இன்று தேர்வுகள் துவங்குகின்றன.
தேர்வு எழுதும் மாணவர்களே கீழ்கண்ட நெறிமுறைகளை பின்பற்றுங்கள் :
👉 தொழுகையில் தான் வெற்றி இருக்கிறது.ஐவேளைத் தொழுகையை பேணுதலோடு பின்பற்றுங்கள்.
👉 தேர்வுகளை இலகுவாக்கித் தர அல்லாஹ்விடம் பொறுப்பு சாட்டுங்கள். மனமுறுகி துஆ செய்யுங்கள்.
👉 இரவில் விரைவாக உறங்கி இரவின் பின்னேரம் எழுந்து தஹஜ்ஜுத் தொழுதுவிட்டு பாடங்களை படியுங்கள்.அந்த நேரத்தின் மகிமை உங்களின் நினைவுத் திறனையும் சிந்தனையையும் தூண்டிவிடும்.
👉 தேர்வுக்கு செல்லும் முன்பு 2 ரக்அத்கள் தொழுதுவிட்டு செல்லுங்கள். அது உங்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
👉 தேர்வெழுத துவங்கும் போது பிஸ்மில்லாஹ் என்று துவங்குங்கள்.நீங்கள் படித்ததை அது சரியான நேரத்தில் நினைவுபடுத்தும்.
👉 பொய் பேசுவதை முற்றிலுமாக தவிர்த்துக் கொள்ளுங்கள்.அது உங்கள் நினைவாற்றலை அதிகரிக்கும்.
👉 மொபைல் போனை குறைவாக பயன்படுத்துங்கள். அது உங்கள் மனதுக்கு அமைதியை கொண்டுவரும்.குறிப்பாக போனை தலைக்கு அருகில் வைத்து உறங்காதீர்.
👉 சத்தான உணவை குறைவாக உண்ணுங்கள்.அது உங்கள் மூளைத் திறனை அதிகரிக்கும்.நிறைய தண்ணீர் அருந்துங்கள்.
👉 அவசரத் தேவைக்கு தவிர மருந்து மாத்திரை தைலங்களை அதிகம் பயன்படுத்தாதீர்.நீங்கள் உற்சாகமாக இருப்பதற்கு அது காரணமாக அமையும்.
👉 யாரிடமும் எதற்காகவும் கோபப்படாதீர். கோபமும் பதற்றமும் நினைவாற்றலை மழுங்கடித்து விடும்.
👉 தேர்வுகள் முடிவல்ல என்பதை மனதில் நிறுத்துங்கள். பள்ளி இறுதித் தேர்வுகள், நீண்ட நெடிய கல்விப் பயணத்தின் ஒரு மைல்கல் மட்டுமே.
👉 பெற்றோர்களே...பிள்ளைகளுடன் அதிகமான நேரத்தை செலவிடுங்கள்.
👉 பிள்ளைகளிடம் எதிர்மறையான எந்த பேச்சையும் பேசாதீர். அவர்களை ஊக்கப்படுத்திக் கொண்டே இருங்கள்.
இன்றைய ஜுமுஆ உரையில் இந்த செய்திகளையும் கொஞ்சம் பகிர்ந்து கொண்டால் மாணவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
CMN SALEEM
No comments:
Post a Comment