Thursday 15 August 2024

வக்ஃப் திருத்த மசோதா 2024 நன்மைகள் மற்றும் ஆபத்துகள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

வக்ஃப் திருத்த மசோதா 2024 நன்மைகள் மற்றும் ஆபத்துகள்' என்ற தலைப்பில், மஹாராஷ்டிர மாநில வக்ஃப் வாரியத்தின் ஓய்வுபெற்ற தலைமை நிர்வாக அதிகாரி ஷேக் அப்துல் ரவுஃப் ஊடகவியலாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் வழங்கிய ஒரு பவர் பாயிண்ட் சிம்போசியத்தின் போது.... புதிய வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவின் மறைக்கப்பட்ட ஆபத்துகள் ஐந்து முக்கியமான உட்பிரிவுகளில் மறைக்கப்பட்டுள்ளதாக அப்துல் ரவூஃப் கூறினார். 

அதில், புதிய சட்டத்திருத்த்தில்... CWC (Central Waqf Council) எனும் மத்திய வஃக்ப் சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை அளவு தற்போதுள்ள 14-ல் இருந்து 21 உறுப்பினர்களாகவும், மேலும் ஒரு தலைவர் சேர்த்து... ஆக மொத்தம் 22 ஆக அதிகரிப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், புதிய சட்டத்திருத்தப்படி... CWC-யில்... 10 முஸ்லிம்கள் மட்டுமே இருப்பார்கள் என்றும்... அந்த 10 முஸ்லிம்களில்தான் இரண்டு முஸ்லிம் பெண்களும் இருக்க வேண்டும் என்றும். மீதமுள்ளவர்கள் 12 பேர்... அரசு நியமனம் என்பதால்... அவர்கள் முஸ்லிம்களாகவோ அல்லது முஸ்லிமல்லாதவர்களாகவோ இருக்கலாம் எனவும்... ஆக... முஸ்லிம் அல்லாதவர்கள் குறைந்தபட்சம் 2 பேர் முதல் அதிகபட்சம் 12 ஆக இருக்கலாம் எனவும்... இதனால்... சென்ட்ரல் வக்ஃப் கவுன்சிலில் மொத்தம் உள்ள 22 பேரில் 12 பேர் முஸ்லிம் அல்லாதவர்கள் மெஜாரிட்டி ஆக இருக்க முடியும்” என்றார்.

அடுத்து 11 பேர் கொண்ட ஸ்டேட் வக்ஃப் போர்ட் (SWB) பற்றி பார்க்கலாம்.  

“மாநில வக்ஃப் வாரியங்கள் இப்போது புதிய சட்டத்திருத்தப்படி, முஸ்லீம் அல்லாத ஒருவரை அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) வைத்திருக்க முடியும். அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்படும், வாரியத்தின் தலைவர், 2 எம்பி மற்றும் 2 எம்எல்ஏ இனிமேல் முஸ்லிம்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை;  பொதுப்பிரிவிலிருந்து இருக்கலாம்' என்பதால்.. ஒவ்வொரு வாரிய குழுவிலும் உள்ள முஸலிம் அல்லாதவர்கள் எண்ணிக்கை 6 ஆகிவிடும். முஸ்லிம்களின் எண்ணிக்கையோ... முத்தவல்லி, மத அறிஞர் மற்றும் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் மூவர் என்று 5 ஆக குறைந்து விடுகிறது. 

இப்படியாக... முஸ்லிம்களின் மத விவகாரங்களை தலைமை தாங்கி நிர்வாகம் செய்வோரில்.... பெரும்பான்மை முஸ்லிம் அல்லாதவர்களை கொண்டு வாரியம் நிரப்பப்பட முடியும்,” என்றார்.

லிங்க் : https://timesofindia.indiatimes.com/city/nagpur/new-waqf-act-to-reduce-muslim-members-on-central-council/articleshow/112435180.cms

அவ்ளோதான்... முடிஞ்சதா வக்ஃப் கதை..?! 

முதல் நாள் அன்றே சொன்னேன்... இது....
#முஸ்லிம்களின்_சொத்துகளை_திருடும்_சட்டம் என்று..!

"முஸ்லிம் அல்லாதவர்கள் நியமனம்" என்கிற இடங்களில் நிச்சயமாக பாஜக ஆளும் ஒன்றிய & மாநில அரசுகள்... ஒருபோதும் கிறிஸ்துவர்களையோ, சீக்கியர்களையோ, ஜைனர்களையோ, பெளத்தர்களையோ, பார்சிகளையோ, நாத்திகர்களையோ, இந்துக்களையோ... நியமிக்காது. RSS-பாஜகவின் சங்கிளை மட்டுத்தான் அங்கே நியமிக்கும்..! இதை... 100% உறுதியாக கூறுகிறேன். இதன்மூலம்... வக்ஃப் போர்டுகள் இனி... "சங்கி போர்டாக" மாறிவிடும். 

அதன் பிறகு... "இந்த 500 ஆண்டுகால முஸ்லிம்களின் பள்ளிவாசல் வக்ஃப் சொத்து இல்லை. வக்ஃப் சொத்து என்று கூற எந்த ஆதாரமும் எங்களிடம் இல்லை..." என்று வக்ஃப் வாரி... ஸாரி...ஸாரி... "சங்கி வாரியம்" கலெக்டரிடம் கூறிவிட்டால்.... அடுத்த நொடியே நூறு புல்டோசர்கள் அங்கே வந்து... "சட்டப்படியான அரசு நடவடிக்கை" மூலம்... அது தரை மட்டமாக இடிக்கப்பட்டு விடும். 

ர(த்)த யாத்திரை, கலவரம், கரசேவை, ஆட்சிக்கலைப்பு,  இந்திய தொல்லியல் துறையின் அகழ்வாராய்ச்சி, ஊடக கருத்துருவாக்க கட்டமைப்பு மற்றும் திணிப்பு, ஹை கோர்ட்டு கட்ட பஞ்சாயத்து தீர்ப்பு, சுப்ரீம் கோர்ட்டு நில(பண்ட)மாற்று தீர்ப்பு, ஜட்ஜ்களுக்கு  நியமன எம்பி பதவி, கவனர் பதவி, வெளிநாட்டு தூதர் பதவி... இதெல்லாம் இனிமேல் தேவையே இல்லை சகோ.

பாபர் மஸ்ஜித் என்கிற 460 ஆண்டுகால வக்ஃப் சொத்தை திருட சங்கிகள் 70 வருடம் அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு சட்டவிரோதமாக போராடியது போல... இனி போராடத் தேவை இல்லை. வெறும்... 7 நிமிஷம் போதும். இனி அவ்ர்கள் விரும்பும் முஸ்லிம்களின் நிலமெல்லாம்... வேண்டிய மஸ்ஜித் கட்டிடங்கள் எல்லாம் இனி அவர்களுக்கே சொந்தமாகி விடும்.

No comments:

Post a Comment