Tuesday, 10 September 2024

உணவு முறைப் பழக்கம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

உணவு முறைப் பழக்கம்
~~~~~~~~

இரவில் சீக்கிரமே சாப்பிடச் சொல்கிறார்களே ஏன் தெரியுமா....?

 இன்றைய பரபரப்பான காலக்கட்டத்தில் அலுவலகம், தொழில்,   வேலை, வணிகம், குடும்பம்   என நிறைய கடமைகள் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றன.

இதையெல்லாம் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து சேருவதற்குள் தாமதமாகி விடுகிறது. 

எனினும்  இரவு நாம் உண்ணும் உணவை முடிந்த வரை சீக்கிரம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். 

அப்படி இரவில் சீக்கிரம் உணவை உண்பதால் ஏற்படும் பயன்களைப் பற்றித்தான்  இந்தப் பதிவு


இரவில் சீக்கிரமாக உணவு சாப்பிடுவதால் அதை சரி செய்ய உடலுறுப்புகளுக்கு போதுமான நேரம் கிடைக்கும். 

இதனால் செரிமான அமைப்பு சுமூகமாக செயல்பட வழிவகுக்கும். 

ஆனால் பலரும் இரவில் தாமதமாக உண்பதால் செரிமான உறுப்புகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். 

இதனால் இரவு உணவு செரிமானமாக தாமதமாகும்.

இரவு தாமதமாக உண்பதன் மூலம் தூக்கம் தடைப்படும்.

உணவை ஜீரணிக்க உறுப்புகள் அதிக நேரம் எடுத்துக்கொள்வதால் தூக்கம் நிச்சயம் தடைப்படும். 

இதுவே உணவை நேரத்தோடு உண்ணும்போது சீக்கிரமே ஜீரணமாகி நல்ல ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகுக்கும்.

இரவு தூங்கும் போது உடல் இயற்கையாகவே புத்துணர்ச்சி பெறுவதற்கான செயல்பாட்டில் ஈடுபடும். 

ஆனால் இரவு தாமதமாக சாப்பிடுவதால் உடலில் உள்ள ஆற்றல் முழுவதுமே உணவை ஜீரணிக்கவே செலவாகிவிடும்.

இதனால் அடுத்த நாள் மந்தமான, சோர்வான உணர்வை கொடுக்கும்.

சீக்கிரம் சாப்பிடுவதன் மூலம் சீக்கிரம் ஜீரணம் ஆகிவிடுவதால், அடுத்த நாள் எந்த மந்தத்தன்மையும் இல்லாமல் புத்துணர்ச்சியுடன் செயலாற்றலாம்.

உணவிலிருந்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உடலுக்குப் போதுமான நேரம் கிடைக்க வேண்டும்.

இரவு உணவை முன்கூட்டியே உண்பதால் அதிக நேரம் கிடைக்கும். 

இதனால் உணவிலிருந்து ஊட்டச்சத்துகளை உறிஞ்சும் வேலை சுறுசுறுப்பாக நடைபெறும்.

அதேசமயம் உணவை தாமதமாக உண்ணும் போது இந்த செயல்முறையும் தாமதமாகும்.

தூங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு அதிக உணவை எடுத்துக்கொண்டால் உடலில் சக்கரையை அதிகரிக்கும்.

இது நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

இரவு நேரமே உண்பதால் சீக்கிரம் செரிமானம் ஆவதன் காரணமாக இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

வளர்சிதை மாற்றத்தில் கோளாறுகள் ஏற்படுவதையும் தடுக்கும்.

உடலின் மொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

வளர்சிதை மாற்றத்தின் செயல்பாடு இரவு நேரங்களிலும் மாலை நேரங்களிலும் குறைந்து விடும்.

இதனால் இரவு தாமதமாக உண்பதால் அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படாமல் கொழுப்பாக உடலில் சேர்ந்துவிடும். 

இதனால் உடல் எடை அதிகரிக்கும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இரவில் உணவை சீக்கிரம் உண்ண வேண்டியது மிகவும் அவசியமாகும்!

இரவு நேரம் குடும்பத்துடன் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டால் தாமதமாக சாப்பிடும் பழக்கம் மாறிவிடும்.

நிறைவாக உணவை மருந்தாக்குவோம்..! மருந்தை உணவாக்க வேண்டாம்...!

                                     ~ அமுதம் புக்ஸ்

No comments:

Post a Comment