Showing posts with label முகாம். Show all posts
Showing posts with label முகாம். Show all posts

Monday, 30 December 2024

நீங்க தோத்து போகணும்னு நினைக்கிறவங்க உங்க கூட தான் இருப்பாங்க

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நண்பர்களே.. நண்பிகளே...ரகசியமா நிலம் வாங்குங்க. ரகசியமா வீட்டைக் கட்டுங்க. அப்புறம் எல்லோருக்கும் சொல்லுங்க. அதுவரைக்கும் வாயை திறக்காதீங்க .
ரகசியமா காலேஜ் தேடுங்க,.. நல்ல கோர்ஸ்ல சேருங்க. அப்புறம் எல்லோருக்கும் சொல்லுங்க. அதுவரைக்கும் வாயை திறக்காதீங்க .
ரகசியமா நல்ல கார் பத்தி விசாரிங்க. ரகசியமா போய் வாங்குங்க. அப்புறம் எல்லோருக்கும் சொல்லுங்க. அதுவரை வாயை திறக்காதீங்க.
நல்ல பிசினஸ் பண்ணுங்க. பிசினஸ் நல்லா நடக்குதா? நல்ல லாபம் வந்துச்சா? வாயை திறக்காதீங்க.
நல்ல வேல கிடைச்சிருச்சா? ரகசியமா வேலைல சேருங்க. அப்புறம் எல்லோருக்கும் சொல்லுங்க. அதுவரை வாயை திறக்காதீங்க.
ரகசியமா பொண்ணு பாருங்க. ரகசியமா சம்பந்தம் பண்ணுங்க. பிறகு எல்லாரையும் கூட்டி கல்யாணம் பண்ணுங்க. அதுவரைக்கும் வாயை திறக்காதீங்க .
நீங்க தோத்து போகணும்னு நினைக்கிறவங்க உங்க கூட தான் இருப்பாங்க. உங்களுக்கு தெரியாத யாரும் நீங்க தோத்து போகணும்னு நினைக்க மாட்டாங்க.
நீங்க நல்லா இருக்கணும்னு நினைக்கிறவங்க கூட அவுங்களை விட நீங்க நல்லா இருக்கிறத விரும்ப மாட்டாங்க.
செஸ் விளையாடும் போது நீங்கள் பேச மாட்டீங்க. நீங்கள் கவனமா செயல்படுவீங்க. விளையாட்டு உங்களுக்கு சாதகமா முடியும்போது போது "செக்மேட்" னு மட்டுமே பேசுவீங்க.
வாழ்க்கை என்பது சதுரங்க விளையாட்டு போன்றது. அடுத்து என்ன செய்ய போறிங்கனு வெளியே சொல்லாதீங்க. அமைதியாக செயல்படுங்கள். சாதித்துக் கொண்டே இருங்கள். உங்கள் சாதனைகள் தான் உங்கள் செக்மேட்.
வாழ்த்துக்கள் நண்பர்களே.. நண்பிகளே...

Sunday, 19 May 2024

#இராமநாதபுரம்_நகர்_தமுமுக_வின் #அவசர_இரத்ததான_சேவவை 🩸🩸

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

[7:07 pm, 18/05/2024] Saleemullah Khan: இன்று (18:05:2024) 
#இராமநாதபுரம்_நகர்_தமுமுக_வின்
#அவசர_இரத்ததான_சேவவை 🩸🩸

இரத்ததானம்!! 
மனித நேயத்தின் மிகச்சிறந்த  அடையாளம்!!! 

பிற உயிர்களை காப்பதற்கு இறைவனால் அளிக்கப்பட்ட மிக நல்ல சந்தர்ப்பம்!!!




ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார். (அல்குர்ஆன்_5:32)

🩸இராமநாதபுரம் செய்யது அம்மாள்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்
பாம்பன் ஊரைச் சேர்ந்த 
#ஜெலிலா_பேகம், பெண்மணிக்கு
B+பாசிட்டிவ் இரத்தம்...
ஷபீர் அஹமது அவர்கள் இரத்ததானம் செய்தனர்.

