Sunday 2 February 2020

எவ்வளவு திமிரான பார்பன பேச்சு

எவ்வளவு திமிரான பார்பன பேச்சு இதற்கு முன்பு இவ்வளவு தைரியமாக இவர்கள் பேசமுடிந்ததா. இதையும் சரி என்று வியாக்கியானம் செய்பவர்கள் உள்ளார்கள் ஏதோ அவர்களுக்கு சலுகை கிடைக்கும் என்று நினைக்கிறார்களோ என்னவோ அவர்கள் பார்வையில் பார்பனர் நம்பூதிரி பண்டிட் போன்ற உயர்சாதியினரை தவிர எல்லோரும் அடிமைகள் தான்.
சரி அவரவர் குலத்தொழிலை செய்ய சொல்லும் இவர்கள் ஏன் மணியாட்டி மந்திரம் மட்டும் ஓதுவதோடு நிறுத்தி கொள்ளலாமே ஏன் அனைத்து உயர்பதவிகளையும் உயர்கல்வியையும் தனி உரிமை கொண்டாடுகிறார்கள். இல்லை கல்வி வேலை என்று மட்டும் இருந்து கொண்டு பூஜை புனஸ்காரம் எல்லாம் மற்றவர்களிடம் விட்டு விடலாமே. இரண்டும் இருந்தால் தான் ஒருபக்கம் கடவுள்பெயரை சொல்லி பொய் புராண கதைகளை சொல்லி மக்களை பயமுறுத்தி வைப்பது. மறுபக்கம்கல்வியை அபகரித்து உயர்பதவிகளில்அமர்ந்து கொண்டு அதிகாரம் செய்வது. படித்தால் தானே ஏன் எதற்காக என்று கேள்வி கேட்பாய் என்று கல்விக்கு படிப்படியாக தடை. பார்பனர் கடல்தான்டகூடாது என்று மனுதர்மம் சொல்கிறது ஆனால் எத்தனை வசதியான பார்பனர் வீட்டு பிள்ளைகள் கடல் தாண்டி கல்வி வேலை என்று போகாமல் இருக்கிறார்கள்.அவர்களுக்கு என்று மட்டும் தனி நீதி மனுதர்மத்தை அவர்கள் மீறினால் தப்பில்லை.
எல்லாம் தெரிந்தும் சிலர் இதுபோன்ற திமிராக பேசுகின்ற காவிகளுக்கு துணை போகிறார்கள். இவர்கள் யதார்த்தம் புரிந்து இவர்கள் விழிக்கும் போது உயர்சாதி சர்வாதிகாரி கையில் அதிகாரம் இருக்கும். மக்கள் ஆட்சி காணாமல் போய் இருக்கும் படிப்படியாக அதற்கான சட்டங்கள் அடுத்து வரும் ஆதரிப்பவர்கள் தங்களுக்கு மட்டும் அல்ல அவர்கள் சந்ததியினருக்கு மற்றும் அனைவருக்கும் குழி தோண்டி கொண்டு இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment