ‘வகி’ மூலம் இறக்கப்பட்டதுவே திருக்குா்ஆன்!
தனி மனிதனுக்குத்தான் தீா்ப்பு நாள் உண்டு, சமூகத்திற்கு மொத்தமாக இல்லை!
தீா்ப்பு நாளைச் சொல்லி, சமூக அக்கறை உடையவனாக ஒவ்வொரு இசுலாமியனையும் மாற்றுவதையே நபிகள் நாயகம் முதன்மையாகக் கருதுகிறாா்!
தீா்ப்பு நாளில் விசாரிக்கப்படும்போது, ஒருவன் ஐந்து வேளைகளும் தொழுததாகச் சொன்னாலும், ஐம்பெருங் கடமைகளிலிருந்து வழுவியதில்லை என்று சொன்னாலும், தீா்ப்பு நாளைக்கு அதிபதியான அல்லா கேட்பானாம்:
‘வசதியோடு வாழ்ந்தாயே! உன் பக்கத்தில் ஒட்டிய வயிறும், உலா்ந்த கண்களும், காய்ந்து உதடுகளுமாக வாழும் ஏழைகளை நீ நேரடியாகவே அறிந்திருந்தும், அவா்களிடம் பரிவு காட்டினாயா? அவா்களின் பசியிலும் துயரத்திலும் பங்கு கொண்டாயா?’ என்று அல்லா நிறுத்தி வைத்து விசாரிப்பானாம்!
‘இதற்கு என்ன விடை வைத்திருக்கிறாய்?’ என்று நபிகள் நாயகம் கேட்கிறாா்!
சொந்தச் சகோதரா்கள்
துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடீ! கிளியே!
செம்மை மறந்தாரடீ!”
இப்படி இங்கே பாராமுக வாழ்க்கைக்குக் கண்டனம் மட்டுமே உண்டு! அங்கே இசுலாத்தில் தீா்ப்பு நாளில் தண்டனையே உண்டு!
செய்தவற்றிற்காகத் தண்டிப்பதை நாம் அறிவோம்! செய்யத் தவறியவற்றிற்கும் தண்டனை உண்டு என்பதை நாம் கேட்டிருக்கிறோமா?
இசுலாத்தின் சிந்தனை தனிப் பெரும் சிந்தனை! எல்லாச் சமயங்களும் தனிமனித மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருக்கும்போது, நபிகளின் சமயம் அதோடு நிற்கவில்லை! மொத்த மக்களில் மூன்றில் ஒரு பகுதியினா் வறியவா்களாக இருப்பதை அதனால் ஒப்ப முடியவில்லை!
பெரும்பெரும் செல்வந்தா்கள் மூன்றில் ஒரு பகுதிச் செல்வத்தை வக்பு செய்தால் போதும் என்று வரையறை செய்வதன் நோக்கம், மக்களில் மூன்றில் ஒரு பங்கினா் வறுமையை நீக்க அது போதும் என்பதுதான்!
இசுலாத்தில் செய்தே ஆக வேண்டும் என்பதும் உண்டு; செய்தால் நல்லது என்பதும் உண்டு!
உன் பக்கத்தில் உள்ள வறியவனுக்கு நீ ஏன் உதவவில்லை என்பது தீா்ப்பு நாளில் ஒருவனின் மீது சாட்டப்படும் குற்றம் என்னும்போது, இது செய்தே தீர வேண்டிய கடமை ஆகிறது!
பொதுவுடைமைச் சமுதாயம் மேட்டை வெட்டிப் பள்ளத்தில் போட்டுச் சமப்படுத்த முயன்றது நிகரற்ற சிந்தனைதான்! ஆனால் பணக்காரனை முற்றாக ஒழித்த அந்தச் சமூகத்தில், ஆட்சியாளா்கள் ‘சலுகை பெற்ற புதிய வா்க்கத்தினராக’ உருவானதால், அது தோற்றது!
ஆனால் இசுலாம் தேவையான அளவு மட்டுமே மேட்டைச் சரிக்கிறது!
அதனால் பட்டாடை அணிபவா்களும், பரிமள கந்தங்களில் மிதப்பவா்களும், படகுக் காா்களில் பயணம் செய்பவா்களும், பகட்டு வாழ்க்கையினரும் இருப்பாா்கள்! ஆனால் பட்டினி கிடப்பவா்கள், படிக்க வழியில்லாதவா்கள், முதுமையைக் கடக்கத் தவிக்கும் விதவைகள், கன்னி கழிய வகையற்ற இளம் பெண்கள் என இத்தகையோா் இருக்க மாட்டாா்கள்! தேவையான அந்த அளவுக்கே மேடு சரிக்கப்படும்!
அவா்கள் அளவிலா அன்புடையோன் நிகரற்ற அருளாளனான அல்லாவின் வக்பு பாதுகாப்பில் இருப்பாா்கள்!
சீனன் ஆண்டாலும், சிங்களவன் ஆண்டாலும், எந்த ஆட்சியாளனையும் நம்பி எந்த இசுலாமியனும் வாழத் தேவையில்லாத, ஒரு பசியற்ற தன்னிறைவுச் சமூகத்தை உருவாக்கவே அல்லா, மிக எளிய முகம்மதுவைக் கையிலெடுத்தான்!
எளிய முகம்மது அல்லாவின் கட்டளைப்படியான அத்தகைய சமூகத்தைக் கட்டமைத்து நபிகள் நாயகமாகப் போற்றப்படும் நிலையை அடைகிறாா்!
நான்கு கலிபாக்களின் ஆட்சியில் அத்தகைய சமூக அமைப்புக்கு முன்னோட்டமும் பாா்க்கப்பட்டது!
தனி மனித உய்வு இசுலாத்தின் ஒரு பகுதி; சமூகமாக அதைத் தன்னிறைவு அடையச் செய்வது, இசுலாத்தின் இன்னொரு போற்றத்தக்க புதிய பகுதி!
இந்தியாவில் பாதிச் சொத்து வக்பு சொத்து; ஆனால் பாதி ஏழைகள் இசுலாமியா்கள்!
எங்கெங்கோ வாழ்கிறோம்; யாா் யாரோ ஆள்வாா்கள்; சைத்தான்கள் கூட ஆளட்டுமே! எந்த அரசின் தயவும் தேவைப்படாத ஒரு தன்னிறைவுச் சமூகம்தானே நபிகளாரின் வழிகாட்டல்! அதைக் கட்டமைக்க ‘தன்னலமற்ற வயிரம் பாய்ந்த தலைமை’ வேண்டும் உமா்போல!
முகம்மது சல்லல்லாகூ அலைகி வசல்லத்தின் நாளில், ஓா் அயலானின் எளிய பாா்வை இது!

