ஹிட்லரைப் பாராட்டிய கோல்வால்கரை ஆதர்சமாகக் கருதும் பிரதமர் மோடியின் இரண்டாவது ஆட்சியில் குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியிருக்கிறது. நாடு முழுவதும் மக்கள் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் தலைநகர் டெல்லியில் இணைய வசதி முடக்கப்பட்டுள்ளது. எதிர்ப்புகள் எழுந்துகொண்டே இருக்கின்றன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தச் சட்டத் திருத்தத்தால் முஸ்லிம்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என விளக்கி வருகிறார். தமிழ்நாட்டின் அ.தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகளும் அவர் கூறியதை வழி மொழிந்திருக்கின்றன.
ஹிட்லரின் நியூரெம்பெர்க் சட்டம் யூத சமூகத்தைக் குறிவைத்து ஜெர்மானியர்களிடமிருந்து பிரித்தது. மோடி கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தம் அண்டைநாட்டு அகதிகளில் முஸ்லிம் அல்லாதோருக்குக் குடியுரிமை வழங்குகிறது. இதை ஒப்பிடுவதே தவறு என்று கருதலாம். எனினும், ஹிட்லரின் சட்டமும், மோடியின் சட்டமும், ஒரு அரசு தன் குடிமக்களை மத அடிப்படையில் பார்க்கின்றன; அரசின் முன் நிற்கும் ஒரு தனி மனிதன் தன் மத நம்பிக்கையின் அடிப்படையில், தான் வணங்கும் கடவுள் யார் என்ற அடிப்படையில் பார்க்கப்படுகிறான். இது இந்திய அரசியலமைப்பு மீதான தாக்குதல் என்பதோடு, 'இந்து ராஷ்ட்ரம்' என்ற கோல்வால்கரின் கனவை நிறைவேற்றுவதற்கு அவரின் சீடர்கள் போடும் அடித்தளம் என்றே எதிர்க்கட்சியினரும், சமூகச்செயற்பாட்டாளர்களும் கடுமையாக விமர்சிக்கின்றனர்
முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் வெற்றியடைவீர்கள்! 3:200
Saturday, 8 February 2020
ஹிட்லரைப் பாராட்டிய கோல்வால்கரை ஆதர்சமாகக் கருதும் பிரதமர் மோடியின் இரண்டாவது ஆட்சியில் குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியிருக்கிறதுq
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment