மதுரை சிக்கந்தர் தர்ஹா பிரச்சினையில் தமுமுக மேற்கொண்ட நடவடிக்கைகள்.
மதுரை திருப்பரங்குன்றம் சிக்கந்தர் அவுலியா பாதுஷா தர்காவில் ராஜபாளையத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் ஒரு ஆட்டுக்கடாவுடன் கந்தூரி ஆக்குவதற்காக
25/12/2024 அன்று காலை 6 மணிக்கு மலையில் மேல் உள்ள தர்காவிற்கு செல்ல வந்துள்ளனர். வந்த மக்களையும் ஆட்டுக்குட்டியையும் அந்த குடும்பத்தினரையும்
மதுரை திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் மதுரை வீரன் அவர்கள் தடுத்து நிறுத்தி மேலே பலி கொடுக்கக் கூடாது மேலும் அசைவம் சமைக்க கூடாது என்று தடை உத்தரவு போட்டு பிரச்சனை செய்துள்ளார். (எந்த விதமான அரசு ஆணையோ நீதிமன்ற உத்தரவு இல்லாமல் ) அவர் தன்னிச்சையாக அறிவித்து பிரச்சினை செய்திருக்கிறார்
அதற்கு பின்பு பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் தகவல் தெரிவித்து உள்ளூர் மக்களும், இடதுசாரி தோழர்கள் சில நபர்கள் சேர்ந்து ஒரு சிறு குழுவாக போராட்டம் செய்துள்ளார்கள் அவர்களை கைது செய்து மாலை விடுவித்து விட்டார்கள்.
காலங்காலமாக நடைப்பெறும் இந்த சடங்கை காவல்துறை திடீரென தடுத்து நிறுத்தியுள்ளது. இந்த பிரச்சினை குறித்து தர்ஹா நிர்வாகம் தமுமுக மாவட்ட நிர்வாகிகளை தொடர்புக்கொண்டு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து களத்திற்கு சென்று பார்வையிட்ட நிர்வாகிகள் தமுமுக மாநில நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்துவிட்டு வந்தனர்.
தர்ஹா பிரச்சினை குறித்து விவாதிக்க பள்ளிவாசல் நிர்வாகம் அனைத்து கட்சி கூட்டத்தை 26/12/2024 அன்று மாலை 7 மணிக்கு கூட்டினர். அந்த கூட்டத்தில் மமக மாநில அமைப்புச்செயலாளர் காதர்மெய்தீன் தலைமையில் தமுமுக மாவட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டு தர்ஹா பிரச்சினை குறித்து தமுமுக மாநிலத் தலைமையின் கவனத்திற்கு எடுத்து சென்றருப்பதாகவும், வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் தனி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படும் என்றும் உறுதியளித்தனர். மேலும் பள்ளிவாசல் நிர்வாகம் எடுக்கும் முயற்சிகளில் உறுதுணையாக இருப்போம் என்றும் பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து 31/12/2024 அன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுக்கும் நிகழ்விலும் தமுமுகவின் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மதுரை திருப்பரங்குன்றம் சிக்கந்தர் மலை தர்கா பள்ளிவாசல் மலைக்குச் செல்லவும் நேர்த்திக்கடன் நிறைவேற்றவும் தடை விதிக்கும் காவல்துறை மற்றும் வருவாய் கோட்டாட்சியர் கண்டித்து 05/01/2025 அன்று நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் காதர் மைதீன் மதுரை தெற்கு மாவட்ட தலைவர் ஷேக் இப்ராகிம் மதுரை வடக்கு மாவட்ட தலைவர் சீனி அகமது மற்றும் தெற்கு வடக்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் கைதாயினர். காவல்துறைக்கும் போராடிய மக்களுக்கும் இடையே நடைப்பெற்ற தள்ளுமுள்ளுவில் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கைது செய்து மண்டபத்தில் அடைக்கப்பட்ட மக்கள் அனைவரும் எங்கள் உரிமையை காக்க போராடிய எங்களை காவல்துறை தாக்கியது கடும் கண்டனத்திற்குரியது என்றும் தாக்கிய காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்வரை விடுதலையாவதில்லையென தெரிவித்தனர். காவல்துறை வேறு வழியின்றி விடுதலை செய்துவிட்டதாக அறிவித்துவிட்டு மண்டபத்தைவிட்டு வெளியேறிவிட்டனர்.
06/01/2025 இன்று மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது அவர்கள் மதுரை சிக்கந்தர் தர்ஹா பிரச்சினை குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்க தனி கவன ஈர்ப்புத் தீர்மானத்தை சபாநாயகரிடம் முன்மொழிந்துள்ளார்.
06/05/2025 இன்று தமுமுகவின் மதுரை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது. மதுரை சிக்கந்தர் மலை தர்ஹா மற்றும் பள்ளிவாசல் வழிபாட்டு உரிமைக்காக போராட்டம் செய்த ஜமாத்தார்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், இஸ்லாமிய பெண்கள், குழந்தைகள் மீது கடும் தாக்குதல் நடத்தி அத்துமீறிய காவல்துறையை கண்டித்து மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தை 10/01/2025 அன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற சமுதாய கொந்தளிப்பு பிரச்சினைகளை அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து போராடுவதே உரிமையை மீட்டு தரும் என்பதை நம் சமுதாயத்தை சேர்ந்த சிலர் புரிந்துக்கொள்வது அவசியம்.
No comments:
Post a Comment