கறம்பக்குடி அரசு மருத்துவமனை சம்பந்தமாக திமு கழக நகர செயலாளருடன் தமுமுக நிர்வாகக் குழு சந்திப்பு!
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு மற்றும் கூடுதல் மருத்துவர் செவிலியர் வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி பொது மக்கள் கடந்தாண்டு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்த நிலையில் மக்களின் கோரிக்கை சட்டப்பேரவையில் விவாதத்துக்குள்ளானது!
சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் கந்தர்வக்கோட்டை மற்றும் விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் தோழர், சின்னதுரை திரு,விஜயபாஸ்கர் கறம்பக்குடி அரசு மருத்துவமனை குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு சுகாதார துறை அமைச்சர் Ma Subramanian அவர்கள் பேசியதை திமுகழக நகர செயலாளர் அண்ணன் முருகேசன் அவர்களிடம் சுட்டக்காட்டி விவரித்தோம்
மேலிட பார்வைக்குச் சென்று விரைவில் பணி ஆவணம் செய்ய வலியுறுத்த கேட்டுக் கொண்டோம்
நிற்க,
இதற்கிடையில் திமு கழக நகர செயலாளர் முருகேசன் அவர்கள் நம்மிடத்தில் எம் பி அப்துல்லா அவர்களின் நிதியானது பிப்ரவரி [அடுத்த] மாதம் கிடைக்க பெறும் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தோழர் சின்னதுரை அவர்களின் நிதியானதை விரைவில் கிடைக்க வலியுறுத்துகிறேன் மேலும் புதுக்கோட்டை மாவட்ட திமு கழக செயலாளர் செல்ல பாண்டியன் அவர்களிடம் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மாண்புமிகு சுப்பிரமணி அவர்களை சந்தித்து மருத்துவமனை சம்பந்தமாக முறையிட வேண்டுகிறேன் என்றார்,,
தமுமுக& மமக நகர தலைவர் எம். முகமது புகாரி அவரின் தலைமையிலான இந்த சந்திப்பில்...
புதுக்கோட்டை மாவட்ட மமக செயலாளர்
அ. முகமது சுலைமான், தமுமுக மாவட்ட மருத்துவ அணி செயலாளர், ச. சேக் தாவூது மாவட்ட துணை செயலாளர் மமக முகமது முபாரக், மமக ஒன்றிய செயலாளர்
நூருல் அமீன் மாவட்ட துணை செயலாளர் தமுமுக அ. முகமது சுபேர், காதர் மைதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்
தகவல்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்
புதுக்கோட்டை மாவட்டம் மேற்கு
No comments:
Post a Comment