Sunday, 3 March 2024

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் லிப்ட் அமைக்கும் பணி பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா ஆய்வு,,,,

ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான அருள்மிகு சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் லிப்ட் அமைக்க வேண்டும் என்கிற பக்தர்களின் கோரிக்கையை தமிழ்நாடு சட்டமன்ற பேரவையிலும்  தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோரிடத்திலும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் முனைவர் எம். எச். ஜவாஹிருல்லா மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக ரூ 3.56 கோடி மதிப்பீட்டில் லிப்ட் அமைக்கும் பணியை  தமிழ்நாடு முதலமைச்சர்  மு. க. ஸ்டாலின்  கடந்த பிப்ரவரி 17- ஆம் தேதியன்று காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
இந்த பணி இன்னும் சில மாதங்களில் உபாயதாரர்களின் பங்களிப்புடன் துவங்க உள்ளது, இதற்கான கட்டுமான பணிகள் துவங்கி நடைபெற உள்ளது. 

இந்த பணிகள் நடைபெற உள்ள இடத்தை  பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் முனைவர் எம். எச். ஜவாஹிருல்லா நேரில் சென்று பார்வையிட்டு அதிகாரிகளிடம் வரைபடம் செயல்படுத்த உள்ள இடம் என்பது குறித்து விளக்கமாக கேட்டறிந்து பணிகளை விரைந்து முடித்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

அப்பொழுது இந்து சமய அறநிலையத்துறை கோவில்  துணை ஆணையர் உமாதேவி, சட்டமன்ற உறுப்பினரிடம் இந்த திட்டம் பற்றிய முழு விபரங்களையும் விளக்கினார்.,,



அப்பொழுது எம்எல்ஏ உடன் சுவாமிமலை பேரூராட்சி மன்ற தலைவர் வைஜயந்தி சிவக்குமார், திமுக பேரூர் செயலாளர் பாலசுப்பிரமணியம், திமுக நிர்வாகிகள் நெடுஞ்செழியன், குணாளன், மனிதநேய மக்கள் கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் முஹம்மது மைதீன், துணை செயலாளர் வீரமணி, பேரூர் தலைவர் புர்க்கான் அலி, முஸ்தபா, மற்றும் திமுக, மமக, நிர்வாகிகள், பேரூராட்சி உறுப்பினர்கள், திருக்கோயில் பணியாளர்கள், உள்பட பலர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment