குலதீபமங்கலம் முஸ்லிம்களின் அடக்கஸ்தலம் பாதை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கேட் பிரச்சனை திருக்கோவிலூர் தாசில்தார் தலைமை நடைபெற்ற சமாதான கூட்டத்தில் சுமூகமான முடிவு தமுமுக மறியல் போராட்டம் ரத்து...
கள்ளக்குறிச்சி மாவட்டம் குலதீபமங்கலம் கிராமத்தில் முஸ்லிம்களின் அடக்கஸ்தலம் பாதை ஆக்கிரமித்து கேட் போட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இருந்த நிலையில் கமருதீன் என்பவர் இறந்து அவருடைய உடலை அடக்கம் செய்யும்போது ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக தமுமுகவின் சார்பாக வருகின்ற ஆறாம் தேதி மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்ட இருந்த நிலையில் இன்று திருக்கோவிலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தற்போது போடப்பட்டுள்ள கேட் ஒரு சாவியை ஜமாத் தார் இடம் ஒப்படைக்கப்படும் எனவும், இதுக்கு நிரந்தர தீர்வாக அடக்கஸ்தலத்துக்கு செல்லும் பாதையை அளவை செய்து முழுமையான பாதை அமைப்பதற்கான வேலைகளை விரைவாக முடிக்க ப்படும் எனவும் எப்போதெல்லாம் தேவைப்படுகிறது அப்போதெல்லாம் அடக்கஸ்தலத்திற்கு சென்று வர எந்த விதமான யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை எனவும் முடிவு செய்யப்பட்டது...
அல்ஹம்துலில்லாஹ்
இந்த முடிவினை ஏற்று ஆறாம் தேதி நடைபெற இருந்த தமுமுக மறியல் போராட்டம் ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்துக் கொள்கிறோம்....
✍️
தகவல் தொழில்நுட்ப அணி தமுமுக கள்ளக்குறிச்சி மாவட்டம்
No comments:
Post a Comment