உடன்...
முகம்மது தமீம்
நகர் செயலாளர் ஏற்பாடு செய்திருந்தனர்.

#எல்லாப்_புகழும்_இறைவனுக்கே.

என்றென்றும் மக்கள் சேவையில்..!
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்.
மனித நேய மக்கள் கட்சி
மருத்துவ சேவை அணி
இராமநாதபுரம் நகர் .
9894485986,
9698047786,
9003317979,
7708083555,
9159737760,

கண் சிகிச்சை முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் 19-05-2024

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

19-05-2024 தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் 
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும்
இராமநாதபுரம் ஆரோக்கியா மருத்துவமனை இணைந்து 
கண் சிகிச்சை முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் கமுதி நகர தமுமுக கிளையின் சார்பாக கலாவிருத்தி மேல்நிலைப் பள்ளியில் முகாம் நடைபெற்றது.

 இந்த முகாம் மாவட்டத் தலைவர் எம்.வாவா ராவுத்தர் தலைமையில் முகாமை கமுதி காவல் ஆய்வாளர் குருநாதன் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

முகாமில் 250 க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்


Sunday, 12 May 2024

எந்த குருப் இரத்தம் எந்த குருப்போடு சேரும் 🩸🩸🩸🩸🩸🩸🩸

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

🩸🩸🩸🩸🩸🩸🩸

📌எந்த குருப் இரத்தம் எந்த குருப்போடு சேரும் என்பதை விளக்கும் படம். நல்ல பாடம் மனதில் பதிய வைத்துக்கொள்ளலாமே!


Thursday, 28 March 2024

#வெந்தயத்தில் டீயா? தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்*

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

#வெந்தயத்தில் டீயா? தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்*

ஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் தான் மேம்படுத்த உதவுகிறது. பலருக்கும் வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும் என்று தான் தெரியும். ஆனால் அதையும் தாண்டி, வெந்தயத்தில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்…
 

அதற்கு வெந்தயத்தை சமையலில் சேர்ப்பதோடு மட்டுமின்றி, அதைக் கொண்டு டீ தயாரித்துக் குடிக்கவும் செய்யலாம். உங்களுக்கு வெந்தய டீ எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். மேலும் வெந்தய டீயைக் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து உங்களது அன்றாட உணவில் அதை சேர்த்து நன்மைப் பெறுங்கள்.

வெந்தய டீ தயாரிப்பது எப்படி?

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து மூடி வைத்து 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

பின் அதை வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து, சூடாகவோ அல்லது குளிர்ச்சியான நிலையிலோ குடியுங்கள்.

இப்போது வெந்தய டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் காண்போம்.

 

நன்மை 1

மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலி மற்றும் பிடிப்புக்களை சந்திப்பார்கள். இந்த சமயத்தில் வெந்தய டீயைக் குடித்தால், வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

நன்மை 2

பூப்படையும் வயதில் உள்ள சிறுமிகள் வெந்தய டீயைக் குடிப்பது நல்லது. இதனால் மார்பகங்களின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் இந்த டீ நீர் தேக்கத்தைத் தூண்டுவதோடு, வளர்ச்சி ஹார்மோன்களையும் ஊக்குவிக்கும்.

நன்மை 3

ஒருவர் தினமும் வெந்தய டீயை குடித்து வந்தால், தற்போது நிறைய பேர் சந்திக்கும் சர்க்கரை நோய் மற்றும் டைப்-2 சர்க்கரை நோயின் தாக்கத்தைத் தடுக்கலாம்.

நன்மை 4

கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளதா? அதைத் தவிர்க்க தினமும் வெந்தய டீ குடியுங்கள். இதனால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை குறைவதோடு, இரத்த சர்க்கரை அளவும் குறையும்

நன்மை 5

வெந்தய டீ மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படும். ஆகவே மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் இருக்க நினைப்பவர்கள், தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள்.

