நண்பர்களே.. நண்பிகளே...ரகசியமா நிலம் வாங்குங்க. ரகசியமா வீட்டைக் கட்டுங்க. அப்புறம் கிரஹப்ரவேசத்துக்கு எல்லோருக்கும் சொல்லுங்க. அதுவரைக்கும் வாயை திறக்காதீங்க .
ரகசியமா காலேஜ் தேடுங்க,.. நல்ல கோர்ஸ்ல சேருங்க. அப்புறம் எல்லோருக்கும் சொல்லுங்க. அதுவரைக்கும் வாயை திறக்காதீங்க .
ரகசியமா நல்ல கார் பத்தி விசாரிங்க. ரகசியமா போய் வாங்குங்க. அப்புறம் எல்லோருக்கும் சொல்லுங்க. அதுவரை வாயை திறக்காதீங்க.
நல்ல வேல கிடைச்சிருச்சா? ரகசியமா வேலைல சேருங்க. அப்புறம் எல்லோருக்கும் சொல்லுங்க. அதுவரை வாயை திறக்காதீங்க.
ரகசியமா பொண்ணு பாருங்க. ரகசியமா சம்பந்தம் பண்ணுங்க. பிறகு எல்லாரையும் கூட்டி கல்யாணம் பண்ணுங்க. அதுவரைக்கும் வாயை திறக்காதீங்க .
நீங்க தோத்து போகணும்னு நினைக்கிறவங்க உங்க கூட தான் இருப்பாங்க. உங்களுக்கு தெரியாத யாரும் நீங்க தோத்து போகணும்னு நினைக்க மாட்டாங்க.
நீங்க நல்லா இருக்கணும்னு நினைக்கிறவங்க கூட அவுங்களை விட நீங்க நல்லா இருக்கிறத விரும்ப மாட்டாங்க.
செஸ் விளையாடும் போது நீங்கள் பேச மாட்டீங்க. நீங்கள் கவனமா செயல்படுவீங்க. விளையாட்டு உங்களுக்கு சாதகமா முடியும்போது போது "செக்மேட்" னு மட்டுமே பேசுவீங்க.
வாழ்க்கை என்பது சதுரங்க விளையாட்டு போன்றது. அடுத்து என்ன செய்ய போறிங்கனு வெளியே சொல்லாதீங்க. அமைதியாக செயல்படுங்கள். சாதித்துக் கொண்டே இருங்கள். உங்கள் சாதனைகள் தான் உங்கள் செக்மேட்.
வாழ்த்துக்கள் நண்பர்களே.. நண்பிகளே...
No comments:
Post a Comment