Saturday 8 February 2020

சரி, குடியுரிமை சட்டத் திருத்தம் என்றால் என்ன?

சரி, குடியுரிமை சட்டத் திருத்தம் என்றால் என்ன?
இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இஸ்லாமிய நாடுகளிலிருந்து அகதிகளாக இந்தியாவுக்குள் நுழைந்த இந்து, சீக்கிய, பௌத்த, சமண, பார்சி அல்லது கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க ஏதுவாக, '1955 குடியுரிமை சட்டத்தைத் திருத்துவதற்காக இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது. 31.12.2014-க்கு முன் இந்தியாவில் குடியேறியவர்களுக்கு இந்தச் சட்டத் திருத்தம் பொருந்தும்.
இந்தச் சட்டத் திருத்தம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து வந்த இந்து, சீக்கிய, பௌத்த, சமண, பார்சி அல்லது கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த மூன்று நாடுகளிலிருந்து வரும் முஸ்லிம் அகதிகளுக்குப் பொருந்தாது. அதேபோல மற்ற நாடுகளிலிருந்து வரும் அகதிகள், உதாரணமாக இலங்கைத் தமிழர்கள் (அவர்கள் இந்துக்களாகவே இருந்தாலும்), மியான்மர் முஸ்லிம்கள் முதலானோருக்கு இது பொருந்தாது. இது Citizenship Amendment Act என்று அழைக்கப்படுகிறது. சுருக்கமாக, CAA.
என்.ஆர்.சி - குடியுரிமை சட்டத் திருத்தம்என்.ஆர்.சி - குடியுரிமை சட்டத் திருத்தம்
இது அண்டை நாடுகளிலிருந்து வந்த அகதிகளுக்கு மட்டுமான பிரச்னைதானே என்று எண்ணலாம். எனினும் இதை அஸ்ஸாமில் தற்போது கணக்கெடுக்கப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டோடு இணைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது National Register of Citizens என்று அழைக்கப்படுகிறது. இதைச் சுருக்கமாக NRC என்று அழைக்கின்றனர்.

No comments:

Post a Comment