இந்தியக் கல்வித் துறை எப்படி ஆட்சியாளர்களால் கல்விச் சந்தையாக உருமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதற்கு ஒரு குறியீடுபோல இருக்கிறது ராஞ்சியிலுள்ள ஒரு ஐந்தடுக்குப் பெரும் கட்டிட வளாகத்தின் பெயர் - 'எஜுகேஷன் மால்'.
ராஞ்சியில் 2012-ல் வெறும் இருநூறு பயிற்சி மையங்களே இருந்தன; இன்றைக்குப் பத்தாயிரத்தைத் தாண்டிவிட்டது என்கிறார்கள். நாட்டின் மிகப் பெரிய தொழில் சாம்ராஜ்யமான 'ரிலையன்ஸ்' தன் பார்வையைக் கல்வித் துறை நோக்கித் தொடர்ந்து முன்னகர்த்திவருவது ஒரு சூட்சமப் புள்ளி. மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் கல்வி வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கும் 'எம்பைப்' நிறுவனத்தின் பங்குகளை வாங்க 'ரிலையன்ஸ்' செய்துகொண்ட ஒப்பந்தத்தை இங்கே நினைவுகூரலாம். "நாடு முழுவதும் உள்ள 19 லட்சம் பள்ளிகள், 58,000 கல்லூரிகளைத் தொழில்நுட்பம் வழி இணைக்க இலக்கு வைத்திருக்கிறோம்" என்று அப்போது சொன்னார் ஆகாஷ் அம்பானி.
பள்ளிக்குச் செல்வது தனிப் பயிற்சியாளர்களுக்கு இனி ஒரு சம்பிரதாயம், அவ்வளவே. 2018 'நீட்' தேர்வில் நாட்டிலேயே முதலாவது இடத்தில் தேறிய மாணவி கல்பனா குமாரி, ஒரே சமயத்தில் பிஹார் பள்ளியில் படித்தபடியே டெல்லியில் முன்னணிப் பயிற்சி மையம் ஒன்றில் முழு நேர மாணவியாக தனிப் பயிற்சி பெற்றதும், பிஹார் பள்ளிக்கூடத்தில் முழு வருகைப்பதிவு பெற்றது சர்ச்சையானதும் பள்ளிக்கூடங்களின் மரணத்தையே சுட்டுகின்றன.
என்னுடைய பிரதான குற்றச்சாட்டு இதுதான்: 12 வருடப் பள்ளிக் கல்வியை இந்த நுழைவுத் தேர்வுகள் கொச்சைப்படுத்துகின்றன; அர்த்தமற்றதாக்குகின்றன. உயர் படிப்புகள் ஒவ்வொன்றுக்கும் நுழைவுத் தேர்வும் தனிப் பயிற்சியும்தான் வழி என்றால், 12 வருட பள்ளிக் கல்விக்கு என்ன பொருள்? அப்படியென்றால், பள்ளிக் கல்வி என்பது கீழ்நிலை வேலைகளுக்கானதா?
முழுக் கட்டுரையையும் அவசியம் வாசியுங்கள், பகிருங்கள்:
http://writersamas.blogspot.com/2020/01/blog-post_97.html?m=1
No comments:
Post a Comment