 

நன்மை 6

வெந்தய டீ உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுத்து, உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

நன்மை 7

குடல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீ குடியுங்கள். இது கழிவுகளை உடலில் இருந்து எளிதில் வெளியேற்றும்.

நன்மை 8

உலகில் இதய நோயால் அவஸ்தைப்படுவோரின் எண்ணிக்கை அதிகம். இத்தகைய இதய நோயின் தாக்கத்தைத் தடுக்க வேண்டுமெனில், தினமும் ஒரு கப் வெந்தய டீ குடியுங்கள்.

நன்மை 9

வைட்டமின் பி1 குறைபாட்டினால் ஏற்படும் பெரி பெரி நோயின் தாக்கத்தை வெந்தய டீ குறைக்க உதவும். ஆகவே அன்றாட டயட்டில் வெந்தய டீயை தவறாமல் சேர்த்து வாருங்கள்.

நன்மை 10

பிரசவத்தை நெருங்கும் கர்ப்பிணிப் பெண்கள் வெந்தய டீயைக் குடித்தால், அது பிரசவ வலியைத் தூண்டுவதோடு, எளிதில் பிரசவம் நடக்கவும் உதவி புரியும்.

நன்மை 11

ஆண்கள் மற்றும் பெண்கள் தினமும் வெந்தய டீ குடிப்பதன் மூலும், அவர்களின் பாலியல் வாழ்க்கை சிறக்கும். ஏனெனில் இந்த டீ உடலின் பாலுணர்ச்சியைத் தூண்டி, உறவில் சிறப்பாக ஈடுபட உதவும்.

நன்மை 12

வெந்தய டீயில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இதை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தொடர்ந்து குடித்து வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதோடு, தாய்ப்பாலில் சத்துக்களும் அதிகரிக்கும்.

நன்மை 13

வெந்தய டீயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஏராளமாக அடங்கியுள்ளது. ஆகவே மூட்டு வலி, முழங்கால் வலி உள்ளவர்கள், வெந்தய டீயைக் குடித்து வந்தால், இந்த பிரச்சனையில் இருந்து முழுவதுமாக தடுக்கலாம்.

நன்மை 14

வெந்தயம் மிகச்சிறந்த சளி கரைப்பான். ஆகவே உங்களுக்கு சைனஸ் மற்றும் சளித் தொல்லை அதிகம் இருந்தால், தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

 

நன்மை 15

வெந்தயம் சிறுநீர் பெருக்கியாக செயல்படும். ஒருவர் தினமும் பலமுறை சிறுநீர் கழிப்பதன் மூலம், இரத்தத்தில் உள்ள கசடுகள் வெளியேறும். வெந்தய டீயைக் குடித்தால், அடிக்கடி சிறுநீரைக் கழிக்கலாம்.

நன்மை 16

காய்ச்சல் அடிக்கும் போது, கண்ட மாத்திரைகளைப் போடாமல், ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள். இதனால் காய்ச்சல் உடனே குறைந்துவிடும்.

நன்மை 17

வெந்தய டீ பொடுகைப் போக்கும். அதற்கு தலைக்கு ஷாம்பு போட்டு முடியை அலசிய பின், இந்த வெந்தய டீயால் தலைமுடியை அலசி, பின் கண்டிஷனர் பயன்படுத்துங்கள். இப்படி செய்வதால் பொடுகு போய்விடும்.

நன்மை 18

வெந்தய டீ தொண்டைப் புண்ணை குணப்படுத்தும். அதற்கு வெந்தய டீயை சூடாக குடிக்க வேண்டும்.

நன்மை 19

வாய் புண் அல்லது வாய் அல்சர் உள்ளதா? அப்படியெனில் தினமும் வெந்தய டீயால் வாயைக் கொப்பளியுங்கள். இப்படி தினமும் வாய் புண் போகும் வரை செய்யுங்கள்.