கட்டுரையாளா்:
முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்.

Sunday, 22 September 2024

கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

நீதிபதிகள் வரம்பு மீறி பேசுவது குறித்து உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி. இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக பேசிய கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீசானந்தாவிற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.

மதச்சார்பற்ற நாட்டில் மதவெறுப்புடன் நீதிபதிகளே பேசி வருவது நீதிமன்றத்தின் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழக்க செய்கின்றது.

Tuesday, 10 September 2024

ராஜ தர்மம்” நிலைநாட்ட யாரிங்கே இருக்கிறார்? சா.பீட்டர் அல்போன்ஸ்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

“ராஜ தர்மம்” நிலைநாட்ட யாரிங்கே இருக்கிறார்? -சா.பீட்டர் அல்போன்ஸ்
நமது நிருபர் ஆகஸ்ட் 30, 2024
சோமாலியா, ஏமன், சிரியா, சூடான் போன்ற  நாடுகளில் நடக்கும் சில நிகழ்வுகளை  தொலைக்காட்சியில் பார்க்கும்போது மிகவும் ஆச்சரி யமாக இருக்கும். உள்நாட்டுப்போர், இனச் சண்டை கள், சகோதர யுத்தங்கள் போன்ற வன்முறை வெறி யாட்டங்களுக்கு பல்லாண்டுகளாக பழகிப்போன அந்த மக்கள் பேரவலத்தையும், பெரும் அழிவுகளை யும் தவிர்க்கமுடியாத அன்றாட நிகழ்வுகளாகவே ஏற்றுக் கொண்டுள்ளார்கள். குண்டுகள் வீசப்பட்டு வீடுகள் ஒரு பகுதியில் பற்றி எரியும்போது அடுத்த பகுதியில் சிறுவர்கள் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருப்பார்கள். சக மனிதர்களின் கண்ணீரும், அழுகையும், மரணங்களும், பேரிழப்புகளும் இப்போ தெல்லாம் அவர்களை அதிகமாக பாதிப்பதில்லை. தங்களது வாழ்க்கைப் பயணத்தில் இப்படிப்பட்ட அசம்பாவிதங்களை அதிகமாக சந்திப்பதால் அவர் களது மனச்சாட்சிகள் மழுங்கி, இதயங்கள் மரத்துப் போனதுதான் உண்மை. இப்போதெல்லாம் நாமும் அப்படிப்பட்ட ஒரு சமூகச் சூழலை நோக்கித்தான் பயணிக்கிறோம் என்ற அச்சம் எனக்கு அடிக்கடி வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

வெறும் செய்தியாக, கடந்து போகலாமா?

கடந்த பத்தாண்டுகளாக மதம், சாதி, இனம் அடிப்படையில் நம் நாட்டில் நடக்கும் தனி மனித தாக்குதல்கள், சில குறிப்பிட்ட இன, மத மக்களை மற்றும் அவர்களது வாழ்வாதாரங்களை அழித்து நிர்மூலம் ஆக்குதல், பெண்களை அவமானப்படுத்தி அவர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கு தல், ஒரு சமூகத்தைச் சார்ந்த மக்களை துன்புறுத்தி அவர்களது வாழ்விடங்களை விட்டு விரட்டுதல் போன்ற  நிகழ்வுகள் நமது சமூகத்தின் பெரும்பகுதியினரால் ஒரு செய்தியாக மட்டுமே பார்க்கப்பட்டு மக்கள் சாதா ரணமாகவே கடந்து போவதைப் பார்க்க முடிகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் நண்பகல் நேரத்தில் ஒரு பெண்ணை வன்முறையாளன் ஒருவன் ஆயுதம் கொண்டு தாக்கி மானபங்கம் செய்யும்போது கூட, கூடுகின்ற கூட்டம் அதனை வீடியோ எடுத்து சமூக வலைத் தளத்தில் பகிர்ந்து லைக்ஸ் பெறவேண்டும் என்று துடிக்கிறதே தவிர வன்முறையாளனை தடுத்து  அப்பெண்ணை பாதுகாக்கவேண்டும் என்று கூட்டத்தில் பெரும்பாலோர் முயற்சிப்பதில்லை. ஒரு சக மனிதரின் அபயக்குரல், அவரது மரண ஓலம்,  அவரது வேதனை மற்றும் கண்ணீர் நம்மிடம் எவ்வித சலனத்தையும் உண்டாக்கவில்லையென்றால் நமது  சமூகம் எங்கேயோ அழுகிப் போகத் தொடங்கிவிட்ட தென்பதே காலம் நமக்குத் தரும் எச்சரிக்கை!

