Showing posts with label மகளிர். Show all posts
Showing posts with label மகளிர். Show all posts

Monday, 13 January 2025

வாழ்க்கையில இரண்டே தத்துவங்கள்தான்....

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

வாழ்க்கையில இரண்டே தத்துவங்கள்தான்....
கொஞ்ச நாள் பொறுத்தால் எல்லாம் மாறிவிடும்...
கொஞ்ச நாள் போகப்போக எல்லாம் பழகிவிடும்

Tuesday, 10 September 2024

உணவு முறைப் பழக்கம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

உணவு முறைப் பழக்கம்
~~~~~~~~

இரவில் சீக்கிரமே சாப்பிடச் சொல்கிறார்களே ஏன் தெரியுமா....?

 இன்றைய பரபரப்பான காலக்கட்டத்தில் அலுவலகம், தொழில்,   வேலை, வணிகம், குடும்பம்   என நிறைய கடமைகள் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றன.

இதையெல்லாம் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து சேருவதற்குள் தாமதமாகி விடுகிறது. 

எனினும்  இரவு நாம் உண்ணும் உணவை முடிந்த வரை சீக்கிரம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். 

அப்படி இரவில் சீக்கிரம் உணவை உண்பதால் ஏற்படும் பயன்களைப் பற்றித்தான்  இந்தப் பதிவு


இரவில் சீக்கிரமாக உணவு சாப்பிடுவதால் அதை சரி செய்ய உடலுறுப்புகளுக்கு போதுமான நேரம் கிடைக்கும். 

இதனால் செரிமான அமைப்பு சுமூகமாக செயல்பட வழிவகுக்கும். 

ஆனால் பலரும் இரவில் தாமதமாக உண்பதால் செரிமான உறுப்புகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். 

இதனால் இரவு உணவு செரிமானமாக தாமதமாகும்.

இரவு தாமதமாக உண்பதன் மூலம் தூக்கம் தடைப்படும்.

உணவை ஜீரணிக்க உறுப்புகள் அதிக நேரம் எடுத்துக்கொள்வதால் தூக்கம் நிச்சயம் தடைப்படும். 

இதுவே உணவை நேரத்தோடு உண்ணும்போது சீக்கிரமே ஜீரணமாகி நல்ல ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகுக்கும்.

இரவு தூங்கும் போது உடல் இயற்கையாகவே புத்துணர்ச்சி பெறுவதற்கான செயல்பாட்டில் ஈடுபடும். 

ஆனால் இரவு தாமதமாக சாப்பிடுவதால் உடலில் உள்ள ஆற்றல் முழுவதுமே உணவை ஜீரணிக்கவே செலவாகிவிடும்.

இதனால் அடுத்த நாள் மந்தமான, சோர்வான உணர்வை கொடுக்கும்.

சீக்கிரம் சாப்பிடுவதன் மூலம் சீக்கிரம் ஜீரணம் ஆகிவிடுவதால், அடுத்த நாள் எந்த மந்தத்தன்மையும் இல்லாமல் புத்துணர்ச்சியுடன் செயலாற்றலாம்.

உணவிலிருந்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உடலுக்குப் போதுமான நேரம் கிடைக்க வேண்டும்.

இரவு உணவை முன்கூட்டியே உண்பதால் அதிக நேரம் கிடைக்கும். 

இதனால் உணவிலிருந்து ஊட்டச்சத்துகளை உறிஞ்சும் வேலை சுறுசுறுப்பாக நடைபெறும்.

அதேசமயம் உணவை தாமதமாக உண்ணும் போது இந்த செயல்முறையும் தாமதமாகும்.

தூங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு அதிக உணவை எடுத்துக்கொண்டால் உடலில் சக்கரையை அதிகரிக்கும்.

இது நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

இரவு நேரமே உண்பதால் சீக்கிரம் செரிமானம் ஆவதன் காரணமாக இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

வளர்சிதை மாற்றத்தில் கோளாறுகள் ஏற்படுவதையும் தடுக்கும்.

உடலின் மொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

வளர்சிதை மாற்றத்தின் செயல்பாடு இரவு நேரங்களிலும் மாலை நேரங்களிலும் குறைந்து விடும்.

இதனால் இரவு தாமதமாக உண்பதால் அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படாமல் கொழுப்பாக உடலில் சேர்ந்துவிடும். 

இதனால் உடல் எடை அதிகரிக்கும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இரவில் உணவை சீக்கிரம் உண்ண வேண்டியது மிகவும் அவசியமாகும்!

இரவு நேரம் குடும்பத்துடன் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டால் தாமதமாக சாப்பிடும் பழக்கம் மாறிவிடும்.

நிறைவாக உணவை மருந்தாக்குவோம்..! மருந்தை உணவாக்க வேண்டாம்...!

                                     ~ அமுதம் புக்ஸ்

Tuesday, 12 March 2024

தமிழ் மருத்துவம் - 'வயிறு உப்புசமா இருக்கா?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ் மருத்துவம்🌿


சற்றே யோசிக்கலாமே 

சுமார் பதினான்காயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருந்து தொலைபேசியில்,  'அம்மா’  என்றழைத்த மகனின் முதல் சொல்லிலேயே,
ஏன்டா, சளி பிடிச்சிருக்கா? சரியாத் தூங்கலையா? குரல் கம்முது!  என்று கேட்டுப் பதறும் நம் அம்மாக்கள், எந்தப் பல்கலைக்கழகத்திலும்  எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றிருக்கவில்லை.

'வானம் வடக்கே கருக்கலா இருக்கு, மழை வருமாட்டு இருக்கு, மாடில காயிற வத்தலை எடுத்துட்டு வா’  என்று சொன்ன  பாட்டி  வானிலை அறிவியல் படித்தது இல்லை.

ஆடிப் பட்டம் தேடி விதை  என இன்றைக்கும் சொல்லும்  வரப்புக் குடியானவன் விவசாயக் கல்லூரிக்குள் மழைக்குக்கூட ஒதுங்கியது இல்லை.

மூத்த நாள் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்  எனப் பாடிய தேரன் சித்தர்  மைக்ரோபயாலஜி தேர்வுகளில் தேறியது இல்லை.

செந்தட்டிக்கும் ஓடைத் திருப்பிக்கும் கொஞ்சம் உடம்புக்கு ஆகலை. எங்கேயோ நின்னுட்டு இருக்குங்க புடிச்சிட்டு வாரேன்  எனச் சொல்லி மேய்ச்சல் நிலத்துக்கு ஓடும் சடையனுக்கு  60 ஆடுகளில் இரண்டை மட்டும் காணவில்லை என்பதைக் கண்டுபிடித்து, போதாக் குறைக்கு அதற்கு உடம்பும் சரியில்லை என்றும் சொல்லும் அறிவாற்றலை, எந்த வெர்ட்னரி கல்லூரிப் படிப்பும் அவருக்குக் கொடுத்தது இல்லை.

அப்புறம் எப்படி இவர்கள் எல்லாம் இப்படித் துல்லியமாகக் கணக்கிடுகிறார்கள்? 

அப்போது எங்கிருந்து வந்தது இந்த அறிவியல்? 
இப்போது எங்கே போனது அந்த அனுபவம்?

ஒவ்வொரு மனிதனும் அக்கறையுடன் அடுத்த தலைமுறைக்குக் கடத்திய காய்ப்பு உவப்பிலாத அனுபவம்தான் அந்த அறிவு.

வள்ளுவன்
   சொல்லும்
மெய்ப்பொருள் காணும் அறிவும்

பாரதி
   சொன்ன
விட்டு விடுதலையாயிருந்த மனமும்
   சில காலமாக ஒட்டு மொத்தமாகக் காணாமல் போனதில்தான் அத்தனை அறிவையும் இழந்து வருகிறோம்.

மம்மி
   எனக்கு
வொயிட் சட்னிதான்
   வேணும்,
க்ரீன் சட்னி
வைக்காதே, சொல்லிட்டேன்’ எனப் பள்ளி செல்லும் குழந்தை உத்தரவிடும் போது,
'எப்போது முதல் ஏசியன் பெயின்ட்டில் சட்னி செய்யத் தொடங்கினார்கள்?’ என்றே மனம் பதறுகிறது.

அந்தக் குழந்தையிடம், 'க்ரீன் சட் னின்னா என்ன தெரியுமா?’