நன்மை 20

வெந்தய டீ வாய் துர்நாற்ற பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். அதிலும் வெந்தய டீயை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால், உடல் துர்நாற்ற பிரச்சனை நீங்கும்.

Sunday, 24 March 2024

காசநோய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்கள் 32 குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.20-03-2024

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

உணவு பொருட்கள் 32 குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.20-03-2024

இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் காசநோய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கல் 

 பிளாசம் தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் தமிழ்நாடு மு

ஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூலம் ஊட்டச்சத்து உணவு பொருட்கள் 32 பேருக்கு வழங்கப்பட்டது.

இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் காலை 11 மணி அளவில் இராமநாதபுரம் தேசிய காசநோய் தடுப்பு திட்டத்தின் துணை இயக்குனர் மருத்துவர் 
ரமேஷ் அவர்கள் 
தமுமுக  மாநில துணை பொதுச்செயலாளர் சலிமுல்லாகான் அவர்களும் 32 குடும்பஙகளுக்கு ஒரு குடும்பத்திற்க்கு 700 ரூபாய் மதிப்புள்ள உணவு பொருட்கள் வழங்கப்பட்டது

மாவட்ட தலைவர் பிரிமியர் இப்ராகிம் மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம் கிழக்கு மாவட்ட பொருளாளர் பனைக்குளம் பரகத்துல்லா மாவட்ட துணை செயலாளர் சுலைமான் ஜாஹிர் பாபு பனைக்குளம் தமுமுக நிர்வாகிள் ஹாஜா  நஜிமுதீன் பாலகிருஷ்ணன் அர்ஜீனா குமார் பிளாசம் தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதிகளும் பேசிய காசநோய் தடுப்பு திட்டத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள்.

எல்லா புகழும் இறைவனுக்கே...

தகவல்/ செய்தி
தமுமுக இராமநாதபுரம்

Tuesday, 19 March 2024

இது விளம்பரத்திற்காக அல்ல விழிப்புணர்வுக்காக

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,.

ரத்த தானம் செய்வோம் 
மனித நேயம் காப்போம்

இது விளம்பரத்திற்காக அல்ல விழிப்புணர்வுக்காக

குடியாத்தம் ஒன்றிய தமுமுகவின் சார்பில் காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள பெண்மணிக்கு ஒரு யூனிட் ரத்த தானம் செய்யப்பட்டது


ஒன்றிய ஊடக அணி செயலாளர் 
J.அப்துல் ரஹ்மான் ஒரு யூனிட் ரத்ததானம் செய்தார்..

என்றும் மனிதநேய பணியில் 
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்
மனிதநேய மக்கள் கட்சி
வேலூர் மேற்கு மாவட்டம்

Sunday, 10 March 2024

Ramnad - Thinathanthi


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இரத்ததானம்!! மனித நேயத்தின் மிகச்சிறந்த அடையாளம்!!!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


இன்று (05:03:2024) 
#இராமநாதபுரம்_நகர்_தமுமுக_வின்
#அவசர_இரத்ததான_சேவவை


இரத்ததானம்!! 
மனித நேயத்தின் மிகச்சிறந்த  அடையாளம்!!! 

பிற உயிர்களை காப்பதற்கு இறைவனால் அளிக்கப்பட்ட மிக நல்ல சந்தர்ப்பம்!!!

ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா 
மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார். (அல்குர்ஆன்_5:32)

�இராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்
இராமநாதபுரம் ஊரைச் சேர்ந்த 
தேவிஹா  சகோதரிக்கு 
 0+பாசிட்டிவ் இரத்தம்
தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் சுலைமான்  அவர்கள் இரத்ததானம் செய்தனர்.

உடன்..
சந்ரு
தமுமுக ஆம்புலன்ஸ் டிரைவர் 
இராமநாதபுரம் 

#எல்லாப்_புகழும்_இறைவனுக்கே.

