*சோலார் பேனல் (Solar Panel) 1 KW-க்கு 4-6 யூனிட் வரும்*
அதற்கு
*வாரம் ஒரு முறை சோலார் பேனல்களின் மேல் படியும் அழுக்கை துடைக்க வேண்டும்.*
*துடைப்பதற்க்கு ஏதுவாக கைக்கு எட்டிய தூரத்தில் சோலார் பேனல்களை அமைக்க வேண்டும்.*
*நிழல் வராத அல்லது குறைவான நிழல் உள்ள பகுதியில் அமைக்க வேண்டும்*
அக்கம்பக்கத்துல பெரிய வீடுகள் இருந்து நிழல் இல்லாமல் நேரடியாக வெயில் வர 10 மணி ஆகும், 3 மணியோடு நிழல் வந்திடும்னா, நம் வீட்ல பீக் output 5 மணி நேரம்தான், அப்போ 1 KW போட்டீங்கனா 6 யூனிட் வராது 4 வரலாம், கவனம்
சோலார் பேனல் மேல (வேணும்னே) ஏதாவது பெரிய கல் விழுந்தாலோ தூக்கி போட்டாலோ தான் பாதிப்பு ஆகலாமே ஒழிய,
அழுக்கில்லாம துடைச்சு, ஒயர்கள எதுவும் கடிக்காம பாதுகாத்தா அது பாட்டுக்கு வரும்
monocrystalline solar panels
Polycrystalline solar panels
thin-film solar panels
அப்படின்னு 3 வகை இருக்குது
Polycrystal பேனல் வேண்டாம், *Monocrystal சோலார் பேனல்* வாங்கலாம்
அதுல *Mono PERC technology* வாங்கலாம்
PERC (Passivated Emitter and Rear Cell)
அதுல
*Half-cut* cell mono PERC solar modules சிறந்தது.
நிழல் விழுந்தாலும் நிழல் விழாத பகுதியில் மின் உற்பத்தி ஆகும்
அழுக்க துடைக்க வழி இருக்குனு நினைக்கிறவங்க, 10 அடி உயரம் வச்சு, சைட்லேர்ந்து நல்ல வெளிச்சம் வரும், அது தவிர
*வெள்ளை டைல்ஸ் தரைல போட்டிருக்கீங்கனா Bi facial பயன்படுத்தலாம்*
இல்லேனா தேவையில்லை
அடுத்தது சோலார் இன்வெர்டர் (pulse width modulation)
PWM வேண்டாம்,
*(maximum power point tracking) சோலார் இன்வெர்டர் MPPT மாடலாக வாங்கலாம்* அதுவும் 3KW அல்லது
*5 KW மாடலாக*
*Solar Hybrid Smart Inverter* வாங்கலாம்
பொதுவாக 12V, 24V பேனல்கள் கிடைக்கும், *எப்பொழுதுமே அதிக வோல்டேஜ் பேனல்கள் வாங்குவது நல்லது*
ஒரு 24V பேனலின் திறன் இரண்டு 12V பேனல்களை சமம், இப்பொழுது 48V பேனல்கள் வருகின்றன, அதாவது *5KW / 48V சோலார் இன்வர்டர் சிறப்பு*
மேற்குறிப்பிட்ட இன்வெர்டர்
வாங்கி, உடனடி தேவைக்கு 48V பேனல் இரண்டே இரண்டு வாங்கினால் போதும் எளிதாக 1KW எளிதாக சிஸ்டம் ரெடி
பின்னாளில் தேவைக்கு ஏற்ப, நிதி நிலைக்கு ஏற்ப, இரண்டு இரண்டு பேனல்களாக சேர்த்து கொள்ளலாம்
48V பேனல்கள் குறைந்தது 500W மேல்தான் வரும் அதனால் 10 பேனல்களிலேயே 5KW திறன் அடைந்து விடலாம்
நீங்க 1 KW தான் போட போறீங்கனாலும், 1 KW பேனல் 1 KW Inverter-ருக்கு பதிலா, 1 KW பேனல் 5 KW Inverter-னு போனீங்கன்னா, நாளைக்கு கையில் காசு இருக்கு, தேவை இருக்குனா, இன்னும் 4 KW வரை பேனல் மட்டும் வாங்கி ஓட்ட முடியும், செலவு மிச்சம்
*பேட்டரிய சப்போர்ட் பண்ணுற சோலார் இன்வெர்டரா வாங்கனும்*
உற்பத்தி ஆகும் மின்சாரத்தை TNEBக்கு Export பண்ண கூடிய *Solar On Grid Inverter*-ஆ இருக்கனும், பேட்டரி இருந்தா அதை சார்ஜ் பண்ணக்கூடிய *Off Grid* support பண்ணுறதா இருக்கனும்
இந்த இரண்டு வகையையும் support பண்ணுறது தான் Hybrid
ஃபேன், TV, எது இருந்தாலும் சோலார் பேனல்லேர்ந்து வரும் கரெண்டாலதான் ஓடனும், அதுக்கு மேல கரெண்ட் உற்பத்தி ஆச்சுனா TNEB-க்கு அனுப்புற மாதிரி intelligent-ஆ
இருக்க வேண்டும்
பேட்டரி இல்லேனா கூட உற்பத்தி ஆகும் கரண்ட்ட TNEB-க்கு Export பண்ண கூடியதா இருக்கணும்
Works with or without Batteries
Grid Export
அடுத்த முக்கியமான feature, Load Sharing அதாவது சோலாருக்கும்-Gridக்கும் மற்றும் சோலாருககும்-பேட்டரிக்கும்
பகல்ல சோலார் பேனல்லேர்ந்து கரண்ட் உற்பத்தி ஆகிட்டே இருக்கும், வெயில் இல்லை என்றாலும், வெளிச்சத்துலையே கரண்ட் உற்பத்தி ஆகும், வெயில் நேரா படும்போது மிக அதிகமா கரண்ட் உற்பத்தி ஆகும், வெய்யில் நேரா படாத போது கொஞ்சமா உற்பத்தி ஆகும்
5A கரண்ட் சோலார்ல உற்பத்தி ஆகுதுனு வச்சுப்போம், வீட்ல ஒரு ஃபேனும், ஒரு பெரிய LED டிவியும் பகல்ல ஓடுது, அது மொத்தமா 2A எடுத்துக்குதுனா, மீதம் 3A-அ TNEB-க்கோ இல்ல பேட்டரி சார்ஜ் பண்ணவோ நாம வாங்கின Solar Inverter, அனுப்பக்கூடியதா இருக்கனும்
இன்னொறு scenario, அதே 5A சோலார் உற்பத்தி நடக்குது, இப்போ 1 HP மோட்டார் ஒடுது, 7A தேவை, இப்போ அந்த Inverter சோலார்லேர்ந்து வரும் 5A கரண்ட அப்படியே முழுமைய எடுத்துகிட்டு, EB-லேர்ந்து 2A எடுத்து மோட்டார ஓட விட்டுட்டு, TNEB-க்கு ஒன்னும் அனுப்பாத
திறன் கொண்ட இன்வெர்ட்டராக இருக்கனும்
எனவே மிகச்சிறந்த
*இன்வெர்டர்*
மிக தரமானதாக இருக்க வேண்டும்
பின்னர்
*சோலார் பேனல்*
*பேட்டரி*
தரமானதை வாங்குக
No comments:
Post a Comment