Monday, 23 December 2024

ட்ரோன் ஓட்டுநர் உரிமம் எடுத்திடுவீர்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

ட்ரோன் ஓட்டுநர் 
உரிமம் எடுத்திடுவீர். 
-----------------
-CMN SALEEM
----------------
அரபுநாடுகளின் போக்குவரத்தும் பொருள் விநியோகமும் நவீனமாகிறது.
  
தற்சமயம் யாரெல்லாம் அரபுநாடுகளில் ஒட்டுநர்களாக பணியாற்றுகிறீர்களோ உடனடியாக (கல்வித் தகுதியுடையவர்கள்) ட்ரோன் ஓட்டுநர் உரிமம் (Commercial Drone License ) எடுத்திடும் முயற்சிகளில் இறங்குவது நல்லது.

அமீரகத்தில் கார் ஓட்டுநர் உரிமம் எடுப்பதற்கு ஆகும் அதே செலவு தான் ட்ரோன் ஓட்டுநர் உரிமம் எடுப்பதற்கும் ஆகிறது.Dubai Civil Aviation Authority (CAA) இதற்கான பயிற்சிகளை அளிக்கிறது. 

மளிகை சாமான்கள் மருந்து காய்கறி மீன் கொரியர் உணவு டீ காபி இவற்றை ட்ரோன்கள் தான் இனி விநியோகிக்க இருக்கின்றன.ஈ மொய்ப்பது போல வானத்தில் ட்ரோன்கள் மொய்க்கப் போகின்றன.

விரைவில் Air Taxies வருகிறது.

அரபுநாடுகளில் இயங்கும் அந்தந்த ஊர் ஜமாஅத்கள் சமுதாய அமைப்புகள் இதற்கான விழிப்புணர்வு முகாம் நடத்தி ஆர்வப்படுத்தினால் இந்த துறையில் உருவாகப்போகும் பெரும்பாலான வேலைவாய்ப்புகளை நம் பிள்ளைகள் அடைந்து கொள்வார்கள்.

அதற்காக இப்போது கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் தயவு செய்து இதுபோன்ற ஓட்டுநர் வேலைக்கு செல்ல முயற்சிக்காதீர்.  

நீங்கள்...செயற்கை நுண்ணறிவு ட்ரோன்கள் (AI Drones) மற்றும் இராணுவ ட்ரோன்கள் ( Military Drones) உருவாக்கும் ஆராய்ச்சியாளர்களாக,ட்ரோன்களின் போக்குவரத்தை நிர்வகிக்கும் (UTM) வல்லுனர்களாக உருவாக வேண்டும் என்று இலக்கு வைத்துக் கொள்ளுங்கள். 

தமிழக அரபு மதரஸாக்களில் ஓதி முடித்து ஸனது வாங்கிய நூற்றுக்கணக்கான ஆலிம்கள் அரபுநாடுகளில் வீட்டு ஓட்டுநர்களாக பணியாற்றி வருகின்ற அவலத்தை இதுபோன்ற நவீனகால  வாய்ப்புகள் ஓரளவுக்கு குறைக்கும்.

உலகின் நவீனமான வாய்ப்புகளை அடைந்துகொள்ள முயற்சிப்பதும் அதில் முன்னேறி செல்லும் வேட்கையுடன் இருப்பதும் ஒரு இபாதத் தான். 

இதுபோன்று உருவாகும் வாய்ப்புகளை அறியாமல் இருப்பவர்களுக்கும் அல்லது துணிச்சலாக முயற்சி எடுக்கத் தெரியாதவர்களுக்கும் நம்பிக்கையூட்டி அவர்களுக்கு தொடர்ச்சியாக வழிகாட்டுவது அதைவிட மகத்துவமான இபாதத்.

No comments:

Post a Comment