எனக் கேட்டால் நிச்சயம் தெரிந்திருக்காது.

   ஏனென்றால், சொல்லித்தர அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நேரம் இல்லை.

இந்த மௌனங்களும், அவசரங்களும் தொலைத்தவை தான் அந்த அனுபவப் பாடம்!

   தொலைக்காட்சி விளம்பரங்கள் சொல்லிக் கொடுத்து 
புரோட்டின், கலோரி, விட்டமின்  பற்றிய ஞானம்  பெருகிய அளவுக்கு,
'கொள்ளும், கோழிக்கறியும் உடம்புக்குச் சூடு;
எள்ளும், சுரைக் காயும் குளிர்ச்சி.
பலாப் பழம் மாந்தம்.
பச்சைப் பழம் கபம்·
புளிதுவர் விஞ்சிக்கின் வாதம்
என்ற வார்த்தைகள் வழக்கொழிந்து போய்விட்டன.

   'அதென்ன சூடு, குளிர்ச்சி?
அப்படி எல்லாம் ஒண்ணும் கிடையாது !
இந்த தெர்மாமீட்டர்ல  உங்க சூடு எங்கேயாவது தெரியுதா?’ என இடைக்கால அறிவியலிடம் தோற்றுவிட்ட  அந்தக் கால அறிவியலின் அடையாளங்களை,  வணிக உலகமும் தன் பங்குக்குச் சிரச்சேதம் செய்துவிட்டது.

விளைவு?

   'லெஃப்ட் ஐப்ரோ ஸ்பெஷலிஸ்ட்கிட்ட நாளைக்கு ஒரு அப்பாயின்ட்மென்ட்’  எனும் அம்மா,
   'சாப்பிடவே மாட்டேங்கிறான்ல, அதான் 3,500 ரூபாய்க்கு இந்த எனர்ஜி டிரிங்க்’  என்று அக்கறை காட்டும் அப்பா.

   'ஃபியூஸ் போயிருச்சா? எனக்கு என்ன தெரியும்? போய் எலக்ட்ரீஷியனைக் கூப்பிடுங்க!’  என எரிந்துவிழும் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படித்த அண்ணன்  போன்றவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது.


   'வயிறு உப்புசமா இருக்கா?
   மாந்தமாயிருக்கும் கொஞ்சம் ஓமத்தை வாணலில லேசாக் கறுக்கி, நாலு டம்ளர் தண்ணி விட்டுக் கொதிக்க வெச்சு ராத்திரி கொடு’  என்ற அனுபவத்துக்குள் அறிவியல் ஒளிந்திருக்கிறது.

   ஏழு மாதக் குழந்தைக்கு மாந்தக் கழிச்சல் வந்தபோது,  வசம்பைச் சுட்டுக் கருக்கி, அந்தக் கரியைத் தாய்ப் பாலில் கலந்து கொடுத்த தாய்க்கு இன்று திட்டு விழுகிறது.

   'கைக் குழந்தைக்கு ஏன் வசம்பைக் கொடுத்தே?
குழந்தைகளுக்கு வசம்பைக் கொடுக்கக்கூடாதுனு அமெரிக்காவுல எச்சரிச்சிருக்காங்க’ என்று கரித்துக் கொட்டுகிறார்கள்.

   வசம்பில் 0.04 சதவிகிதம் மட்டுமே உள்ள அசரோன் என்ற  பொருள் நச்சுத்தன்மைக் கொண்டது  என இன்றைய விஞ்ஞானம் கண்டறிந்திருக்கலாம். ஆனால், வசம்பைச் சுட்டுக்கருக்கும்போது அந்த அசரோன்காணாமல் போய்விடும் என்பதை அன்றைய அனுபவ அறிவியல் உணர்ந்திருந்தது.

பேச்சு வர தாமதமாகும் குழந்தைக்கும், மாந்தக் கழிச்சலுக்கும், இன்னும் பல குழந்தை நோய்க்கும் மிக அற்புதமான மருந்தாக விளங்கும் வசம்புக்குப் பாட்டி வைத்தியப் பெயர் என்ன தெரியுமா?
'பிள்ளை-வளர்ப்பான்’!


'சளி பிடிச்சிருக்கா? கற்பூரவல்லில பஜ்ஜி போட்டுக் கொடுங்க.
மத்தியான ரசத்தில் கொத்தமல்லியோட கொஞ்சம் தூதுவளை, கொஞ்சம் துளசிப் போடுங்க;

   மலச் சிக்கல்ல கஷ்டப்படுறானா?
ராத்திரில பிஞ்சு கடுக்காயைக் கொட்டையை எடுத்துட்டு வறுத்து பொடி செஞ்சுக் கொடுங்க;

   சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சீரகம் இந்த அஞ்சையும் வறுத்துப் பொடிசெய்து, சரிக்குச் சரியா பனைவெல்லம் கலந்து மூணு சிட்டிகை கொடுத்தா, பசிக்கவே பசிக்காத பிள்ளை கன கனனுபசி எடுத்துச் சாப்பிடும்;

   வாய்ப் புண்ணுக்கு மணத்தக்காளி கீரையில சிறுபருப்பு போட்டு கொஞ்சம் தேங்காய்ப் பால் விட்டு, திருநெல்வேலி சொதி செஞ்சு கொடுங்க;

   பித்தக் கிறுகிறுப்புக்கு
முருங்கைக்காய் சூப்,

   மூட்டு வலிக்கு
முடக்கத் தான் அடை,

   மாதவிடாய் வலிக்கு
உளுத்தங்களி,

   குழந்தை கால்வலிக்கு
ராகிப் புட்டு,

   வயசுப் பெண் சோகைக்கு
கம்பஞ்சோறு,

வயசான தாத்தாவின் கால்வீக்கத்துக்கு
வாழைத்தண்டுப் பச்சடி’
     என விரியும் இந்தப் பட பட பட்டியலில் இடம் பெற்றிருக்கும் அத்தனையும்
சில நேரம் மருந்துகள்;
பல நேரம் மருத்துவ உணவுகள்.

     காப்புரிமைப் பிடியில்லா இந்த அடுப்பங்கரையின் அறிவியல் நம் தொன்மைச் சிறப்பு மட்டுமல்ல வரும் நாட்களில் தொற்று நோய்க் கூட்டத்தின் பிடியில் நாம் சிக்கித் தவிக்காமல் இருக்க உதவும் ஒரே வழி.

      சுழியத்தைக் (ஜீரோவை)
கண்டுபிடித்து இன்றைய கணிதத்தின் அச்சாணியைத் தந்த தேசம் இது.

   'பை’  என்றால் 22/7 என்ற பரிச்சயமே இல்லாத வெகு காலத்துக்கு முன்னரே, சுற்றளவுச் சூத்திரத்தைக் கச்சிதமாகத் தெரிந்துகொண்டு நிலத்தை அளந்த கொத்தனார்கள் புழங்கிய மண் இது.

   'ஆறறிவதுவே அதனொடு மனமே’
என மனதின் முதல் சூத்திரத்தை சிக்மண்ட் ஃப்ராய்டுக்கு 30 தலைமுறைகள் முன்பே சொன்ன
தொல் காப்பியம்
எழுதிய ஊர் இது.

   இத்தனை காலம் நாம் காத்து வந்த அறிவியலை, எந்த நெருக்கடியிலும் இழக்கலாமா?

பெயரில்லாது பரப்பப்படும் செய்தியாக இல்லாமல், யாரோ நமக்காக நேரம் செலவுசெய்து அனுப்பிய சிறந்த பாடமாகக்கருதி பகிரவும், அனைவரிடமும் கொண்டு சேர்க்கவும்.

Thursday, 7 March 2024

ஆண்களின் வெற்றிக்கு பெண்களே காரணம் / Women are responsible for men's success

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

Women are responsible for men's success

ஆண்களின் வெற்றிக்கு பின்னால், பெண்கள் இருப்பது போன்று, பெண்களின் வெற்றிக்கு பின்னாலும் ஆண்கள் இருக்க வேண்டும். பெண்களின் திறமையை அடையாளம் கண்டு, அவர்களை ஊக்குவித்து, அடுத்த நிலைக்கு அவர்களை உயர்த்துவது, அந்த பெண் சார்ந்த ஆண் உறவுகளின் கடமை.



தேவையான அரசு சான்றிதழ்களை இனி உங்கள் மொபைல் போனில் நீங்களே விண்ணப்பிக்கலாம்.