அரசாங்கமே வன்முறையாளராக...

வெறுப்பு, துவேஷம் ஆகியவற்றின் அடிப்படை யில் சில வழிதவறிய இளைஞர்களும், சில அசாதாரண நிகழ்வுகளால் ஆவேசமடையும் பொதுமக்களும் உணர்ச்சிவசப்பட்டு இதைப் போன்ற வன்முறை களில் ஈடுபடுவதைக்கூட நம்மால் புரிந்து கொள்ள  முடிகிறது. ஆனால் ஒரு அரசாங்கமே இதைப் போன்ற  வன்முறை வெறியாட்டங்களைத் தொடர்ந்து நிகழ்த்துவதையும், பொது சமூகமும், ஊடகங்களும், நீதிமன்றங்களும் மற்ற ஜனநாயக நிறுவனங்களும் இக்கொடுமைகளைக் கண்டும் காணாமல் கடந்து போவதை என்னவென்று சொல்வது?

கடந்த வாரம் மத்தியப் பிரதேசம் சந்தர்பூர் மாவட்டத்தில் நபிகள் நாயகம் பற்றி தவறாக பேசிய ராம்கிரி மகராஜ் என்ற இந்துமத தலைவர் மீது புகார் அளிக்க கூட்டமாக காவல் நிலையம் சென்ற இஸ்லாமியர்களை காவல் நிலையத்தில் போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளனர். இதனைத் தொடர்ந்த தள்ளுமுள்ளில் சில போலீசார் தாக்கப்பட்டதாக தெரியவருகிறது. இதன் பேரில் போலீசார் தொடர்ந்த வழக்கில்  இஸ்லாமிய சமூகத்தின் முக்கியப் பிரமுக ரான ஹாஜி ஷெஹ்சாத் அலி என்பவர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்படுகிறார். இவர் அந்த மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் என்றும் சொல்லப்படுகிறது. உடனடியாக அவரது வீடு புல்டோசர் கொண்டு முழுமையாக இடித்து தரை மட்டமாக்கப்படுகின்றது. இளம் பெண்கள்,  குழந்தைகள் மற்றும் வயோதிகர்கள் உட்பட அனை வரும் அடுத்த நேர உணவும் உடைகளும் இன்றி தெரு வில் நிற்கின்றனர். சட்டத்திற்கு விரோதமாக குற்றம்  செய்தவர்கள் மீது போலீசார் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதை நாம் குறை சொல்லவில்லை. ஆனால் இதில் எந்தவித தொடர்பும் இல்லாத குடும்ப உறுப்பினர்களை, வீடுகளை விட்டு வெளியேற்றி நடுத்தெருவில் நிறுத்துவது என்ன நியாயம்? இதனை “புல்டோசர் நியாயம்”என்று சொல்கிறது பாஜக.

புல்டோசர் பயங்கரம்

மத்தியப்பிரதேசத்தில் மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த புல்டோசர் நியாயம் அன்றாட நடைமுறையாக மாறிவிட்டது. இந்த நிகழ்வு களின்போது பாஜகவினர் கூட்டமாக கூடி நின்று  வீடுகளை இடிக்கும் அதிகாரிகளை உற்சாகப்படுத்து வதும், அவர்களுக்கு மாலைகள், சால்வைகள் அணி வித்துப் பாராட்டுவதும், அவற்றை வீடியோ எடுத்து  சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டாட்டங்கள் நடத்துவதும் தினசரி நிகழ்வாகிவிட்டன. அரசாங்கமே முன்னின்று நடத்தும் இந்த “அரசு பயங்கரவாதத் தால்” பாதிக்கப்படுகின்ற மக்களில் ஒரு சிலரைத் தவிர  அனைவருமே சிறுபான்மை இஸ்லாமியராக இருப்பது தான் இந்த புல்டோசர் நியாயத்தின் முக்கிய அம்சம்.

கொடிய முதல்வர்

2017 செப்டம்பர் மாதத்தில் உபி முதலமைச்சர் ஆதித்யநாத் “பெண்களுக்கும், சமூகத்தின் நலிந்த மக்களுக்கும் எதிராக குற்றம் செய்பவர் களின் சொத்துக்களை புல்டோசர் வைத்து இடித்து நியாயம் வழங்குவேன்” என்று பகிரங்கமாக அறி வித்தார். குற்றங்களுக்கு எதிராக உடனடியாக தான்  வழங்கும் இந்த நியாயத் தீர்ப்பு நடவடிக்கைகளில் சட்டம், நீதிமன்றம் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப் படப் போவதில்லை என்று சூசகமாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பாஜகவினர் ஆதித்யநாத்தை “புல்டோசர் பாபா” என்றழைத்து பாராட்டி மகிழ்ந்த னர். ஆனால் இந்த புல்டோசர் நியாயம் பெரும்பாலும் சிறுபான்மை இஸ்லாமியர்களை நோக்கி ஏவப் பட்டதுதான் தேசத்திற்கு ஏற்பட்ட பெரும் அவலம்.

“குற்றம் செய்தவர்கள் இஸ்லாமியர்களாக இருந்தால் மட்டுமே அவர்களது சொத்துக்கள் இடிக்கப்படும். மற்றவர்களுக்கு அது பொருந்தாது” என்று பிந்த் மாவட்ட ஆட்சியர் பேசியதாக வந்த  ஆடியோ பதிவு உச்சநீதிமன்றத்தின் பார்வைக்கே எடுத்துச்செல்லப்பட்டது. JCB கம்பெனியின் தயாரிப்பான புல்டோசர்களை வைத்து பள்ளி வாசல்கள், மதரஸாக்கள், இஸ்லாமியர்களின் வீடுகள் மற்றும் வியாபார நிலையங்களை இடித்து தள்ளுவ தால் பாஜகவினர் இந்த சட்டவிரோத நடவடிக்கை களை “Jihadi Control Board” என்று பெருமையுடன் அழைக்கின்றனர். பாஜக ஆள்கின்ற மாநிலங்களான அசாம், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிர தேசம் மற்றும் தில்லி யூனியன் பிரதேசம் ஆகிய  ஐந்து மாநிலங்களில் இது வரை 128 இஸ்லாமி யர்கள் தொடர்பான சொத்துக்கள் இடித்து தரை மட்டமாக்கப்பட்டதாகவும், அதனால் 617 குடும்பங்கள் தங்களது இருப்பிடங்களை இழந்துள்ளதாகவும். “அம்னெஸ்டி இன்டர்நேஷனல்” நிறுவனம் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. 

வீதியில் தவிக்கும் மக்கள்

பெரும்பாலும் இரவு நேரங்களில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு நீதிமன்றங்களை அணுக அவகாசம் கிடைப்பதில்லை. காவல் துறையினர் முதலில் வீடுகளுக்குள் புகுந்து குடியிருப்பவர்களை அடித்து விரட்டி விட்டு பொருட்களை அள்ளி வெளியே போடு வதாகவும் அதன் பின்னர் புல்டோசர் வைத்து இடிப்ப தாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் புகைப்படங்களோடு உச்சநீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளனர். கட்டிடங்களை இடிப்பதற்காக அரசு  சொல்லி வரும் காரணம் அக்கட்டிடங்கள் சட்டவிரோத மாக கட்டப்பட்டுள்ளன என்பதுதான். ஆனால்  இடிக்கப்பட்ட பல கட்டிடங்கள் பல ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் இருப்பவை. இடிக்கப்பட்ட இஸ்லாமியரின் கட்டிடங்களை ஒட்டி இருக்கின்ற இந்துக்களின் கட்டிடங்கள் சேதப்படுத்தப்படுவ தில்லை.

கடந்த வாரம் மத்தியப் பிரதேச அரசால் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட ஷெஹ்சாத் அலியின் வீடு ஒரு பெரிய பங்களா எனத் தெரிகிறது. அதனுள் நிறுத்தப்பட்டிருந்த விலை உயர்ந்த கார்களையும் அதிகாரிகள் புல்டோசரால் நொறுக்கியுள்ளனர். வீடு விதி மீறலாக கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதினாலும் கூட வாகனங்களை அடித்து நொறுக்கு வது ஏன் என்ற கேள்விக்கு அரசிடம் பதில் இல்லை. உரிமைகளுக்காகவும், நியாயம் கேட்டும் குரல் கொடுக்க முன்வரும் இஸ்லாமியர்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் விதைத்து அவர்களை வாய்  பேசாத ஜனங்களாக ஆக்குவதுதான் பாஜக அரசு களின் திட்டம்  என்கிற எண்ணம் இன்று வட இந்திய இஸ்லாமியர்கள் மத்தியில் பரவலாக நிலவி வருகிறது.

வெறுப்பால் நிறைந்த  குரூர மனங்கள்

இந்த அநியாயங்களை மகிழ்ச்சியோடு கொண்டாடுகின்ற வலதுசாரி பாசிச சக்திகள் இச் செயல்களையும் அதனை அரங்கேற்றும் அரசுகளை யும், அரசியல் தலைவர்களையும் “புல்டோசர் ராஜ்,  புல்டோசர் ஸ்டேட், புல்டோசர் நியாயம், புல்டோசர் பாபா, புல்டோசர் மாமா” என்றழைத்து பெருமைப் பட்டுக்கொள்வது அவர்களது மனம் எவ்வளவு வெறுப்பால் நிறைந்துள்ளது என்பதை காட்டுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆதித்யநாத் சென்ற இடங்களில் எல்லாம் புல்டோசர்களை நிறுத்தி வைத்து அவைகளால் அவருக்கு பெரிய மாலைகளை அணிவித்து, புல்டோ சர்களால் சிறுபான்மை மக்களது வாழ்விடங்களை இடிப்பது அவருடைய ஆட்சியின் பெரும் சாதனை என விளம்பி அதற்காகவே பாஜகவுக்கு வாக்களியுங் கள் என்று கேட்ட கொடுமையும் உ.பி.யில் நடந்தது. 

