திருக்குர்ஆன் 3:159
நபி (ஸல்) அவர்களின் குணநலங்கள் 1
இங்கு உயர்ந்தோன் அல்லாஹ்,
தன் தூதருக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் தான் செய்த பேருதவியைச்
சொல்லிக் காட்டுகின்றான். இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் சமுதாயத்தாரிடம் -அதாவது தாம் கட்டளையிட்டதைப் பின்பற்றி, தடை விதித்ததைக் கைவிட்ட மக்களிடம்- இளகிய
உள்ளத்தோடும் கனிவான பேச்சோடும்
நடந்துகொண்டார்கள். இது அவர்களுக்கு இறைவன் செய்த மாபெரும் உதவியாகும்.
நளினம் நிறைந்த நபி
இதையே, "(நபியே) நீர் அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நடந்துகொண்டீர்" என
இந்த வசனம் (3:159) கூறுகின்றது.
அதாவது அல்லாஹ்வின் அருள்
உமக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் இல்லாமல் இருந்திருக்குமாயின், அவர்களிடம் நீர் எவ்வாறு நளினமாக நடந்துகொண்டிருப்பீர் என அந்த
வசனம் கேட்கின்றது.
ஹசன் அல்பசரி (ரஹ்) அவர்கள்
கூறியதாவது: இதுதான் முஹம்மத்
(ஸல்) அவர்களின் இயல்பான குணமாகும். இந்தக் குணத்துடனேயே அவர்களை அல்லாஹ் தூதராக அனுப்பி வைத்தான்.
மற்றொரு வசனத்தில் அல்லாஹ்
கூறுகின்றான்: உங்களில் இருந்தே ஒருதூதர் உங்களிடம் வந்துள்ளார். நீங்கள் சிரமப்படுவது அவருக்குப் பாரமாக இருக்கும். அவர் உங்கள் மேல் அதிக அக்கறை உள்ளவர்; இறைநம்பிக்கையாளர்கள் மேல் அதிகப் பரிவும் கருணையும் கொண்டவர். (9:128)
(தொடரும் இன்ஷா அல்லாஹ்)
(நன்றி: தஃப்ஸீர் இப்னு கஸீர், பாகம் 2, வெளியீடு ரஹ்மத் பதிப்பகம், சென்னை 4)
No comments:
Post a Comment