Showing posts with label உலகம். Show all posts
Showing posts with label உலகம். Show all posts

Thursday, 16 January 2025

விமானங்களில் டயர்கள் பெரும்பாலும் பஞ்சர் ஆகாது.. ஏன் தெரியுமா?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

17.01.2025

விமானங்களில் டயர்கள் பெரும்பாலும் பஞ்சர் ஆகாது.. ஏன் தெரியுமா?





விமானங்களின் டயர்கள் எப்பொழுதும் பஞ்சராகவோ, வெடிக்கவோ செய்யாது. இது ஏன் ? இதற்குப் பின்னால் உள்ள அறிவியல் என்ன ? இந்த தொழிற்நுட்பம் ஏன் கார்களில் இல்லை ? விமானங்களில் டயர்களும் கார்களின் டயர்களும் ஒன்றா? இரண்டிற்கும் என்ன வித்தியாசம் ?
நீங்கள் காரில் வேகமாக நெடுஞ்சாலையில் செல்லும் போது கூட உங்கள் காரின் டயர் பஞ்சராகியோ, அல்லது வெடித்தோ போயிருக்கும். எல்லோருக்கும் வாழ்வில் இப்படி ஒரு மோசமான அனுபவம் ஏற்பட்டிருக்கும். ஆனால் என்றாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா விமானங்களில் டயர்கள் பெரும்பாலும் பஞ்சராவதோ வெடிப்பதோ இல்லை.


பொதுவாக ஒவ்வொரு டயருக்கு அது வெளியிலிருந்து எவ்வளவு அழுத்தத்தைத் தாங்கும் திறன் கொண்டது என்ற அளவீடு இருக்கும். அதை Psi எனக் கணக்கிடப்படுகிறது.
பொதுவாக ஒரு காரின் டயருக்கு 32-35 Psi இருக்கும். ஆனால் விமானங்களில் டயருக்கு 200 Psi இருக்கும் அதாவது கார்களை விட 6 மடங்கு அதிகமாக அழுத்தைத் தாங்கும் திறன் இருக்கும். விமானங்களில் டயரும் கிட்டத்தட்ட காரின் டயரைபோலவே தான் உருவாக்கப்படுகிறது. ஆனால் இது அதிக எடை மற்றும் அதிக வேகத்தைத் தாங்கும் திறன் கொண்டது போல வடிவமைக்கப் பட்டுள்ளது.
பொதுவாக விமானங்களில் பொருத்தப்படும் டயர்கள் பெரிய டயர்கள் எல்லாம் இல்லை. போயீங் 737 விமானத்தின் டயர் 27X7.75 R15 என்ற அளவிலான டயர் தான் பொருத்தப்படுகிறது. இது சிறிய டிரக்கின் டயரின் அளவை விட சிறியது தான். சிறிய டிரக்களில் கூட 40 இன்ச் டயாமீட்டர், 20 இன்ச் அகலம் கொண்ட டயர்கள் பொருத்தப்பட்டிருக்கும்.
விமானங்களில் அதை விடச் சிறிய டயராக பொருத்தப்பட்டிருந்தாலும் அதில் அதிக எடை மற்றும் வேகத்தை தாக்குபிடிக்கும் அளவிற்கு அதன் த்ரட்களுடன் நைலான் கார்டுகள் அல்லது சந்தடிக் பாலிமர்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதனால் அதிக அழுத்தம் மட்டும் வேகத்தை தாக்குப்பிடிக்கும் அளவிற்கு இந்த டயர்கள் உருவாக்கப்பட்டிருக்கும்.
பொதுவாக விமானங்கள் தரையில் 270 கி.மீ வேகம் வரை பயணிக்கும் ஆனால் விமானங்களில் பொருத்தப்பட்டுள்ள டயர்கள் 470 கி.மீ வேகம் வரை பயணிக்கும் திறன் கொண்டது. அவ்வளவு வேகத்தில் பயணித்தாலும் பஞ்சர் ஆகாத டயர் 270 கி.மீ வேகத்தில் பயணிக்கும் போது பஞ்சர் ஆகாதது பெரிய ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
விமான டயர்களில் த்ரெட்கள் சிம்பிள் பேட்டனிலேயே இருக்கும். இது விமானங்கள் ஹைட்ரோ பிளானிங் ஏற்படுத்தாமல் தடுக்க உள்ளே த்ரெட்டிங் பேட்டர்ன் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தான் விமானங்கள் தரையிறங்கும் போது தரையைத் தொட்ட அந்த ஒரு விநாடி டயர் சுற்றத் துவங்கும் முன்பு புகை வரும். பின்னர் டயர் சுற்ற துவங்கியதும் இது சரியாகிவிடும்.
கமர்ஷியல் விமானங்களில் அதிகமான எடை காரணமாக அதிக வீல்கள் பொருத்தப்பட்டிருக்கும். பொதுவாக விமானங்களில் உள்ள டயர்கள் 500 முறை தரையிறங்க முடியும். அதன் பின் அந்த டயர்கள் மீண்டும் சரி செய்யப்பட்டுத் தேய்ந்து போன இடங்களைச் சரி செய்து மீண்டும் த்ரெட்டிங் செய்யப்பட்டு அதன் பாதுகாப்பு சோதனைகள் செய்யப்பட்டு மீண்டும் விமானங்களில் பயன்படுத்தப்படும்.

Thursday, 9 January 2025

JOB - DUBAI ELECTRICITY & WATER AUTHORITY (PJSC)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

துபாய் அரசு நிறுவனமான துபாய் மின்சாரம் மற்றும் நீர் ஆணையத்தின் (DEWA)  கீழ்க்காணும் இன்ஜினியரிங் துறையில் பல்வேறு வேலை வாய்ப்புகள் அறிவித்துள்ளது!! அமீரகத்தில் வேலை தேடிக்கொண்டிருக்கும் இன்ஜினியரிங் துறை சார்ந்த மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்....

09.01.2025  

உங்கள் CV களை hr.recruitment@dewa.gov.ae என்ற முகவரிக்கு அனுப்பவும் !

DUBAI ELECTRICITY & WATER AUTHORITY (PJSC)

DEWA (PJSC) INVITES QUALIFIED AND EXPERIENCED PROFESSIONALS TO APPLY FOR THE FOLLOWING VACANT POSITIONS- hr.recruitment@dewa.gov.ae

https://www.dewa.gov.ae/en/about-us/service-guide/consumer-services

https://www.dewa.gov.ae/en/

(சில சகோதரர்கள் வேலை தேடுகின்றனர் சில இடங்களில் வேலையும் உள்ளது முயற்சி செய்யுங்கள் இறைவன் நாடினால் சிறந்ததை அடைந்து கொள்வீர்கள)

Tuesday, 7 January 2025

புகார் பதிவேடு” முறை பின்பற்றிட கிராம ஊராட்சிகளுக்கான சிறப்பு அதிகாரிக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கோரிக்கை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் தேர்தல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்பு பிரநிதிகளுக்கான பதவி காலம், 2025 ஜனவரி 5ந்தேதியோடு நிறைவடைந்த நிலையில் 28 மாவட்டங்களுக்கான ஊராட்சிகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள எங்கள் கிராம ஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் “பொதுமக்கள் புகார் பதிவேடு” முறை பின்பற்றிட கிராம ஊராட்சிகளுக்கான சிறப்பு அதிகாரிக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

நமது கோரிக்கையின் அடிப்படையில் எங்கள் ஊரில் பொதுமக்கள் புகார் பதிவேடு பராமரிக்கப்பட்டுள்ளது. 

நமது நிர்வாகிகளும் அந்தந்தப் பகுதிகளில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கான சிறப்பு அதிகாரியை சந்தித்து தங்களது கிராமத்திற்குத் தேவையான அத்தியாவசிய பணிகள் குறித்து எழுத்துப் பூர்வமாகமனுக் கொடுத்து பொதுமக்களின்  தேவைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

மு. உசைன் கனி
மக்கள் உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அணி
மாநில பொறுப்பாளர்.

கண்ணீரை வரவழைக்கும் புகைப்படங்கள்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

கண்ணீரை வரவழைக்கும் புகைப்படங்கள்.
<><><><><><><><><><><><><><><><>



கீழேயுள்ள புகைப்படங்களில் (இடது கையில் சாவிகள், வலது கையில்) குத்து வாளுடன் மொரோக்கோ நாட்டின் ஜலாபா என்ற சூஃபி உடையணிந்து காணப்படுபவர் மொரோக்கோவாசி அல்லர். அவர் ஸ்பெய்ன் நாட்டுக்காரர். அந்தலுஸ் என்ற முஸ்லிம் ஸபெய்னின் கடைசி மன்னரான அப்துல்லாஹ் அஸ்ஸஙீர் அவர்களின் பிரதிநிதி.

(கி.பி. 712 முதல் 1492 வரை 780 ஆண்டுகளாக கொடிகட்டிப் பறந்த அந்தலுஸ் என்ற முஸ்லிம் ஸ்பெய்ன் நாடு, கிறிஸ்தவர்களால் வீழ்த்தப்பட்டது. அதில் கடைசியாக வீழ்ந்த மாகாணம் கிரானடா தான்.)

அந்த கிரானடா பேரரசின் சாவிகளைத் தான் , Kingdom of Castile-ன் (கிறிஸ்தவ) அரசன் ஃபெர்னான்டோவிடம் ஒப்படைக்கச் செல்கிறார் அவர்.

இந்த நிகழ்வு கடந்த 533 ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டும் ஸ்பெயின் நாட்டின் பெரும்பாலான நகரங்களில் பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்தலுஸ் என்ற முஸ்லிம் ஸ்பெயின் (முஸ்லிம்களிடமிருந்து கிறிஸ்தவர்களிடம் கைமாறி) வீழ்ந்ததை  ஸ்பெயின் மக்கள் ஆண்டுதோறும் ஜனவரி இரண்டாம் தேதி கொண்டாடி வருகின்றனர்.
#Imam_Ilyas_Riyaji #ilyas_riyaji #الاندلس #غرناطة

Monday, 6 January 2025

ஹராத் முதல் அல்பத்தா வரை 246 கிலோ மீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலை


போட்டோவில் காண்பது ஆஸ்திரேலியாவில் உள்ள வளைவே இல்லாத மிகவும் நேரான மிகவும் நீளமான சாலையாகும். இது பல்லடோனியாவிற்கும்( Balladonia) கைகுனாவிற்கும் ( Caiguna) இடையே 145.6 கிலோமீட்டர் ( 90 மைல்கள்) நேராக நீண்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் இந்த சாலையை தவிர ஹராத் முதல் அல்பத்தா வரை 246 கிலோ மீட்டர் நீளமுள்ள உலகின் மிகவும் நீளமான மிகவும் நேரான தடையில்லாத நெடுஞ்சாலையாக சௌதி அரேபியா கின்னஸ் உலகச் சாதனைப் படைத்துள்ளது.

2000 மீட்டர் (இரண்டு கிலோ மீட்டர்) / இது இஸ்லாத்தின் பிரகாரம் சாத்தியமாகும்

06.01.2025 நிலவரப்படி துபாயில் இருக்கும் 824 மீட்டர் உயரம் கொண்ட Burj Khalifa தான் உலகின் மிக உயரமான கட்டிடமாகும். (Burj என்ற அரபிச் சொல்லுக்கு Tower என்று பொருள்).
🛑இதை மிஞ்சும் வகையில் சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் 1000 மீட்டர் (ஒரு கிலோமீட்டர்) உயரம் கொண்ட Jeddah Tower மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டிடத்தின் பாதிக்கும் மேற்பட்ட பணிகள் முடிவடைந்து விட்டன.
இதுபோக 2034 ம் ஆண்டு சவுதிஅரேபியாவில் FIFA உலக கோப்பை நடைபெறுவதையொட்டி அதன் நினைவாக 2000 மீட்டர் (இரண்டு கிலோ மீட்டர்) உயரம்கொண்ட Rise Tower கட்டப்படுமென்ற செய்திகளும் உலவுகின்றன. இரண்டு கிலோமீட்டர் உயரமான கட்டிடத்தை இப்போதிருக்கும் தொழில்நுட்பத்தால் கட்டுவதெல்லாம் சாத்தியப்படுமா என்பதைக்காண பெரும் ஆவலாக உள்ளது.

1. பொறியியல் மற்றும் கட்டமைப்பு சவால்கள் பொருள் வலிமை: எஃகு மற்றும் கான்கிரீட் போன்ற பாரம்பரிய கட்டுமானப் பொருட்கள் தீவிர சுமைகளின் கீழ் வரம்புகளை எதிர்கொள்கின்றன. கார்பன் ஃபைபர் கலவைகள் அல்லது நானோ பொருட்கள் போன்ற மேம்பட்ட பொருட்கள் தேவைப்படலாம். காற்று விசைகள்: தீவிர உயரங்களில் காற்று ஒரு குறிப்பிடத்தக்க சவாலாக மாறும். காற்றின் எதிர்ப்பைக் குறைக்க பொறியாளர்கள் கட்டமைப்பை காற்றியக்க வடிவங்கள் மற்றும் மேம்பட்ட தணிப்பு அமைப்புகள் மூலம் வடிவமைக்க வேண்டும். அடித்தள ஆழம்: இவ்வளவு உயரமான ஒரு கட்டமைப்பிற்கு அதன் எடையை ஆதரிக்கவும் கட்டமைப்பு ஒருமைப்பாட்டை பராமரிக்கவும் நம்பமுடியாத அளவிற்கு ஆழமான மற்றும் நிலையான அடித்தளம் தேவைப்படும்.
⚡ 2. லிஃப்ட் மற்றும் செங்குத்து போக்குவரத்து பாரம்பரிய லிஃப்ட் அமைப்புகள் கேபிள் நீளம் மற்றும் வேகத்தில் வரம்புகளைக் கொண்டுள்ளன. Only Mitsubishi elevator possible காந்த லெவிடேஷன் (மேக்லெவ்) லிஃப்ட்கள் அல்லது பல திசை லிஃப்ட்கள் (தைசென்க்ரூப் மல்டி சிஸ்டம் போன்றவை) போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மக்களை திறமையாக கொண்டு செல்ல அவசியமாக இருக்கும். 🌍 3. சுற்றுச்சூழல் தாக்கம் 2 கிலோமீட்டர் கோபுரம் உள்ளூர் வானிலை முறைகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளை கணிசமாக பாதிக்கலாம். காற்று சுழல்கள், நிழல் விளைவுகள் மற்றும் வெப்பச் சிதறலை நிர்வகிப்பதற்கு புதுமையான தீர்வுகள் தேவைப்படும். 💸 4. நிதி சாத்தியக்கூறு அத்தகைய திட்டத்தின் செலவு வானளாவிய அளவில் அதிகமாக இருக்கும், $50 பில்லியனைத் தாண்டும். நீண்ட கால பொருளாதார நிலைத்தன்மையை (ஆக்கிரமிப்பு, சுற்றுலா, வணிக பயன்பாடு) உறுதி செய்வது மிக முக்கியமானதாக இருக்கும். 🏢 5. மனித காரணிகள் தரையிலிருந்து 2 கிலோமீட்டர் உயரத்தில் வாழ்வதும் வேலை செய்வதும் காற்று அழுத்தம் மற்றும் ஆக்ஸிஜன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் உட்பட உளவியல் மற்றும் உடல் ரீதியான சவால்களை முன்வைக்கிறது. அவசரகால வெளியேற்றத் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும். 📡 6. தொழில்நுட்ப முன்னேற்றங்கள் கட்டுமானத்திற்கான 3D அச்சிடுதல், AI- இயக்கப்படும் வடிவமைப்புகள் மற்றும் ஸ்மார்ட் கட்டிட அமைப்புகள் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், தற்போதைய கட்டுமான நடைமுறைகளின் வரம்புகளைக் கடப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். 🏗️ இது சாத்தியமா? தொழில்நுட்ப ரீதியாக: இது கோட்பாட்டளவில் சாத்தியம் ஆனால் தற்போதைய தொழில்நுட்பத்துடன் மிகவும் சவாலானது. நிதி ரீதியாக: ஒரு சக்திவாய்ந்த பொருளாதாரம் அல்லது குறிப்பிடத்தக்க உலகளாவிய முதலீட்டால் ஆதரிக்கப்பட்டால் மட்டுமே. காலக்கெடு: 2034 வாக்கில், இதை சாத்தியமாக்குவதற்கு போதுமான தொழில்நுட்ப முன்னேற்றம் இருக்க முடியும், ஆனால் அதற்கு பொருள் அறிவியல், பொறியியல் மற்றும் நகர்ப்புற திட்டமிடல் ஆகியவற்றில் புரட்சிகரமான முன்னேற்றங்கள் தேவைப்படும். இந்த திட்டம் மறுக்க முடியாத அளவுக்கு உற்சாகமானது, ஆனால் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்படும் வரை 2 கிலோமீட்டர் தூரம் என்பது ஊகமாகவே இருக்கும். இருப்பினும், எதிர்காலம் மனித கண்டுபிடிப்பு மற்றும் பொறியியலில் முடிவற்ற சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது! 🚀🏙️

முஹம்மது நபி 1400 வருடத்திற்கு முன்பே சொல்லிவிட்டார்கள் வானளாவிய கட்டிடம் வரும் என்று . எனவே இது இஸ்லாத்தின் பிரகாரம் சாத்தியமாகும் 




1. Engineering and Structural Challenges
Material Strength: Traditional construction materials like steel and concrete face limitations under extreme loads. Advanced materials such as carbon fiber composites or nanomaterials may be required.
Wind Forces: Wind becomes a significant challenge at extreme heights. Engineers must design the structure to reduce wind resistance through aerodynamic shapes and advanced dampening systems.
Foundation Depth: A structure this tall would need an incredibly deep and stable foundation to support its weight and maintain structural integrity.
⚡ 2. Elevators and Vertical Transportation
Traditional elevator systems have limits on cable length and speed. Only the Mitsubishi elevator is possible
Advanced technologies, such as magnetic levitation (maglev) elevators or multi-directional elevators (like the ThyssenKrupp MULTI system), would be essential to transport people efficiently.
🌍 3. Environmental Impact
A 2-kilometer tower could significantly affect local weather patterns and ecosystems.
Managing wind vortices, shadow effects, and heat dissipation would require innovative solutions.
💸 4. Financial Feasibility
The cost of such a project would be astronomical, potentially exceeding $50 billion.
Ensuring long-term economic sustainability (occupancy, tourism, commercial use) would be critical.
🏢 5. Human Factors
Living and working 2 kilometers above the ground presents psychological and physical challenges, including changes in air pressure and oxygen levels.
Emergency evacuation plans would need to be reimagined.
📡 6. Technological Advancements
Emerging technologies, such as 3D printing for construction, AI-driven designs, and smart building systems, will play a pivotal role in overcoming the limitations of current construction practices.
🏗️ Is it Possible?
Technically: It's theoretically possible but extremely challenging with current technology.
Financially: Only if backed by a powerful economy or significant global investment.
Timeline: By 2034, there could be enough technological progress to make this feasible, but it would require groundbreaking advancements in materials science, engineering, and urban planning.
The project is undeniably exciting, but the 2-kilometer mark remains speculative until significant advancements are made. The future, however, holds endless possibilities in human innovation and engineering! 🚀🏙️

Prophet Muhammad (peace be upon him) foretold 1400 years ago that towering buildings would be built. Therefore, according to Islam, this is possible.

Sunday, 5 January 2025

துபாய் அதிபராக பதவியேற்று இன்றுடன் 19ஆண்டுகள் நிறைவு !!!!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

துபாய் அதிபராக பதவியேற்று இன்றுடன் 19ஆண்டுகள் நிறைவு !!!!

அமீரக துணை ஜனாதிபதியும், துபாய் அதிபருமான His Highness Sheikh Mohammed bin Rashid Al Maktoum பதவியேற்று இன்றுடன் 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

பதவியேற்று சில ஆண்டுகளிலேயே வியக்கத்தக்க பொருளாதார வளர்ச்சி, வர்த்தகம்,சுற்றுலா, வேலைவாய்ப்பு மற்றும் பல தொலை நோக்கு திட்டங்கள் மூலம் இந்த உலகையே திரும்பி பார்க்க வைத்த பெருமை இவரையே சேரும்.
தமிழுக்கு கூடுதல் பெருமை சேர்க்கும் விதமாக, துபாயில் ஓட்டுனர் உரிமம் தமிழ் மொழியிலும் பெற வழி வகை செய்தவர். இவரது சாதனைகள் நீண்ட பட்டியலை கொண்டது. 

உங்கள் வாழ்வில் மென்மேலும் வெற்றிகள் பெற, நீண்ட ஆயுளும், ஆரோக்கியமாக வாழ நமது துபாய் தமிழ் நெட்வொர்க் சார்பாக இதயபூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

தொலைநோக்குப் பார்வை மற்றும் சாதனைகளின் மரபு
தலைமைப் பொறுப்பேற்றதிலிருந்து, ஷேக் முகமது, தொழில்நுட்பம், சுற்றுலா, உள்கட்டமைப்பு மற்றும் நிலைத்தன்மை போன்ற துறைகளில் துபாயின் அதிவேக வளர்ச்சியைத் தூண்டும் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார். புர்ஜ் கலீஃபா போன்ற சின்னச் சின்ன அடையாளங்கள் முதல் எக்ஸ்போ 2020 துபாய் போன்ற உலகப் புகழ்பெற்ற நிகழ்வுகள் வரை, அவரது தலைமை லட்சிய கனவுகளை குறிப்பிடத்தக்க யதார்த்தங்களாக மாற்றியுள்ளது. அவரது தொலைநோக்குப் பார்வை துபாயை முன்னோக்கி நகர்த்தியது மட்டுமல்லாமல், உலகளவில் சிறந்து விளங்குவதற்கான ஒரு அளவுகோலையும் அமைத்துள்ளது.

ஷேக்கா ஹிந்தின் தலைமைத்துவத்தையும் தாராள மனப்பான்மையையும் கொண்டாடுதல்
இந்த நிகழ்வு, வலுவான மற்றும் ஒன்றுபட்ட குடும்ப அடித்தளத்தை வளர்ப்பதில் அசைக்க முடியாத ஆதரவும் அர்ப்பணிப்பும் முக்கிய பங்கு வகித்த ஷேக்கா ஹிந்த் பின்த் மக்தூமின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளையும் எடுத்துக்காட்டுகிறது. 'நன்றி ஷேக்கா ஹிந்த்' பிரச்சாரத்தின் தொடக்கமானது, அவரது உடனடி குடும்பம் மற்றும் பரந்த சமூகம் இரண்டிலும் அவர் செலுத்தும் ஆழமான தாக்கத்திற்கான மனமார்ந்த ஒப்புதலாகும்.

ஷேக்கா ஹிந்த் அவரது எல்லையற்ற தொண்டு பங்களிப்புகளுக்காகவும், எண்ணற்ற வாழ்க்கையை மேம்படுத்தும் முயற்சிகளில் அவரது தலைமைத்துவத்திற்காகவும் கொண்டாடப்படுகிறது. அவரது முயற்சிகள் இரக்கம், தாராள மனப்பான்மை மற்றும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அர்ப்பணிப்பைக் கொண்டுள்ளன.

ஒற்றுமை மற்றும் வலிமையின் செய்தி
ஷேக் முகமதுவின் தலைமைத்துவத்தையும் ஷேக்கா ஹிந்தின் பங்களிப்புகளையும் கொண்டாடும் இந்த இரட்டை கொண்டாட்டம் ஒரு அத்தியாவசிய உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது: உண்மையான வலிமை குடும்பத்தின் ஒற்றுமை, அன்பு மற்றும் விசுவாசத்தில் உள்ளது. ஷேக் முகமது மற்றும் ஷேக்கா ஹிந்த் இடையேயான நீடித்த கூட்டாண்மை உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக செயல்படுகிறது, பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் பரஸ்பர ஆதரவு எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை நிரூபிக்கிறது.

எதிர்காலத்தை நோக்கி
துபாய் உலகளாவிய புதுமை மற்றும் செழிப்பு மையமாக தொடர்ந்து உயர்ந்து வருவதால், ஷேக் முகமதுவின் தலைமையும் ஷேக்கா ஹிந்தின் அசைக்க முடியாத ஆதரவும் அதன் வெற்றியின் மூலக்கல்லாக இருக்கின்றன. ஒன்றாக, அவர்கள் முன்னேற்றம், சமூகம் மற்றும் மனிதநேயம் ஆகியவற்றிற்கான உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகின்றனர், எதிர்கால சந்ததியினருக்கு ஒரு சக்திவாய்ந்த முன்மாதிரியாக அமைகின்றனர்.

இன்று, நாங்கள் அவர்களின் மரபை மதிக்கிறோம், மேலும் தொடர்ச்சியான வளர்ச்சி, ஒற்றுமை மற்றும் சிறப்பால் வரையறுக்கப்பட்ட எதிர்காலத்தை எதிர்நோக்குகிறோம்.

Monday, 30 December 2024

Properties of Drinking Water Bottles and the Effects of Plastic Usage 2024 / AAT

Properties of Drinking Water Bottles and the Effects of Plastic Usage

Drinking water bottles are manufactured using various types of plastic. Understanding their properties, usage, and suitability for hot or cold beverages is essential.


Types of Plastic Bottles

1. PET (Polyethylene Terephthalate)

  • Commonly used for water bottles and soft drink bottles.
  • Lightweight, durable, and recyclable.
  • However: Repeated use may cause bacterial growth and chemical leaching.

2. HDPE (High-Density Polyethylene)

  • Suitable for milk and soft drink bottles.
  • Resistant to chemicals and recyclable.
  • However: Not entirely safe for very hot liquids.

3. PVC (Polyvinyl Chloride)

  • Used in various industrial applications.
  • However: PVC can release toxic fumes like dioxin, posing health risks.

4. PP (Polypropylene)

  • Commonly used for hot beverage containers.
  • Resistant to heat and pressure.
  • However: Prolonged use may reduce its strength.

5. PC (Polycarbonate)

  • Used for both hot and cold beverages.
  • However: May release Bisphenol A (BPA), a chemical harmful to human health.

Effects of Using Plastic Bottles

1. Chemical Leaching:

  • Storing water or beverages in plastic bottles for prolonged periods can cause chemical leaching.
  • BPA and similar chemicals can cause neurological disorders and hormonal imbalances.

2. Effects of Hot Liquids:

  • Storing hot beverages in PET or PVC bottles increases chemical leaching.
  • This may lead to liver damage, health complications, and neurological problems.

3. Environmental Impact:

  • Improper disposal of plastic bottles contributes to environmental pollution.
  • Marine life and soil ecosystems are severely affected by plastic waste.

Safe Practices:

  • Avoid reusing disposable plastic bottles.
  • Better Alternatives: Use glass or stainless steel bottles.
  • Avoid storing hot beverages in plastic bottles.
  • Check plastic identification codes (1–7) and select safe options.

Plastic bottles pose direct risks to health and the environment. It is essential to adopt safer and recyclable alternatives to minimize these impacts.

Thanks 

Annai Ayeisha Trust - Paramakudi 623707

குடிநீருக்கு பயன்படுத்தும் பாட்டில்களின் தன்மைகள் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டின் விளைவுகள்


குடிநீருக்கு பயன்படுத்தும் பாட்டில்களின் தன்மைகள் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டின் விளைவுகள்

குடிநீருக்கு பயன்படுத்தப்படும் பாட்டில்கள் பல்வேறு பிளாஸ்டிக் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. அவற்றின் தன்மைகள், பயன்பாடு மற்றும் சூடான அல்லது குளிர்ந்த பானங்களுக்கு உகந்த தன்மைகள் குறித்து புரிந்துகொள்வது முக்கியம்.

பிளாஸ்டிக் பாட்டில்களின் வகைகள்

1. PET (Polyethylene Terephthalate)

பொதுவாக தண்ணீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பான பாட்டில்களுக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்.

இவை மென்மையானவை, நீளமானவை, மற்றும் மறுசுழற்சிக்கு உகந்தவை.

ஆனால்: இதை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் போது பாக்டீரியாவும், ரசாயனங்களும் சேர வாய்ப்பு உள்ளது.



2. HDPE (High-Density Polyethylene)

பால் மற்றும் குளிர்பான பாட்டில்களுக்கு உகந்த பிளாஸ்டிக்.

இதன் தன்மை இரசாயனங்களுக்கு எதிர்ப்புடையது, மேலும் மறுசுழற்சிக்கு ஏற்றது.

ஆனால்: மிகவும் சூடான பொருள்களுக்கு இந்த பிளாஸ்டிக்கின் பயன்பாடு பாதுகாப்பாக இருக்காது.



3. PVC (Polyvinyl Chloride)

பலவகைத் தொழில்துறைகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்.

ஆனால்: PVC பிளாஸ்டிக்கிலிருந்து டையாக்சின் போன்ற விஷவாயுக்கள் வெளியேற வாய்ப்பு உள்ளது.



4. PP (Polypropylene)

சூடான பானங்களுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்.

இதன் தன்மை வெப்பத்தையும் அழுத்தத்தையும் தாங்கக்கூடியது.

ஆனால்: நீண்டகால பயன்பாட்டில் இது வலிமையை இழக்கக்கூடும்.



5. PC (Polycarbonate)

சூடான மற்றும் குளிர்ந்த பானங்களுக்கும் பயன்படுகின்றது.

ஆனால்: பிஸ்ஃபெனால் ஏ (BPA) என்று அழைக்கப்படும் ரசாயனம் இதில் இருந்து வெளியேற வாய்ப்பு உள்ளது. இது மனித உடலுக்கு மிகவும் ஆபத்தானது.




பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

1. ரசாயன சிதைவுகள்

பிளாஸ்டிக் பாட்டில்களில் நீண்ட நேரம் தண்ணீர் அல்லது பானங்களை வைத்திருப்பதன் மூலம், ரசாயனங்கள் தண்ணீரில் கலக்கலாம்.

பிஸ்ஃபெனால் ஏ போன்ற ரசாயனங்கள் நரம்பியல் சீர்கேடுகளை உருவாக்கக் கூடும்.



2. சூடான பானங்களின் விளைவுகள்

சூடான பானங்களை PET, PVC போன்ற பாட்டில்களில் சேமிப்பது பிளாஸ்டிக் ரசாயன சிதைவுகளை அதிகரிக்கிறது.

இதனால், உடல்நல பாதிப்புகள், கல்லீரல் நோய்கள், மற்றும் நரம்பியல் பிரச்சனைகள் உருவாக வாய்ப்புள்ளது.



3. பிற உடல் பாதிப்புகள்

பிளாஸ்டிக் பாட்டில்கள் சரியாக மறுசுழற்சி செய்யப்படாதால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது.

பிளாஸ்டிக் சிதைவுகளால் கடல்சார் உயிரினங்கள் மற்றும் மண் பாதிக்கப்படுகின்றன.




பாதுகாப்பான நடைமுறைகள்

மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த பிளாஸ்டிக் பாட்டில்களை தவிர்க்கவும்.

சிறந்த மாற்று: கண்ணாடி பாட்டில்கள் அல்லது உலோக பாட்டில்களை பயன்படுத்துவது.

சூடான பானங்களுக்கு பிளாஸ்டிக் பாட்டில்களை தவிர்க்க வேண்டும்.

பிளாஸ்டிக்கின் குறியீடுகளை (1-7) கவனித்து சரியான வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.


பிளாஸ்டிக் பாட்டில்கள் உடல் நலனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் நேரிடையாக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. எனவே, பாதுகாப்பான மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய வழிகளை தேர்ந்தெடுப்பது அவசியம்.

After 30 Years, I Met My Classmate Again / "Truly, deep rivers run silent."

After 30 Years, I Met My Classmate Again

It had been 30 years since I last met my classmate. When I saw him again in a hotel lobby, he appeared simple. He was dressed in modest clothes. I felt somewhat at ease.

He approached me, expressed his happiness in seeing me again, and greeted me warmly. Compared to me, he seemed to have fewer material comforts. We exchanged phone numbers and contact details. When I handed him my card, I noticed a genuine happiness on his face.

With pride, I offered to drop him home in my brand-new Range Rover and even showed him the car. But he politely declined, saying he had already called for his car, which looked quite old—a 2001 Honda.

The next day, I invited him to my home for lunch. I wanted to show him my success and wealth. He arrived in his car at my residence in Parkview. He seemed impressed by my home, though it was purchased on a mortgage.

We had lunch together, and he shared that he was involved in small businesses and real estate. I asked how I could help him, even offering to assist him with paying off any debts if needed. He simply smiled and declined, saying he was doing well.

He then invited me to visit his home soon. As his old car arrived, I felt a deep sense of gratitude to God for all that I had. I thought to myself, "Not all fingers are the same." I considered myself lucky to have a good job in a reputed company.

Two weeks later, my wife and I went to visit him. Initially, she was hesitant to join me, feeling unimpressed by his apparent status. But I convinced her by reminding her of our close friendship in college.

When we reached his estate, we asked for directions to his house. Everyone we encountered spoke about him with respect. His home turned out to be a beautiful and elegant 4-bedroom bungalow with space for four cars parked in front.

We stepped inside, and the house was simply but tastefully decorated. He welcomed us warmly, and lunch was served graciously.

During lunch, he casually asked about my Managing Director. To my surprise, he revealed they were friends. I noticed a corporate gift on one of his tables, bearing the name of the company I worked for. It was then I discovered that his company owned around 38% shares of the company I worked for.

I was stunned. I asked him about it, and he smiled and said, "That company is mine." He also revealed that the estate we were in was his.

I don’t remember when I started addressing him as "Sir."

I was deeply impressed. That day, I learned an invaluable lesson about humility. Appearances can be deceiving.

He noticed my discomfort. On our drive back home, I remained silent, and so did my wife. I could sense the thoughts running through her mind.

I glanced at myself in the car mirror. I was living with debts and financial burdens, while the man who paid my salary was leading a peaceful and simple life.

"Truly, deep rivers run silent."

Instead of living for others’ admiration, we should live for our own peace.

Monday, 23 December 2024

ட்ரோன் ஓட்டுநர் உரிமம் எடுத்திடுவீர்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

ட்ரோன் ஓட்டுநர் 
உரிமம் எடுத்திடுவீர். 
-----------------
-CMN SALEEM
----------------
அரபுநாடுகளின் போக்குவரத்தும் பொருள் விநியோகமும் நவீனமாகிறது.
  
தற்சமயம் யாரெல்லாம் அரபுநாடுகளில் ஒட்டுநர்களாக பணியாற்றுகிறீர்களோ உடனடியாக (கல்வித் தகுதியுடையவர்கள்) ட்ரோன் ஓட்டுநர் உரிமம் (Commercial Drone License ) எடுத்திடும் முயற்சிகளில் இறங்குவது நல்லது.

அமீரகத்தில் கார் ஓட்டுநர் உரிமம் எடுப்பதற்கு ஆகும் அதே செலவு தான் ட்ரோன் ஓட்டுநர் உரிமம் எடுப்பதற்கும் ஆகிறது.Dubai Civil Aviation Authority (CAA) இதற்கான பயிற்சிகளை அளிக்கிறது. 

மளிகை சாமான்கள் மருந்து காய்கறி மீன் கொரியர் உணவு டீ காபி இவற்றை ட்ரோன்கள் தான் இனி விநியோகிக்க இருக்கின்றன.ஈ மொய்ப்பது போல வானத்தில் ட்ரோன்கள் மொய்க்கப் போகின்றன.

விரைவில் Air Taxies வருகிறது.

அரபுநாடுகளில் இயங்கும் அந்தந்த ஊர் ஜமாஅத்கள் சமுதாய அமைப்புகள் இதற்கான விழிப்புணர்வு முகாம் நடத்தி ஆர்வப்படுத்தினால் இந்த துறையில் உருவாகப்போகும் பெரும்பாலான வேலைவாய்ப்புகளை நம் பிள்ளைகள் அடைந்து கொள்வார்கள்.

அதற்காக இப்போது கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் தயவு செய்து இதுபோன்ற ஓட்டுநர் வேலைக்கு செல்ல முயற்சிக்காதீர்.  

நீங்கள்...செயற்கை நுண்ணறிவு ட்ரோன்கள் (AI Drones) மற்றும் இராணுவ ட்ரோன்கள் ( Military Drones) உருவாக்கும் ஆராய்ச்சியாளர்களாக,ட்ரோன்களின் போக்குவரத்தை நிர்வகிக்கும் (UTM) வல்லுனர்களாக உருவாக வேண்டும் என்று இலக்கு வைத்துக் கொள்ளுங்கள். 

தமிழக அரபு மதரஸாக்களில் ஓதி முடித்து ஸனது வாங்கிய நூற்றுக்கணக்கான ஆலிம்கள் அரபுநாடுகளில் வீட்டு ஓட்டுநர்களாக பணியாற்றி வருகின்ற அவலத்தை இதுபோன்ற நவீனகால  வாய்ப்புகள் ஓரளவுக்கு குறைக்கும்.

உலகின் நவீனமான வாய்ப்புகளை அடைந்துகொள்ள முயற்சிப்பதும் அதில் முன்னேறி செல்லும் வேட்கையுடன் இருப்பதும் ஒரு இபாதத் தான். 

இதுபோன்று உருவாகும் வாய்ப்புகளை அறியாமல் இருப்பவர்களுக்கும் அல்லது துணிச்சலாக முயற்சி எடுக்கத் தெரியாதவர்களுக்கும் நம்பிக்கையூட்டி அவர்களுக்கு தொடர்ச்சியாக வழிகாட்டுவது அதைவிட மகத்துவமான இபாதத்.

Tuesday, 10 September 2024

ராஜ தர்மம்” நிலைநாட்ட யாரிங்கே இருக்கிறார்? சா.பீட்டர் அல்போன்ஸ்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

“ராஜ தர்மம்” நிலைநாட்ட யாரிங்கே இருக்கிறார்? -சா.பீட்டர் அல்போன்ஸ்
நமது நிருபர் ஆகஸ்ட் 30, 2024
சோமாலியா, ஏமன், சிரியா, சூடான் போன்ற  நாடுகளில் நடக்கும் சில நிகழ்வுகளை  தொலைக்காட்சியில் பார்க்கும்போது மிகவும் ஆச்சரி யமாக இருக்கும். உள்நாட்டுப்போர், இனச் சண்டை கள், சகோதர யுத்தங்கள் போன்ற வன்முறை வெறி யாட்டங்களுக்கு பல்லாண்டுகளாக பழகிப்போன அந்த மக்கள் பேரவலத்தையும், பெரும் அழிவுகளை யும் தவிர்க்கமுடியாத அன்றாட நிகழ்வுகளாகவே ஏற்றுக் கொண்டுள்ளார்கள். குண்டுகள் வீசப்பட்டு வீடுகள் ஒரு பகுதியில் பற்றி எரியும்போது அடுத்த பகுதியில் சிறுவர்கள் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருப்பார்கள். சக மனிதர்களின் கண்ணீரும், அழுகையும், மரணங்களும், பேரிழப்புகளும் இப்போ தெல்லாம் அவர்களை அதிகமாக பாதிப்பதில்லை. தங்களது வாழ்க்கைப் பயணத்தில் இப்படிப்பட்ட அசம்பாவிதங்களை அதிகமாக சந்திப்பதால் அவர் களது மனச்சாட்சிகள் மழுங்கி, இதயங்கள் மரத்துப் போனதுதான் உண்மை. இப்போதெல்லாம் நாமும் அப்படிப்பட்ட ஒரு சமூகச் சூழலை நோக்கித்தான் பயணிக்கிறோம் என்ற அச்சம் எனக்கு அடிக்கடி வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

வெறும் செய்தியாக, கடந்து போகலாமா?

கடந்த பத்தாண்டுகளாக மதம், சாதி, இனம் அடிப்படையில் நம் நாட்டில் நடக்கும் தனி மனித தாக்குதல்கள், சில குறிப்பிட்ட இன, மத மக்களை மற்றும் அவர்களது வாழ்வாதாரங்களை அழித்து நிர்மூலம் ஆக்குதல், பெண்களை அவமானப்படுத்தி அவர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கு தல், ஒரு சமூகத்தைச் சார்ந்த மக்களை துன்புறுத்தி அவர்களது வாழ்விடங்களை விட்டு விரட்டுதல் போன்ற  நிகழ்வுகள் நமது சமூகத்தின் பெரும்பகுதியினரால் ஒரு செய்தியாக மட்டுமே பார்க்கப்பட்டு மக்கள் சாதா ரணமாகவே கடந்து போவதைப் பார்க்க முடிகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் நண்பகல் நேரத்தில் ஒரு பெண்ணை வன்முறையாளன் ஒருவன் ஆயுதம் கொண்டு தாக்கி மானபங்கம் செய்யும்போது கூட, கூடுகின்ற கூட்டம் அதனை வீடியோ எடுத்து சமூக வலைத் தளத்தில் பகிர்ந்து லைக்ஸ் பெறவேண்டும் என்று துடிக்கிறதே தவிர வன்முறையாளனை தடுத்து  அப்பெண்ணை பாதுகாக்கவேண்டும் என்று கூட்டத்தில் பெரும்பாலோர் முயற்சிப்பதில்லை. ஒரு சக மனிதரின் அபயக்குரல், அவரது மரண ஓலம்,  அவரது வேதனை மற்றும் கண்ணீர் நம்மிடம் எவ்வித சலனத்தையும் உண்டாக்கவில்லையென்றால் நமது  சமூகம் எங்கேயோ அழுகிப் போகத் தொடங்கிவிட்ட தென்பதே காலம் நமக்குத் தரும் எச்சரிக்கை!

அரசாங்கமே வன்முறையாளராக...

வெறுப்பு, துவேஷம் ஆகியவற்றின் அடிப்படை யில் சில வழிதவறிய இளைஞர்களும், சில அசாதாரண நிகழ்வுகளால் ஆவேசமடையும் பொதுமக்களும் உணர்ச்சிவசப்பட்டு இதைப் போன்ற வன்முறை களில் ஈடுபடுவதைக்கூட நம்மால் புரிந்து கொள்ள  முடிகிறது. ஆனால் ஒரு அரசாங்கமே இதைப் போன்ற  வன்முறை வெறியாட்டங்களைத் தொடர்ந்து நிகழ்த்துவதையும், பொது சமூகமும், ஊடகங்களும், நீதிமன்றங்களும் மற்ற ஜனநாயக நிறுவனங்களும் இக்கொடுமைகளைக் கண்டும் காணாமல் கடந்து போவதை என்னவென்று சொல்வது?

கடந்த வாரம் மத்தியப் பிரதேசம் சந்தர்பூர் மாவட்டத்தில் நபிகள் நாயகம் பற்றி தவறாக பேசிய ராம்கிரி மகராஜ் என்ற இந்துமத தலைவர் மீது புகார் அளிக்க கூட்டமாக காவல் நிலையம் சென்ற இஸ்லாமியர்களை காவல் நிலையத்தில் போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளனர். இதனைத் தொடர்ந்த தள்ளுமுள்ளில் சில போலீசார் தாக்கப்பட்டதாக தெரியவருகிறது. இதன் பேரில் போலீசார் தொடர்ந்த வழக்கில்  இஸ்லாமிய சமூகத்தின் முக்கியப் பிரமுக ரான ஹாஜி ஷெஹ்சாத் அலி என்பவர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்படுகிறார். இவர் அந்த மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் என்றும் சொல்லப்படுகிறது. உடனடியாக அவரது வீடு புல்டோசர் கொண்டு முழுமையாக இடித்து தரை மட்டமாக்கப்படுகின்றது. இளம் பெண்கள்,  குழந்தைகள் மற்றும் வயோதிகர்கள் உட்பட அனை வரும் அடுத்த நேர உணவும் உடைகளும் இன்றி தெரு வில் நிற்கின்றனர். சட்டத்திற்கு விரோதமாக குற்றம்  செய்தவர்கள் மீது போலீசார் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதை நாம் குறை சொல்லவில்லை. ஆனால் இதில் எந்தவித தொடர்பும் இல்லாத குடும்ப உறுப்பினர்களை, வீடுகளை விட்டு வெளியேற்றி நடுத்தெருவில் நிறுத்துவது என்ன நியாயம்? இதனை “புல்டோசர் நியாயம்”என்று சொல்கிறது பாஜக.

புல்டோசர் பயங்கரம்

மத்தியப்பிரதேசத்தில் மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த புல்டோசர் நியாயம் அன்றாட நடைமுறையாக மாறிவிட்டது. இந்த நிகழ்வு களின்போது பாஜகவினர் கூட்டமாக கூடி நின்று  வீடுகளை இடிக்கும் அதிகாரிகளை உற்சாகப்படுத்து வதும், அவர்களுக்கு மாலைகள், சால்வைகள் அணி வித்துப் பாராட்டுவதும், அவற்றை வீடியோ எடுத்து  சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டாட்டங்கள் நடத்துவதும் தினசரி நிகழ்வாகிவிட்டன. அரசாங்கமே முன்னின்று நடத்தும் இந்த “அரசு பயங்கரவாதத் தால்” பாதிக்கப்படுகின்ற மக்களில் ஒரு சிலரைத் தவிர  அனைவருமே சிறுபான்மை இஸ்லாமியராக இருப்பது தான் இந்த புல்டோசர் நியாயத்தின் முக்கிய அம்சம்.

கொடிய முதல்வர்

2017 செப்டம்பர் மாதத்தில் உபி முதலமைச்சர் ஆதித்யநாத் “பெண்களுக்கும், சமூகத்தின் நலிந்த மக்களுக்கும் எதிராக குற்றம் செய்பவர் களின் சொத்துக்களை புல்டோசர் வைத்து இடித்து நியாயம் வழங்குவேன்” என்று பகிரங்கமாக அறி வித்தார். குற்றங்களுக்கு எதிராக உடனடியாக தான்  வழங்கும் இந்த நியாயத் தீர்ப்பு நடவடிக்கைகளில் சட்டம், நீதிமன்றம் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப் படப் போவதில்லை என்று சூசகமாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பாஜகவினர் ஆதித்யநாத்தை “புல்டோசர் பாபா” என்றழைத்து பாராட்டி மகிழ்ந்த னர். ஆனால் இந்த புல்டோசர் நியாயம் பெரும்பாலும் சிறுபான்மை இஸ்லாமியர்களை நோக்கி ஏவப் பட்டதுதான் தேசத்திற்கு ஏற்பட்ட பெரும் அவலம்.

“குற்றம் செய்தவர்கள் இஸ்லாமியர்களாக இருந்தால் மட்டுமே அவர்களது சொத்துக்கள் இடிக்கப்படும். மற்றவர்களுக்கு அது பொருந்தாது” என்று பிந்த் மாவட்ட ஆட்சியர் பேசியதாக வந்த  ஆடியோ பதிவு உச்சநீதிமன்றத்தின் பார்வைக்கே எடுத்துச்செல்லப்பட்டது. JCB கம்பெனியின் தயாரிப்பான புல்டோசர்களை வைத்து பள்ளி வாசல்கள், மதரஸாக்கள், இஸ்லாமியர்களின் வீடுகள் மற்றும் வியாபார நிலையங்களை இடித்து தள்ளுவ தால் பாஜகவினர் இந்த சட்டவிரோத நடவடிக்கை களை “Jihadi Control Board” என்று பெருமையுடன் அழைக்கின்றனர். பாஜக ஆள்கின்ற மாநிலங்களான அசாம், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிர தேசம் மற்றும் தில்லி யூனியன் பிரதேசம் ஆகிய  ஐந்து மாநிலங்களில் இது வரை 128 இஸ்லாமி யர்கள் தொடர்பான சொத்துக்கள் இடித்து தரை மட்டமாக்கப்பட்டதாகவும், அதனால் 617 குடும்பங்கள் தங்களது இருப்பிடங்களை இழந்துள்ளதாகவும். “அம்னெஸ்டி இன்டர்நேஷனல்” நிறுவனம் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. 

வீதியில் தவிக்கும் மக்கள்

பெரும்பாலும் இரவு நேரங்களில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு நீதிமன்றங்களை அணுக அவகாசம் கிடைப்பதில்லை. காவல் துறையினர் முதலில் வீடுகளுக்குள் புகுந்து குடியிருப்பவர்களை அடித்து விரட்டி விட்டு பொருட்களை அள்ளி வெளியே போடு வதாகவும் அதன் பின்னர் புல்டோசர் வைத்து இடிப்ப தாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் புகைப்படங்களோடு உச்சநீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளனர். கட்டிடங்களை இடிப்பதற்காக அரசு  சொல்லி வரும் காரணம் அக்கட்டிடங்கள் சட்டவிரோத மாக கட்டப்பட்டுள்ளன என்பதுதான். ஆனால்  இடிக்கப்பட்ட பல கட்டிடங்கள் பல ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் இருப்பவை. இடிக்கப்பட்ட இஸ்லாமியரின் கட்டிடங்களை ஒட்டி இருக்கின்ற இந்துக்களின் கட்டிடங்கள் சேதப்படுத்தப்படுவ தில்லை.

கடந்த வாரம் மத்தியப் பிரதேச அரசால் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட ஷெஹ்சாத் அலியின் வீடு ஒரு பெரிய பங்களா எனத் தெரிகிறது. அதனுள் நிறுத்தப்பட்டிருந்த விலை உயர்ந்த கார்களையும் அதிகாரிகள் புல்டோசரால் நொறுக்கியுள்ளனர். வீடு விதி மீறலாக கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதினாலும் கூட வாகனங்களை அடித்து நொறுக்கு வது ஏன் என்ற கேள்விக்கு அரசிடம் பதில் இல்லை. உரிமைகளுக்காகவும், நியாயம் கேட்டும் குரல் கொடுக்க முன்வரும் இஸ்லாமியர்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் விதைத்து அவர்களை வாய்  பேசாத ஜனங்களாக ஆக்குவதுதான் பாஜக அரசு களின் திட்டம்  என்கிற எண்ணம் இன்று வட இந்திய இஸ்லாமியர்கள் மத்தியில் பரவலாக நிலவி வருகிறது.

வெறுப்பால் நிறைந்த  குரூர மனங்கள்

இந்த அநியாயங்களை மகிழ்ச்சியோடு கொண்டாடுகின்ற வலதுசாரி பாசிச சக்திகள் இச் செயல்களையும் அதனை அரங்கேற்றும் அரசுகளை யும், அரசியல் தலைவர்களையும் “புல்டோசர் ராஜ்,  புல்டோசர் ஸ்டேட், புல்டோசர் நியாயம், புல்டோசர் பாபா, புல்டோசர் மாமா” என்றழைத்து பெருமைப் பட்டுக்கொள்வது அவர்களது மனம் எவ்வளவு வெறுப்பால் நிறைந்துள்ளது என்பதை காட்டுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆதித்யநாத் சென்ற இடங்களில் எல்லாம் புல்டோசர்களை நிறுத்தி வைத்து அவைகளால் அவருக்கு பெரிய மாலைகளை அணிவித்து, புல்டோ சர்களால் சிறுபான்மை மக்களது வாழ்விடங்களை இடிப்பது அவருடைய ஆட்சியின் பெரும் சாதனை என விளம்பி அதற்காகவே பாஜகவுக்கு வாக்களியுங் கள் என்று கேட்ட கொடுமையும் உ.பி.யில் நடந்தது. 

பிரதமரே ஏற்படுத்திய தலைகுனிவு

இதைவிட கொடுமையாக இந்திய ஜனநாயகமே வெட்கித் தலைகுனியும் அளவுக்கான ஒரு செயலை நமது பிரதமர் மோடியே செய்தார். “புல்டோசர் மூலமாக நீதியை நிலைநாட்டும் கலையை நன்றாக கற்றவர் ஆதித்யநாத்” என்று தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உச்ச குரலில் புகழ்ந்தார். அரசியல் சட்டமும், அரசு விதிகளும், இயற்கை நீதியும்,தனி மனித உரிமைகளும் ஒரு நாளும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு சட்ட விரோத செயலை செய்யும் ஒரு  மாநில முதலமைச்சரை நம் தேசத்தின் பிரதமரே அதற்காக பாராட்டுவது நமது வாக்கு சீட்டு அரசியல்  எவ்வளவு கேவலமான நிலைக்கு வந்துள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டு. அரசியல் சாசன மீறல் களை தட்டிக்கேட்டு,தனி மனித மாண்புக்கும் உரிமை களுக்கும் உத்தரவாதம் தருவதற்காகவே உரு வாக்கப்பட்ட நமது உச்ச நீதிமன்றம் கண்ணையும், காதையும், வாயையும் மூடிக்கொண்டிருப்பது நமக்கு  ஏற்பட்டுள்ள மற்றுமொரு மிகப்பெரும் சோகம்.

வங்கதேசத்தின் நிலை

சிறுபான்மை இஸ்லாமியரின் நிலை இங்கே இவ்வளவு மோசமாக இருக்கும் போது, நம் அண்டை நாடான  வங்கதேசத்தில் அங்கேயுள்ள சிறுபான்மை இந்துக்களின் நிலை அதைவிட மோசமாக இருப்பதை அறிந்து நமது நெஞ்சம் பதறுகிறது. உலகமெங்கும் மதம், இனம், சாதி, மொழி ஆகிய கலாச்சார அடை யாளங்களால் “சிறுபான்மையினர்” என்று அடையாளப்படுத்தப்பட்டவர்கள் “பேரினவாதம்” என்ற  பெரும்பான்மை தத்துவத்தின் பேரால் நசுக்கப் படுவதை தொடர்ந்து பார்த்து வருகிறோம். 

வங்கதேசத்தில் பல்லாண்டுகளாக வாழ்ந்து வரும் சிறுபான்மை இந்து மக்கள் தங்கள் வாழ்விடங் களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு இந்திய எல்லை களுக்கு அருகே ஆயிரக்கணக்கில் அநாதரவாக நிற்கின்றனர் என்ற செய்தி நம் இதயத்தைப் பிளக்கிறது. வங்கதேச இந்து, புத்திஸ்ட், கிறிஸ்டியன் கவுன்சிலின் நிர்வாகிகளும், பங்களா தேஷ் பூஜா உட்ஜப்பான் பரிஷத் நிர்வாகிகளும் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் அவர்களைச் சந்தித்து 250 இடங்களில் சிறுபான்மை மக்கள் பெரு மளவில் பாதிக்கப்பட்டுள்ள விபரங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை அளித்து பாதுகாப்பு கோரி யுள்ளனர். சிறுபான்மை மக்களது உணர்வுகளை மதித்து அவர்களையும் உடன் அழைத்துக்கொண்டு முகமது யூனுஸ் டாக்காவில் உள்ள தாரகேஸ்வரி இந்து  ஆலயத்திற்கு நேரில் சென்று சிறுபான்மை மக்க ளோடு தனது உடனிருப்பை உறுதி செய்துள்ளார்.

கிருஷ்ண ஜெயந்தி அன்று வங்கதேச தேசிய தொலைக்காட்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய அந்நாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், சிறுபான்மை இந்து மக்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களைத் தெரிவித்து இந்து, கிறித்தவ, புத்த மதங்களைச் சார்ந்தவர்களும் அந்நாட்டின் முழு உரிமையுள்ள குடிமக்கள் என்று அறிவித்து அவர்களையும் அவர் களது உரிமைகளையும் பாதுகாப்பது புதிய அரசின் முதல் கடமை என்று அறிவித்தார். இரண்டு நாடு களிலும் பாதிக்கப்பட்டவர்கள் மதங்களால் வேறு படுத்தப் பட்டிருந்தாலும்  அந்தந்த நாடுகளில் “சிறுபான்மையினர்” என அடையாளப்படுத்தப்பட்ட வர்களே! ஆனால் நம் நாட்டில் அரசுகளே முன்னின்று இக்கொடுமைகளை செய்வதுதான் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

வங்கதேசத்தில் வாழும் சிறுபான்மை மத மக்களின் துயரங்களும்,வேதனைகளும், அவர்கள் வாழும் பாதுகாப்பற்ற சூழ்நிலைகளும் நாளையே முடிவடைந்து விடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.ஆனால் மனித நேயத்தோடு, அமரர் வாஜ்பாய் அவர்களது வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால் “ராஜ தர்மத்தோடு” ஆட்சி செய்யவேண்டும் என்று நினைக்கின்ற ஒரு தலைவர் அவர்களுக்கு கிடைத்துள்ளார் என்ற வகையில் சற்று ஆறுதல் அடைகிறேன். அந்த ஆறுதல் நம் நாட்டு சிறுபான்மை மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று யாசிக்கின்றேன்.

சா.பீட்டர் அல்போன்ஸ்

மேனாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்

ரயில்வே துறையில் தொழில்நுட்பம் அல்லாத பிரிவில் 11,558 காலிப்பணியிடங்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 13.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மிஸ் பண்ணிடாதீங்க; அற்புதமான வாய்ப்பு: ரயில்வேயில் 11,558 காலிப்பணியிடம் அறிவிப்பு.

ரயில்வே துறையில் தொழில்நுட்பம் அல்லாத பிரிவில் 11,558 காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 13.

ரயில்வே துறையில் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத பிரிவின் கீழ் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தற்போது தொழில்நுட்பம் சாராத, முதுநிலை அலுவலர் பிரிவில் (graduate-level posts) 8,113 பணியிடங்கள், இளநிலை அலுவலர் பிரிவில் (undergraduate-level posts) 3,445 பணியிடங்கள் என மொத்தம் 11,558 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

டிகிரி முடித்தவர்களுக்கு காலியிடங்கள்
* டிக்கெட் மேற்பார்வையாளர் - 1,736,
* சரக்கு ரயில் மேலாளர் - 3,144,

* ஜூனியர் அக்கவுண்ட் அசிஸ்டண்ட் மற்றும் டைப்பிஸ்ட் - 1,507,

* சீனியர் கிளார்க் மற்றும் தட்டச்சர்- 732

12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு காலியிடங்கள்!
* கமர்ஷியல் கம் டிக்கெட் கிளார்க்- 2,022,
* கணக்கு எழுத்தர் மற்றும் டைப்பிஸ்ட்- 361,

* ஜூனியர் கிளார்க் மற்றும் டைப்பிஸ்ட்- 990,

கல்வி தகுதிகள் என்ன?
* வணிக தலைமை - டிக்கெட் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், சரக்கு ரயில் மேனேஜர், ஜூனியர் அக்கவுண்டண்ட் அஸ்சிஸ்டண்ட் டைபிஸ்ட் , சீனியர் கிளர்க் ஆகிய பணியிடங்களுக்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்து இருக்க வேண்டும்.
* சீனியர் கிளர்க், கமர்ஷியல், அக்கவுண்ட்ஸ் கிளர்க், ஜூனியர் கிளர்க், ரயில் கிளர்க் ஆகிய பணியிடங்களுக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டைப்பிஸ்ட் பணிக்கு தட்டச்சு திறன் அவசியம்.

வயது வரம்பு
* டிகிரி முடித்தவர்களுக்கு காலியிடங்களுக்கு 18 முதல் 39 வயதிற்குள் இருக்க வேண்டும்.
* இளநிலை அலுவலர் பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி
* முதுநிலை அலுவலர் பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு செப்டம்பர் 14 தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 13.
* இளநிலை அலுவலர் பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு செப்டம்பர் 21ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 20.

விண்ணப்ப கட்டணம்
* விண்ணப்ப கட்டணம் ரூ.500. எஸ்.சி, எஸ்.டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், சிறுபான்மையினர் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு கட்டணம் ரூ.250.

Thursday, 15 August 2024

இனி இயற்கை பேரிடர்கள் அதிகரிக்கத்தான் செய்யும்.

இனி இயற்கை பேரிடர்கள் அதிகரிக்கத்தான் செய்யும். பூமியின் காலநிலை கைமீறிப் போய்விட்டது.  

பேரிடர் மேலாண்மையில் ஈடுபடும் முஸ்லிம் அமைப்புகளுக்கு இனிவரும் காலங்களில் உயிரியல் துறையில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் வல்லுநர்கள் அதிகமாகத் தேவைப்படுவார்கள். 

இந்த  உயிரியல் வல்லுநர்களால் வயநாட்டில் நடைபெற்றது போன்ற சம்பவங்களின் மீட்பு பணிகளில் மிக நுட்பமாக செயல்பட்டு உயிர்களை விரைவாக காப்பாற்ற முடியும்.

உயிரியளவியல் (Biometric) தடயவியல் (Forensic) GPS போன்ற நவீன தொழில்நுட்பங்களின் கூட்டு உதவிகளுடன் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டவர்களை மிகத்துல்லியமாக கண்டறிந்து காப்பாற்றிட முடியும். 

அதேபோல பூமிக்குள் புதைந்துபோன உடல்களையும்  எளிதாக கண்டறிந்துவிட முடியும். நிலச்சரிவுகளை கூட யானைகளும் பறவைகளும் கணிப்பது போன்று ஏறக்குறைய கணித்திட முடியும். 

எவ்வளவு பெரிய பேரிடர் ஏற்பட்டாலும் தன் உயிரை துச்சமென கருதி மீட்புப் பணிகளில் களம் குதிக்கும் ஆன்மிகப் பயிற்சிபெற்ற ஆயிரக்கணக்கான சகோதரர்கள் முஸ்லிம் அமைப்புகளில் இருக்கின்றனர்.  

ஆனால் இதுபோன்ற பேரிடர்களில் மீட்புப் பணிகளை மரபணு மற்றும் உயிரியல் தொழில்நுட்ப உதவிகளுடன் மேற்கொள்ளும் வல்லுநர்கள் நம்மிடம் ஏறக்குறைய இல்லை.

Molecular Biology, Bioinformatics, Genetics,Forensic Biology, Remote Sensing, Artificial Intelligence, Data Science, Networking, Geoinformatics போன்ற உயிரி புவி மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களில் கூட்டாக ஆராய்ச்சி மேற்கொள்ளும் வல்லுனர்களின் பங்களிப்பு இருந்தால் ஆயிரக்கணக்கான உயிர்களை எளிதாக மீட்க பாதுகாக்க முடியும். 

இன்றைய உலகின் அதிநவீன ஆயுதமாக கருதப்படும் இந்த உயிரியல் அறிவையும் ஆராய்ச்சியாளர்களையும் வைத்துதான் மொசாத் போன்ற தீய சக்திகள் உலகம் முழுவதும் தங்களது எதிர்ப்பாளர்களை குறிவைத்து கொலை செய்கிறனர். 

இந்த உயிரியல் அறிவையும் ஆராய்ச்சியையும் மனித உயிர்களை காப்பாற்றும் ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு நாம் பயன்படுத்திட வேண்டும். 

இப்படிப்பட்ட உயிரியல் வல்லுநர்கள் அல்லாஹ்வின் அன்பிற்குரியவர்களாக உயர்ந்து நிற்பார்கள்.மேலும் இவர்கள் நம் நாட்டின் மதிப்புமிக்க சொத்துக்களாகவும் மாறிப்போவார்கள்.

பேரிடர் காலத்துக்கு மட்டும் என்றில்லை இனிவரும் காலத்துக்கு உயிர்களைக் காக்கும் உயிரியல் வல்லுநர்களைத் தான் முஸ்லிம் சமூகம் அதிகம் உருவாக்க வேண்டும்.

Monday, 3 June 2024

பின்னால் வரும் ஒவ்வொரு சமூகத்தினரும் பாடம் படிக்கும் பொருட்டு...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

வரலாறை மீட்டினால்...

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு கொடுங்கோலனையும் அல்லாஹ் வாழச் செய்தான்...

பதவி மமதையிலும்..

அடக்கி விட யாருமில்லை என்ற திமிரிலும்...

தன்னைவிட யாருமில்லை என்ற ஆணவத்திலும்...

நான் முடிவு செய்தது நடக்க வேண்டும் என்ற வைராக்கியத்திலும்...

ஆடாத ஆட்டம் போட்ட பலரை...

ஆடும் வரை ஆட விட்டுவிட்டு இறுதியில் இறைவன் தன் கடும் பிடியை கொண்டு அடக்கி விட்டான்...

பின்னால் வரும் ஒவ்வொரு சமூகத்தினரும் பாடம் படிக்கும் பொருட்டு...

பிர்அவ்ன் என்றும்...
காரூன் என்றும்...
ஹாமான் என்றும்...
நம்ரூத் என்றும்...
ஏரியல் ஷெரோன் என்றும்...
கமால் அதாதுர்க் என்றும்...

இன்னும் எத்தனையோ கொடுங்கோலர்கள்...

அந்த கொடுங்கோலர்கள் வரலாற்றில் இன்ஷா அல்லாஹ் வருங்கால சந்ததிகளும் ஒரு கொடுங்கோலனின் கொடுமைகளையும் இறைவனின் கடும்பிடிக்குள்ளாகி அவன் எவ்வாறு தடம் தெரியாமல் அழிக்கப்பட்டான் என்ற வரலாற்றையும் வருங்காலம் நிச்சயம் படிக்கும்...

"பெஞ்சமின் நெதன்யாஹூ" என்ற இரத்த வெறி பிடித்த இரத்தக்காட்டேரியின் வரலாறை...

" إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ "

#நிச்சயமாக_இறைவனின்_பிடி_மிகக்கடுமையானது

Thursday, 2 May 2024

இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார் தற்போது அதிபராக இருக்கும் ஜோ பைடன்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார் தற்போது அதிபராக இருக்கும் ஜோ பைடன். இதற்காக தீவிரமாக ஆதரவு திரட்டி வருகிறார். வாஷிங்டன்னில் நடந்த நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்று ஜோ பைடன் பேசியதாவது:-

சீனா ஏன் பொருளாதாரத்தில் மோசமடைந்துள்ளது. ஜப்பானும், ரஷ்யாவும், இந்தியாவும் ஏன் பொருளாதாரத்தில் தடுமாறுகிறார்கள். ஏனென்றால், அவர்கள் இனவெறி கொண்டவர்கள். அவர்களிடம் அந்நிய வெறுப்பு அதிகமாகியுள்ளது. மேலும், அவர்கள் புலம்பெயர்ந்தவர்களை விரும்புவதில்லை. ஆனால், அமெரிக்காவை புலம்பெயர்ந்தோர்தான் எங்களை வலிமையாக்குகிறார்கள். புலம்பெயர்ந்தவர்களை அமெரிக்கா வரவேற்கிறது. அதனால், அமெரிக்க பொருளாதாரம் வளர்ச்சியடைவதற்கு காரணம் அவர்கள் காரணமாக உள்ளார்கள். ஆனால், சீனா, ஜப்பான், ரஷ்யா, இந்தியா நாடுகளில் உள்ள அந்நிய வெறுப்பு அவர்களின் பொருளாதாரத்தை பாதிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tuesday, 12 March 2024

தமிழ் மருத்துவம் - 'வயிறு உப்புசமா இருக்கா?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ் மருத்துவம்🌿


சற்றே யோசிக்கலாமே 

சுமார் பதினான்காயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருந்து தொலைபேசியில்,  'அம்மா’  என்றழைத்த மகனின் முதல் சொல்லிலேயே,
ஏன்டா, சளி பிடிச்சிருக்கா? சரியாத் தூங்கலையா? குரல் கம்முது!  என்று கேட்டுப் பதறும் நம் அம்மாக்கள், எந்தப் பல்கலைக்கழகத்திலும்  எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றிருக்கவில்லை.

'வானம் வடக்கே கருக்கலா இருக்கு, மழை வருமாட்டு இருக்கு, மாடில காயிற வத்தலை எடுத்துட்டு வா’  என்று சொன்ன  பாட்டி  வானிலை அறிவியல் படித்தது இல்லை.

ஆடிப் பட்டம் தேடி விதை  என இன்றைக்கும் சொல்லும்  வரப்புக் குடியானவன் விவசாயக் கல்லூரிக்குள் மழைக்குக்கூட ஒதுங்கியது இல்லை.

மூத்த நாள் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்  எனப் பாடிய தேரன் சித்தர்  மைக்ரோபயாலஜி தேர்வுகளில் தேறியது இல்லை.

செந்தட்டிக்கும் ஓடைத் திருப்பிக்கும் கொஞ்சம் உடம்புக்கு ஆகலை. எங்கேயோ நின்னுட்டு இருக்குங்க புடிச்சிட்டு வாரேன்  எனச் சொல்லி மேய்ச்சல் நிலத்துக்கு ஓடும் சடையனுக்கு  60 ஆடுகளில் இரண்டை மட்டும் காணவில்லை என்பதைக் கண்டுபிடித்து, போதாக் குறைக்கு அதற்கு உடம்பும் சரியில்லை என்றும் சொல்லும் அறிவாற்றலை, எந்த வெர்ட்னரி கல்லூரிப் படிப்பும் அவருக்குக் கொடுத்தது இல்லை.

அப்புறம் எப்படி இவர்கள் எல்லாம் இப்படித் துல்லியமாகக் கணக்கிடுகிறார்கள்? 

அப்போது எங்கிருந்து வந்தது இந்த அறிவியல்? 
இப்போது எங்கே போனது அந்த அனுபவம்?

ஒவ்வொரு மனிதனும் அக்கறையுடன் அடுத்த தலைமுறைக்குக் கடத்திய காய்ப்பு உவப்பிலாத அனுபவம்தான் அந்த அறிவு.

வள்ளுவன்
   சொல்லும்
மெய்ப்பொருள் காணும் அறிவும்

பாரதி
   சொன்ன
விட்டு விடுதலையாயிருந்த மனமும்
   சில காலமாக ஒட்டு மொத்தமாகக் காணாமல் போனதில்தான் அத்தனை அறிவையும் இழந்து வருகிறோம்.

மம்மி
   எனக்கு
வொயிட் சட்னிதான்
   வேணும்,
க்ரீன் சட்னி
வைக்காதே, சொல்லிட்டேன்’ எனப் பள்ளி செல்லும் குழந்தை உத்தரவிடும் போது,
'எப்போது முதல் ஏசியன் பெயின்ட்டில் சட்னி செய்யத் தொடங்கினார்கள்?’ என்றே மனம் பதறுகிறது.

அந்தக் குழந்தையிடம், 'க்ரீன் சட் னின்னா என்ன தெரியுமா?’
எனக் கேட்டால் நிச்சயம் தெரிந்திருக்காது.

   ஏனென்றால், சொல்லித்தர அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நேரம் இல்லை.

இந்த மௌனங்களும், அவசரங்களும் தொலைத்தவை தான் அந்த அனுபவப் பாடம்!

   தொலைக்காட்சி விளம்பரங்கள் சொல்லிக் கொடுத்து 
புரோட்டின், கலோரி, விட்டமின்  பற்றிய ஞானம்  பெருகிய அளவுக்கு,
'கொள்ளும், கோழிக்கறியும் உடம்புக்குச் சூடு;
எள்ளும், சுரைக் காயும் குளிர்ச்சி.
பலாப் பழம் மாந்தம்.
பச்சைப் பழம் கபம்·
புளிதுவர் விஞ்சிக்கின் வாதம்
என்ற வார்த்தைகள் வழக்கொழிந்து போய்விட்டன.

   'அதென்ன சூடு, குளிர்ச்சி?
அப்படி எல்லாம் ஒண்ணும் கிடையாது !
இந்த தெர்மாமீட்டர்ல  உங்க சூடு எங்கேயாவது தெரியுதா?’ என இடைக்கால அறிவியலிடம் தோற்றுவிட்ட  அந்தக் கால அறிவியலின் அடையாளங்களை,  வணிக உலகமும் தன் பங்குக்குச் சிரச்சேதம் செய்துவிட்டது.

விளைவு?

   'லெஃப்ட் ஐப்ரோ ஸ்பெஷலிஸ்ட்கிட்ட நாளைக்கு ஒரு அப்பாயின்ட்மென்ட்’  எனும் அம்மா,
   'சாப்பிடவே மாட்டேங்கிறான்ல, அதான் 3,500 ரூபாய்க்கு இந்த எனர்ஜி டிரிங்க்’  என்று அக்கறை காட்டும் அப்பா.

   'ஃபியூஸ் போயிருச்சா? எனக்கு என்ன தெரியும்? போய் எலக்ட்ரீஷியனைக் கூப்பிடுங்க!’  என எரிந்துவிழும் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படித்த அண்ணன்  போன்றவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது.