என்றென்றும் மக்கள் சேவையில்..!
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்.
மனித நேய மக்கள் கட்சி
மருத்துவ சேவை அணி
இராமநாதபுரம் நகர் .
9894485986,
9698047786  ,
9003317979,
 77080 83555,
915-973-7760,

Wednesday, 6 March 2024

05/03/2024 சேந்தமங்கலம் அரசு தாலுக்கா மருத்துவமனை / மாபெரும் தோல் நோய் கண்டறியும் முகாமிற்கு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இன்று 05/03/2024 சேந்தமங்கலம் அரசு தாலுக்கா மருத்துவமனை, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மருத்துவ சேவை அணி சேந்தமங்கலம் நகரம் இணைந்து நடத்திய மாபெரும் தோல் நோய் கண்டறியும் முகாமிற்கு 100க்கு மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்.



Tuesday, 5 March 2024

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இரத்த பற்றாக்குறை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


04.03.2024





தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மதுரை வடக்கு மாவட்டம் மருத்துவ சேவை அணியின் சார்பாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இரத்த பற்றாக்குறை அவசர  தேவைக்காக ஐந்து யூனிட் ரத்தம் வழங்கப்பட்டது

தமுமுக தகவல் தொழில்நுட்ப அணி 

மதுரை வடக்கு மாவட்டம்

Monday, 4 November 2013

சிறப்பாக நடைபெற்ற துபாய் மண்டல தேரா கிளையின் இஸ்லாமிய நிகழ்ச்சி.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

1-11-2013 அன்று வெள்ளிக்கிழமை இரவு 8:30, மணியளவில் துபாய் தேரா கிளையின் சார்பாக இஸ்லாமிய சொற்பொழிவு நடைப்பெற்றது சகோதரர் A.S.இப்ராஹீம் அவர்கள் நபி [ஸல்] அவர்களின் எச்சரிக்கை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்,தனது உரையில் இணைவைப்பின் தீங்கைப் பற்றி நபி [ஸல்] அவர்கள் கூறிய எச்சரிக்கைகளை எடுத்துரைத்தார்இந்நிகழ்வில் திரளான சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயன் அடைந்தார்கள்.எல்லாப் புகழும் இறைவனுக்கே!       
  



அன்புடன் 

முஹைதீன் 
 0503762170.


Saturday, 12 October 2013

DUBAI மன மாற்றத்தை ஏற்படுத்திய உணர்வாய் உன்னை! பயிற்சி முகாம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


மன மாற்றத்தை ஏற்படுத்திய உணர்வாய் உன்னை! பயிற்சி முகாம்

உணர்வாய் உன்னை என்ற ஆளுமைத்திறன் யிற்சி முகாம் அக்டோபர் 11ம் தேதி பட்ஸ்பப்ளிக் பள்ளி ஆடிட்டோரியத்தில் பிரேம் நஸீர் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுசாதிக்  அக்மல் அவர்கள் வரவேற்புரையாற்றநிகழ்ச்சியை ஜலாலுதீன் அவர்கள்அறிமுகவுரையாற்றி துவக்கிவைத்தார்









   பல்வேறு ஆளுமைத் திறனை வளர்க்கக் கூடிய முறைகளைக் குறித்து மனிதவள மேம்பாட்டுபயிற்சியாளர் ஹூசைன் பாஷா அவர்கள் பயிற்சியளித்தார்.

கலந்துக்கொண்டவர்களுக்கு பயிற்சி குறிப்பேடுகள், சிற்றுண்டி வழங்கப்பட்டது. A.S. இப்ராஹிம் அவர்கள் நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை சென்னை நூர் புவுன்டேஷன், பரமக்குடி அன்னை ஆயிஷா(ரலி) அறக்கட்டளை நிர்வாகிகள்உள்ளிட்டோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Saturday, 1 January 2011

தர்பியா முகாம்

                                         அல்லாஹ்வின் திருப்பெயரால்...

