கண்ணீரை வரவழைக்கும் புகைப்படங்கள்.
கீழேயுள்ள புகைப்படங்களில் (இடது கையில் சாவிகள், வலது கையில்) குத்து வாளுடன் மொரோக்கோ நாட்டின் ஜலாபா என்ற சூஃபி உடையணிந்து காணப்படுபவர் மொரோக்கோவாசி அல்லர். அவர் ஸ்பெய்ன் நாட்டுக்காரர். அந்தலுஸ் என்ற முஸ்லிம் ஸபெய்னின் கடைசி மன்னரான அப்துல்லாஹ் அஸ்ஸஙீர் அவர்களின் பிரதிநிதி.
(கி.பி. 712 முதல் 1492 வரை 780 ஆண்டுகளாக கொடிகட்டிப் பறந்த அந்தலுஸ் என்ற முஸ்லிம் ஸ்பெய்ன் நாடு, கிறிஸ்தவர்களால் வீழ்த்தப்பட்டது. அதில் கடைசியாக வீழ்ந்த மாகாணம் கிரானடா தான்.)
அந்த கிரானடா பேரரசின் சாவிகளைத் தான் , Kingdom of Castile-ன் (கிறிஸ்தவ) அரசன் ஃபெர்னான்டோவிடம் ஒப்படைக்கச் செல்கிறார் அவர்.
இந்த நிகழ்வு கடந்த 533 ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டும் ஸ்பெயின் நாட்டின் பெரும்பாலான நகரங்களில் பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்தலுஸ் என்ற முஸ்லிம் ஸ்பெயின் (முஸ்லிம்களிடமிருந்து கிறிஸ்தவர்களிடம் கைமாறி) வீழ்ந்ததை ஸ்பெயின் மக்கள் ஆண்டுதோறும் ஜனவரி இரண்டாம் தேதி கொண்டாடி வருகின்றனர்.
#Imam_Ilyas_Riyaji #ilyas_riyaji #الاندلس #غرناطة
No comments:
Post a Comment