👁️‍🗨️நமக்கு தேவையான அரசு சான்றிதழ்களை இனி உங்கள் மொபைல் போனில் நீங்களே விண்ணப்பிக்கலாம்.

👁️‍🗨️வருமானச் சான்றிதழ் விண்ணப்பிக்க
         👇


👁️‍🗨️சாதிச் சான்றிதழ் விண்ணப்பிக்க
           👇


👁️‍🗨️இருப்பிடச் சான்றிதழ் விண்ணப்பிக்க
              👇


👁️‍🗨️ஓபிசி சான்றிதழ் விண்ணப்பிக்க
               👇
 

👁️‍🗨️வாரிசு சான்றிதழ் விண்ணப்பிக்க
             👇

👁️‍🗨️முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிக்க
        

👁️‍🗨️விதவை சான்றிதழ் விண்ணப்பிக்க
               👇


👁️‍🗨️கணவணால் கைவிடபட்ட பெண் சான்றிதழ் விண்ணப்பிக்க
               👇
https://www.tnesevai.tn.gov.in/Citizen 

 



Tuesday, 8 October 2013

உண்ணுவதன், பருகுவதன் ஒழுங்கு முறைகள்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்லாஹ் கூறுகின்றான்:
“(நம்   தூதர்கள் ஒவ்வொருவரிடத்திலும்:) தூதர்களே! நல்ல பொருள்களிலிருந்தே நீங்கள்   உண்ணுங்கள்; (ஸாலிஹான) நல்லமல்களை செய்யுங்கள்; நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான்   நன்கு அறிபவன்’ (23:51)
அல்லாஹ்   அருளிய ஆகாரத்திலிருந்து உண்ணுங்கள், பருகுங்கள்; பூமியில் குழப்பஞ்செய்து கொண்டு   திரியாதீர்கள்” (2;60)
ஆரம்பத்தில் அல்லாஹ்வின் பெயரைக் கூற   மறந்துவிட்டால்!
بسمِ اللهِ أَوَّلَهُ وَآخِرَهُ
உங்களில்   ஒருவர் சாப்பிட்டால் அல்லாஹ்வின் பெயரை (பிஸ்மில்லாஹிஎன்று) கூறி (ஆரம்பம்   செய்யட்டும்). ஆரம்பத்தில் அல்லாஹ்வின் பெயரை கூற மறந்து (இடையில் நினைவு   வந்து)விட்டால்
பிஸ்மில்லாஹி அவ்வலஹூ வஆகிரஹூ
எனக் கூறட்டும் என நபி (ஸல்) அவர்கள்   கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்: அபூதாவுத், திர்மிதி.
பொருள்: இதன்   ஆரம்பத்திலும் இறுதியிலும் அல்லாஹ்வின் திருப் பெயர் கொண்டு (நான் உண்கிறேன்)
பிஸ்மில்லாஹ் கூறாமல் சாப்பிட்டால்   அவ்வுணவு ஷைத்தானுக்கு போய் சேருகிறது!
நபி   ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள், ‘பிஸ்மில்லாஹ்கூறாத உணவை   ஷைத்தான் ஆகுமாக்கிக் கொள்கிறான்.”  அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலியல்லாஹு அன்ஹு)-   ஆதாரம்: முஸ்லிம.;
நின்றுகொண்டு நீர் அருந்துவது கூடாது!
நின்றுக்   கொண்டு நீர் அருந்துவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்அறிவிப்பவர்: அபூ   ஸயீத் அல்-குத்ரி, ஆதாரம்: முஸ்லிம்.
உங்களில்   எவரும் நின்றுக்கொண்டு நீர் குடிக்க வேண்டாம். மறந்து குடித்திருந்தால் வாந்தி   எடுக்கட்டும்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி);   ஆதாரம்: முஸ்லிம்.
  நிர்பந்தமான சூழ்நிலைகளில் நின்று கொண்டு குடித்தல்!
நபி (ஸல்) அவர்கள ஸம் ஸம்தண்ணீரை நின்றவர்களாகக் குடித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)  நூல்: புகாரி
அலீ (ரலி) அவர்கள் நின்றவர்களாகக் குடித்தார்கள். பிறகு கூறினார்கள்: மக்களில்   சிலர் நின்று கொண்டு குடிப்பதை வெறுக்கின்றார்கள். ஆனால் நான் நின்று கொண்டு   குடிப்பதை நீங்கள் பார்ப்பதைப் போன்று நபி (ஸல்) அவர்கள் செய்ததை நான்   பார்த்திருக்கின்றேன்”  நூல்: புகாரி
குடிக்கும் பாத்திரத்தில் ஊதி   குடிக்கலாகாது!
குடிக்கும்   பாத்திரத்தில் மூச்சு விடுவதையும் (ஊதி குடிப்பதையும்) நபி (ஸல்) அவர்கள் தடை   செய்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி); ஆதாரம்: திர்மிதி, அபூதாவுத்,   இப்னுமாஜா
“(குடிப்பவர்) தன்னுடைய பாத்திரத்தில் மூச்சுவிடவேண்டாம்என்று இறைத்தூதர்(ஸல்)   அவர்கள் கூறினார்கள் அபூ கதாதா தன்னுடைய தந்தையின் வாயிலாக அறிவித்தார்.
உங்களில் ஒருவர் (எதை) அருந்தினாலும் அந்தப்   பாத்திரத்திற்குள் அவர் மூச்சு விட வேண்டாம்அறிவிப்பவர்: அபூ கதாதா (ரலி),   ஆதாரம்: புகாரி
இடது கையால் குடிப்பதோ சாப்பிடுவதோ கூடாது!
உங்களில் எவரும் இடது கையால் குடிக்கவோ,   சாப்பிடவோ வேண்டாம். ஏனெனில் ஷைத்தான் தான் இடது கையால் குடிக்கிறான்;   சாப்பிடுகிறான்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்; இப்னு உமர் (ரலி);   ஆதாரம்: முஸ்லிம், முஅத்தா, அபூதாவுத், திர்மிதி.
தங்கம், வெள்ளியிலான பாத்திரத்தில்   குடிப்பது கூடாது!
எவர் தங்கம், வெள்ளிப் பாத்திரத்தில் குடிப்பாரோ   அவர் தன் வயிற்றில் நரகத்தின் நெருப்பையே விழுங்குகிறார்என நபி (ஸல்) அவர்கள்   கூறினார்கள். அறிவிப்பவர்: உம்முஸலமா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்.
வெள்ளி (அல்லது தங்க)ப் பாத்திரத்தில்   அருந்துகிறவன் தன்னுடைய வயிற்றில் மிடறுமிடறாக நரக நெருப்பையே விழுங்குகிறான்.”   அறிவிப்பவர்: உம்மு ஸலமா(ரலி), ஆதாரம்: புகாரி நாங்கள் ஹுதைஃபா(ரலி) அவர்களுடன்   புறப்பட்டோம். அவர்கள், ‘தங்கம் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் பருகாதீர்கள்.   (ஆண்கள்) சாதாரணப் பட்டையும் அலங்காரப் பட்டையும் அணியாதீர்கள். ஏனெனில், அவை   இம்மையில் (இறை மறுப்பாளர்களான) அவர்களுக்கும், மறுமையில் (இறைநம்பிக்யாளர்களான)   உங்களுக்கும் உரியனவாகும். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக்   கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அபீ லைலா (ரஹ்), புகாரி.
வீண் விரயம் செய்வது கூடாது!
உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம்   செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை   நேசிப்பதில்லை.” (7:31)
ஒரே மூச்சில் நீர் அருந்தாமல் மூன்று முறை   மூச்சுவிட்டு அருந்த வேண்டும்!
(என் பாட்டனார்) அனஸ் (ரலி) பாத்திரத்தில் (பருகும்   போது) இரண்டு அல்லது மூன்று முறை மூச்சுவிட்டு(ப் பருகி) வந்தார்கள். நபி (ஸல்)   அவர்கள் மூன்று முறை மூச்சுவிட்டு(ப் பருகி) வந்ததாகக் கூறினார்கள். அறிவிப்பவர்:   ஸுமாமா இப்னு அப்தில்லாஹ் (ரஹ்), ஆதாரம்: புகாரி
உணவா? தொழுகையா? எது முதலில்?