   'வயிறு உப்புசமா இருக்கா?
   மாந்தமாயிருக்கும் கொஞ்சம் ஓமத்தை வாணலில லேசாக் கறுக்கி, நாலு டம்ளர் தண்ணி விட்டுக் கொதிக்க வெச்சு ராத்திரி கொடு’  என்ற அனுபவத்துக்குள் அறிவியல் ஒளிந்திருக்கிறது.

   ஏழு மாதக் குழந்தைக்கு மாந்தக் கழிச்சல் வந்தபோது,  வசம்பைச் சுட்டுக் கருக்கி, அந்தக் கரியைத் தாய்ப் பாலில் கலந்து கொடுத்த தாய்க்கு இன்று திட்டு விழுகிறது.

   'கைக் குழந்தைக்கு ஏன் வசம்பைக் கொடுத்தே?
குழந்தைகளுக்கு வசம்பைக் கொடுக்கக்கூடாதுனு அமெரிக்காவுல எச்சரிச்சிருக்காங்க’ என்று கரித்துக் கொட்டுகிறார்கள்.

   வசம்பில் 0.04 சதவிகிதம் மட்டுமே உள்ள அசரோன் என்ற  பொருள் நச்சுத்தன்மைக் கொண்டது  என இன்றைய விஞ்ஞானம் கண்டறிந்திருக்கலாம். ஆனால், வசம்பைச் சுட்டுக்கருக்கும்போது அந்த அசரோன்காணாமல் போய்விடும் என்பதை அன்றைய அனுபவ அறிவியல் உணர்ந்திருந்தது.

பேச்சு வர தாமதமாகும் குழந்தைக்கும், மாந்தக் கழிச்சலுக்கும், இன்னும் பல குழந்தை நோய்க்கும் மிக அற்புதமான மருந்தாக விளங்கும் வசம்புக்குப் பாட்டி வைத்தியப் பெயர் என்ன தெரியுமா?
'பிள்ளை-வளர்ப்பான்’!


'சளி பிடிச்சிருக்கா? கற்பூரவல்லில பஜ்ஜி போட்டுக் கொடுங்க.
மத்தியான ரசத்தில் கொத்தமல்லியோட கொஞ்சம் தூதுவளை, கொஞ்சம் துளசிப் போடுங்க;

   மலச் சிக்கல்ல கஷ்டப்படுறானா?
ராத்திரில பிஞ்சு கடுக்காயைக் கொட்டையை எடுத்துட்டு வறுத்து பொடி செஞ்சுக் கொடுங்க;

   சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சீரகம் இந்த அஞ்சையும் வறுத்துப் பொடிசெய்து, சரிக்குச் சரியா பனைவெல்லம் கலந்து மூணு சிட்டிகை கொடுத்தா, பசிக்கவே பசிக்காத பிள்ளை கன கனனுபசி எடுத்துச் சாப்பிடும்;

   வாய்ப் புண்ணுக்கு மணத்தக்காளி கீரையில சிறுபருப்பு போட்டு கொஞ்சம் தேங்காய்ப் பால் விட்டு, திருநெல்வேலி சொதி செஞ்சு கொடுங்க;

   பித்தக் கிறுகிறுப்புக்கு
முருங்கைக்காய் சூப்,

   மூட்டு வலிக்கு
முடக்கத் தான் அடை,

   மாதவிடாய் வலிக்கு
உளுத்தங்களி,

   குழந்தை கால்வலிக்கு
ராகிப் புட்டு,

   வயசுப் பெண் சோகைக்கு
கம்பஞ்சோறு,

வயசான தாத்தாவின் கால்வீக்கத்துக்கு
வாழைத்தண்டுப் பச்சடி’
     என விரியும் இந்தப் பட பட பட்டியலில் இடம் பெற்றிருக்கும் அத்தனையும்
சில நேரம் மருந்துகள்;
பல நேரம் மருத்துவ உணவுகள்.

     காப்புரிமைப் பிடியில்லா இந்த அடுப்பங்கரையின் அறிவியல் நம் தொன்மைச் சிறப்பு மட்டுமல்ல வரும் நாட்களில் தொற்று நோய்க் கூட்டத்தின் பிடியில் நாம் சிக்கித் தவிக்காமல் இருக்க உதவும் ஒரே வழி.

      சுழியத்தைக் (ஜீரோவை)
கண்டுபிடித்து இன்றைய கணிதத்தின் அச்சாணியைத் தந்த தேசம் இது.

   'பை’  என்றால் 22/7 என்ற பரிச்சயமே இல்லாத வெகு காலத்துக்கு முன்னரே, சுற்றளவுச் சூத்திரத்தைக் கச்சிதமாகத் தெரிந்துகொண்டு நிலத்தை அளந்த கொத்தனார்கள் புழங்கிய மண் இது.

   'ஆறறிவதுவே அதனொடு மனமே’
என மனதின் முதல் சூத்திரத்தை சிக்மண்ட் ஃப்ராய்டுக்கு 30 தலைமுறைகள் முன்பே சொன்ன
தொல் காப்பியம்
எழுதிய ஊர் இது.

   இத்தனை காலம் நாம் காத்து வந்த அறிவியலை, எந்த நெருக்கடியிலும் இழக்கலாமா?

பெயரில்லாது பரப்பப்படும் செய்தியாக இல்லாமல், யாரோ நமக்காக நேரம் செலவுசெய்து அனுப்பிய சிறந்த பாடமாகக்கருதி பகிரவும், அனைவரிடமும் கொண்டு சேர்க்கவும்.

Saturday, 18 October 2014

பார்த்திபனூர் ஜமாஅத் முக்கிய பிரமுகர் முகம்மது ஈசா அவர்களின் மகன் காதர் பாட்சா MA புனித ஹஜ்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

பார்த்திபனூர் ஜமாஅத் முக்கிய பிரமுகரம் மேலும் பரமக்குடி அன்னை ஆயிசா அறக்கட்டளையின் ஆலோசகரும்மான முகம்மது ஈசா அவர்களின் மகன் காதர் பாட்சா MA அவர்கள் புனித ஹஜ் பயனத்தை இனிதே முடித்து இன்று காலை 18-10-2014 சென்னை வந்து அடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்





அவர்களுடைய ஹஜ் அல்லாஹ் ஏற்றுக்கெள்வானாக. அனைவரும் துவா செய்யவும் .

சென்னையில் இருந்து பரமக்குடி யாசர்
துணை செயலாளர் - அன்னை ஆயிசா டிரஸ்ட்  

Sunday, 5 October 2014

பார்த்திபனூர் ஜமாஅத் மு.காதர் பட்சா புனித ஹஜ் 2014

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்லாஹ்வின் மாபொரும் கிருபையால் இந்த வருடம் 2014 ஹஜ் நல்லபடியாக முடிந்தது அல்ஹம்துலில்லாஹ் . பார்த்திபனூர் ஜமாஅத் மு.காதர் பட்சா புனித ஹஜ் முடித்து இன்ஷாஅல்லாஹ் 18-10-2014 சென்னை வருகிறார்கள்

மு.காதர் பட்சா


மு.காதர் பட்சா


மு.காதர் பட்சா & பரமக்குடி முகம்மது இபுராகிம் 


மு.காதர் பட்சா


படங்கள் : ஜபல் அரஃபா,மஸ்ஜித் நம்ரா (அரஃபாத்). 

கடந்த வருடத்தை விட 0.6 % மக்கள் அதிகமாக ஹஜ் செய்து இருக்கிறார்கள் 


Small increase in foreign pilgrims

October 2, 2014

The Minister of Interior announced today that 1,389,053 pilgrims from 163 nationalities have arrived in Saudi Arabia to perform this year's Hajj.  The figure reflects an increase of 8,545 (0.6 percent) over last year.

Ministry of Interior Prince Mohammed bin Naif bin Abdulaziz, who is also Chairman of the Supreme Hajj Committee, said in a report presented to the Custodian of the Two Holy Mosques King Abdullah bin Abdulaziz that 55 percent of this year's pilgrims are male.

The minister said that 1,315,850 pilgrims came by air, 59,204 by land and 13,999 by sea.

http://www.saudiembassy.net/latest_news/news10021401.aspx  







Sunday, 9 March 2014

விமானம் புறப்பாடுக்கு முன் தாய் மகன் எடுத்துக்கொண்ட புகைப்படம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

விமானம் புறப்பாடுக்கு முன் தாய் மகன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இது... ஆனால் இப்பொழுது விமானம் காணவில்லை.... இதுதான் நாம் வாழுகின்ற வாழ்கை.... ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிஷமும்
மரணம் நாம் அனைவரையும் நெருங்கி கொண்டுதான் இருக்கிறது... மறுமைக்கு அஞ்சி வாழுவோம் இன்ஷா அல்லாஹ்.

மரணம் வரும் வேலையில் நாம் எவ்வளவு பாதுகாப்பாக இருந்தாலும் அல்லது தகர்க்க முடியாத கோட்டையில் இருந்தாலும் சரி, எந்த நேரததில், எந்த இடத்தில், எப்படி மரணம் அடைய வேண்டும் என்று இறைவன் வகுத்து வைத்துள்ளானோ! அதில் சிறிது கூட கூடவோ அல்லது குறையவோச் செய்யாது.இது இறைவனால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒன்றே அன்றி வேறில்லை. இதையே நம்மை படைத்த இறைவன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்.
"நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! (போருக்குச் சென்ற முனாஃபிக்களூக்கு) ஏதேனும் ஒரு நன்மை ஏற்பட்டால் "இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது" என்று கூறுகிறார்கள்; ஆனால், அவர்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டாலோ, ";இது உம்மிடமிருந்துதான் ஏற்பட்டது" என்று கூறுகிறார்கள், (நபியே! அவர்களிடம்) கூறும்: "எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே வந்திருக்கின்றன; இந்த மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? எந்த ஒரு விஷயத்தையும் அவர்களுக்கு விளங்கிக் கொள்ள முடியவில்லையே" (4:78) 
மேலும்,
இன்னும், ஓர் ஆத்மா மற்றோர் ஆத்மாவிற்கு சிறிதும் பயன்பட முடியாதே (அந்த) ஒரு நாளை நீங்கள் அஞ்சி நடபீர்களாக! (அந்த நாளில்) எந்தப் பரிந்துரையும் அதற்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது; அதற்காக எந்தப் பதிலீடும் பெற்றுக் கொள்ளப்படமாட்டாது; அன்றியும் (பாவம் செய்த) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். (2:48)