பிரதமரே ஏற்படுத்திய தலைகுனிவு

இதைவிட கொடுமையாக இந்திய ஜனநாயகமே வெட்கித் தலைகுனியும் அளவுக்கான ஒரு செயலை நமது பிரதமர் மோடியே செய்தார். “புல்டோசர் மூலமாக நீதியை நிலைநாட்டும் கலையை நன்றாக கற்றவர் ஆதித்யநாத்” என்று தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உச்ச குரலில் புகழ்ந்தார். அரசியல் சட்டமும், அரசு விதிகளும், இயற்கை நீதியும்,தனி மனித உரிமைகளும் ஒரு நாளும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு சட்ட விரோத செயலை செய்யும் ஒரு  மாநில முதலமைச்சரை நம் தேசத்தின் பிரதமரே அதற்காக பாராட்டுவது நமது வாக்கு சீட்டு அரசியல்  எவ்வளவு கேவலமான நிலைக்கு வந்துள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டு. அரசியல் சாசன மீறல் களை தட்டிக்கேட்டு,தனி மனித மாண்புக்கும் உரிமை களுக்கும் உத்தரவாதம் தருவதற்காகவே உரு வாக்கப்பட்ட நமது உச்ச நீதிமன்றம் கண்ணையும், காதையும், வாயையும் மூடிக்கொண்டிருப்பது நமக்கு  ஏற்பட்டுள்ள மற்றுமொரு மிகப்பெரும் சோகம்.

வங்கதேசத்தின் நிலை

சிறுபான்மை இஸ்லாமியரின் நிலை இங்கே இவ்வளவு மோசமாக இருக்கும் போது, நம் அண்டை நாடான  வங்கதேசத்தில் அங்கேயுள்ள சிறுபான்மை இந்துக்களின் நிலை அதைவிட மோசமாக இருப்பதை அறிந்து நமது நெஞ்சம் பதறுகிறது. உலகமெங்கும் மதம், இனம், சாதி, மொழி ஆகிய கலாச்சார அடை யாளங்களால் “சிறுபான்மையினர்” என்று அடையாளப்படுத்தப்பட்டவர்கள் “பேரினவாதம்” என்ற  பெரும்பான்மை தத்துவத்தின் பேரால் நசுக்கப் படுவதை தொடர்ந்து பார்த்து வருகிறோம். 

வங்கதேசத்தில் பல்லாண்டுகளாக வாழ்ந்து வரும் சிறுபான்மை இந்து மக்கள் தங்கள் வாழ்விடங் களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு இந்திய எல்லை களுக்கு அருகே ஆயிரக்கணக்கில் அநாதரவாக நிற்கின்றனர் என்ற செய்தி நம் இதயத்தைப் பிளக்கிறது. வங்கதேச இந்து, புத்திஸ்ட், கிறிஸ்டியன் கவுன்சிலின் நிர்வாகிகளும், பங்களா தேஷ் பூஜா உட்ஜப்பான் பரிஷத் நிர்வாகிகளும் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் அவர்களைச் சந்தித்து 250 இடங்களில் சிறுபான்மை மக்கள் பெரு மளவில் பாதிக்கப்பட்டுள்ள விபரங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை அளித்து பாதுகாப்பு கோரி யுள்ளனர். சிறுபான்மை மக்களது உணர்வுகளை மதித்து அவர்களையும் உடன் அழைத்துக்கொண்டு முகமது யூனுஸ் டாக்காவில் உள்ள தாரகேஸ்வரி இந்து  ஆலயத்திற்கு நேரில் சென்று சிறுபான்மை மக்க ளோடு தனது உடனிருப்பை உறுதி செய்துள்ளார்.

கிருஷ்ண ஜெயந்தி அன்று வங்கதேச தேசிய தொலைக்காட்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய அந்நாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், சிறுபான்மை இந்து மக்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களைத் தெரிவித்து இந்து, கிறித்தவ, புத்த மதங்களைச் சார்ந்தவர்களும் அந்நாட்டின் முழு உரிமையுள்ள குடிமக்கள் என்று அறிவித்து அவர்களையும் அவர் களது உரிமைகளையும் பாதுகாப்பது புதிய அரசின் முதல் கடமை என்று அறிவித்தார். இரண்டு நாடு களிலும் பாதிக்கப்பட்டவர்கள் மதங்களால் வேறு படுத்தப் பட்டிருந்தாலும்  அந்தந்த நாடுகளில் “சிறுபான்மையினர்” என அடையாளப்படுத்தப்பட்ட வர்களே! ஆனால் நம் நாட்டில் அரசுகளே முன்னின்று இக்கொடுமைகளை செய்வதுதான் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

வங்கதேசத்தில் வாழும் சிறுபான்மை மத மக்களின் துயரங்களும்,வேதனைகளும், அவர்கள் வாழும் பாதுகாப்பற்ற சூழ்நிலைகளும் நாளையே முடிவடைந்து விடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.ஆனால் மனித நேயத்தோடு, அமரர் வாஜ்பாய் அவர்களது வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால் “ராஜ தர்மத்தோடு” ஆட்சி செய்யவேண்டும் என்று நினைக்கின்ற ஒரு தலைவர் அவர்களுக்கு கிடைத்துள்ளார் என்ற வகையில் சற்று ஆறுதல் அடைகிறேன். அந்த ஆறுதல் நம் நாட்டு சிறுபான்மை மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று யாசிக்கின்றேன்.

சா.பீட்டர் அல்போன்ஸ்

மேனாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்

அஸ்ஸாமில், இஸ்லாமியர்களுக்கு அடுத்த அச்சுறுத்தல்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அஸ்ஸாமில், இஸ்லாமியர்களுக்கு அடுத்த அச்சுறுத்தல்
➖➖➖➖
 சட்டமன்றத்தில் தொழுகை இடைவேளை ரத்து - 87 வருட பழக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்த பாஜக அரசு!
➖➖➖➖
 அஸ்ஸாம் சட்டமன்றத்தில் இஸ்லாமிய உறுப்பினர்கள் நமாஸ் செய்வதற்காக வெள்ளிக்கிழமைகளில் விடப்படும் 2 மணிநேர இடைவேளையை ரத்து செய்வதாக அறிவித்திருக்கிறார், முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா.

காலனித்துவ கால நடைமுறைகளை கைவிடுவதாகவும், நாடாளுமன்றத்தின் திறனை (Productivity) அதிகரிப்பதற்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக, விளக்கமளித்துள்ளார்.

அஸ்ஸாம் சட்டமன்றத்தில் வெள்ளிக்கிழமைகளில் இஸ்லாமிய உறுப்பினர்கள் நமாஸ் செய்வதற்காக காலை 11 மணிக்கு இடைவேளை விட்டு, பின்னர் மதிய உணவுக்குப் பிறகு விவாதங்களைத் தொடங்குவது நீண்டகாலமாக பின்பற்றப்படும் வழக்கமாகும். இந்த நடைமுறை 1937-ல் முஸ்லிம் லீக் கட்சியின் சையது சாதுல்லாவால் ( பிரிட்டிஷ் இந்தியாவின் அஸ்ஸாம் மாகாண பிரதமராக இருந்தவர்) அறிமுகப்படுத்தப்பட்டது.

தொழுகை இடைவேளையை ரத்து செய்ததை 'வரலாற்று சிறப்புமிக்க முடிவு' எனப் பெருமைகொள்ளும் அஸ்ஸாம் முதல்வர், இதற்கு உறுதுணையாக இருந்ததற்காக சபாநாயகர் பிஸ்வஜித் டைமேரி மற்றும் பிற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டமன்றம் எந்தவித மதரீதியான சலுகைகளும் இல்லாமல் இயங்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

அஸ்ஸாம் சட்டமன்றத்தில் நேற்று, `அஸ்ஸாம் ரத்து மசோதா, 2024' நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, அஸ்ஸாம் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டம், 1935-ஐ ரத்து செய்ததுள்ளது.
➖➖➖➖
30.08.2024

https://www.vikatan.com/government-and-politics/assam-assembly-ends-87-year-old-practice-of-2-hour-jumma-break

முக்கிய அவசர உதவி எண்கள்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நமது ஒவ்வொரு கைபேசியுலும் (Mobile phone),  கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கிய அவசர உதவி எண்கள்!

1.அவசர உதவி அனைத்திற்கும் — 112

2.வங்கித் திருட்டு உதவிக்கு — 9840814100

3.மனிதஉரிமைகள் ஆணையம் — 044-22410377

4.மாநகரபேருந்தில அத்துமீறல் — 09383337639

5.போலீஸ் SMS — 9500099100

6.போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS — 9840983832

7.போக்குவரத்து விதிமீறல் SMS — 98400 00103

8.போலீஸ் — 100

9.தீயணைப்புத்துறை — 101

10.போக்குவரத்து விதிமீறல — 103

11.விபத்து — 100, 103

12. ஆம்புலன்ஸ் — 102, 108

13.பெண்களுக்கான அவசர உதவி – 1091

14.குழந்தைகளுக்கான அவசர உதவி – 1098

15. அவசர காலம் மற்றும் விபத்து — 1099

16.முதியோர்களுக்கான அவசர உதவி — 1253

17.தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி - 1033

18.கடலோர பகுதி அவசர உதவி — 1093

19. ரத்த வங்கி அவசர உதவி — 1910

20.கண் வங்கி அவசர உதவி — 1919

21.விலங்குகள் பாதுகாப்பு — 044 -22354959/22300666

22.நமது அலைபேசியில் 112 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும். நமது அலைபேசி லாக்கில் (Locked) இருந்தாலும் இந்த எண்கள் மட்டும் இயங்கும். இது அனைத்திற்குமான அவசர உதவி எண் .

பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு — 93833 37639

பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு Toll Free No :- 180011400, 94454 64748, 72999 98002, 72000 18001, 044- 28592828

மனரீதியாக பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- 044 – 26530504 / 26530599

வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424

ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: 044- 25353999 / 90031 61710 / 99625 00500

ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் — 044-24749002 / 26744445

சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற எண்ணிற்கு SMS - 95000 99100

இதனை அனைவருக்கும் பகிருங்கள், நன்றி!