இரவு நேர உணவு வைக்கப்பட்டுத் தொழுகைக்காக   இகாமத்தும் சொல்லப் படுமானால் நீங்கள் உணவை முதலில் அருந்துங்கள்.என இறைத்தூதர்   (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); ஆதாரம்: புகாரி.
உணவு வந்து காத்திருக்கும் போதும், சிறுநீர்   மற்றும் மலத்தை அடக்கிக் கொண்டும் தொழக்கூடாதுஅறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்:   முஸ்லிம்
குடிபானத்தில் ஈ விழுந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்?
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் எவரது பானத்திலாவது ஈ விழுந்து விட்டால் (முதலில்) அதை அவர் (அதிலேயே)   முக்கட்டும். பிறகு அதை வெளியே எடுத்துப் போட்டு விடட்டும். ஏனெனில் அதன் இரு   இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் இருக்கின்றது
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி
உணவில் எலி விழுந்துவிட்டால் என்ன செய்ய   வேண்டும்?
நெய்யில் விழுந்துவிட்ட எலியைப் பற்றி நபி(ஸல்)   அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, ‘அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும்   எடுத்து எறிந்துவிட்டு உங்கள் நெய்யை நீங்கள் சாப்பிடுங்கள்என்று இறைத்தூதர் (ஸல்)   அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: மைமூனா (ரலி), ஆதாரம்: புகாரி.
தட்டின் நடுப்பகுதியிலிருந்து சாப்பிடக்   கூடாது! ஓரத்திலிருந்து சாப்பிட வேண்டும்!
பரக்கத் உணவின் நடுப்பகுதியில் இருக்கிறது. எனவே   ஓரங்களில் சாப்பிடுங்கள்; உணவின் நடுப்பகுதியில் இருந்து சாப்பிடாதீர்கள்என நபி   (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி); ஆதாரம்: அபூதாவுத்,   திர்மிதி, இப்னுமாஜா
உணவுத் தட்டில் வலது கரத்தால் அருகில்   இருப்பதை எடுத்துச் சாப்பிட வேண்டும்!
(நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனாகிய) உமர்   இப்னு அபீ ஸலமா (ரலி) கூறினார்: நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மடியில்   வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத்தட்டில் (இங்கும்   அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம்,   ‘சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக் கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு   அருகிலிருக்கும் பகுதியிலிருக்கும் எடுத்துச் சாப்பிடு!என்று கூறினார்கள். அதன்   பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது. ஆதாரம்: புகாரி.
உணவுப் பொருள் கீழே விழுந்து விட்டால் அதை   சுத்தம் செய்து சாப்பிட வேண்டும்!
(சாப்பிடும் போது) உங்களிடமுள்ள (உணவு) ஒரு துண்டு   கீழே விழுந்து விட்டால் அதில் அசுத்தமான பொருள் ஒட்டியிருந்தால் அதை நீக்கிவிட்டு   சாப்பிடவும். அதை ஷைத்தானுக்கு விட்டுக்கொடுக்க வேண்டாம். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி);   ஆதாரம்: முஸ்லிம்.
விரல்களை சூப்பி சாப்பிட வேண்டும்!   கைக்குட்டையால் துடைக்க வேண்டாம்!
தனது விரல்களை சப்பாமல் கைக்குட்டையால் கையை   துடைக்க வேண்டாம். ஏனெனில் எந்த உணவில் பரக்கத் உள்ளது என்று அவன் அறிய முடியாது!”   அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி); ஆதாரம்: முஸ்லிம்.
இருக்கின்ற உணவை பங்கிட்டுச் சாப்பிட   வேண்டும்!
இருவருடைய உணவு மூவருக்குப் போதுமானதாகும்.   மூவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும்.என இறைத்தூதர் (ஸல்) அவர்கள்   கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம்: புகாரி.
வயிறு முட்ட சாப்பிடுவது உண்மையான   முஃமினுக்கு அழகல்ல!
“(உண்மையான) முஸ்லிம் ஒரே குடலில் சாப்பிடுவார்.   இறைமறுப்பாளனோ ஏழு குடல்களில் சாப்பிடுவான்.என இறைத்தூதர் (ஸல்) அவர்கள்   கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம்: புகாரி.
இப்னு உமர் (ரலி) தம்முடன் சாப்பிட ஓர் ஏழையேனும்   அழைத்து வரப்படாமல் உணவு உண்ணமாட்டார்கள். எனவே, (ஒரு நாள்) அவர்களுடன் சாப்பிட   ஒருவரை நான் அழைத்துச் சென்றேன். அம்மனிதர் நிறைய உண்டார். இப்னு உமர் (ரலி)   ‘நாஃபிஉ! இவரை (இனிமேல்) என்னிடம் அழைத்து வராதீர்கள். நபி (ஸல்) அவர்கள்   ‘இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார். இறைமறுப்பாளனோ ஏழு குடல்களில்   சாப்பிடுவான்எனக் கூறுவதை கேட்டிருக்கிறேன்என்று கூறினார்கள். அறிவிப்பவர்:   நாஃபிஉ (ரஹ்), ஆதாரம்: புகாரி.
சாய்ந்தவாறு அல்லது வயிற்றில் படுத்தவாறு   சாப்பிடுவது கூடாது!
நான் சாய்ந்தபடி சாப்பிடமாட்டேன்.என   இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம்:   புகாரி.
உணவில் குறை கூறாதீர்கள்!
நபி(ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை   சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்)   விட்டுவிடுவார்கள்அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம்: புகாரி.
பால் அருந்திய பிறகு வாய்கொப்பளித்தல்:
(ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பால்   அருந்திவிட்டு வாய் கொப்பளித்தார்கள். அப்போது, ‘இதில் (பாலில்) கொழுப்பு   இருக்கிறதுஎன்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம்: புகாரி.
ஒரு சபையில் பானங்களை வலது   புறத்திலிருந்து கொடுத்து வரவேண்டும்!
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டுக்   வந்திருந்தபோது அவர்கள் பால் அருந்தியதை பார்த்திருக்கிறேன். அப்போது நான் ஓர்   ஆட்டிலிருந்து பால் கறந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்காகக் கிணற்றிலிருந்து (நீர்   எடுத்துக்) கலந்தேன். அவர்கள் (பால்) கிண்ணத்தை வாங்கி அருந்தினார்கள். அவர்களின்   இடப் பக்கத்தில் அபூ பக்ர்(ரலி) அவர்களும் வலப்பக்கத்தில் கிராமவாசி ஒருவரும்   அமர்திருந்தனர். (தாம் அருந்திய) பாலின் மிச்சத்தை அந்தக் கிராமவாசிக்குக்   கொடுத்துவிட்டு, ‘வலப்பக்கத்தில் இருப்பவருக்கும், அடுத்து (அவருக்கு) வலப்   பக்கத்தில் இருப்பவருக்கும் (கொடுங்கள்)என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ்   இப்னு மாலிக் (ரலி), ஆதாரம்: புகாரி.
இறைத்தூதர்   (ஸல்) அவர்களிடம் பானமொன்று கொண்டுவரப்பட்டது. அவர்கள் அதை அருந்தினார்கள்.   அப்போது அவர்களின் வலப்பக்கம் சிறுவர் ஒருவரும், இடப்பக்கம் முதியவர்களும்   அமர்ந்திருந்தனர். எனவே, நபி (ஸல்) அவர்கள் அந்தச் சிறுவரிடம், ‘(இந்தப் பானத்தை   முதியவர்களான) இவர்களுக்கு அளிக்க எனக்கு நீ அனுமதியளிப்பாயா?’ என்று கேட்டார்கள்.   அதற்கு அச்சிறுவர், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர் அவர்களே! தங்களிடமிருந்து   எனக்குக் கிடைக்கும் இந்தப் பேற்றை (வேறு) எவருக்காகவும் நான் விட்டுத் தரமாட்டேன்’   என்று பதில் கூறினார். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அதை அச்சிறுவரின் கையில்   வைத்துவிட்டார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி), ஆதாரம்: புகாரி.
பானங்களை பரிமாறுபவர் இறுதியில் தான்   பருக வேண்டும்!
‘….(பானங்களை)   ஊற்றுபவர் தான் இறுதியில் பருக வேண்டும்’ (முஸ்லிமில் இடம்பெறும் நீண்ட ஹதீஸில்   இடம் பெறும் வாசகம்.) அறிவிப்பவர்; அபூ கதாதா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்.