துபை மண்டல நிர்வாகிகளுக்கான தர்பியா முகாம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் துபை மண்டலத்தின் சார்பாக ஜனவரி அன்று துபை மண்டல நிர்வாகிகளுக்கான தர்பியா முகாம் மண்டலத் தலைவர் அப்துல் காதர் அவர்கள் தலைமையில்  அல் தவார் பூங்காவில்  நடைப்பெற்றது,

நிகழ்வின் ஆரம்பமாக சகோதரர் நாகூர் சையத் அலி அவர்கள் படைத்தவனுக்கும் படைப்பினங்களுக்கும் செய்யவேண்டிய கடமைகள் என்ற தலைப்பின் கீழாக உரையாற்றினார், அவரது உரையில் படைப்பினங்களுக்கு செய்யவேண்டிய முக்கிய கடமைகளில் அவர்களை சுவனத்திற்கு அழைத்துச் செல்லும் ஒரே மார்க்கமாம் இஸ்லாத்தின் பக்கம் ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையும் அழைப்பதுதான் நம் மீது உள்ள முக்கிய கடமை என்று எடுத்துரைத்தார்.

அதன் பிறகு அமீரக தமுமுக துணைத்தலைவர் சகோதரர் ஹுசைன் பாஷா அவர்கள் உளவியல் பாதிப்பு  என்ற தலைப்பின் கீழாக உரையாற்றினார், தனது உரையில் உளவியல் பாதிப்புகளை தடுக்கும் வழிமுறைகளை எடுத்துரைத்தார்.

தொடர்ந்து சகோதரர் A.S. இப்ராகிம் அவர்கள்  இஸ்லாம் விரும்பும் கூட்டமைப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார், முஸ்லிம் ஜமாஅத் எப்படி இருக்கவேண்டும் என்பதைப்பற்றியும், ஜமாத்தின் நிர்வாகிகளின் செயல்பாடுகளை எந்தவகையில் அமைத்துக் கொள்ளவேண்டும் என்பதையும், யாருக்காக நமது பணியை அமைத்துக் கொள்ளவேண்டும் என்பதைப் பற்றியும் தெளிவாக விளக்கினார். நமது பனியின் இலக்கு இறைவனின் திருப்தியை அடைவதை மட்டுமே நோக்கமாக இருக்கவேண்டும் என்பதை எடுத்துரைத்தார்.
இறுதியாக மண்டல செயலாளர் அதிரை சாகுல் அவர்கள் கலந்துக் கொண்ட நிவாகிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டு தர்பியா நிகழ்வை நிறைவு செய்தார், எல்லாப்புகழும் இறைவனுக்கே.


நிகழ்ச்சியின் துளிகள்-

ஜனவரி அன்று அமீரகம் முழுவதும் விடுமுறை என்பதால் இன்ப சுற்றுலா செல்லக் கூடிய முஸ்லிம் சகோதரர்கள் மத்தியில், நம்மை சுயப் பரிசோதனை செய்வதற்காக நடத்தப்பட்ட நிகழ்வில் துபை மண்டல தமுமுகவின் முக்கிய நிர்வாகிகள்  கலந்துக் கொண்டு தங்களை மெருகூட்டிக் கொண்டார்கள். 


டிசம்பர் 31 -12 -2010 , அன்று இரவு சோனாப்பூர் பகுதியில் இளையான்குடியை சார்ந்த உடையப்பன் என்ற சகோதரர் தன்னை இஸ்லாத்தில் இணைத்து இஸ்ஹாக் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார் (எல்லாப்புகழும் இறைவனுக்கே) சகோதரர் இஸ்ஹாக் அவர்கள் நிகழ்வில் அழைக்கப்பட்டு கழக சகோதர்கள் மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டார்.
சகோதரர் இஸ்ஹாக் அவர்களை  அறிமுகம் செய்கிறார்  ஹுசைன் பாஷா


ஹுசைன் பாஷா உரையாற்றுகிறார்

ஆர்வத்துடன் உரையை கேட்கும் கழக கண்மணிகள்



சகோதரர் A.S. இப்ராஹீம் அவர்கள் உரையாற்றுகிறார்

எல்லாப்புகழும் இறைவனுக்கே.