Monday, 9 September 2024

எட்டு வருடங்களாக தாயகம் செல்ல முடியாத கண்ணனை தாயகம் அனுப்பி வைத்த ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் அதற்கு முழுவதுமாய் உதவிய ஒற்றை தமிழர்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

எட்டு வருடங்களாக தாயகம் செல்ல முடியாத கண்ணனை தாயகம் அனுப்பி வைத்த ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் அதற்கு முழுவதுமாய் உதவிய ஒற்றை தமிழர்

▪️கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்த கண்ணன் கடந்து 8 ஆண்டுகளுக்கு முன்னால் சவுதி அரேபியா ரியாத் வந்துள்ளார் , ரியாத்தில் பல்வேறு பணிகளை செய்தவர் இறுதியாக ஓட்டுனர் பணியை செய்திருக்கிறார் , அதன் காரணமாக பெரும் தொகையை சாலை விதிமுறை மீறல் தண்டத் தொகையாக பெற்று தாயகம் செல்ல முடியாமல் எட்டு ஆண்டுகளாக தவித்துள்ளார்.. 

▪️இந்த நிலையில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு சர்க்கரை நோய்க்கு சுயமாக மருந்து எடுத்த நிலையில் இடது காலும் கையும் செயலிழந்து ஒரு நாள் முழுவதும் அறையில் யாரும் பார்க்காத நிலையில் கிடந்து , சிலரின் உதவியால் அடுத்த நாள் மருத்துவமனை சென்று சிகிச்சை பெற முற்பட்ட நிலையில் அவருடைய ஆவணம் அனைத்தும் காலாவதி ஆகிய நிலையில் உரிமையாளரிடமிருந்து ஓடி வந்தவர் என்ற வழக்கு பின்னணியும் இருந்ததால் மருத்துவமனையில் முதல் கட்ட சிகிச்சையோடு  வெளியேற்றப்பட்ட நிலையில் பொதுமக்கள் கூடும் பூங்காவில் கேட்பாரற்று கிடந்திருக்கிறார்.. 

▪️இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் முன்னாள் நிர்வாகி மகன் அப்துல் ரஹ்மான் மூலமாக மாநில  தலைமை நிலைய செயலாளர் மாயவரம் அமீன் அவர்களை தொடர்பு கொள்ள அவர் ரியாத் மண்டல தலைவர் மீமிசல் நூர் முகமது அவர்களிடம் தகவலை தெரிவிக்க மண்டல சமூக நலத்துறை செயலாளர் கொடிப்பள்ளம் சாதிக் பாட்சா அவர்களையும் துணைச் செயலாளர் காட்டுவா அஜ்மீ ஆகியோரை இந்த சிரமம் மிக்க பணியில் முடுக்கி விட அனைவரும் இரவு பகல் பார்க்காமல் கடந்த ஒரு வார காலமாக இவருக்கு எக்ஸிட் அடிக்க சாலை விதிமுறைகளை மீறிய தண்டத் தொகையை அடைக்க பல்வேறு வழிகளில் மிகுந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் முயற்சித்து நேற்று இரவு சவுதி அரேபியாவில் இருந்து செல்ல எக்ஸிட் என்னும் ஆவணத்தை பெற்றனர்.

▪️ அதனைத் தொடர்ந்து நேற்று 4-9-2024 புதன்கிழமை இலங்கை விமான மூலம் பத்தா கிளை நிர்வாகி காரைக்குடி அம்ஸத் இப்ராஹிம் அவர்கள் பயண துணையுடன் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டார்.. 

▪️இந்த ஒப்பற்ற பணிக்கு ரியாதில் வாழும் ஒரு தமிழர் முழு உதவியும் செய்தார் என்பது மிகுந்த போற்றுதலுக்கும் நன்றிக்கும் உரிய மனித மீட்பு செயலாகும்.. 

▪️மேலும் நான் பல ஆண்டு கழித்து செல்வதால் எனது மகளுக்கு மொபைல் வாங்கி கொடுக்க வேண்டும் எனவே அதையும் வாங்கித் தருமாறு கேட்டுக் கொண்டார் , அதையும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.

▪️மேலும் பாதிக்கப்பட்ட கண்ணனை மீட்க பலரும் பல்வேறு வகையில் உதவ முன் வந்தார்கள் என்பது மிகுந்த பாராட்டுதலுக்கும் நன்றிக்கும் உரியது

▪️கண்ணன் தங்கி இருந்த இடங்களில் அவருக்கு உணவு உள்ளிட்ட இயற்கை தேவைகளை நிறைவேற்ற உதவிய RT தமிழ் உணவக ரஷாக் அஷ்ரஃப் உள்ளிட்ட நண்பர்களும் ஊழியர்களும் பத்தா கிளை பாஷா, இலங்கை லெப்பை, ஹசன் சுளை கிளை செயலாளர் நீடூர் சாதிக் மேலும் மருத்துவர் ரீதியாக உதவிய மரு. அப்துல் ஜலீல் விமான டிக்கெட் வகையில் உதவிய பக்தா கிளை செயலாளர். ரமீஷ் , ஆடிட்டர் சாஜித், அம்ஜத் உள்ளிட்ட அனைத்து மக்களும் உறுதுணையாக இருந்தார்கள் என்றால் அது மிகை இல்லை. இதற்கு உதவிய அனைவருக்கும் இதய அடி ஆழத்திலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் ..

▪️ கடல் கடந்து கண்ணீரும் கம்பளையுமாய் குடும்பத்தை தொடர்பு கொள்ள முடியாமல் பொது பூங்காவில் படுத்து நோயோடு அவதிப்பட்ட கண்ணனை மிகுந்த சிரமத்தோடு பலரின் தியாக ஒத்துழைப்போடு தாயகம் அனுப்பி வைத்த ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் அமைப்பிற்கு குடும்பத்தினரும் நண்பர்களும் அவர் மீது கரிசனை காட்டிய மக்களும் மிகுந்த பாராட்டுக்களையும் , நன்றிகளையும் கண்ணீர் மல்க நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்... 