சமைப்பவருக்கும் உணவு வழங்க வேண்டும்!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவரிடம் அவருடைய பணியாள் அவரது உணவைக் கொண்டு வந்தால் அவர்   அப்பணியாளைத் தம்முடன் (அமர வைத்துக் கொள்ளட்டும். அவ்வாறு) அமர வைத்துக்   கொள்ளவில்லையென்றாலும் அவருக்கு ஒரு பிடி அல்லது இரு பிடிகள் அல்லது ஒரு கவளம்   அல்லது இரு கவளங்கள் உணவு கொடுக்கட்டும். ஏனெனில் அவர் (அதை சமைத்த போது) அதன்   வெப்பத்தையும் அதன் சிரமத்தையும் சகித்துக் கொண்டார்”      அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)  நூல்: புகாரி
உணவுப் பாத்திரங்களை மூடி வைக்கவேண்டும்!
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘நீங்கள் உறங்(கப் போ)கும்போது விளக்குகளை அணைத்து   விடுங்கள். கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். தண்ணீர் பைகளைச் சுருக்கிட்டு   மூடிவிடுங்கள். உணவையும் பானத்தையும் மூடிவையுங்கள்என்று கூறினார்கள். அதன் மீது   ஒரு குச்சியை குறுக்காக வைத்தாவது (மூடிவையுங்கள்) என்று நபி (ஸல்) அவர்கள்   சொன்னதாக எண்ணுகிறேன். அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி), ஆதாரம்: புகாரி.
தோல் பையின் வாயிலிருந்து நீர்   அருந்துவது கூடாது!
நபி (ஸல்)   அவர்கள் தண்ணீர் தோல் பையின் வாய்ப் பகுதியிலிருந்து (தண்ணீர் அருந்த வேண்டாமெனத்   தடை விதித்தார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம்: புகாரி.
உண்ணும் போதும் பருகும் போதும்   அல்லாஹ்வைப் புகழ்ந்தால் அதை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்!
ஒரு அடியான் உணவைச் சாப்பிடும் போது அந்த   உணவுக்காக அவனைப் புகழ்வதையும், நீரைப் பருகும் போது அந்த நீருக்காக அவனைப்   புகழ்வதையும் அல்லாஹ் பொருந்திக்கொள்கிறான். அறிவிப்பவர்: அனஸ் (ரலி); ஆதாரம்:   முஸ்லிம், திர்மிதி, நஸயீ, அஹ்மத்
சாப்பிட்டபிறகு கூற வேண்டிய துஆ!  
    اَلْـحَمْدِ للهِ الَّذِيْ     أَطْعَمَنِـيْ هَذَا وَرَزَقَنِيْهِ مِنْ غَيْـرِ حَوْلٍ مِنِّـيْ وَلاَ قُوَّةٍ.
அல்ஹம்துலில்லாஹில்லதீ அத்அமனீ ஹாதா வரஸகனீஹி   மின்கைரி ஹவ்லின் மின்னீ வலா குவ்வதின்என யாரேனும் கூறினால் அவரின் முன்   பாவங்கள் மன்னிக்கப்படும். ஆதாரம்: அபூதாவூது, திர்மிதி   பொருள்: எனது எவ்வித   சக்தியும் ஆற்றலும் இன்றி எனக்கு இவ்வுணவை வழங்கி உண்ணச் செய்த அல்லாஹ்வுக்கே   எல்லாப்புகழும்
اَلْـحَمْدِ للهِ كَثِيْـرًا   طَـيِّـبًا مُبَارَكًا فِيْهِ غَيْـرَ مَكْفِيٍّ وَلاَ مُوَدَّعٍ وَلاَ   مُسْتَغْنىً عَنْهُ رَبُّـنَا
நபி (ஸல்) அவர்கள் முன்னாலிருந்து சாப்பாட்டுத் தட்டு   எடுக்கப்படுமானால் அல்ஹம்து லில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி   கைர முவத்தஇன் வலா முஸ்தக்னன் அன்ஹூ ரப்புனா’  என்று கூறுவார்கள்.
பொருள்:   துய்மையான ஏராளமான புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. இறைவா! நீ உணவின் பால்   தேவையுடையவன் அல்லன்! உன்னை யாரும் விட்டுவிட முடியாது!

நன்றி ---- ரீட் இஸ்லாம்.நெட்

திருமணம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் رَضِيَ اللَّهُ عَنْهُ
இளைஞர்களே! உங்களில் திருமணத்தின் பொறுப்பைச் சுமக்கும் சக்தி படைத்தவர் மணம் புரிந்து கொள்ளட்டும். ஏனெனில் திருமணம் பார்வையைத் தாழ்த்துகின்றது. வெட்கத்தலத்தைப் பாதுகாக்கின்றது. (பார்வை இங்கும் அங்கும் அலைபாய்வதை விட்டும் காம இச்சையினால் சுகந்திரமாகத் திரிவதை விட்டும் பாதுகாக்கிறது) திருமணத்தின் பொறுப்பை சுமக்கச் சக்தியற்றவர் இச்சையின் வேகத்தைத் தணித்திட அவ்வப்போது நோன்பு வைத்துக் கொள்ளட்டும்.” (புகாரி, முஸ்லிம்)
அறிவிப்பாளர் : அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள், அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக! நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும்!” (புகாரி, முஸ்லிம்)
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: பெண்களை அவர்களின் அழகுக்காக திருமணம் முடிக்காதீர்கள், அவர்களுடைய அழகு அவர்களை அழித்துவிடக் கூடும். பெண்களைச் செல்வந்தர்கள் என்பதற்காக மணம் முடிக்காதீர்கள், அவர்களுடைய செல்வம் வரம்பு மீறுவதிலும் அடங்காப் பிடாரித்தனத்திலும் அவர்களை ஆழ்த்திவிடக் கூடும். மாறாக மார்க்கப்பற்றின் அடிப்படையில் அவர்களை மணமுடித்துக் கொள்ளுங்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்கள் மொழிந்தார்கள்: எவருடைய மார்க்கப் பக்தியையும் நற்குணத்தையும் நீங்கள் விரும்புகின்றீர்களோ அத்தகைய மனிதர் உங்களிடம் திருமணம் கேட்டு வந்தால் அவருக்கு மணமுடித்துக் கொடுத்து விடுங்கள். நீங்கள் இப்படிச் செய்யாவிட்டால் பூமியில் குழப்பமும் தீமையும் விளைந்துவிடும்.” (திர்மிதி)
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் رَضِيَ اللَّهُ عَنْهُ
எங்களுக்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகையில் ஓதும் தஷஹ்ஹுதை ஓதிக் காட்டியபின், “இது திருமணத்தின்போது ஓதக்கூடிய தஷஹ்ஹுதுஎனச் சொல்லி அதனையும் ஓதிக்காட்டினார்கள். அதன் பொருள்:
நன்றியும் புகழும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தானவை. நாங்கள் அவனிடமே உதவி தேடுகின்றோம். அவனிடத்திலேயே மன்னிப்புக் கோருகின்றோம். எங்கள் மனத்தின் தீமைகளுக்கெதிராக எங்களை நாங்களே அல்லாஹ்விடம் தஞ்சம்தேடி ஒப்படைத்து விடுகின்றோம். எவருக்கு அல்லாஹ் நேர்வழி அளிக்கின்றானோ அவரை எவரும் வழிகெடுக்க முடியாது. அவன் எவனை வழி தவறச்செய்து விடுகின்றானோ அவனுக்கு யாரும் நேர்வழி அளிக்க முடியாது. மேலும் அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் எவரும் இலர் என நான் சாட்சி கூறுகின்றேன். மேலும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியார் என்றும் அவனுடைய திருத்தூதர் என்றும் சான்று பகருகின்றேன்.
பிறகு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் மூன்று இறைவசனங்களை ஓதிக் காண்பித்தார்கள்.
1. இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சவேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். மேலும் நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணமடைய வேண்டாம். (3:102)
2. மனிதர்களே! உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனுக்கு அஞ்சுங்கள். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும் அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். மேலும் எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள். மேலும் இரத்த பந்த உறவுகளைச் சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள். திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான்.(4:1)
3. இறை நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அஞ்சிய வண்ணம் இருங்கள். மேலும் சொல்வதைத் தெளிவாக, நேரடியாகச் சொல்லுங்கள். இப்படிச் செய்தால் அல்லாஹ் உங்கள் செயல்களைச் சீர்திருத்துவான். பாவங்களை மன்னித்து விடுவான். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் அடிபணிந்து நடப்பவர்கள் பெரும் வெற்றியை அடைவார்கள். (33:70-71) (திர்மிதி)

நன்றி ---- ரீட் இஸ்லாம்.நெட்

விடுதலைப் போரில் இஸ்லாமிய பெண்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

விடுதலைப் போரில் இஸ்லாமிய பெண்கள்
இந்திய விடுதலைப் போரில் இஸ்லாமியர்களில் ஆண்களைப் போன்று பெண்களும் தங்களது உயிர்களை தியாகம் செய்துள்ளனர்.  அவர்களில் சிலரது குறிப்புகள் மட்டும் இங்கே.

பேகம் சாஹிபா
 திண்டுக்கல் மாவட்டத்தில் பேகம் சாஹிபா என்ற ஊர் இருந்தது. அதன் பின்னர் பேகம் சாஹிபா நகராக மாறி அதன் பின்னர் பேகம்பூர் என மருவியது. ஐதர் அலி அவர்களின் தங்கை பேகம் சாஹிபா. அவர் கணவர் நவாபு மீறா றசாலிக்கான் சாயபு. இவர் திண்டுக்கல் சீமை ஜாகீர்தாரராக இருந்தார். அவர மனைவியும் ஐதர் அலியின் தங்கையுமான ஹஜ்ரத் பேகம் சாஹிபா அவர்கட்கு நந்தன வருடம் ஆனி மாதம் 13 ஆம் தேதி (கி.பி.1772) குழந்தை பிறந்து ஏழாம் நாள் காலமானார்.  போர்க்களத்தில் நிறைமாத கர்ப்பிணியாக போராடியவர். மீறா றசாலிக்கான் சாயபு தன் மனைவி அடக்கம் செய்த இடத்தில் பள்ளிவாசல் கட்டி, கோரியும் கட்டி காசினாயி தோப்பு, பேகம்பூர், பனங்குளம், சின்னபள்ளபட்டி ஆகிய ஊர்களில் நன்செய், புன்செய் நிலங்களை மானியமாக விட்டு ஒன்பது பேரையும் நியமித்துள்ளார். அந்த ஒன்பது பேரும் இந்நிலங்களை அனுபவித்துக் கொண்டு பள்ளிவாசல் பணிகளையும் கவனிக்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டது.
  
இந்திய நில அளவை உயர் அலுவல் மெக்கன்சியின் உதவியாளர்களில் ஒருவராகிய தரியாபத்து நிட்டல நாயன அய்யன் பள்ளிவாசல்களையும் அங்குள்ள புற கட்டிடங்களையும் சுற்றிலும் உள்ள நந்தவனத் தோட்டங்களையும் நேரில் பார்த்து அதனை அழகாக வர்ணித்துள்ளார். அதன் மூல ஆவணம் தமிழ்நாடு அரசின் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தில் உள்ளது. அதன் எண்கள் டி.3021,ஆர் 8275 ஆகும்.
ஹஸன் மஹ்பர் பேகம்
ஜான்சிராணியுடன் படைப்பிரிவுக்கு தலைமை தாங்கியவர்களில் மஹ்பர் பேகமும் ஒருவர். 1858ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தியதி குவாலியர் யுத்தத்தில் ஜான்சியுடன் வீரமரணம் அடைந்தார்.
அமாதுல் ஸலாம்
1938 ஆம் ஆண்டு இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக காந்திஜியும் முஹம்மதலியும் சந்தித்துப் பேசும் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. ஜின்னாவை சந்திக்க காந்திஜியுடன் ஒரு பெண்ணும் வந்திருந்தார். ஜின்னாவின் இல்லத்தில் மூன்று மணி நேரம் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அப்போது பத்திரிக்கை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் காந்தி கூறியதாவது, என்னிடம் அத்தியந்த பிரேமை வாய்ந்த பெண் ஒருத்தி இருக்கிறாள். இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக தன் உயிரையும் இன்முகத்தோடு கொடுப்பாள் என்றார். அந்தப் பெண் தான் அமாதுல் ஸலாம்.
கதர் என்ற பெயருக்கு காரணமான ஆலாஜிபானு
அலி சகோதர்களின் தாயாரான ஹாஜியா ஆலாஜிபானு என்ற பீபியம்மாள் தன்னுடைய கையால் கைராட்டையில் நூற்ற நூலால் நெய்யப்பட்ட ஆடையை காந்திஜிக்கு அளித்தார். அப்போது இந்த ஆடையை கதராக ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார். கதர் என்றால் கௌரவம் என்று  பொருள்படும். அன்றிலிருந்து கதர் ஆடை என்ற பெயர் வந்தது. சுதேசி இயக்கத்தின் கலாச்சார அடையாளமான துணிக்கு "கதர்" என்று பெயரிட்டவர் ஒரு முஸ்லிம் பெண்மணி ஆவார். கதர் என்பது சாதாரண துணி போல இரண்டு இழைகளால் நெய்யப்படாமல் மூன்று இழைகளால் நெய்யப்படுகிறது. இவ்வாறாக நெய்வது அரிதானதாகும்.
இளையான்குடியில் பீபியம்மாள்
என் பிள்ளைகள் சிறையில் இருக்கும் போது ஒரு வேளை ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டு விடுதலையானால் அவர்களின் குரல் வளையை நெறித்துக் கொல்வேன் என்று வீரசபதம் பூண்டவர் தாயார் பீபியம்மாள்.
1922 ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியும், கதர் ஆடையைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்கவும், சுதந்திரப் போராட்டத்திற்கு நிதி திரட்டவும் இளையான்குடியில் உள்ள அலங்காரத்தோப்பிற்கு அருகே தென்புறம் பேரூராட்சியில் ஓர் அலுவலகம் அமைக்கப்பட்டது. அங்கே குடிநீர் தொட்டி ஒன்றும் இருந்தது. அந்த குடிநீர் தொட்டி அருகாமையில் ஏ.எஸ்.டி.இப்ராகிம் ஷாவுடைய பங்களா இருந்தது. அந்த பங்களாவில் சுதந்திர போராட்டம் குறித்த நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த பீபியம்மாள், மீன்பஜார் முதல் காதர் பிச்சை தெருவரை மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தார் என்கிறார்கள் அவ்வூர் மக்கள்.
இதே போல தென்காசி சையது குருக்கள் பள்ளிவாசல் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உருதுமொழியில் பேசி நிதி திரட்டினார். அவர் பேசியதை தமிழில் திருச்சியைச் சேர்ந்த முர்தஸா சாகிப்  மொழி பெயர்த்தார். இவ்வாறு சுதந்திர வேட்கையுடன் இந்தியா முழுவதும் சுற்றப்பயணம் செய்த பீபியம்மாள் 1924 ஆம் ஆண்டு 72வது வயதில் காலமானார். பீபியம்மாள் விருப்பபடி அவரது பூதவுடல் கதர்துணியால் சுற்றப்பட்டே நல்லடக்கம் செய்யப்பட்டது.
கண்ணனூர் ராணி பீபி
கேரளாவின் துறைமுகப்பட்டினமாக விளங்கிய கண்ணனூரை பதினெட்டாம் நூற்றாண்டில் ஆட்சி செய்தவர் ராணி பீபி. மைசூர் திப்பு சுல்தானின் ஆதரவாளராக இவர்,  பிரிட்டீஷ் படை வீரர்கள் கண்ணனூர் வழியாகச் செல்லக்கூடாது என்று தடை விதித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆங்கிலேயர்கள் இவர் மீது போர் தொடுத்தனர். 1783 ஆம் ஆண்டு திடீரென கண்ணனூரை ஆங்கிலேயர்கள் தாக்கினார்கள். அந்த திடீர் தாக்குதலில் ராணி பீபியின் படை தோல்வியடைந்தது. அவரையும் அவரது குடும்பத்தினரையும் ஆங்கியேலர்கள் கைது செய்து சிறையில்  அடைத்தனர். சிறையில் அடைத்தவுடன்  ராணியின் எல்லைப்பகுதியை தாங்கள் பயன்படுத்திக் கொள்ள ஒப்புதல் வழங்குவது போல போலி ஆவணம் தயாரித்து ராணியிடம் படித்துக் காண்பிக்காமல் ஒப்பந்தம் வாங்கி ஆங்கிலேயர் தங்களுடைய ராணுவ முகாமிற்கு பயன்படுத்திக்கொண்டனர். அதன் பின்னர் ராணி விடுதலை செய்யப்பட்டார். 1784 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து கண்ணனூரில் ஆங்கியேலயரின் முகாம் செயல்படத்தொடங்கியது.     மீண்டும் 1790 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மறுபடியும் ஓர் ஒப்பந்தத்தை தயார் செய்து  கைnழுத்திடுமாறு ராணி பீபியை நிர்பந்தம் செய்தனர். ஆனால் ராணி பீபி மறுத்ததுடன் திப்பு சுல்தான் படைக்கு ஆதராவாக செயல்பட போவதாக பகிரங்கமாக அறிவிப்பும் செய்தார். இதன் காரணமாகவே மீண்டும் ராணி கைது செய்யப்பட்டார்.
