Tuesday 12 March 2024

கைகளைத் தானமாகக் கொடுத்தவர் / தானமாகப் பெற்றவர்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மனித நேயம் தந்த மதநல்லிணக்கம்..! 
                                             
இதயத்தைத் தொடும் இந்தப் படத்தைப் பற்றி அறிந்த பிறகு, கூப்பிய கைகளுடன் நிற்கும் இவர்களுக்கு வணக்கம் செலுத்த தயங்க மாட்டோம்.                                                       

படத்தில் கூப்பிய கைகளுடன் நிற்கும் நபர்,  இராணுவத்தின் துணிச்சலான வீரர்  அப்துல் ரஹீம். எதிரிகளுடனான போரில் வெடிகுண்டுகளைச் செயலிழக்க செய்யும் போது வெடிகுண்டு வெடித்ததில் ரஹீம் தனது இரு கைகளையும் இழந்தார்.

கேரளாவைச் சேர்ந்த ஜோசப் என்பவர், இறப்பதற்கு முன் தனது இரு கைகளையும் தானம் செய்துள்ளார். கைகளைத் தானமாகப் பெற்றவர்  இராணுவ வீரர் ரஹீம். 
 
எதிரே நிற்கும் பெண்கள், ஜோசப்பின் மகளும், மனைவியும். ரஹீமின் உடலோடு ஜோசப்பின் கைகள் இணைந்திருப்பதைக் கண்டு உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் வடிக்கின்றனர். ஏனென்றால், மகளின் தலையில் கைவைத்து ஆசீர்வாதம் செய்த கைகள் அவை.  

ரஹீமின் இடது பக்கத்தில் நிற்பவர் கை மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த மருத்துவர் சுப்பிரமணியம் சுவாமி. 

கைகளைத் தானமாகக் கொடுத்தவர் ஒரு கிறிஸ்தவர்...  

கைகளைத்

தானமாகப் பெற்றவர் ஒரு இஸ்லாமியர்.. 

அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் ஒரு இந்து.. 

இதுதான் மனிதகுலத்தின் உண்மையான சாராம்சம். மதம், நாடு, பாரம்பரியம் எதுவாக இருந்தாலும், நாம் அனைவரும் ஒரே கடவுளின் குழந்தைகள். ஒருவருக்கொருவர் அன்புடனும், அக்கறையுடனும் வாழ்கிறோம் என்பதுதான்  நிதர்சனமான உண்மை. 

மனித நேயத்திற்கு மதம் ஒரு பொருட்டு அல்ல.

No comments:

Post a Comment