▪️இதுபோன்ற கடல் கடந்த மனிதம் காக்கும் செயல் பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியது , 
பிறர் நலன் பேணுவது தான் இஸ்லாம் என்பதை தனது செயல்பாட்டின் மூலம் உணர்த்தியதும் , தமிழர் என்ற இனமுண்டு தனியே அவருக்கு குணமுண்டு என்ற சொல்லை மெய்ப்பிக்கும்  இது போன்ற மனிதநேய சேவைகளை தொடர வாருங்கள் கரங்களை கோர்த்து அறங்களை காப்போம்... 

என்றென்றும் மனிதநேய சேவையில்..

இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்(IWF)
சமூக நலத்துறை 
மத்திய மண்டலம்
ரியாத் - சவுதி அரேபியா

வக்ப் திருத்தச் சட்டம் 2024

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


வக்ப் திருத்தச் சட்டம் 

அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின்
ஓர் அதிமுக்கிய அவசர அறிவிப்பு

வக்ஃப் திருத்த மசோதாவை எதிர்த்து நாடாளுமன்றக் கூட்டு நடவடிக்கை (JPC) குழுவிற்குக் கடிதம் அனுப்புவதற்கான கடைசித் தேதி செப்டம்பர் 13, 2024 என்பதை அகிலஇந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறது. 

இன்னும் சில நாட்களே உள்ளன. 

நாடு முழுவதும் உள்ள மக்களின் கருத்து விரைவில் JPCயை சென்றடைய வேண்டும். 

எனவே JPC க்கு மின்னஞ்சல்
 அனுப்ப அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தினால் தயாரிக்கப்பட்ட தமிழ், உருது மற்றும் ஆங்கிலம் ஆகிய  மொழிகளில் விளக்க வீடியோக்களின் இணைப்பு சுட்டி மற்றும் QR குறியீடு தரப்பட்டுள்ளது. 

அதிக எண்ணிக்கையில் நமது எதிர்ப்பு   நாடாளுமன்றக் கூட்டு நடவடிக்கை (JPC) குழுவிற்குச் செல்ல இதனைப் பரப்புவீர்

கண்ணியத்திற்குரிய இமாம்கள் வரும் ஜூம்ஆவில் இது குறித்து விழிப்புணர்வு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்

எதிர்ப்பைப் பதிவு செய்ய இணையதளச் சுட்டி


🔗Portal link to send letter to JPC:- 
Portal : https://tinyurl.com/is-no-waqf-amendment

*Video Tutorial Tamil:- https://youtube.com/shorts/4G7gvLXbNds?si=ayv8m71iVlAuMCOp

*Video Tutorial Urdu:- https://tinyurl.com/is-no-waqf-amendment-video

*Video Tutorial English:- https://youtube.com/shorts/p4Qfsnh9gTk?si=30VrZ458pHiE5tQA

📞Help 
 9429690784, 9429693133, 9065720887

————————————
எதிர்ப்பை பதிவு செய்ய மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:

jpcwaqf-lss@sansad.nic.in

is.no.waqfamendment002@gmail.com

மின்னஞ்சல் வாசகம்;

Dear Members of the Joint Parliamentary Committee,

I strongly oppose the Waqf Amendment Bill. It violates fundamental rights, Islamic charity laws, and established judicial principles while introducing significant operational inefficiencies.

If adopted, this bill will transfer a majority of the control of Waqf properties to the government, reduce these properties through reclassification, and establish an opaque, biased, and inefficient structure for managing Waqf assets.

Such legislation erodes public trust in the Constitution. I urge you to revoke this bill immediately.

Sincerely,

(உங்கள் பெயர், முகவரி)

Thursday, 15 August 2024

பரமக்குடியில் 78th சுதந்திர தின நிகழ்ச்சி



பரமக்குடியில் 78th சுதந்திர தின நிகழ்ச்சி: 15.08.2024 

இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் பரமக்குடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இந்திய நாட்டின் 78வது சுதந்திர தின நிகழ்ச்சி பரமக்குடி சிறுவர் பூங்கா அருகில் நடைபெற்றது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக இராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவர் சேக் அப்துல்லா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தக்வா மதரஸா சிறுவர்கள் தேசியக் கீதம் பாடினர். மேலும் மதரஸா சிறுவர்களின் சுதந்திர தின உரை மற்றும் சுதந்திர சிறப்பு பாடல்  ஆகியன நடந்தது.

மாவட்ட இஸ்லாமிய பிரச்சார பேரவை செயலாளர் பொறியாளர் சாதிக் பாட்சா மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அப்துல் காதர், நகர தலைவர் முகம்மது சஜித்,  நகர் தமுமுக செயலாளர் நல்ல இப்ராஹீம்,மமக செயலாளர் சர்க்கரைக் கனி, பொருளாளர் அப்துல்லா, MTS செயலாளர் அப்துல் அஜீஸ், தெற்கு பள்ளி வார்டு செயலாளர் ரஹீம், இப்ராகிம் ஷா, நவாஸ் கான் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தக்வா பள்ளிவாசல் இமாம் தாஹிர் சைஃபுதீன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.