இனி இயற்கை பேரிடர்கள் அதிகரிக்கத்தான் செய்யும். பூமியின் காலநிலை கைமீறிப் போய்விட்டது.
பேரிடர் மேலாண்மையில் ஈடுபடும் முஸ்லிம் அமைப்புகளுக்கு இனிவரும் காலங்களில் உயிரியல் துறையில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் வல்லுநர்கள் அதிகமாகத் தேவைப்படுவார்கள்.
இந்த உயிரியல் வல்லுநர்களால் வயநாட்டில் நடைபெற்றது போன்ற சம்பவங்களின் மீட்பு பணிகளில் மிக நுட்பமாக செயல்பட்டு உயிர்களை விரைவாக காப்பாற்ற முடியும்.
உயிரியளவியல் (Biometric) தடயவியல் (Forensic) GPS போன்ற நவீன தொழில்நுட்பங்களின் கூட்டு உதவிகளுடன் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டவர்களை மிகத்துல்லியமாக கண்டறிந்து காப்பாற்றிட முடியும்.
அதேபோல பூமிக்குள் புதைந்துபோன உடல்களையும் எளிதாக கண்டறிந்துவிட முடியும். நிலச்சரிவுகளை கூட யானைகளும் பறவைகளும் கணிப்பது போன்று ஏறக்குறைய கணித்திட முடியும்.
எவ்வளவு பெரிய பேரிடர் ஏற்பட்டாலும் தன் உயிரை துச்சமென கருதி மீட்புப் பணிகளில் களம் குதிக்கும் ஆன்மிகப் பயிற்சிபெற்ற ஆயிரக்கணக்கான சகோதரர்கள் முஸ்லிம் அமைப்புகளில் இருக்கின்றனர்.
ஆனால் இதுபோன்ற பேரிடர்களில் மீட்புப் பணிகளை மரபணு மற்றும் உயிரியல் தொழில்நுட்ப உதவிகளுடன் மேற்கொள்ளும் வல்லுநர்கள் நம்மிடம் ஏறக்குறைய இல்லை.
Molecular Biology, Bioinformatics, Genetics,Forensic Biology, Remote Sensing, Artificial Intelligence, Data Science, Networking, Geoinformatics போன்ற உயிரி புவி மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களில் கூட்டாக ஆராய்ச்சி மேற்கொள்ளும் வல்லுனர்களின் பங்களிப்பு இருந்தால் ஆயிரக்கணக்கான உயிர்களை எளிதாக மீட்க பாதுகாக்க முடியும்.
இன்றைய உலகின் அதிநவீன ஆயுதமாக கருதப்படும் இந்த உயிரியல் அறிவையும் ஆராய்ச்சியாளர்களையும் வைத்துதான் மொசாத் போன்ற தீய சக்திகள் உலகம் முழுவதும் தங்களது எதிர்ப்பாளர்களை குறிவைத்து கொலை செய்கிறனர்.
இந்த உயிரியல் அறிவையும் ஆராய்ச்சியையும் மனித உயிர்களை காப்பாற்றும் ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு நாம் பயன்படுத்திட வேண்டும்.
இப்படிப்பட்ட உயிரியல் வல்லுநர்கள் அல்லாஹ்வின் அன்பிற்குரியவர்களாக உயர்ந்து நிற்பார்கள்.மேலும் இவர்கள் நம் நாட்டின் மதிப்புமிக்க சொத்துக்களாகவும் மாறிப்போவார்கள்.
பேரிடர் காலத்துக்கு மட்டும் என்றில்லை இனிவரும் காலத்துக்கு உயிர்களைக் காக்கும் உயிரியல் வல்லுநர்களைத் தான் முஸ்லிம் சமூகம் அதிகம் உருவாக்க வேண்டும்.
No comments:
Post a Comment