உமர்பீபி
 இவர் 1919ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் ஆம் நாள் ஜாலியன் வாலாபாக் என்னுமிடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆர்.இ.ஹெச்.டயர் என்பவன் தலைமையில் துப்பாக்கி சூடு நடத்தினான். இந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரம் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரம் எனவும் அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. ஜாலியன் வாலாபாக் துப்பாக்கிச் சூட்டில் ஏராளமான முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். ஜாலியன் வாலாபாக் துப்பாக்கிச் சூட்டில் உமர்பீபியும் பலியானார். இவர் 1864 ஆம் ஆண்டு அமிர்தசரவில் பிறந்தவர். இவரின் கணவர் பெயர் இமாமுதீன் ஆகும்.
மரியம் பீவி
திருச்சி பீமநகர் வயன்வித்தார் தெருவில் வசித்த மரியம் பீவி என்னும் விடுதலைப் போராட்ட வீராங்களை நாகபுரி கொடிப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைத் தண்டனை பெற்றார். இவருடைய கணவர் பெயர் அப்துல் கரீம்.     பெண் என்றும் பாராமல் ஆங்கில ஆட்சி மரியம் பீவிக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை வழங்கி கடலூர் சிறையில் அடைத்தது.
பேகம் அயிஜாஸ் ரசூல்
உத்திரப் பிரதேசத்தில் சாண்டிலா என்ற ஊரில் 1909 ஆம் ஆண்டு நவார் சர்ஜூல்பிகாரின்  மகளாகப் பிறந்தவர். நவாப் அயிஜாஸ் ரசூல் என்பவரைத்; திருமணம் செய்து கொண்டார்.  இவர் 1937 ஆம் ஆண்டு உத்திரப் பிரதேச சட்டலேவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  சுதந்திரப்போராட்டத்தில் பங்கு கொண்ட இவர். 1969 ஆம் ஆண்டு முதல் 1971 ஆம் ஆண்டு வரை உத்திரப்பிரதேச அமைச்சராக பதவி வகித்தார்.
பியாரி பீவி
கரூர் நன்னா சாகிப் மற்றும் அவரது மனைவி பியாரி பீவி ஆகிய இரண்டு பேர்களும் ஒத்துழையாமை இயக்கத்திலும், தனி நபர் சத்தியாகிரகத்திலும் பங்கேற்றார்கள். 1920 ஆம் ஆண்டிலிருந்து 1943 ஆம் ஆண்டுவரை விடுதலைப் போராட்டங்கள் பலவற்றில் ஈடுபட்ட நன்னா சாகிப் திருச்சி, அலிப்புரம் சிறைகளில் தண்டனை அனுபவித்திருக்கிறார். அவரது மனைவி பியாரிபீவி தனிநபர் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு நிறைமாதக் கர்ப்பிணியாகச் சிறை சென்றார்.
ஆதார நூல்கள்:
1.மக்கள் தாரகை, மறைக்கப்பட்ட வரலாறுகளும்...மறைக்கப்படும் உண்மைகளும், சென்னை
2.விடுதலை போரில் முஸ்லிம்கள், வி.என்.சாமி, மதுரை
3.மறுக்கப்பட்ட உண்மைகளும்..மறைக்கப்பட்ட நியாயங்களும், அனிஸ்தீன், அகமதுநிஸ்மா பதிப்பகம், சென்னை
கட்டுரையாளர் : வைகை அனிஷ் அவர்களுக்கு நன்றி. 

சிறுமியை சீரழித்துக் கைதான அறவழிச் சித்தரின் மனைவி தீக்குளித்துத் தற்கொலை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

சிறுமியை சீரழித்துக் கைதான அறவழிச் சித்தரின் மனைவி தீக்குளித்துத் தற்கொலைசென்னை: சென்னையைச் சேர்ந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, பின்னர் அச்சிறுமியை விபச்சாரக் கும்பலிடம் அனுப்பி கொடூரமான நிலைக்கு ஆளாக்க காரணமாகி கைதான வியாசர்பாடி அறவழிச்சித்தரின் மனைவி தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார். 
சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த எண்கணித சோதிடர் அறவழி சித்தர். 42 வயதாகும் இவரது மனைவி பெயர் தனலட்சுமி. இரவு நேர பூஜை, குளி சொல்வது என இருந்து வந்தார் அறவழி சித்தர். இரவு நேர பூஜையில் அவர் பாலியல் சில்மிஷங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் திருப்பதி அருகே ஒரு சிறுமி போலீஸாரிடம் சிக்கினார். அந்த சிறுமி கொடுத்த தகவல் போலீஸாரை அதிர வைத்தது. வியாசர்பாடியைச் சேர்ந்த அந்த சிறுமி, அறவழிச் சித்தரால், சிறுமியின் தாயாரின் ஒத்துழைப்புடன் சீரழிக்கப்பட்டார். பின்னர் சுரேஷ் என்ற நபரிடம் சிறுமி விற்கப்பட்டுள்ளார். சுரேஷ், ஒரு விபச்சாரக் கும்பலிடம் சிறுமியை அனுப்பியுள்ளான். அங்கு பலரிடம் அந்த சிறுமி அனுப்பப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார். இதையடுத்து சென்னை போலீஸாரிடம் சிறுமி ஒப்படைக்கப்பட்டார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து அறவழி சித்தர், சுரேஷ் உள்ட 5 பெண்கள், 2 ஆண்களைக் கைது செய்தனர். 
இந்த நிலையில் அறவழிச் சித்தரின் மனைவி தனலட்சுமி தனது வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து விட்டார். வீட்டு பாத்ரூமில் அவரது உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டது. உடல் முழுவதும் எரிந்து போய் விட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

 Posted by: Sudha Published: Monday, October 7, 2013, 13:38 [IST] Ads by Google 

Monday, 7 October 2013

பேய், பிசாசு உண்டா - 1

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


மனித வாழ்வில் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தெளிவான தீர்வை அளிக்கும் வாழ்க்கை நெறியே இஸ்லாம். இதனை உணராத காரணத்தினால் தான் இன்று முஸ்லிம் சமுதாயம் தடம் புரண்டு சென்று கொண்டிருக்கிறது.

வணக்க வழிபாடுகளை மாத்திரம் சொல்லித் தருவதே இஸ்லாம் என்று சிலர் கருதுகின்றனர். மற்றும் சிலர் அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றை மாத்திரமே இஸ்லாம் சொல்லித் தருகிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். புறச்செயல்களை மாத்திரம் ஒழுங்கு படுத்தும் மார்க்கம் என்பர் வேறு சிலர். புறச்செயல்களைப் புறம் தள்ளிவிட்டு அகத்தை மட்டும் சுத்தம் செய்வதே இஸ்லாம் என்பர் இன்னும் சிலர். வெளிப்படையாக இவ்வாறு இவர்கள் கூறாவிடினும் தங்கள் நடவடிக்கைகள் மூலம் இவ்வாறு பிரகடனப்படுத்தி வருகின்றனர்.

பலரும் பலவிதமாக இஸ்லாத்திற்கு வடிவம் கொடுக்க முயன்றாலும், மனித வாழ்வின் அனைத்துப் பிரச்சனைகளிலும் தலையிட்டு தக்க தீர்வை வழங்குவதே இஸ்லாம். மனிதனது செயல்களில் மட்டுமன்றி அவனது நம்பிக்கையிலும் எண்ணத்திலும் கூட இஸ்லாம் தலையிடுகிறது. எவற்றைச் செய்யலாம் எவற்றைச் செய்யலாகாது என்பதை இஸ்லாம் விளக்குவது போலவே, எவற்றை நம்பலாம் எவற்றை நம்பலாகாது என்பதையும் இஸ்லாம் விளக்கமாக எடுத்துரைக்கின்றது. செயல்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட சற்று அதிகமாகவே எண்ணத்திற்கு முக்கியத்துவம் தருகின்றது.

செய்ய வேண்டியவைகளைச் செய்யாமலிருப்பதும், செய்யக் கூடாதவைகளைச் செய்வதும் எப்படிக் குற்றமோ அது போலவே நம்ப வேண்டியவைகளை நம்பாமலிருப்பதும் நம்பக் கூடாதவற்றை நம்புவதும் குற்றமே. இதன் காரணமாகவே பேய் பிசாசுகள் என்று மக்களால் நம்பப்படும் விசித்திரமான படைப்பைப் பற்றி இஸ்லாமிய அடிப்படையில் நாம் ஆராயும் அவசியம் ஏற்படுகிறது.

பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்

பெண் என்றால் பேயும் இரங்கும்
நோய்க்கும் பார்க்க வேண்டும்; பேய்க்கும் பார்க்க வேண்டும்

என்றெல்லாம் தமிழகத்தில் வழங்கும் பழமொழிகள், தமிழர்களின் உள்ளங்களில் பேய்களுக்கு இருக்கும் இடத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

உலகின் பல பகுதிகளில் பேய்களின் நடமாட்டம் உண்டு எனினும் தமிழகத்தில் இவற்றின் நடமாட்டம் மிக அதிகம். எண்ணிலடங்காத பேய்கள் உலா வருவதால் அவற்றின் பெயர்களும் தன்மைகளும் மிகத்துல்லியமாக வித்தியாசப்பட்டுள்ளதை தமிழகத்தில் காண முடியும்.

நள்ளிரவில் கதவைத் தட்டும் பேய்களும் உள்ளன. வீடுகளில் கல்லெறிந்து விட்டு மாயமாய் மறைந்திடும் பேய்களும் உள்ளன. பழிவாங்கும் பேய்கள்; இரத்தம் குடிக்கும் பேய்கள்; இளைஞர்களை மாத்திரமே தப்பு செய்வதற்காக அழைக்கும் மோகினிப் பேய்கள், வேண்டியவர்களுக்கு உதவி செய்யும் பேய்கள் என்றெல்லாம் பேய்களில் பல வகைகள் உள்ளன. இல்லறத்தில் தோல்வியடைந்து இலக்கின்றி அலையும் பேய்களும் உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக மனிதன் மீது மேலாடுகின்ற மகாசக்தி  படைத்த பேய்களும் உள்ளன.

பிசாசுகள், மோகினி, இரத்தக் காட்டேரி, கொள்ளிவாய்ப் பிசாசு என்பது போன்ற செல்லப் பெயர்களும் பேய்களுக்கு உள்ளன. பேய்களுக்கு தமிழகத்தில் இருக்கும் வெல்வாக்குக்கு இவை சான்றுகள்.

பேய் வீடு, பேய் மாளிகை என்றெல்லாம் பேய்களைக் கதாநாயகர்களாக்கி பி.டி. சாமி போன்றவர்கள் தமிழகத்தில் பிழைப்பு நடத்த முடிகின்றதென்றால் பேய் சமாச்சாரங்களை வெளியிட்டு தமிழகப் பத்திரிகைகள் பல சமூகத் தொண்டாற்ற (?) முடிகிறது என்றால் பேய்களின் ஆதிக்கத்தை அளவிட வேறு அளவுகோல் எதுவும் தேவையில்லை.

அஞ்சி அஞ்சிச் சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே வஞ்சனைப் பேய்களென்பர்; துஞ்சுது முகட்டிலென்பார்; அந்த மரத்திலென்பார்; இந்தக் குளத்திலென்பார் என்று நெஞ்சு பொறுக்காமல் சில பேர் குமுறினாலும் சில சுயமரியாதையுள்ள பெரியார்கள் பேய்களுக்கெதிராக கடும் பிரச்சாரம் செய்தாலும் பேய் விசுவாசிகளின் நம்பிக்கையை அசைக்க முடியவில்லை.

மற்றவர்கள் பேய்களைப் பற்றி எப்படி வேண்டுமானாலும் நம்பிவிட்டுப் போகட்டும்! முஸ்லிம்கள் இது பற்றி எத்தகைய முடிவுக்கு வரவேண்டும் என்பதையும் பேய்களை நம்புவதனால் ஏற்படும் சாதக பாதகங்களையும் அவற்றை மறுப்பதால் ஏற்படும் சாதக பாதகங்களையும் திருக்குர்ஆன் வெளிச்சத்தில், திருநபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் துணையுடன் ஆராய்வோம்.

மனிதன் மரணித்த பிறகு அவனது உயிர் (ஆவி) எங்கே செல்கிறது? என்ன செய்கிறது? என்ற வினாக்களுக்கு விடை கண்டால் பேய்கள் உண்டா? என்ற வினாவுக்கும் விடை கிடைக்கும். ஏனெனில் இறந்தவர்களின் ஆவிகள் இவ்வுலகுக்குத் திரும்பி வந்து சுற்றிக் கொண்டிருக்கின்றன என்ற நம்பிக்கை தான் பேய்களைப் பற்றிய நம்பிக்கையின் அடிப்படை.

இறந்தவர்களது ஆவிகளின் நிலை என்ன? என்பதை முதலில் காண்போம். அதன் பிறகு பேய்களின் ஆதரவாளர்கள் எழுப்பும் வினாக்களையும் ஆராய்வோம்.

உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
(அல்குர்ஆன் 39:42)

பேய்-பிசாசுகள்  கிடையாது என்பதற்கு திருக்குர்ஆனின் இந்த ஒரு வசனமே போதிய சான்றாக அமைந்துள்ளதை சிந்திப்பவர்களால் அறிய முடியும். இறந்து விட்ட மனிதர்களின் ஆவிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் (தனது கைவசத்தில்) வைத்திருப்பதாக தெளிவாகவே இங்கே இறைவன் குறிப்பிடுகிறான். இறைவனது கைவசத்திலேயே ஆவிகள் இருப்பதாக இறைவன் தெளிவாக அறிவித்த பின்னர் அவனது கட்டுப்பாட்டை உடைத்தெறிந்து விட்டு ஆவிகள் தப்பித்து வந்து விடுகின்றன என்று ஒரு முஸ்லிம் நம்ப முடியாது.

பேய்கள் இருப்பதாக நம்புபவர்கள் இறைவனது இந்த வசனத்தை மறுத்தவர்களாவார்கள்; அல்லது இறைவனது கட்டுப்பாடு வலுவற்றது என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்கள். இரண்டில் எதை ஏற்றாலும் அவர்கள் இஸ்லாமிய வட்டத்திலிருந்து தாங்களாகவே வெளியேறி விடுகின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஒரு பிரார்த்தனை இந்த வசனத்திற்கு விளக்கமாக அமைந்துள்ளதைக் காணுங்கள்.

உங்களில் யாரேனும் படுக்கைக்குச் சென்றால், என் இறைவா! உன் திருப்பெயராலேயே திரும்பவும் எழுவேன் (உறக்கத்தில்) எனது உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அற்கு நீ அருள் புரிந்திடு! அதை நீ திரும்ப அனுப்பினால் உனது நல்லடியார்களை நீ பாதுகாப்பது போல் எனது உயிரையும் நீ பாதுகாத்து விடு என்று கூறட்டும்.

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் புகாரி, முஸ்லிம் ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது.

திருக்குர்ஆனின் 39:42 வசனம் கூறும் அதே கருத்தை இந்த நபிமொழியும் கூறுகின்றது. உறக்க நிலையிலும், மரணித்த பின்னரும் மனிதர்களின் ஆவிகள் இறைவனது கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன என்று அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் இரண்டாவது கருத்துக்கு இடமில்லாத வகையில் அறிவித்து விட்ட பின் பேய்களிருப்பதாக ஒரு முஸ்லிம் எப்படி நம்ப முடியும்? பேய்களை நம்புபவன், எப்படி இறைவனையும் இறைத் தூதரையும் நம்பியவனாக முடியும்?

இந்த இரண்டு சான்றுகளே பேய்களை மறுக்கப் போதுமானவை என்றாலும் அதிக விளக்கத்துக்காக மேலும் பல சான்றுகளையும் காண்போம்.

ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன் உலவி அவர்கள்