Sunday 16 February 2020

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட வழக்கில் அரசை சுப்ரீம் கோர்ட் கோபத்துடன் எச்சரிக்கை செய்தது.

14-02-2020 அன்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட வழக்கில் அரசை சுப்ரீம் கோர்ட் கோபத்துடன் எச்சரிக்கை செய்தது. சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவை பார்த்து, சுப்ரீம் கோர்ட் நீதிபதி அருண் மிஸ்ரா கடுங் கோபத்துடன் உதிர்த்த வார்த்தைகள் "அப்படியென்றால் நாம் சுப்ரீம் கோர்ட்டை வேண்டுமானால் இழுத்து மூடி விடலாம். இந்த நாட்டில் எந்த சட்டமும் இல்லை. நாங்கள் மிகவும் வருத்தம் அடைகிறோம். இந்த அமைப்பில் நான் வேலை செய்ய கூடாது என்று உணர்கிறேன். இந்த உலகில் யாரிடமும் இருந்தும் நாங்கள் மரியாதை எதிர்பார்க்க வில்லை. நான் என்னைப் பற்றி கவலைப் படவில்லை. உள்ளபடியே சொல்கிறேன். இந்த நாட்டில் வாழாமல் இருப்பதே நல்லது. இந்த நாட்டின் நீதி அமைப்பே எடுத்து கொள்ள பட்டு விட்டது."
பாருங்கள் எவ்வளவு விரக்தியும் கோபமும், வெறுப்பும் கலந்த வார்த்தைகள்? இந்த அரசின் செயல்பாடுகளால் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளே எந்த அளவுக்கு விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார்கள் பாருங்கள். தங்களது எண்ணங்களை முழுமையாக சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அவர்கள் நொந்து போய் இருக்கிறார்கள் என்பதை தானே இது காட்டுகிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அசாதாரணமான நெருக்கடியான சூழ்நிலை நீதித்துறையில் நிலவுவது பேராபத்து. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளே இந்த ஆட்சியின் கீழ் வாழ்வதை வெறுக்கிறார்கள் என்றால் சாமானிய மக்களின் நிலை என்ன? வழக்கமாக இதையெல்லாம் மூடி மறைத்து விடும் அல்லது முக்கியத்துவம் தராமல் அமுக்கி விடும் 'தினத்தந்தி' போன்ற பத்திரிகைகள் கூட இதை செய்தியாக வெளியிட்டு இருப்பது, எல்லா தரப்பிலும், எல்லா மட்டங்களிலும் இந்த ஆட்சியைப் பற்றி கடுமையான அதிருப்தி நிலவுவதை தான் காட்டுகிறது. இந்த அபாயகரமான சூழ்நிலையிலிருந்து நம் நாட்டைக் காப்பாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் நம் அனைவருக்கும் இருக்கிறது. "ஜெய் ஹிந்த்!"


உங்கள் நன்பனான AS

No comments:

Post a Comment