Tuesday 19 March 2024

இது தமிழ்நாடா இல்லை உத்தர பிரதேசமா.?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

முஸ்லிம்கள் தொழுகை நடத்துவது திராவிட ஆட்சியில்  குற்றமா.?

இது தமிழ்நாடா இல்லை உத்தர பிரதேசமா.?

திராவிட மாடல் ஆட்சியில் முஸ்லிம்கள் ஒடுக்கப்படும் அவல நிலை.!
**********

திருச்சி மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் தொகுதியில் உள்ள  கல்லணை ரோட்டில், வேங்கூர் பகுதியில் உள்ள இந்திரா நகர் 2 வது தெருவில் 22 ஆண்டுகளாக முறையாக பத்திரம் போட்டு,2024 வரை மாநகராட்சி வரி கட்டிய ஆவணங்களுடன் இருக்கும் பள்ளிவாசல் நிலத்தில் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பாக பள்ளிவாசல் கட்டப்பட்டு வருகிறது. பள்ளிவாசல் பேஸ் மட்டம் வரை போடப்பட்டு சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு வந்த நிலையில் பள்ளிவாசல் இடத்திற்கு எதிராக உள்ள பிஜேபி ஒன்றிய செயலாளர் பிரபாகரன் இந்த இடம் பூங்காவிற்கு சொந்தமானது இந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டக்கூடாது என்று அழுத்தம் கொடுத்து பள்ளி கட்டுமான பணியை நிறுத்திவிட்டார்.

மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களையும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் KN.சேகரன் அவர்களையும் மற்றும் ஆளும் அரசின் முக்கிய பொறுப்பாளர்களையும் சந்தித்து பலமுறை கோரிக்கை வைத்தும் அவர்கள் பிஜேபியின் அழுத்தத்திற்கு அடிபணிந்து எந்தவித செவியும் சாய்க்காமல் காலத்தை கடத்திவிட்டனர்.

முன்னாள் திமுகவின் திருவரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் KN.சேகரன் அவர்கள் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் பள்ளியை கட்டுமான பணிகள் செய்யாமல் இருந்து வந்தனர், ஆனால் அவரும் கையை விரித்து விட்டார்.

ஆனால் ரமலான் மாதத்தில் பள்ளிவாசலில் தொழுகையும் இப்தார் நிகழ்வுகளும் நடந்து வந்தன அதே போன்று இந்த ஆண்டும் நடத்த வேண்டும் என்று நேற்று அந்த இடத்தை சுத்தம் செய்ய போனபோது வழக்கம் போல பிஜேபி ஒன்றிய செயலாளர் கொலை செய்து விடுவேன்பள்ளிவாசலை கட்ட முடியாது இது உத்தரகாண்ட்,ஜார்கண்டு  போல கலவரம் செய்து விடுவேன் என்றும் மிரட்டியும் காவல்துறை முன்பும் அதே வார்த்தைகளை கூறியபோதும் காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நேற்று 17.03.2024 லுஹர் தொழுகைக்கு பிறகு சென்று  களத்தில் பள்ளிவாசல் நிர்வாகிகளும், SDPI கட்சி, மமக கட்சி ஆகிய நிர்வாகிகளும்,அந்த பகுதி இளைஞர்களும் ஒன்றிணைந்து தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். 

ஆனால் காவல்துறை அதிகாரிகளும், தாசில்தார் கிராம நிர்வாக அலுவலர், துணை தாசில்தரும் அந்த இடத்தில் அசர் தொழுகை கூடாது சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்று தொழுகையை நடத்தக் கூடாது என்று மிரட்டி வந்தனர்.

ஆனால் பலமுறை அஸர் தொழுகை நிறைவேற்ற முயற்சித்தும் காவல்துறை  தடுத்து வந்தனர்.

 இறுதியாக அஸர் தொழுகையை நிறைவேற்றினோம். அஸர் தொழுகையை தொழுதது குற்றம் என்று அனைவரையும் கைது செய்ய வாகனங்களை வரவழைத்தது காவல்துறை.

இந்த சம்பவம் அறிந்து அந்தப் பகுதியில் பொதுமக்களும், SDPI , மமக கட்சியினுடைய நிர்வாகிகளும் பெருந்திரளாக திரண்டதன் விளைவாக கைது செய்வதை கைவிட்டது காவல்துறை.

முறையாக பத்திரப்பதிவு செய்து வரி கட்டிய ரசீதுடன் இருக்கும் பள்ளிவாசலை கட்ட விடாமல் தடுக்கும் பிஜேபியின் ஒன்றிய செயலாளருக்கு இசைவு கொடுக்கும் தமிழக அர


சின் காவல் மற்றும் மற்ற துறையை வன்மையாக கண்டிக்கிறோம் சிறுபான்மை சமூகத்தின் மீது தொடுக்கப்படும் இது போன்ற தாக்குதலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இது உத்தரப்பிரதேசமா.? இல்ல தமிழ்நாடா? என்ற ஐயம் திராவிட மாடல் ஆட்சியில் நடக்கின்றது.

No comments:

Post a Comment